Thursday, January 5, 2012

 
மனிதர்களை கொல்லும் உரிமை எங்களுக்கே வேண்டுமென்று தமிழக டாக்டர்கள் போராட்டமா?

தமிழகத்தில் தூத்துக்குடி டாக்டர் சேதுலட்சுமி படுகொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து தமிழகஅரசு மருத்துவர்கள் அனைவரும் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்தனர். சக மருத்துவர் படுகொலையில், அனைத்து டாக்டர்கள் வேதனைப்படுவதைப் நம்மால புரிந்துகொள்ள முடிகிறது.

இந்த டாக்டர் பணியில் தவறு செய்து இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். இதை இந்த போராட்டம் நடத்திய டாக்டரில் யாரேனும் ஒருவர் இந்த டாக்டர் தவறே செய்யவில்லை என்று உறுதி செய்துவிட்டு அதன் பின்  போராட்டம் நடத்தி இருந்தால் இந்த டாக்டர்களை நாம் பாராட்டலாம் அதே சமயத்தில் நாம் ஆதரிக்கலாம். ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை.

டாக்டர்களின் கூற்றுபடி இந்த டாக்டர் தவறு செய்யவில்லை என்று எடுத்து கொண்டால், இந்த படிக்காத ஆட்டோ டிரைவர் எமோஷனிலால் செய்த குற்றத்திற்க்காக இந்த படித்த மனிதாபிமானமுள்ள டாக்டர்கள் இப்படி பணி செய்யாமல் போராட்டம் நடத்தலாமா?

அதற்கு பதிலாக இந்த டாக்டர்கள் 100 பேர் சேர்ந்து பணி முடிந்த பின் தமிழக கவர்னரையோ அல்லது நம் தமிழக முதல்வரிடமோ சென்று நேரில் மனு கொடுத்திருந்தால் நிச்சயம் படித்த டாக்டர்கள் சொல்லுவதை இந்த தலைவர்கள் கேட்டு அதற்கு ஏற்ப நல்ல நடவடிக்கை எடுத்து இருப்பார்கள். ஆனால் மக்களால் கடவுளுக்கு அடுத்த படியாக கருதும் இந்த படித்த டாக்டர்கள் அப்படி செய்யவில்லை. அவர்களும் சட்டத்தை தம் கையில் எடுத்து தான் ஆற்ற வேண்டிய புனிதமான பணியை செய்யாமல் புறக்கணித்தனர்.
இப்படி படித்த டாக்டர்கள் செய்யும் போது இந்த படிக்காத ஆட்டோ டிரைவர் சட்டத்தை தன் கையில் எடுத்ததை நாம் எப்படி கண்டிக்க முடியும்?

ஒவ்வொரு மருத்துவமனையிலும்  அன்றாடம் யாராவது ஒருவர் இறந்து கொண்டுதான் இருக்கின்றனர் . ஆனால் யாரும் கொலை வெறி  கொண்டு அலையவில்லை .டாக்டரும் முடிந்த அளவு முயற்சி செய்தார் முடியவில்லை இதுதான் நம் விதி என்று நினைத்து சொந்தங்கள் இந்தச் சடலங்களை வீட்டுக்குக் கொண்டு சென்று  இருக்கின்றனர். சில நேரங்களில் சொந்தங்கள் ஆத்திரம் அடைகிறார்கள் என்றால், அதற்கு சில காரணங்கள் மருத்துவமனைகளில் ஏற்படுகின்றன. அதை நல்ல உள்ளம்  கொண்ட எந்த டாக்டரும் மறுக்க முடியாது. இதனை ஏன் இந்த போராட்டம் நடத்திய டாக்டர்கள் சிந்திக்க வில்லை?


நம்மை என்ன செய்து விட முடியும்  நம்மில் என்ன குற்றம் கண்டு விட முடியும் என்ற ஆணவம் இன்றும் 90 சதவிகித இந்திய  டாக்டர்களுக்கு இருக்கத்தான் செய்கிறது. அப்படி நினைத்தால் ஏற்பட்ட விளைவே இந்த மரணத்திற்கு காரணம்.அதுமட்டுமில்லாமல் டாக்டர்களுக்கு பொதுமக்களைவிட அதிகபாதுகாப்பு உள்ளது இந்தியாவில். ஆனால் நான் வசிக்கும் அமெரிக்காவில் நோயாளிகளை பாதுகாக்கும் சட்டங்கள் கடுமையானவை. ஒரு டாக்டரின் பார்வையில் இருக்கும் நோயாளி இறக்க நேரிட்டால் அந்த டாக்டர் மருத்துவமனையில் உள்ள பல கமிட்டிகளுக்கு மற்றும் கோர்ட் அல்லது அரசுக்கு பதில் கூற வேண்டும். மேலும், அவரது தவறு நிரூபிக்க பட்டால் அவர் பல ஆண்டுகள் வரை தனது மெடிக்கல் லைசென்சை இழக்க வேண்டியது மட்டுமல்லாமல் பெரும அபராதத்தை இறந்தவரின் குடுபத்திற்கு கொடுக்க வேண்டி வரும். இங்கெல்லாம் ஒவ்வொரு டாக்டரும் நோயாளியிடம் மரியாதையுடனும்  அக்கறையுடனும் நடப்பதை நம்மால் சுலபமாக உணர முடியும்.

இவ்வளவு கடுமையான சட்டம் இருக்கும் அமெரிக்காவிலும் மெடிக்கல்தவறுகள் அதிக அளவு நேர்ந்து கொண்டுதான் இருக்கிறது.


இந்தியாவில் டாக்டரை நாம் கடவுளுக்கு அடுத்தபடியாக மரியாதை செலுத்தி வருவோம் ஆனால் நான் வசிக்கும் அமெரிக்காவிலோ
அவர் நான் கொடுக்கும் காசுக்கு வேலை பார்ப்பவர் என்றே கருதுகின்றனர். அமெரிக்காவில் அநேக மருத்துவமனையில் பரிசோதனை செய்யும் இடத்தில் டாக்டருக்கு நாற்காலி இருப்பதில்லை என்பது உண்மையே. அவர்கள் ரூமில்மட்டும் சேர் இருக்கும் அதையும் அவர்கள் ஒய்வு நேரத்தில்தான் அதை பயன்படுத்துவார்கள். ஆனால் இந்தியாவில் இதற்கு நேர்மார்தான் டாக்டர் தன் சேரில் உட்கார்ந்துதான் சிகிச்சை அளிப்பார் அப்படி அவர் உட்காராமல் சிகிச்சை அளிக்கிறார் என்றால் அவர் ஏதோ ஆப்ரேசனில் ஈடுபட்டிருப்பார்.

நம் இந்திய டாக்டர்கள் தாங்கள் தவறே செய்வதில்லை என்ற ஆணவத்தில் செயல்படுகின்றனர். அவர்களின் தவறினால் ஏதாவது இழப்பு ஏற்பட்டால் அதை மூடிமறைத்து நாங்கள் என்ன கடவுளா என்று கேட்பார்கள். இதற்கு காரணம் நம் இந்திய  அரசாங்கம் இவர்களுக்கு கொடுக்கும் அதிக அளவு பாதுகாப்புதான். ஒரு டாக்டர் அல்லது ஒரு மருத்துவமனை தவறு செய்தால் அவர்கள் மீது  மக்களால்  எளிதாக வழக்குத் தொடர்ந்து அவர்களை தண்டிக்க முடியாது.  பொதுமக்களை அல்ல  டாக்டர் மற்றும் மருத்துவமனைகளை பாதுகாக்க தான் நம்மிடம் சட்டம் உள்ளது. அதனால் தான் இன்று தவறு செய்யும் பல டாக்டர்கள், மருத்துவமனைகள் இந்த சட்டத்தை பயன்படுத்தி தப்பித்துக் கொள்கிறார்கள்.

 மனிதர்களை சாக அடிக்கும் உரிமை எங்களுக்கு மட்டும்தான் உண்டு என்று டாக்டர்கள் போராடினால் அதை பார்த்து கொண்டு இந்த சமுகம் சும்மா இருக்காது அந்த உரிமையை இந்த சமுகம் கையில் எடுத்து உங்களை தண்டிப்பதை யாராலும் தண்டிக்க முடியாது.


இறுதியாக நான் சொல்வது, ஒரு சிறந்த அரசின் கடமை பொது மக்களை காப்பது தான். அடவாடித்தனம் பண்ணுபவர்களை அல்ல. அதனால் மக்களை பாதுகாக்கும் அளவிலும், தவறு செய்யும் டாக்டர்கள் மற்றும் மருத்துவமனைகளை தண்டிக்கும் வகையிலும் ஏற்ற சட்டத்தை உருவாக்க வேண்டுமென்பதுதான் அதை நம் இந்திய அரசாங்கம் செய்யுமா என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்க முடியும்

இந்த கட்டுரை எல்லா மருத்துவர்களையும் காயப்படுத்த எழுதப்பட்டதல்ல. அதனால் நல்வழியில் மருத்துவம் செய்யும் டாக்டர்கள் இதை தவறாக எடுத்து கொள்ள வேண்டாம். நல்ல டாக்டர்கள் தெய்வத்திற்கு சமம். அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.

டிஸ்கி :  டிஸ்கியில் கூறப்பட்டவை நகைச்சுவைக்காக தரப்பட்டுள்ளது .
திராவிடகட்சிகளுடன் கூட்டு எதிர்காலங்களில் கிடையாது என்று நான் அறிவித்தால் டாக்டர் ஆகிய எனக்கு மறைமுகமாக விட்ட மிரட்டல் இது. அதனால் இந்த கொலையை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்று டாக்டர் ராமதாஸ் அவர்கள் அறிவித்துள்ளார்..
அடுத்த தேர்தலில் டாக்டர்களுக்கு குண்டு துளைக்காத கார்கள் இலவசமாக அளிக்க தமிழக அரசியல் கட்சிகள் முடிவு.
ஆட்டுகறிக்கடைகள் இருந்தால் அதை 1000 அடி தூரத்த்திற்கு தள்ளி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த கடைகள் ஹாஸ்பிடலுக்கு அருகில் இருப்பது தங்களை கிண்டல் செய்வது போல இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அடுத்தாக என் சாவுக்கு டாக்டர் காரணமல்ல என்று நோயாளிகளிடம் எழுதி வாங்கிய பின்புதான் சிகைச்சை அளிக்க டாக்டர் முடிவு செய்துள்ளனர்.
இந்திய டாக்டர்களை கொண்டு எதிரி நாட்டுமக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க இந்திய அரசாங்கம் முடிவு
உலக நாடுகளில் தூக்கு தண்டனைக்கும் விஷ ஊசி போட்டு கொல்லும் தண்டனைக்கும் அதிக எதிர்ப்புகள் வருவதால் கொலைகார்களையும் தீவிரவாதிகளையும் இந்தியாவுக்கு அனுப்பி மருத்துவ சிகிச்சை அளிக்க உலக நாடுகள் முடிவு செய்துள்ளன.





6 comments:

  1. அராஜகத்தைக் கண்டித்து விழுப்புணர்வு ஊட்டும் பதிவு.
    உண்மையில் யோசிக்கப் படவேண்டியதே.
    மைக்கேல்லின் டாக்டருக்கு கிடைத்த தண்டனை போல்
    இங்கே சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். முற்றிலும் சரியே.

    ReplyDelete
  2. சில அசிரத்தையாகப் பேசி வெறுப்பேற்றுகிற
    டக்டர்களால் வருகிறவினை இது
    நிச்சயமாக சாவினால் இந்த கொலை இருக்காது
    அசிரத்தையாக நடந்து கொண்டதால்தா இருக்கும் என
    நான் நினைக்கிறேன்
    அவர்களைப் பேசவைத்தால் உண்மை புரியும்
    மனம் திறந்த அருமையான பதிவினைத்
    தந்தமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. 'அபாயம் பெரிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள்' என்று கூறி உடனே அனுப்பாமல், இந்த கிளினிக்குக்குரிய பணத்தைத் தந்த பிறகுதான் (கால தாமதமாக) மருத்தவ மனைக்கு எடுத்துச் செல்ல விட்டார்களாம் சுபம் கிளினிக்கில். இன்றைய செய்தி சொல்லும் விஷயம் இது. போராடுவதற்குமுன் ஆராய வேண்டும். போராட்டம் மற்றவர்களை பாதிப்பதாக இருக்கக் கூடாது. அங்கு நடந்தது ஒரு கொலை...இங்கு...?

    ReplyDelete
  4. Sivakumar Selvaraj
    Wilson Doss

    நண்பர்களே நான் இந்த கொலை நடந்த கிளினிக்கின் அருகே வசிப்பவன் ,

    நடந்தது என்னவென்றால் இறந்த பெண்ணிற்கு இரண்டு நாள்களாக வயிற்று வேதனை .இந்த மருத்துவரிடம்தான் முதல்மாதம் முதல் பரிசோதனை செய்து வந்துள்ளனர் .

    சம்பவம் நடந்த முதல் நாள் அந்த பெண்ணை பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை வயிற்றுக்குள் இறந்து போனதாகவும் உடனே அறுவை சிகிட்ச்சை செய்து வெளியில் எடுக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள் .

    அதற்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியில் எடுத்தவுடன் பெண்ணிற்கு பிரஷர் அதிகமாகி ஆபத்தான கட்டத்திற்கு சென்று விட்டாள். உடனே வேறு மருத்தவமனைக்கு கொண்டு செல்லுமாறு டாக்டர் கூறியதை அடுத்து....

    அவளை வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முற்பட்டபோது . பணம் முழுவதம் செலுத்தினால்தான் நோயாளியை வெளியே அழைத்து செல்லமுடியும் கூறியிருக்கிறார்கள் . பெண்ணின் கணவர் வெளியில் சென்று பணம் திரட்டி வந்து (சுமார் இரண்டு மணிநேரம் )அவளை வேறு மருத்துவ மனைக்கு கொண்டு போயிருகிரார்கள் .போகும் வழியிலேயே அந்த பெண் இறந்து விட்டார் .

    அந்த டாக்டரும் கூட இருந்திருக்கிறார். பெண் இறந்தவுடனேயே அங்கே கலவரம் நடந்தது . டாக்டர் நடந்த பிரச்சனைக்கு நான் தான் முழு பொறுப்பு மன்னித்து விடுங்கள் என்று கூறி விட்டு போயிருக்கிறார் .

    அனால் தன் மனைவியையும் குழந்தையையும் கொள்ளிவைத்து விட்டு வந்த மகேஷ் டாக்டரிடம் போன் செய்து என் மனைவியை அநியாகமாக கொன்று விட்டேர்களே நான் இதை சும்மா விடமாட்டேன் என்று கூறியுள்ளார் .

    அனால் டாக்டரோ உன்னால் முடிந்ததை செய் என்றார் . அவனோ அவனால் முடிந்ததை செய்தார்( சற்று யோசித்து பாருங்கள் இது நமக்கு நடந்திருக்குமாயின் எப்படி இருக்கும் ?

    என்ன செய்திருப்போம் ? போலிசை தேடி அலைந்திருப்போம் அவ்வளவே . அனால் உணர்ச்சிவசப்பட்ட மகேஷ் கொன்று விட்டார்). இந்த கிளினிக்கில் இது முதல் தடவை அல்ல.
    ######################
    Wilson Doss

    அவன் செய்த கொலையை நீயா படுத்தவில்லை

    அதே நேரம் அவனின் உணர்ச்சி ???

    தன் மனைவியை பறிகொடுத்த அந்த வேதனை ???//

    பேஸ்புக்கில் என் நண்பர் பகிர்ந்தது...!!!

    ReplyDelete
  5. நீங்கள் கூறியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை.மருத்துவர்கள் பலரும் தங்களை கேள்வியே கேட்கக்கூடாது என நினைக்கின்றனர்.
    இரண்டாவது தங்கள் தொழிலுக்குரிய கண்ணியத்தையும் பொறுப்புணர்வையும் மறந்து இயந்திர மயமாகி வருகின்றனர்.
    மூன்றாவது இது பணம் கொழிக்கும் தொழிலாக மாறி ,ஏராளமான பொருள் முதலீட்டையும் ,அதை மிக வேகமாக மீண்டும் ஈட்டுவதையும் அதையும் மீண்டும் பெரும் பொருளீட்டும் பேராசைக்கு அடிமையாகும் நிலையை நோக்கி மருத்துவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள்.
    இதெல்லாவற்றையும் விட தங்கள் உடல் நலம் கெட்டாலும் அதைக்கூட நினைத்து பார்க்க முடியாத போட்டியில் கலந்துகொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.
    இதெல்லாம் அவர்கள் சுய ஆத்ம பரிசோதனை செய்து கொள்வது அவர்களுக்கும் நாட்டுக்கும் நல்லது.

    ReplyDelete
  6. தகவல்களுக்கு நன்றி நாஞ்சில் மனோ. படிக்க மனம் மிகவும் வேதனையாக இருக்கிறது. மனிதாபிமானமும் மருத்துவம் என்ற வார்த்தையும் எதிரிகளாகி வருவதைத்தான் காட்டுகிறது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.