Monday, January 2, 2012


ஏன் இப்படி? இந்தியாவில் சோஷியல் நெட்வொர்க் தடை செய்யப்பட்டுள்ளதா அல்லது போகப் போகிறாதா?

சோஷியல் நெட்வொர்க் தடை செய்யப்பட்டால் என்ன நடக்கும் என்பதற்கான பட விளக்க பதிவுதான் இந்த பதிவு. இதற்கான கருத்தை நான் நெட்டில் பார்ததன் விளைவால் என் மனதில் எழுந்த பாதிப்புதான். நான் தமிழ் மக்களுக்காக க்ரியேடிவ் பண்ணிய படங்கள் இது.

இந்தியாவில் நெட்வொர்க் தடை செய்யப்பட்டால் நெட் கபேயில் நடக்கும் அசிங்கங்கள் முதலில் தடைபடும். பெண்கள் தூர நாடுகளில் இருப்பவர்களிடம் அரட்டை அடிப்பது தடை செய்யப்பட்டு அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ளவர்களிடம் பழக வாய்ப்பு கிடைக்கும். ஆண்கள் லேப்டாப் முன்னால் உட்கார்ந்து இருப்பதால் ஏற்பட்டு இருக்கும் தொப்பை குறைய வாய்ப்பு ஏற்படும்.
டிவிடி விற்கும் கடைக்கு வருமானம் கிடைக்கும்.உண்மையான கைபட எழுதிய வாழ்த்து அட்டைகள் நமது பிறந்தநாளுக்கு வந்து நம்மை உண்மையான சந்தோஷத்திற்கு இட்டு செல்லும்.நல்ல புத்தகங்கள் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நம்மை உண்மையான பள்ளி தோழர்களும் வேலைபார்க்கும் இடத்தில் உள்ள நண்பர்கள் மட்டுமே நம்மை பின் தொடர்வார்கள். அனானி தொந்தரவு இருக்காது

வலைப்பதிவாளர்கள் தான் அதிகம் பாதிக்கப்டுவார்கள். முதலில் காப்பி பேஸ்ட் பண்ண முடியாது. ஜூவியை வாங்கி அதை ஜெராக்ஸ் எடுத்து நம்ம கருத்துதான் என்று சொல்ல அதிக அளவு பணம் செலவாகும் அதனால் மனநிலை பாதிக்கபட வாய்ப்பு உண்டு. நிறைய பதிவாளர்கள் முதல் வடை சுட முடியாது அவர்கள் சுட வேண்டுமென்று ஆசைப்பட்டால் கிச்சனில் மனைவி இடும் வடையைதான் முதலில் சுட முடியும் அதை மனைவி கண்டு பிடித்துவிட்டால் வடைக்கு பதில் கரண்டியால் பூஜைதான் கிடைக்கும்


சாப்பாடு பற்றிய பேச்சு என்றால் கல்யாண விட்டில் நடந்த விருந்து பற்றியதாக மட்டும்தான் இருக்கும் பதிவாளர் கூட்டத்தில் கிடைக்கும் இலவச விருந்து என்பது அந்த காலத்துல நாங்க ஒசி விருந்து சாப்பிடுவதற்காக போவோம் சாப்பிட்டு முடித்து விட்டு சாப்பாடு போட்டவரை குறை சொல்லியே காலத்தை ஒட்டுவோம் என்பது தாத்தக்கள் சொல்லும் அந்த காலத்தில என்ற கதை போல ஆகிவிடும்..

தமிழ் இலக்கிய எழுத்தாளர், வாசகர் எழுதும் கடிதம் போல தமக்கு தானே எழுதி வெளியிடும் கடிதங்களுக்கான வாய்ப்பு குறைந்து விடும் இல்லையென்றால் அவர் எழுதியதை அவர்மட்டும் தான் படிக்க வேண்டி இருக்கும். அதனால் அவருக்கு நிறைய நேரம் கிடைத்து உண்மையிலேயே நல்ல நவின கால இலக்கியம் எழுத கருத்துக்கள் தோன்றும்.

ஓகே ஒகே புதிய ஆண்டில் உங்களை ரொம்ப போட்டு தாக்க வேண்டாம என்பதால் இத்துடன் நிறுத்தி கொள்கிறேன்.

நாம் அனைவரும் சோஷியல் தளங்களை அதிக அளவு உபயோகிப்பதால் அதனை தடை செய்தால் நமக்கு கிழ்கண்ட சைடு எபெஃக்ட்கள் தோன்றும் 

படங்களை க்ளிக் செய்தால் பெரிதாக பார்க்கலாம்.

படங்களை க்ளிக் செய்தால் பெரிதாக பார்க்கலாம்.

படங்களை க்ளிக் செய்தால் பெரிதாக பார்க்கலாம்.

படங்களை க்ளிக் செய்தால் பெரிதாக பார்க்கலாம்.





.

3 comments:

  1. சிபி செந்தில்குமார் தற்கொலை முயற்சி, கோமாளி செல்வா கீழ்பாக்கத்தில் அட்மிட், நாஞ்சில்மனோ வெறி நாயை பிடித்து கடித்ததால் நாய் செத்து போனது, இப்பிடியெல்லாம் செய்தி வருமேய்யா ஹி ஹி...

    ReplyDelete
  2. add this point to ur post:
    If blogger close means i will not waste my time with your post...
    If social network sites close means INTERNET close.
    Not worth to read your blog, already you posted some thing irrelevant to Heading.Don't waste readers time.

    ReplyDelete
  3. மதுரை நண்பா .....
    ஏன் இந்த கொலை வெறி .......
    ஆட்சியாளர்களுக்கு தான் பயம்னா .....மத்தவங்களுக்குமா ?
    சமூக அக்கறை உள்ளவங்க கருத்துக்கள பரிமாறிக்க தடை விதிக்க நினச்சா அது ஜனநாயகத்துக்கு நல்லதில்லே
    நன்றி

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.