Tuesday, January 31, 2012



இந்து மதத்தவரே உங்களுக்கு 'அந்த உணர்வு" உண்டா?

நான் நாத்திகன் அல்ல எனக்கு கடவுள் என்ற சக்தி மேல் நம்பிக்கை உண்டு ஆனால் மத வழிபாடுகளில் அவ்வளவாக நம்பிக்கை இருந்ததில்லை. ஆனால் அதில் நம்பிக்கை உள்ளவர்களை கேலி செய்வதில்லை. எனக்கு எல்லா மத நண்பர்களும் உண்டு. முஸ்லிம்களோடு சேர்ந்து மசூதிக்கு போவதும் உண்டு ,இந்துக்களோடு சேர்ந்து கோயிலுக்கு போவதும்முண்டு, கிறிஸ்துவர்களோடு சேர்ந்து சர்ச்சுக்கும் போவதும் உண்டு. ஆனால் நான் எப்போது படுக்கைக்கு போவேனோ அப்போதுதான் நான் முழுமனதோடு பிரார்த்தனை செய்வேன் அப்போது கிடைக்கும் திருப்தி & சுகம் வேறு எங்கும் எனக்கு கிடைத்தது இல்லை. இப்படிபட்ட எனக்கு சின்னவயதில் இருந்து ஒரு கேள்வி மனதில் எழுந்து கொண்டே உள்ளது அதற்கான விடையை உங்களுக்கு தெரிந்தால் நீங்கள் கூறலாம்.

எல்லோருக்கும் அவர்கள் மதம் மிக புனிதமானது கடவுள்களும் உயர்ந்தவர் என்ற எண்ணம் எப்போதும் உண்டு. அது போல அவர்கள் மத அடையாளங்களை மற்றவர்கள் கேலி செய்வதும் அதை தவறாக பயன்படுத்துவதையும் அனுமதிப்பது இல்லை. இதை முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் மிக கவனத்துடன் செயல்படுத்துகிறார்கள். ஆனால் இந்துமதவாதிகள் மற்ற மதத்தினர் தம் மதத்தை கேலி செய்வதையும் தவறாக பயன்படுத்துவதையும் எதிர்க்கும் அவர்கள், தங்கள் மதத்தினரே அதை தவறாக பயன்படுத்தும் போதுமட்டும் அதை கண்டும் காணாமல் இருப்பது ஏன் என்றுதான் நான் நினைத்து குழம்புகிறேன்.

சமிபகாலங்களில் நடந்த சிலவற்றை இங்கு ஞாபக படுத்துகிறேன். சில நாடுகளில் இந்து கடவுள்களின் உருவங்களை பெண்களின் உள்ளாடைகளிலும், டாய்லெட் மற்றும் ஷூக்களிலும் பதித்தும் சில நாடுகளில் நடத்தப்பட்ட நாடகங்களில் இந்துகடவுள் போல வேடம் அணிந்து வந்து நடித்தற்காக கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அது மிகவும் சரியானதே. ஆனால் எனக்கு புரியாதது இதுதான். இந்துக்களே கடவுள்களின் படத்தை மிக தவறாக உபயோகிப்பதாக நான் கருதுகிறேன். உதாரணமாக பட்டாசுகளில் கடவுளின் (லக்ஷ்மி வெடி) படத்தை போட்டு  அதை வெடித்து மகிழ்கின்றனர்.(இது சிறுவயதில் இருந்து இப்போதும் என் மனதை காயப்படுத்தும் ஒரு செயலாக இருக்கிறது) மேலும் பலவித பொருட்களில்(பிராண்டு நேமுடன் கடவுள் படம்கடவுளின் படத்தை பதித்து விற்கின்றனர். ஆனால் அந்த பொருட்களின் பயன் முடிந்ததும் அது அந்த கடவுளின் படத்தோடு குப்பை மேட்டுக்குதான் செல்கின்றன. இப்படி செய்பவர்கள் மேலைநாட்டினரோ அல்லது கிறிஸ்துவர்களோ அல்லது முஸ்லிம்களோ அல்ல. இந்தியநாட்டில் உள்ள வியாபரிகளே! இதற்கு ஏன் நீங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. அது நியாம்தானா ? உங்களுக்கு விடை தெரிந்தால் விளக்கம் தாருங்களேன்.

நான் வாங்கும் பல பொருட்களில் பலவித பொருட்கள் இந்துமத கடவுள்களின் படம் பதித்துதான் வருகின்றன. அதுமாதிரி வருவதை  தடை செய்யவேண்டும் என நினைக்கிறேன்( அந்த பொருட்களை அல்ல) ஊறுகாய் பாட்டிலும் நான் விரும்பி வாங்கும் பலசரக்கு சாமான்கள் லக்ஷ்மி  பிராண்டுகள்தான் அனைத்திலும் சாமி படங்கள் தான். அதை தூக்கி குப்பையில் போடுவதால் மதப்பற்று இல்லாத எனக்கே மனம் வருந்தும் போது உங்களுக்கு 'அந்த உணர்வுகள்' இல்லையா கொஞ்சம் யோசித்து சொல்லுங்களேன். நான் எந்த வித கடவுளின் படங்களையும், புத்தகங்களையும் மத அடையாளம் உள்ள பொருட்களையும் எப்போதும் அதன் பயன் முடிந்து மிக பழமையாகிவிட்டால் குப்பையில் தூக்கி போடுவது கிடையாது. அதற்கு பதிலாக அந்ததந்த வழிபாடு தளங்களுக்கு சென்று அங்கே வைத்து விட்டு வந்துவிடுவேன். அதை அவர்கள் என்ன செய்வார்கள் என்பது பற்றி எனக்கு கவலையில்லை. நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை முடிந்தால் சொல்லுங்கள்.

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. எந்த மதத்தையும் இழிவுபடுத்தாமல் யாருடைய மனைத்தையும் காயப்படுத்தாமல் உங்களுக்கு என்று கருத்துக்கள் இருக்கும் சமயத்தில் பின்னுட்டம் இடுங்கள். உங்களின் மதக்கருத்துகள் மற்றவர்களை கவர்ந்து இழுக்க வேண்டுமே தவிர அதனால் மற்றவர்கள்  உங்களையும் உங்கள் மதத்தையும் வெறுக்க வைக்கும் செயலில் ஈடுபடக்கூடாது. அது உங்களால் முடிந்தால் பின்னுட்டம் இடுங்கள்.

எண்ணங்கள் நன்றாக இருந்தால் நமது செயல்களும் நன்றாக இருக்கும்.
நன்றி.

என்றும் அன்புடன்
உங்கள் அபிமான சகோதரன் மதுரைத்தமிழன்

11 comments:

  1. இராமன் சார்பில் செருப்பு தான் நாடண்டது என்று இராமயணம் சொல்லுகிறது, அதனால் செருப்பு உயர்வு என்று நாம் பூசை அறையில் வைப்பது இல்லை.

    அவர்கள் ஒருவேளை தெரியாமல் இவ்வாறு செய்திருக்கலாம், எடுத்துச் சொன்னால் திருத்திக் கொள்வார்கள், அதுக்காக கையை வெட்டுவோம், காலை வெட்டுவோம் என்று காட்டுமிராண்டி ஆனால் நீங்கள் கடைபிடிக்கும் மதம் உங்களுக்கு சகிப்புத் தன்மையைச் சொல்லிக் கொடுக்கவில்லை என்று தான் புரிந்து கொள்ளப்படும்.

    சாணியை பிடிச்சு வச்சு புள்ளையார் என்று கும்பிடும் நாம் இதற்கு உணர்ச்சி வசப்படுவது வியப்பு இல்லை முரண்.

    ReplyDelete
  2. @கோவி.கண்ணண் உங்கள் வருகைக்கும் தரமான கருத்தை பகிர்ந்து சென்ற உங்களுக்கும் நன்றிகள். உங்களை கருத்துக்களை நான் கூகுல் பஸ்ஸில் படித்து சில சம்யங்களில் கருத்தும் வழங்கியுள்ளேன். அதன் பின் உங்களை தொடரமுடியவில்லை. நல்ல கருத்தை கூறி பின்னுட்டத்தை ஆரம்பித்து வைத்த உங்களுக்கு எனது நன்றிகள்.

    ReplyDelete
  3. அருமையான பதிவுவாழ்த்துகள்

    ReplyDelete
  4. எனக்கும் கூட சில சந்தேகங்கள் இருக்கு. ஸ்ரீ ராமஜெயம் எழுதுவதை எவ்வளவு ஆத்மார்த்தமாக எழுதுவார்கள் வட நாட்டில் டாய்லெட்டில் கால் வைக்கும் இடங்களில் பரசுராம் என்று எழுதி இருக்கும். கால் வைக்கவே கஷ்டமா இருக்கும்.எழுத்துக்கே இவ்வளவு உணர்ச்சி வெளிப்பாடு என்றால் உருவங்களுக்கு எப்படி இருக்கும்?

    ReplyDelete
  5. இந்து சமயத்தில், அதனை கட்டுப்படுத்த அமைப்புக்கள் கிடையாது. கட்டுப்படுத்தினால் அது இந்து சமயமே அல்ல ! இறைவனை, யாரும், எப்படி வேண்டுமானாலும் வழிபடலாம். 50 கை வைத்து புதிதாக ஒரு பெயரை வைத்து வணங்கினாலும், இது இந்து சமய கோட்பாடு அல்ல என்று சொல்பவர் யாரும் கிடையாது. எங்கும் எதிலும் இருப்பவர் தான் கடவுள், அப்படிங்கற நம்பிக்கை. கடவுள் ஒரு லாஜிக்கான ஆத்மாவாக இருந்தால், எந்தப் பெயரை வைத்து அழைத்தாலும், ஏன் ஒரு குப்பைத் தொட்டியை வழிபட்டாலும் கூட, அது அவரைத் தான் சாரும்னு தெரியாமலா இருக்கும்.

    "அதை தூக்கி குப்பையில் போடுவதால் மதப்பற்று இல்லாத எனக்கே மனம் வருந்தும் போது உங்களுக்கு 'அந்த உணர்வுகள்' இல்லையா கொஞ்சம் யோசித்து சொல்லுங்களேன்."

    நம்முடைய இயல்பான வாழ்க்கை முறை சார் அது. பட்டாசுல சாமி படம் போட்டு இருக்கு அவ்ளோ தான். சாமி கும்பிடணும்னு அந்தப் பட்டாசை வாங்கலீங்க. வெடிக்கணும்னு தான் வாங்கறோம். சாமி கும்பிடுறதுக்குன்னு வாங்குன படங்கள் பூஜை அறைகளில் தாங்க வைக்கிறோம். அந்தப் படங்கள் குப்பை தொட்டிக்கு வந்தாலும் 'அந்த உணர்வு' எங்களுக்கு வராது.

    "மத அடையாளம் உள்ள பொருட்களையும் எப்போதும் அதன் பயன் முடிந்து மிக பழமையாகிவிட்டால் குப்பையில் தூக்கி போடுவது கிடையாது."

    சார், நமக்கு தேவைப்படாத பொருட்களை குப்பையில் போடுவது தப்பில்லைங்க. அது மற்றவர்களை காயப்படுத்தனும்னு உள்நோக்கத்தோட போட்டீங்கன்னா தான் பிரச்சினை.

    "ஆனால் இந்துமதவாதிகள் மற்ற மதத்தினர் தம் மதத்தை கேலி செய்வதையும் தவறாக பயன்படுத்துவதையும் எதிர்க்கும் அவர்கள், தங்கள் மதத்தினரே அதை தவறாக பயன்படுத்தும் போதுமட்டும் அதை கண்டும் காணாமல் இருப்பது ஏன்"

    குமார் பொண்டாட்டி மோசமானவள்னு குமார் சொல்றதுக்கும்...அதையே நான் சொல்றதுக்கும் வித்தியாசம் இருக்குதுங்களே ! இதற்கும் மதத்திற்கும் சம்பந்தமே கிடையாது. இது ஒரு குழு மனப்பான்மை. கும்பல் கூடி ஓட்டு போட்டுக்குற மாதிரி :) எம்.எஃப்.ஹூசைன் மேட்டரும் இதே மாதிரி தான். அவரை விட மோசமா பெரியார் சொல்லி இருக்கார்...அதை எல்லாம் சகிப்புத் தன்மையோட கேட்டுட்டு தானே இருக்கோம்.

    அடுத்தவனை பாதிக்காம, கஷ்டப்படுத்தாம எதனை வழிபட்டாலும் தப்பே அல்ல. ஏன் அப்படிப்பட்ட மூடநம்பிக்கைகள் கூட தவறே கிடையாது என்பதே என் கருத்து.

    ReplyDelete
  6. உண்மைதான். காலெண்டரில் கடவுள் படம்போடுவதும் தவறுதான். புத்தகத்திற்கு அட்டை போடுகிறார்கள். நம் மதப்படி பூமாதேவியும் வணக்கத்திற்குரியவள்தான். ஆகவே நடக்கும்போது தரையை அழுத்தி மிதித்து நடக்கக்கூடாது என்பார்கள். பரேட் செய்பவர்கள் இதை கவனிக்க முடியுமா? நம் மனசாட்சிக்கு ஏற்ப அவற்றை கையாள வேண்டும். நல்லதான பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  7. அமைப்பு ரீதியாக திரட்டக்கூடிய சக்தி
    சர்ச் போலவோ மசூதி போலவோ கோவில்களுக்கு இல்லை
    ஒரு வேளை விவேகானந்தர் கூடுதலாக
    சில வருடங்கள் இருந்திருந்தால் அதைதான் செய்ய
    முயன்றிருப்பார் என நினைக்கிறேன்
    அதிகம் சிந்திக்கச் செய்து போன பதிவு
    பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  8. அருமையான சிந்தனை .
    அறிவான கேள்விகள்.
    உண்மையில் சொல்லப் போனால்
    அவற்றைத் தடை தான் செய்ய வேண்டும்.
    ஆனால் நாம் தான் சகிப்புத் தன்மை மிக்கவர்களாயிற்றே...
    அதை எல்லாம் கடவுளாக எண்ணாமல் வெறும் படங்களாக
    மட்டுமே பார்த்து நம்மைத் தேற்றிக் கொள்வோம்.
    கல் என்றால் கல். கடவுள் என்றால் கடவுள் என்று.
    இப்போது வழிபாட்டுதலங்களே வியாபார ஸ்தலங்கள்
    ஆகி விட்டக் காலம் இது .

    ReplyDelete
  9. அருமையான செய்தி..!!
    கடவுள் படங்களை உள்ளடைகளில் அணிவதை இப்பொழுது தான் கேள்வி படுகிறேன் ..!!
    சாமி ஊர்வலம் என்று சாலை போக்குவரத்தை நிப்பாட்டவும், ஊர் திருவிழா என்று சவுண்டு சர்விஸ் போட்டு படிப்பவர்களையும் வயதானவர்களையும் அல்லல்படவைக்கவும், மத வழிபாடு என்ற பெயரில் கொடூர நேர்த்திக்கடன்கள் செய்யவும் விரைகிற மக்கள் கூட்டம், என் இதை எதிர்க்கவில்லை...!!

    நன்றி!!

    ReplyDelete
  10. // அதை தூக்கி குப்பையில் போடுவதால் மதப்பற்று இல்லாத எனக்கே மனம் வருந்தும் போது உங்களுக்கு 'அந்த உணர்வுகள்' இல்லையா கொஞ்சம் யோசித்து சொல்லுங்களேன்.//

    எதார்த்தமான கருத்துக்கள். எனக்கும் இப்படி பலமுறை தோற்றியது உண்டு

    ReplyDelete
  11. எதார்த்தமான கருத்துக்கள். எனக்கும் இப்படி பலமுறை தோன்றியது உண்டு.....
    உண்மையில் சொல்லப் போனால்
    அவற்றைத் தடை தான் செய்ய வேண்டும்.
    ஆனால் நாம் தான் சகிப்புத் தன்மை மிக்கவர்களாயிற்றே...
    அதை எல்லாம் கடவுளாக எண்ணாமல் வெறும் படங்களாக
    மட்டுமே பார்த்து நம்மைத் தேற்றிக் கொள்வோம்.
    சிந்திக்க வைத்த பகிர்வு ...........
    நன்றி........

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.