உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, March 20, 2012

அமெரிக்கா மீடியாவை 'கொலைவெறி" போல கலக்கி வரும் இந்திய மாணவன்


அமெரிக்கா மீடியாவை 'கொலைவெறி" போல கலக்கி வரும் இந்திய மாணவன்


அமெரிக்கா ஈஸ்ட் கோஸ்ட் மாநிலங்களான நீயூஜெர்ஸி, நீயூயார்க் மற்றும் அதன் அருகில் உள்ள மாநிலங்களிலும் ஏன் அமெரிக்காவின் அனைத்து இடங்களிலும் இப்போது எல்லோரிடமும் (DharunRavi) தருண் ரவி  என்ற இந்திய மாணவனைப் பற்றிய பேச்சுதான் மிக முக்கியமாக இருந்துவருகிறது. அப்படி என்ன இவன் சாதனை செய்துவிட்டான் என நினைக்கீறிர்களா? சாதனை ஒன்றும் செய்யவில்லை அதற்கு பதிலாக அவனை வளர்த்த பெற்றோர்களுக்கு தலைக் குனிவை ஏற்படுத்தியுள்ளான்.

அவன் செய்த தவறு அடுத்தவர்களின் வாழ்வில் அவர்களின் தனிப்பட்ட விஷயத்தில் மூக்கு நுழைத்தது மட்டுமல்லாமல் அதை வெப் கேமராவின் மூலம் வெளி உலகத்திற்கு வெளியிட்டதன் மூலம் ஒரு மனித சாவுக்கு காரணமாகிவிட்டான். தன் ரூமில் தன் கூட வசித்த ரூம்மேட்டின் செயல்பாடுகளை கம்பியூட்டரில் உள்ள வெப் கேமரா மூலம் வெளி உலகத்திற்கு தெரியப்படுத்தியதை அறிந்த அவன் ரூம் மேட் மனம்முடைந்து தற்கொலை செய்துகொண்டான். இதற்கான வழக்கு நடந்து இறுதி நிலையில் தான் செய்து கில்டி என்று ஒப்பு கொண்டான் இதனால் அவனுக்கு 10 வருட சிறைத்தண்டனையும் அதன் பிறகு இமிகிரேஷனை கேன்சல் செய்த்து இந்தியாவிற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ளவர்களுக்கு வேண்டுமென்றால் இது ஓன்றும் பெரிய குற்றமில்லாமல் இருக்கலாம். இதை நான் கூற காரணம் நித்தியானந்தா என்ற சாமியாரின் பிரைவேசியில் உட்புகுந்து அவரை பற்றிய பெர்சன்ல் செய்திகளை வீடியோவா காண்பித்து கொண்டிருந்தனர். இந்த நிகழ்ச்சி மட்டும் அமெரிக்காவில் நடந்து இருந்தால் அதை வெளியிட்ட அனைவரும் இந்த நேரத்தில் கம்பி எண்ணிக் கொண்டிருப்பார்கள். நல்லவேலை அது நடந்தது இந்தியாவில் என்பதால் அவர்கள் வெளியில் திறிந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அமெரிக்காவில் தனிப்பட்டவர்களின் பிரைவேஸி ஆக்ட் மிக கடுமையாக உள்ளது. ஆனால் இதை புரிந்து கொள்ளாமல் இந்த சிறுவன் அமெரிக்காவை இந்தியா என்று கருதி செயல்பட்டதால் இப்போது ஜெயிலை நோக்கி சென்று தன் வாழ்க்கையை நாசமாக்கி கொண்டுள்ளான்.

பெட்டி செய்தி :
Dharun Ravi’s parents were reportedly motionless after today’s guilty verdict was read. Tyler Clementi’s parents spoke out about the Dharun Ravi guilty verdict shortly after it was announced earlier today March 15, 2012. The future for Ravi now, however, remains in question. Dharun Ravi faces ten years in prison after a four week trial ended in multiple guilty verdicts today. Dharun Ravi had no facial expression after the guilty verdicts were read. His parents in the first row were reportedly also motionless. One news reporter, however, claims that Ravi shook his head at one point while the verdicts were being read.After the verdict was announced, Clementi’s parents spoke out. Father James told news “The trial was painful for us as it would be for any parents. We wanted to be here for our son and we believe the trial is important.”

In a prepared news statement he added “To our college, high school and even middle school youngsters, I will say this, just because you don’t like them (people you meet) does not mean you have to work against them.” Ravi’s parents have yet to tell news what they intend to do following their son’s guilty verdict. He could face ten years in prison, or could be departed to his native India. His sentencing is set for May 21, 2012


இந்த சம்பவம் மற்றும் வழக்கு பற்றிய விபரங்களை கீழ்கண்ட லிங்குகளில் நீங்கள் விபரமாக பார்க்கலாம்இப்போது இங்குள்ள இந்தியர்களிடையே உள்ள பேச்சை கேட்டால் இன்னும் வெட்க கேடாகத்தான் இருக்கிறது. இது எதனால் ஏற்பட்டது ஏன் இந்த பிரச்சனை என்று ஆராய்வதைவிட இவன் நார்த் இண்டியன் இல்லை சவுத் இண்டியன் தான் என்று நார்த் இனண்டியர்களும் இவனுடைய பேரையும் பெற்றோர்களின் பெயரையும் வைத்து இவன் சவுத் இண்டியந்தான் ஆனால் இவன் ஆந்திரக்காரன் இல்லை கர்நாடக்காரன் இல்லை மலையாளி இல்லை இவன் தமிழனாகத்தான் இருக்க வேண்டும் என்று மற்ற மாநிலத்தாரும் கூறி வருகின்றனர். அதிலும் தமிழர்களிடையே இவன் ஒரு ஹிந்து அதுவும் பிராமிணாகத்தான் இருப்பான் என்று மட்டம் ஒருவரை ஒருவர் மட்டம் தட்டி பேசிவருகின்றனர். இதை நினைக்கும் போது இந்தியன் என்று சொல்லவே கேவலமாக இருக்கிறது.

இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அவார்ட் வாங்கிய போது அவரை தமிழன் என்று பார்க்காமல் அவர் முஸ்ஸிம் என்று கூறாமல் அவரை ஒரு இந்தியனாக மட்டும் அடையாளம் காட்டி பெருமை கொண்ட இந்தியர்கள் இப்போது தருண் ரவி செய்த தவறினால் தண்டனை பெரும் போது மட்டும் இந்தியன் என்று அடையாளம் கொள்ளாமல் அவன் தமிழன் ஹீந்து பிராமின் என்று பார்த்து இகழ்ந்து பேசுகிறார்கள் இது என்ன நியாயம்.

இந்த மாணவன் செய்த தவறுக்கு யார் காரணம் அவனை மிக செல்லமாக வளர்த்த பெற்றோர்களா அல்லது அடுத்தவர்களின் தனிப்பட்ட விஷயத்தில் தலையிடும் இந்திய கலாச்சாரமா அல்லது  நண்பர்களின் சகவாசமா அல்லது இந்த மாணவனின் நேச்சுரலா? இதற்கு பதில் காலம்தான் சொல்ல வேண்டும்.

குழந்தைகளை வளர்ப்பது என்பது மிகவும் எளிதல்ல அதுவும் இன்னொரு நாட்டில் முற்றிலும் மாறுபட்ட கலாச்சாரத்தில்.

தலை குனிந்த இந்த குடும்பம் தலை நிமிர நாம் அவர்களுக்காக பிரார்த்திப்போம். வாழ்க வளமுடன்

15 comments :

 1. சாதி அடிப்படையில் எவரையும் பிரித்துக் பேசுவதை அறவே வெறுப்பவன் நான். அனைவரும் மனிதஜாதி என்பதே நிரந்தரம். அந்த மாணவனின் செய்கை வெட்கமடைய வைக்கிறது, வளர்ப்பு முறையில் ஏதோ தவறு இருந்திருக்க வேண்டும்...

  ReplyDelete
 2. படிக்க சங்கடமாக இருந்தது
  உள் வட்டம் உள் வட்டம் என இவர்கள் அந்தப் பையனைப் பற்றி
  இவர்கள் பிரித்துக் கொண்டேபோவது கூட
  இவர்கள் இந்த விஷயத்தில் நாங்கள் யோக்கியர்கள் எனக்
  காட்டிக் கொள்ளச் செய்யும் பம்மாத்து வேலையே
  பாராட்டப் பட்டாலும் இதுபோல் தூற்றப் பட்டாலும்
  நாம் இந்தியனாகத்தான் பார்க்கப் படுகிறோம் என்கிற உணர்வு
  அனைவருக்கும் வரவேண்டும்
  அவர்களது தாய் தந்தையரின் நிலையை நினைக்க
  வேதனையாக இருந்தது
  மனம் கனக்கச் செய்து போகும் பதிவு
  நல்லதோ கெட்டதோ ஒரு நேர்மையான கண்ணோட்டத்தில்
  சொல்லிப் போகும் உங்கள் எழுத்தின் ரசிகன் நான்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. ஒளியில் சேரும் கூட்டம் இருட்டில் பறக்கதான் செய்யும்.

  அருமை பதிவு நண்பரே!!

  ReplyDelete
 4. Ayya aduththavar visayathil thalai itta
  maanavanukku!
  thandanai!

  aduththa naattula thalai idum-
  america vukku!

  enna kodumai sir!

  ReplyDelete
 5. நாட்டுக்கு நாடு கலாச்சார, பழக்க வழக்கங்கள் மாறும் என்பதை மகனுக்கு புரிய வைக்காத பெற்றோர் மீதே தவறு இருக்குது என்பது என் தனிப்பட்ட கருத்து.

  ReplyDelete
 6. இன்னிக்கு கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்து இருந்தாலும் கழைக்கூத்தடி முன்னாடி நின்னு கைதட்டுனவங்கதானே நாமன்னு ஒரு படத்துல விவேக் வசனம் பேசுவார். அதுப்போல் படிச்சு பட்டம் பெற்று ஃபாரீன் கம்பெனில வேலை செஞ்சாலும்..., அடுத்தவனை காட்டிக்குடுக்கும் பழக்கம் போகலியே?!

  ReplyDelete
 7. இது அமெரிக்காவில் சாதாரண மனிதர்கள் தங்கள் சாதாரண வாழ்க்கையை தொடரக்கூடாதென்று விடுதலை என்ற பெயரில் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரியும் ஏகப்பட்ட "வித்தியாசமான" குழுக்கள் சாதாரண மக்களுக்கு கன்னத்தில் அறைந்து சொல்லும் செய்தி என்றே எனக்கு படுகிறது...

  அந்த மாணவர் செய்தது தவறு..ஆனால் அது இளமைக்கால சேட்டை...வழக்கை விசாரித்தவரே இதைத்தான் முதலில் சொல்லி ரவியை
  மன்னிப்புடன் சமூக சேவை செய்யும்படி சொல்லி அவர் குடும்பம் கேட்காததால் தான் இந்த வழக்கே நீதிமன்றம் வந்தது...

  ரவி தன் செயலுக்காக உடனே தன் அறை தோழரிடம் மன்னிப்பு கேட்டார் என்பதும்...தற்கொலை செய்த இளம் மாணவன் நாற்பது வயது ஆணோடு உடலுறவு செய்து கொண்டிருந்தான் என்பதும்...தன் பொருட்கள் திருட்டு போவதாய் சந்தேகப்பட்டு தான் காமராவை ரவி தன் அறையில் வைத்து கண்காணித்தத உண்மைகள் சாதாரணமாய் மறைக்கப்பட்டது தானே...


  அவரது செயலுக்காக
  வக்காலத்து வாங்கவில்லை நண்பரே...The punishment does not fit the crime...

  நன்கு எழுதுகிறீர்கள்...நானும் மதுரையில் தான் பட்ட படிப்பு படித்தேன்...அந்த வகையில் நானும் மதுரை தமிழ் கய் (Guy) தான்..

  Gay என்று வாசிக்காதீர்கள் -:)

  தொடர்ந்து கலக்குங்கள்....

  ReplyDelete
 8. எல்லாம் நம் கலாச்சாரம் செய்த வேலை!

  ReplyDelete
 9. ரெவெரி சொல்வதை வரிக்கு வரி ஒப்புக்கொள்கிறேன். இந்த மாணவருக்கு வயது வெறும் பதினெட்டு தான். அதில் எந்த அளவு மேசூரிடியை எதிர்பார்க்க முடியும்? விளைவுகள் தெரியும் வயதா அது? அது எப்படி.. பதினேழு வயது வரை குழந்தையாக இருப்பவர் ஒரே வருடத்தில் அடல்ட் ஆக முடியும்?

  அதுவும் அமெரிக்காவில் வளரும் குழந்தைகள் வீடு தவிர வேறு எந்த இடத்தில் தங்கி இருக்கும் அனுபவத்தை கல்லூரி வரை பெறுவதில்லை (உறவினர் வீட்டுக்கு சென்று தங்குவது போன்ற அனுபவங்கள் இருப்பதில்லை) முதல் முதல் வெளியே தாங்கும் பொழுது அறை தோழர் தன்னை போல் இல்லை என்ற கியூரியாசிட்டி தான் இந்த செயலுக்கு காரணம் என்று திடமாக நம்புகிறேன். செய்தது தவறு தான். ஆனால் அது வெறும் முட்டாள் தனம் மட்டுமே. அதற்கு இந்த அளவு தண்டனை மிக அதிகம் என்று நினைக்கிறேன்.

  இவர் இந்தியன், தமிழன் என்று பார்ப்பது தவறு என்று நினைக்கிறேன். தவறு செய்தவர் ஒரு குழந்தை என்றே நினைக்கிறேன்..

  ReplyDelete
 10. இங்கு வருகை தந்து கருத்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றி.

  தருண் ரவிக்கு கிடைத்தது மிகப் பெரிய தண்டனைதான். அவன் செய்த இந்த விளையாட்டுதனமான தவறு அவன் வாழ்க்கையையே மாற்றி போட்டுவிட்டது.

  என் கவலை எல்லாம் அவனை வளர்த்த பெற்றோர்களைப் பற்றிதான் அந்த கவலை பெற்றோர்களாக இருப்பவர்களுக்குதான் தெரியும்.

  ///அதுவும் அமெரிக்காவில் வளரும் குழந்தைகள் வீடு தவிர வேறு எந்த இடத்தில் தங்கி இருக்கும் அனுபவத்தை கல்லூரி வரை பெறுவதில்லை//

  அது அந்த காலம் இப்போது எல்லாம் அந்த மாதிரி கிடையாது. காலேஜுக்கு அருகில் வீடு இருந்தாலும் இப்போது இந்திய குழந்தைகள் காலேஜில்தான் தங்கி படிக்கிறார்கள். என்பதுதான் உண்மை.

  ReplyDelete
 11. Pleasse stop posturing this kid and his parents as criminals. What this kid has done is what all average American kids do in their freshman year at college. This issue has become this big because:
  1. The other kid has committed suicide. I know he tried for room change due to personality and ethnicity conflicts. Suicide is momentary madness-that's all we could say now.
  2. There is an aversion and hatred towards the new immigrant ethnic group called "Indians" (remember "Dot busters?!") among the general Amrican population as this these immigrants are all educated or reasonably rich.
  3. Gays are the current minority new minority here
  4. This situation is similar to OJ Simpson's case (Black killed white)

  Darun is a kid-like your son or brother. Let us pray that he comes out this bullXXXX soon. Or, if you want to be the one passing judgement (Manu Needhi Chozhan!), feel free

  ReplyDelete
 12. /////அதுவும் அமெரிக்காவில் வளரும் குழந்தைகள் வீடு தவிர வேறு எந்த இடத்தில் தங்கி இருக்கும் அனுபவத்தை கல்லூரி வரை பெறுவதில்லை//

  அது அந்த காலம் இப்போது எல்லாம் அந்த மாதிரி கிடையாது. காலேஜுக்கு அருகில் வீடு இருந்தாலும் இப்போது இந்திய குழந்தைகள் காலேஜில்தான் தங்கி படிக்கிறார்கள். என்பதுதான் உண்மை.//
  அதையே தான் நானும் சொல்லியிருக்கிறேன்.. கல்லூரியில் தான் முதன் முறை இந்த அனுபவத்தை பெறுகிறார்கள்..

  ReplyDelete
 13. விளையாட்டு வினையாகி இருக்கிறது என்பதுதான் இங்கு கவனிக்கவேண்டியது.

  ReplyDelete
 14. @கலை

  இங்கு இந்த பதிவை இட்ட நானோ அல்லது இதற்கு முன்னாள் இங்கு கருத்து சொன்னவர்களோ ரவியையோ அல்லது பெற்றோர்களோயோ கிரிமினல் என்று கூறவில்லை என்பதை கவனிக்க வேண்டுகிறேன். அவன் விளையாட்டாக செய்த தவறுதான் பெற்றோர்களை தலை குனிய வைத்துவிட்டது என்று சொல்கிறோம்.

  Suicide யை நீங்கள் madness-என்று சொல்லும் நீங்கள் இந்த இளைஞன் செய்ததை பற்றி பேசும் போது எல்லோரும் செய்வதைத்தான் இவன் செய்து இருக்கிறான் என்று கூறுவது என்ன நியாயம். போனது நம் குழந்தையின் உயிராக இருக்கும் போது இப்படித்தான் நாம் கூறுவோமா என்ன?


  //குழந்தைகளை வளர்ப்பது என்பது மிகவும் எளிதல்ல அதுவும் இன்னொரு நாட்டில் முற்றிலும் மாறுபட்ட கலாச்சாரத்தில்.

  தலை குனிந்த இந்த குடும்பம் தலை நிமிர நாம் அவர்களுக்காக பிரார்த்திப்போம். வாழ்க வளமுடன்//

  இப்படித்தான் அவர்களுக்காக பிரார்த்திப்போம் என்று சொன்னது மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்திற்க்காக உண்மையாகவே நான் பிரார்த்தனை செய்தேன்.

  ReplyDelete
 15. இதையே ஒரு குஜராத்தி அல்லது பஞ்சாபி இளைஞனோ செய்து இருந்தால் இந்த கேஸின் முடிவுக்கு எதிராக ஒரு பெரிய எதிர்ப்பு கிளம்பி இருக்கும் அப்போது அந்த செய்தி ஒரு இந்திய இளைஞன் செய்த தவறாகவே மட்டும் பார்த்து விமர்சிக்க பட்டு இருக்கும் ஒரு குஜராத்தி அல்லது பஞ்சாபி போன்றவர் செய்த தவறாக சுட்டிக் காட்டி இருக்கமாட்டார்கள். ஆனால் அது இப்போது தமிழ் இளைஞன் செய்த தவறாகவே இங்கே பார்க்கப்படுகிறது .

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog