Thursday, January 5, 2012



ரோம்2ரியோ பயனுள்ள வலைத்தளம் பற்றிய பதிவு

ரோம்2ரியோ என்ற வலைத்தளம் என் கண்ணில் பட்ட பயனுள்ள வலைத்தளம். இது ஒரு டிராவில் ஸ்ர்ச் இஞ்சின் ஆகும். இதன் மூலம் நான் ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்கு கார்,பஸ்,ரயில்,கப்பல்,விமானம் மூலம் செல்ல எவ்வளவு நேரம் பிடிக்கும் மற்றும் எப்படி செல்ல வேண்டும் என்றும் தகவல் கிடைக்கிறது..இதன் மூலம் நான் மதுரையில் இருந்து நான் அமெரிக்காவில் வசிக்கும் ஊர் பெயரை மட்டும்தான் டைப் செய்தேன். அது மிக அருமையாக எவ்வளவு நேரம் எப்படி பயணம் மேற்கொள்ள வேண்டும்(கார்,ரயில்,விமானம்) என்று அழகாக தகவல் தருகிறது. இதன் மூலம் எந்த நாள் போகிறோம் & திரும்பி வருகிறோம் என்றும் தகவல் தந்தால் அது விமான டிக்கெட் விலையையும் எந்த எந்த விமானம் மூலம் செல்லாஅம் என்றும் அருமையான தகவல்கள் வருகின்றன.

இதை நான் கூகுலில் பரிசோதித்தேன் மதுரையில் இருந்து அமெரிக்காவில் நான் வசிக்கும் இடத்திற்கு வழிகேட்டேன் அது தரவில்லை ஆனால் இந்த தளம் அருமையாக தந்துள்ளது. இது நாடுவிட்டு நாடு செல்பவர்களுக்கு ஒரு ரஃப் ஐடியா கிடைக்கிறது.

இதை நான் மிகவும் பயனுள்ள தளமாக கருதுகிறேன் . உங்களுக்கும் நேரம் கிடைத்தால் பரிசோதித்து அதில் உள்ள நிறை & குறைகளை பின்னுட்டமாக இடுங்கள் அது படிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த ஸ்ர்ஸ்  இஞ்சின் ஒனர் தரும் வீடியோ விளக்கம் கிழே காணலாம்


www.rome2rio.com is a new Travel Search Engine that shows you .how to get from anywhere to anywhere by Bus,Train, Plane, Driving and Ferry. In this video above, the founders provide a guided tour of the various features of the site.

ஜோக் கார்னர் :

ஒரு இளைஞன் தந்தையிடம் அப்பா நான் டிரைவர் டெஸ்டில் பாஸாகிவிட்டேன் எனக்கு டிரைவிங்க் லைசன்ஸ் கிடைத்துவிட்டது. நான் இப்போ நம்ம பேமலி காரை எடுத்து யூஸ் பண்ணலாமா என்று கேட்டான்.
அதற்கு அவர், மகனே முதலில் பரிட்சையில் நல்ல மார்க் வாங்கு, அப்புறம் உன் ரூமை நல்ல சுத்தமாக வை, வீட்டில் உள்ள தோட்டத்தை நன்றாக கவனி, அதன் பின் உன் முடியை அளவோடு கட் செய்து நன்றாக வைத்து விட்டு அதன் பின் வா நான் நம் காரை உனக்கு ஒட்ட தருகிறேன் என்றார்,
சில மாதங்களுக்கு பிறகு அந்த இளைஞன் தன் மார்க் ஸீட்டை தந்தையிடம் காண்பித்து அப்பா நான் நல்ல மார்க் வாங்கி இருப்பதை பார் அதுமட்டுமல்ல என் ரூம் எந்த அளவு சுத்தமாக இருப்பதை பார் தோட்டத்தையும் கவனியுங்கள், இப்போ சொல்லுங்கள் நான் காரை எடுத்து கொள்ளலாமா?
எல்லாம் சரி மகனே ஆனால் நீ இன்னும் உன் முடியை கட் செய்யவில்லையே என்றார்.
அப்பா ஜீசஸ் கூட நீண்ட முடி வைத்திருந்தார் அப்பா அதனால்தான் நானும் அதை பாலோ செய்கின்றேன் என்று புத்திசாலிதன்மாக பதில் கூறினான்.
அதற்கு அவர் சொன்னார் நீ சொல்வது மிகவும் சரி ஆனால் ஜீசஸ் எல்லா இடத்திற்கும் நடந்துதான் சென்றார் என்று பதில் அளித்தார்.







10 comments:

  1. பயனுள்ள ரோம் 2 ரியோ தகவல் தந்தமைக்கும்
    ஒரு அருமையான பதிவினைத் தந்தமைக்கும் நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Very useful link...plus kutty kadhai...congrats!
    Priya
    http://aalayamkanden.blogspot.com

    ReplyDelete
  3. பயனுள்ள ரோம் 2 ரியோ தகவல் தந்தமைக்கு நன்றி.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. ஜீசஸ் எல்லா இடத்திற்கும் நடந்துதான் சென்றார் என்று பதில் அளித்தார்.//

    ஆஹா கார் போச்சே...!!!

    ReplyDelete
  5. தகவல் தந்தமைக்கு நன்றிகள்...!!!

    ReplyDelete
  6. பயனுள்ள பகிர்வு. ஜோக் நன்றாக இறந்தாலும் அதை பயனுள்ளதாகக் கருத முடிகிறதே தவிர, சாக்காகப் பார்க்க முடியவில்லை.

    ReplyDelete
  7. மிகப் பயனுள்ள பகிர்வு. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  8. Very Useful Post. try to post like this in feature. thanks

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.