Sunday, January 29, 2012



குடிப்பவன் பேச்சு இலக்கியமாகி போச்சு


சும்மா பொழுது போகலைன்னு அப்படியே விகடன் படிக்க போனேன். அதில் ஜெயப்பூர் இலக்கிய விழாவிற்கு சென்ற தமிழக எழுத்தாளர்களை பேட்டி எடுத்து போட்டிருந்தார்கள்.ஜனவரி 20 முதல் 25 வரை நடைபெற்ற இந்த விழாவுக்கு, தமிழகத்தில் இருந்து அழைக்கப்பட்டிருந்த எழுத்தாளர்கள் இரண்டு பேர். ஒருவர், சாரு நிவேதிதா. இன்னொருவர் பாமா


அதில் இந்த நவின காலத்தில் நம்மை தவிர வேறயாருக்கும் இலக்கியம் பற்றி ஒன்றும் தெரியாது என்றும் நம்மை இலக்கிய உலகத்தின் ஜம்பவான் என்று கருதி கொள்ளும் எழுத்தாளர் இலக்கிய விழாவுக்கு சென்று வந்ததை பற்றி பேட்டி கொடுத்து இருந்தார்.

அந்த பேட்டியில் நவின இலக்கிய தந்தை சொன்னது இதுதான் (நன்றி : விகடன்)

''ஜெய்ப்பூரின் டிஜி அரண்மனையில் நடந்த விழாவை இலக்கியக் கும்பமேளா என்றுதான் மீடியாக்கள் வர்ணித்தன. தினமும் நான்கு இடங்களில் இலக்கியக் கூட்டம் நடக்கும். காலையில் மூன்று அமர்வுகள். மதியம் மூன்று அமர்வுகள். ஆக, ஒரு நாளைக்கு 24 அமர்வுகள். பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம் என்றாலும், பிரதிநிதிகளாக கலந்து கொள்ளவேண்டும் என்றால் ஒரு நாளைக்கு ரூ.2,500 கட்டணம் செலுத்த வேண்டும். பார்வையாளர்களாக வருகிறவர்கள் இலக்கியக் கூட்டங்கள் அனைத்தையும் கேட்கலாம். ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பேர் பார்வையாளர்களாக வந்திருந்தார்கள். தினமும் இரவு எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படும் விருந்தில், பிரதிநிதிகள் கலந்து கொள்ளலாம். வெளிநாட்டு மதுபானங்கள் ஆறாக ஓடியது. வோடோஃபோன், கிங்ஃபிஷர் என்று ஸ்பான்ஸர்கள் விழாவைக் கொண்டாடினார்கள். குறிப்பாக, பென்குயின் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த விருந்தை மறக்கவே முடியாது. சுமார் மூவாயிரம் பேர் விடிய விடிய குடித்துக் கொண்டே இருந்தார்கள். அன்லிமிடெட் அமர்க்களம்தான் போங்கள். எனக்குப் பிடித்த முக்கியமான எழுத்தாளர்கள் பலர் வந்திருந்தனர். முக்கியமாக வில்லியம் டால்ரிம்பள் வந்திருந்தார். அவர் ஒரு பயணக் கட்டுரை ஆசிரியர். என்.எஸ்.மாதவன், கவிஞர் சேரன், கன்னட எழுத்தாளர் சிவப்பிரகாசம், தெஹெல்கா சோம சௌத்ரி, அமெரிக்க எழுத்தாளர் நீலம், பாலஸ்தீன எழுத்தாளர் ராஜா என்று பலரை சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது.

ஒரு இலக்கிய வாதி ஒரு இலக்கிய விழாவிற்கு போய்வந்து பேட்டி கொடுத்த மாதிரியா இருக்கு? எனக்கென்னவோ ஒரு குடிகாரன் பாருக்கு  போய்விட்டு வந்து பாரை பற்றியும் அங்கே வந்தவர்களை பற்றியும் பேசியது போல இருக்கிறது.  ஒரு பெரிய எழுத்தாளன் ஒரு இலக்கிய விழாவிற்கு சென்றால் அங்கு வந்த மற்ற நாட்டு இலக்கியவாதிகள் சொன்ன நல்ல கருத்துகளை வாதங்களை   மக்களுக்கு ஒரு பிரபல பத்திரிக்கையில் பேட்டி கொடுக்ககும் போது சொல்லுவதுதான்  நல்லது . அதைவிட்டு விட்டு  அங்க என்ன ட்ரிங்க்ஸ் குடித்தோம் என்றா பேட்டி தருவார்கள். என்ன நான் சொல்றதில் ஏதும் தப்பு உண்டாங்க?

தற்பெருமை சிங்கம் கூறிய இன்னொரு செய்தியையும் இங்கே பார்ப்போம்
நான் கலந்துகொண்ட செஷன் இரண்டாம் நாள் காலை 10 மணிக்கு. அதே நேரத்தில் சேத்தன் பகத் செஷன் இன்னோர் அரங்கில் நடைபெற்றது. தொடங்குவதற்கு முன் சேத்தனிடம் 'உங்கள் பேச்சைக் கேட்க முடியவில்லையே என்று வருத்தமாக இருக்கிறதுஎன்றேன். அவர், 'எனக்கு வருத்தமில்லை. கூட்டம் உங்கள் அரங்குக்கு வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறதுஎன்றார். அவ்வளவு பிரபலமான எழுத்தாளர் அப்படிச் சொன்னது எனக்கு சந்தோஷமாக இருந்தது.
சேத்தன் பகத் செஷன் கிண்டல் அடித்ததை நினைத்து பெருமை கொள்பவர் இவராகத்தான் இருக்க முடியும்.

விகடனார் ரொம்ப மோசமுங்க அவர் சொன்ன மற்றொன்றை எடிட் செய்து விட்டார்கள் போலிருக்கிறது. அப்படி அவர்கள் எடிட் செய்த மேட்டர் எனக்கு கிடைச்சுருச்சுங்க அது என்னன்னா...

ஜெயப்பூர் இலக்கிய விழாவே இவரது தமிழ் இலக்கியத்தை வியந்து அதற்காக பாராட்டி நடத்தியதுதான் என்று சொன்னதுதானங்க.. ஹீஹீ.....

இதே நேரத்தில் அங்கு சென்று வந்த பாமா என்ற எழுத்தாளர் கொடுத்த பேட்டியை பாருங்க

எழுத்தாளர் பாமாவிடம் பேசியபோது, ''மீறல்களும் மாற்றங்களும் என்ற தலைப்பில் நான் கட்டுரை வாசித்தேன். என்னுடைய 'அண்ணாச்சிசிறுகதையின் இறுதிப் பகுதியை ஆங்கிலத்திலும் தமிழிலும் வாசித்தேன். தமிழில் வாசிக்கப்பட்டபோது பார்வையாளர்கள் அதை வெகுவாக ரசித்தார்கள். என்னைப் பொறுத்தவரை ஜெய்ப்பூர் இலக்கிய விழாவை ஓர் இலக்கியப் பயன்பாடுகொண்ட நிகழ்வாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பாலிவுட் இயக்குநர்கள், பாப் மியூசிக் கலைஞர்கள், பிரபலங்களின் ஆர்ப்பாட்டம்தான் அங்கு அதிகம் இருந்தது. விழாவின் முதல் நாள் தொடங்கி இறுதி நாள் வரை சல்மான் ரஷ்டியை சம்பந்தப்படுத்தி போலீஸ் கெடுபிடியும் அதிகம் இருந்தது. இத்தனை கோடிகளைக் கொட்டி, சாப்பாடும் கூப்பாடுமாக இருந்ததே தவிர இலக்கிய மேம்பாடு இதில் தெரியவில்லை'' என்றார்.

பாருங்க எவ்வளவு அழகாக ஒரு கூட்டத்திற்கு போய்வந்ததை வெகு நாகரிகமாக நறுக்கென்று சொல்லியுள்ளார்.

ஏதோ மனசுல பட்டதை இங்கே கொட்டி இருக்கேன்.   அப்ப வாரேங்க நிறைய படிக்க வேண்டி  இருக்கு பாடம் அல்ல இலக்கியமும் அல்ல நம்மை மாதிரி சக பதிவாளர்கள் கிறுக்கியதை.

4 comments:

  1. இதை எப்படி விகடனில் போடுகிறார்கள் என்றுதான் ஆச்சரியமாக உள்ளது.

    பதிவுலகத்தில் வரும் நல்ல பதிவுகளை படிக்கவே எனக்கு நேரம் போதவில்லை. அதனால் இவற்றை படிப்பதை குறைத்துவிட்டேன்.

    ReplyDelete
  2. எமக்கு தொழில் எழுத்து ..
    நாட்டுக்குழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல்
    என்றிருந்த பாரதியின் சாபம் ஏற்கெனவே உண்டு..
    " மெல்ல தமிழினி சாகும்"
    எழுத்தை வியாபாரம் ஆக்கிவிட்ட பின்னர் சமூகமாவது விழிப்புனர்வாது....
    இவர்களெல்லாம் எழுத்து வியாபாரிகள்.

    ReplyDelete
  3. எமக்கு தொழில் எழுத்து ..
    நாட்டுக்குழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல்
    என்றிருந்த பாரதியின் சாபம் ஏற்கெனவே உண்டு..
    " மெல்ல தமிழினி சாகும்"
    எழுத்தை வியாபாரம் ஆக்கிவிட்ட பின்னர் சமூகமாவது விழிப்புனர்வாது....
    இவர்களெல்லாம் எழுத்து வியாபாரிகள்.

    ReplyDelete
  4. கிளாசி!

    ஸ்மைலி போட்டுக்கிறேன்.

    முதல் வரி ஆங்கிலத்தின் இரட்டை நயம்:)

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.