Thursday, March 8, 2012

 

பெண்களை பார்த்து அசந்து போகும் ஆண்கள்( மகளிர்தினம் )

பெண் குழந்தையை எதிர்பார்த்த எனக்கு ,புதிதாய்ப் பிறந்த எனது குழந்தையை நர்ஸ் கொடுத்தபோதுஆண் குழந்தையா ஆண் குழந்தையா" என்று கத்தியபடி. நான் சோகத்தில் அழ ஆரம்பித்தேன். உடனே  நர்ஸ் அதட்டினார்: "முட்டாளே! அது பெண் குழந்தை. முதலில் என் விரலை விடு"

அப்புறம்தான் நான் புரிந்து கொண்டேன் என் குழந்தை பெண் குழந்தை என்பது. அதில் இருந்து இன்று வரை என் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.. ஒகே எனது புராணத்தை பாடியது போதும் என்று இன்று மகளிர் தினம் என்பதால் அதை பற்றி சிறிது பார்ப்போம்.



உலகிலுள்ள அனைத்து  தாய்மார்கள். சகோதரிகள் தோழியர்கள்.ஆசிரியைகள், உடன் வேலை பார்க்கும் பெண் ஊழியர்கள் அனைவருக்கும் என் அன்பார்ந்தஉலக மகளிர்தின நல்வாழ்த்துக்கள்என்ன மனைவியை மறந்து விட்டேனே என்று நினக்கிறிர்களா? அதுதான் இல்லை.மனைவியை மறக்கவில்லை ஆனால் "மனைவிகள்" என்று சொல்ல முடியாதே அதனால்தான் மேலே கூறவில்லை

மனைவி என்பவள் மிக ஸ்பெஷ்லானவள் (டேய் யாராது மனைவியை பிசாசு என்பவன் உஷ்ஷ்ஷ்....) என் மனைவி ஒரு செல்ல பிசாசு....(ஆகா..ஆகா...ஆகா இப்படி ஒரு செல்லம் என்கிற வார்தையை யூஸ் பண்ணி தப்பிக்கிறானா என்று சத்தம் போடாதீர்கள் மக்கா அவள் காதில் விழுந்தால் என் கன்னத்தில் அவள் ஆட்டோகிராப் போட்டுவிடுவாள். ஆட்டோகிராப் போடுவதில்மட்டும் அவள் கைநாட்டு) ஹீ..ஹீ


தெளிவாக பார்க்க படத்தின் மேல் க்ளிக் செய்யவும்


பெண்களுக்கென தனியே ஒரு நாள் ஏன் !

பிறந்த போது தாயின் உதவியோடும்,வளரும் போது சகோதரியின் உதவியோடும்,படிக்கும் போது ஆசிரியையின் உதவியோடும்
வாழும் போது மனைவியின் உதவியோடும்,மனகஷ்டப்படும் போது மகளின் உதவியோடும்,முதியவனாக ஆகும் போது பேத்தியின் உதவியோடும் இப்படி ஒவ்வோரு நாளும் அவர்களின் உதவியோடு வாழுகிறோம் ஆண்களாகிய நாம் . இப்படி எங்கும் எதிலும் எல்லாமே, எல்லா நாளுமே என்று எல்லாமே அவளாகிவிட்ட  பிறகு ஏன் இந்தநாள்? அவளுக்கென தனியே ஒரு நாள் என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம்!


அவர்களைப் பற்றி ஒரு நாளாவது நாம் நினைக்கிறோமோ இல்லையோ அட்லீஸ்ட் இந்த நாளிளாவது அவர்களை மனதார நினைத்து அவர்களுக்கு நன்றி செலுத்துவோம் .அதுமட்டுமல்லாமல்  அவர்களின் நலனுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த மகளிர் தினத்தில் சிந்தித்து அதற்கான செயல்பாடுகளில் ஈடுபடத்தான் இந்த மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது என்பதை நினைவில் கொள்வோம்.


The beauty of a woman
Is not in the clothes she wears,
The figure that she carries,
Or the way she combs her hair.

The beauty of a woman must be seen from in her eyes,
Because that is the doorway to her heart,
The place where love resides.
The beauty of a woman is not in a facial mole
But true beauty in a woman is reflected in her soul.

It is the caring that she lovingly gives,
The passion that she shows,
And the beauty of a woman
With passing years only grows!

written by Teresa Mahieu





8 comments:

  1. பெண்கள் தினத்திற்கான சிறப்புப் பதிவு
    மிக மிக அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இந்த ‘ஆட்டோகிராஃப்’ போடுற மனைவிகள்ங்கறது எல்லா வீட்லயும் இருக்கா? அவ்வ்வ்வ! பெண் குழந்தை பிறந்த விஷயத்தை நீங்கள் ப்ரஸன்ட் செய்த விதம் சூப்பர்ப்! தாயாக, சகோதரியாக, ஆசிரியையாக, மனைவியாக, மகளாக எல்லாமுமாக இருக்கும் மகளிர்க்கு ஒரு ஜே போடலாம் இன்றைய தினத்தில்!

    ReplyDelete
  3. உங்க மனைவி படித்து விட்டு ஆட்டோ கிராப் போட்டார்களா?

    ReplyDelete
  4. மறக்காது நினைவு கூர்ந்து எங்களை வாழ்த்த பதிவு எழுதிய நண்பருக்கு அன்பான வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. பெண்களை பற்றி ஆழமாக தெரியவைக்கும் பதிவு.

    அருமைப்பதிவு வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. கொஞ்சலா உங்க கோபத்தையும் காட்டுவிங்க போல , அருமைங்க .

    ReplyDelete
  7. ரசிக்கும்படியாக பகிர்ந்துள்ளிர்கள்,மகளிர் தினம் என்று மகளிர்க்காக இருப்பதில் பெருமைகொள்ள வேண்டுமா?என்ற கேள்வியும் எழுகிறது. என்றும் போற்றும்படியாக மகளிர் மதிக்கப்பட்டாலும்,வாழ முடிந்தாலும் இப்படியொரு தனி தினம் வேண்டியிருக்காது என்றும நினைக்கிறேன்.தினம் தினம் மதிக்கும் படியும்,போற்றும் படியும் மகளிர் வாழ வேண்டும்,சமூகம் வாழ விட வேண்டும்.

    ReplyDelete
  8. சும்மா பொய் சொல்லாதீங்கப்பா....அவங்க படுத்துற பாட்டப்பத்தி தனிய ஒரு பதிவு போடுங்கப்பா,,, என் மனசுல பட்டத சொல்லுறேன்...சமுதாயம் இவ்வளவு சீர்கெட்டதுக்கு ஒரு காரணம் பெண்களுக்கு அதிக சுதந்திரம் கொடுத்ததுதான்...இப்பல்லாம் பெண்கள் பெண்களா இல்லாப்பா...கண்ட கண்ட நாடுமாறிங்கல்லாம் புதுமைப் பெண்கள்,புரட்சி பெண்கள் தலைவின்னு சொல்லிகிட்டு நல்ல பெண்கள் மனசுல வெஷத்த வெதைச்சுடறாளுங்கப்பா....தம்பி ஒங்களுக்கு ஒண்ணு தெரியுமா...??இப்பல்லாம் பொம்பளைங்க தண்ணி,பான் பராக்கு,ஹெராயின் இதெல்லாம் பயன் படுத்துறாளுங்கப்பா...அதுமட்டுமில்ல கர்ப்பம் தரிக்காம இருக்கிறதுக்கு மாத்திரை வந்தபிறகு...கற்பிற்கும் மரியாத இல்லாம போயிடுச்சு...கேட்டா ஆம்பளைங்க செய்யலாம் நங்க செய்யக்கூடாதான்னு கேக்குறாங்கப்பா......மொத்தத்தில நல்ல அறிவைக் கொடுப்பதற்காக போதிக்கப்பட்ட கல்வி இப்போ.......அட போங்க தம்பி......

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.