உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, February 27, 2011

தமிழ்நாடு வாக்காளர்கள் உங்கள் பெயரை சரிபார்த்து கொள்ள

தமிழ்நாடு வாக்காளர்கள் உங்கள் பெயரை சரிபார்த்து கொள்ள




தமிழ் நாடு அரசு தேர்தல் துறை இணையத்தளத்தில் வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.வா‌க்காள‌ர் ப‌ட்டிய‌லி‌ல் த‌ங்களது பெ‌ய‌ர் இட‌ம் பெ‌ற்று‌ள்ளத எ‌ன்பதை ஏராளமானோ‌ர் பா‌ர்வை‌‌யி‌ட்டு வரு‌கி‌ன்றன‌ர்.

http://elections.tn.gov.in/eroll /http://elections.tn.gov.in/eroll/  வா‌‌க்காள‌ர் ப‌ட்டிய‌லி‌ல் கொடு‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ள ‌விவர‌ங்க‌‌ளி‌ல வா‌க்காள‌ர்க‌ள் ‌திரு‌த்த‌‌ங்க‌ள் செ‌ய்ய ‌விரு‌ம்‌பினா‌ல் அத‌ற்கு‌ரிய ‌வி‌ண்ண‌ப்ப‌ங்களை பெ‌ற்று அ‌ந்த‌ந்த மைய‌த்‌திலேய வழ‌ங்கலா‌ம் எ‌ன்று அ‌றி‌வுறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

http://www.elections.tn.gov.in/pdfs/acwise_pdf.asp இந்த தளத்திற்கு சென்றால் நீங்கள் அவர்கள் தந்துள்ள தமிழ் Font களை டவுன்லோடு செய்யவேண்டும். அதற்கு இங்கே க்ளிக் http://www.elections.tn.gov.in/pdfs/downloadtamilfonts.htm செய்யவேண்டும்.



You can also check the TamilNadu State Election results of assembly polls/ by elections.

Tamilnadu Election Commission Address:

Office of the Chief Electoral Officer, Chennai

Elections Department, Secretariat

Fort St George, Chennai

Tamil Nadu - 600 009.

Ph: 044-25670390

Fax:044-25670989

Website : www.elections.tn.nic.in

You can also visit http://www.ceotamilnadu.nic.in/ this is a Tamilnadu TN state election role online website. You can report your issues related to your voter id card,voter list and registration details.You can get electoral roll in tamilnadu and Chief Electoral Officer(CEO) Tamilnadu information,Tamilnadu voter Id card.Tamilnadu election results,Chennai,coimbatore,salem electoral rolls and voter lists in Chennai.



வோட்டுக்கு தமிழ்நாட்டுல பணம் தாராங்கனு கேள்விபட்டேன். என் வோட்டுக்கு எவன் காசுவாங்கிட்டு ஒட்டு போடுறான். மரியாதையாக பாதி பணத்தை எனக்கு அனுப்பிவைக்கவும்.
 

உங்களுக்கு தெரிந்த ஆங்கில அறிவை செம்மைப்டுத்த ஒரு பயனுள்ள தளம்

உங்களுக்கு தெரிந்த ஆங்கில அறிவை செம்மைப்டுத்த ஒரு பயனுள்ள தளம்( Edited Compilation of 'Know Your English' Columns from 'The Hindu')


நமது சக பதிவாளர் சுட்டிகாட்டினார் நீங்கள் நூறாவது பதிவை நெருங்கப் போகிறீர்கள் என்றும் நூறாவது பதிவில் நல்ல விஷயமாக போடுங்கள் என்றார். அவருக்கும் , என்னை தொடர்பவர்களுக்கும் மற்றும் இந்த வளைதளத்திற்கு வந்து படிப்பவர்கள் அனைவருக்கும் ஓன்று சொல்ல விரும்புகிறேன். நான் போடும் பதிவுகள் அனைத்து நல்ல தரமாகவும் பயனுள்ளதாகவும் இல்லையென்றால் நகைச்சுவைகள் உள்ள பதிவாக மட்டும் இருக்கும் ஆனால் மட்டமாக இருக்காது என்று உறுதி கூறுகின்றேன்



நான் இந்த தளம் ஆரம்பித்தது பொழுதுபோக்குகாகவும் அதே நேரத்தில் தகவல்கள் தமிழ் மொழியில் தேடுவோர்க்கு தமிழில் கிடைக்க வேண்டும் எனபதால் நான் எனக்கு தெரிந்த தமிழில் இங்கே தருகிறேன், அதனால் நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி இங்கே நான் தமிழில் பகிர்ந்துகொள்ள கொள்கிறேன்.

நான் என் சுய புராணத்தை முடிக்கும் முன் ஓன்று கூற விரும்புகிறேன். நான் இதை ஓட்டுக்காகவும், ஹிட்டுக்காகவும் நடத்தவில்லை. அதனால் ஒட்டு போடும் எண்ணத்துடன் என் பதிவுகளை படிக்க வேண்டாம்.

இந்த பதிவில் மிகவும் பயனுள்ள விஷயத்தை உங்களுக்கு பகிர்ந்து அளிக்கிறேன்.இது பள்ளி அல்லது கல்லூரிகளில் படிப்பவர்களுக்கும் ஆங்கில அறிவை மேலும் செம்மையாக்கி கொள்ள இந்த தகவல் உதவும் என நினைத்து உங்களிடம் பதிகிறேன்



நீங்கள் The Hindu பேப்பரை படிப்பவராக இருந்தால் அதில் வரும் "‘Know Your English’ என்ற காலத்தை(Coloums) படித்து இருக்கலாம் நிறைய பேர்கள் அதை கட் செய்து ஆல்பமாக வைத்திருப்பார்கள்,அப்படி செய்யாதவர்களூக்கும் அதையெல்லாம் படித்து ஆங்கில அறிவை வளர்த்து கொள்ளவும் இது மிக உதவும்.

நம்மை போன்ற ஒரு பதிவாளர் (Sunil Jose) அவர் ஒரு லாயர் அதையெல்லாம் மிகவும் அழகாக தொகுத்து நமக்கு வழங்கியுள்ளார். அதற்கான லிங்கை கிழே தந்துள்ளேன். இவர் பதிவில் சென்றால் இன்றைய தேதி வரை தொகுத்து அவரின் Archive பகுதியில் தந்துள்ளார். அல்லது நீங்கள் The HIndu தளத்திற்கும் சென்று படிக்கலாம்

'Know Your English'

Edited Compilation of 'Know Your English' Columns from 'The Hindu'

NOTE From Sunil Jose:

I have recently received an email from Mr. Anant of The Hindu informing that they now have the entire archives of the series online. I checked….It’s in fact from 2005 only…still, it’s a great help for the ardent fans of KYE Series.

Click here for KYE Archives .



இதை படித்து நான் என் ஆங்கில அறிவை வளர்த்து கொண்டாயா என்று கேட்டக வேண்டாம். நான் மதுரைக்காரன் எனக்கு என்ன சுட்டுபோட்டாலும் இங்கிலிஷ் & ஹிந்தி வராது.. நான் நம்ம தலைவர் அழகிரி அண்ணன் மாதிரி எங்கபோனாலும் தமிழில்தான் பேசுவோம். யாருக்கு புரியலையோ அவர்கள் தமிழ் கற்று கொள்ள வேண்டும்.ஹீ...ஹீ....ஹீ

தாய்ப்பாலில் தயாரான ஐஸ்கிரீம்( ice-cream made of Breast milk on sale)

தாய்ப்பாலில் தயாரான ஐஸ்கிரீம் ஒரு கப் விலை ரூ1,000

ice-cream made of human milk on sale



லண்டனில் உள்ள ரெஸ்டரெண்டில் ஐஸ்கிரீம் பார்லரில் தாய்ப்பாலில் தயாரான ஐஸ்கிரீம் விற்கப்பட்டது. ஐஸ்கிரீமில் புதுமையை புகுத்த லண்டனை சேர்ந்த ஐஸ்கிரீமிஸ்ட் என்ற பார்லர் உரிமையாளர் மாட் ஓ’கானர் யோசித்தார்.




சமீபத்தில் குழந்தைக்கு தாயான விக்டோரியா ஹீலி (35) என்ற பெண்ணிடம் இருந்து தாய்ப்பாலை பெற்று, வெனிலா, எலுமிச்சை பேஸ்ட் கலந்து ஐஸ்கிரீமாக தயாரித்தார். அதற்கு ‘பேபி காகா’ என்று பெயரிடப்பட்டது.

பேரண்டிங்க் வெப்தளமான MUMSNET- ல் வந்த விளம்பரத்தை பார்த்து தாய்ப்பால் அளித்த விக்டோரியா ஹீலி கூறுகையில், ‘‘தாய்ப்பாலை விட இயற்கையான ஒரு விஷயம் உலகில் இல்லை. அதில் சிறிதளவை பணத்துக்காக விற்பதில் என்ன தவறு இருக்கிறது’’ என்றார்.( Victoria works with women who have problems breast feeding their babies.) அவர் அளித்த 10 அவுன்ஸ் தாய்ப்பாலுக்கு யூரோ கரன்ஸியில் 15 ( ரூபாய் மதிப்பில் 1000) கிடைத்தது.இதையடுத்து, மேலும் 15 பெண்கள் இதற்கு முன்வந்தனர்



இதுபற்றி ஓ’கானர் கூறுகையில், ‘‘ஐஸ்கிரீம் தயாரிப்பில் கடந்த 100 ஆண்டுகளாக யாரும் எந்த புதுமையும் செய்யவில்லை. தாய்ப்பாலில் ஐஸ்கிரீம் தயாரித்ததை கேட்டு சிலர் முகம் சுழிக்கலாம். ஆனால்,(actually it's pure, organic, free-range and totally natural.) அதன் மகத்துவம் பற்றி இளைய தலைமுறைக்கு புரிந்தால் போதும்’’ என்றார்.‘பேபி காகா’ ஐஸ்கிரீம் ஸி1,000க்கு விற்பனை செய்யப்பட்டது.



To maintain the highest standards, health checks for each lactating woman were the same used by the UK's National Health Service to screen blood donors.


எனக்கு என்னவோ இது மிகவும் அருவருப்பாக தோன்றுகிறது. இது என் கருத்து. உங்களூக்கு இதை படித்தபின் ஏற்படும் கருத்துகளை இங்கே எழுதுங்களேன்

காருக்குள் டாய்லெட். சைனாக்காரனின் புதிய முயற்சி

காருக்குள் டாய்லெட். சைனாக்காரனின் புதிய முயற்சி




மனிதன் காலத்தையும் நேரத்தையும் சேமிக்க எப்படி எல்லாம் பாடுபடுகிறான் என்பது அனைவரும் அறிந்த உண்மை.நவீன உலகில் வாழும் இயந்திர வாழ்க்கையில் நேரம் என்பது மிக மிக பொன்னான ஒரு விஷயமாகிப் போய்விட்டது.வேலைப்பழுவின் காரணமாக காலைக்கடன் முடிக்க கூட நேரமில்லாமல் மேலை நாடுகளில் பலர் தவித்துக்கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் காரில் சிறு குழந்தைகளை அழைத்து செல்லும் பெற்றோர்கள் படும் கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல மற்றும் பெண்கள் நீண்ட தூரம் பயணம் செய்யும் போது அவசரமாக டாய்லெட் செல்ல வேண்டும் மென்றால் கூட சில சமயங்களில் சுத்தமான டாய்லெட்டை கண்டுபிடிப்பது சிரமம்.

இதற்காகவே எப்பொழுதும் வித்தியாசமாகவே சிந்திக்கும் சைனாக்காரர்கள் புதிய ஒரு முயற்சியை கையாண்டுள்ளனர்.

இவர்களின் முயற்சிகள் சிரிக்கவும் வைத்தாலும் சிந்திக்க வைக்கிறது ஒரு நிமிடம். அது வேறு ஒன்றுமில்லை காருக்குள் டாய்லெட் வைத்து ஒரு புதிய வகை கண்டுபிடிப்பு.



படங்கள் கிழே;







Thursday, February 24, 2011

ஒ..பேபி...........(புதுமண தம்பதிகள் / இளம் வயதினர்களுக்கு மட்டும்)

ஒ..பேபி...........(புதுமண தம்பதிகள் / இளம் வயதினர்களுக்கு மட்டும்)





இந்த கால இளம் வயதினர்களுக்கு எப்படி செல்போன், லேப்டாப், ப்ளாக் போன்றவைகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று நல்லா தெரியும் ஆனால் குழந்தைகளை வளர்ப்பது என்பதுதான் தெரியாது.


பிறந்த குழந்தையை முதல் ஒரு வருடம் வளர்ப்பது என்பது எல்லாப் இளம்தம்பதியனருக்கு ஒரு சவாலான விஷயம். மிக ஜாக்கிரதையாக, மிக கவனமாக பார்த்துப் பார்த்து வளர்க்க வேண்டிய நேரம் அது. சின்னப் பிரச்னைகூட குழந்தையின் உயிருக்கே ஆபத்தாகக்கூட வரலாம். அதிலும் வீட்டில் பெரியவர்கள் இல்லாத இளம் தாய்களுக்கு கைக் குழந்தையை வளர்ப்பதில் பல சந்தேகங்கள் தோன்றும். அவர்களுக்குரிய அத்தனை சந்தேகங்களுக்கும் படத்தின் மூலம் விளக்கம் இங்கே எளிதாகா தரப்பட்டுள்ளது











என்ன வழக்கம் போல தலைப்பை பார்த்து ஏதோ சம்திங் விஷயம் என்று எதிர்பார்த்து ஏமாந்தால் அதற்கு இந்த மதுரைக்காரன் பொறுப்பு அல்ல.




Sunday, February 20, 2011

பிரபலமானவர்களின் இமெயில் அட்ரஸ் உங்களுக்காக....

பிரபலமானவர்களின் இமெயில் அட்ரஸ் உங்களுக்காக....




மன்மோகன் சிங் - ஊமையன்@சோனியகாந்தி.காம்

கலைஞர் - மஞ்சள்துண்டு@குடும்பம்.காம்

ஜெயலலிதா - அறிக்கை@திமுக.காம்

ராம்தாஸ் - கோமாளி@தமிழகம்.காம்

விஜயகாந்த் - பணபேரம்@ஜெயலலிதா.காம்

வைகோ - அம்மா@சரணம்.காம்

அழகிரி - தமிழ்டீச்சர்@பார்லிமெண்ட்.காம்
கனிமொழி - ஜெயிலைபார்க்கபோறேன்@மினவர்கள்.காம்

ராசா - எட்டுஅடி@ஜெயில்.காம்

ரஜினி - மந்திரம்@கலைஞர்.காம்

விஜய்- அம்மா@சரண்டர்.காம்

கமல் - ஆங்கிலபடம்@காப்பி.காம்

சாருநிவேதா  - ரைட்டர்தீப்பொறிஆறுமுகம்@சரோஜாதேவி.காம்
 


அழகிரி ?

ஸ்டாலின்?

இளங்கோவன்?

சோனியகாந்தி?

அன்புமணி ?

etc....???



தமிழன் - இலவசம்@பரதேஷி.காம்

தமிழ்பதிவாளர்கள் - அடிமை@ப்ளாக்கர்.காம்





எனக்கு தெரிந்த பிரபலமானவர்களின் இமெயில் அட் ரஸை கொடுத்துள்ளேன். தமிழர்கள் எப்படியும் இரண்டுக்கும் மேல் இமெயில் அட்ரஸ் வைத்திருப்பார்கள் எனவே மேலே உள்ள பிரபலமானவர்களின் மற்ற இமெயில் உங்களுக்கு தெரிந்தால் பதில் எழுதவும்.

வேறு யாரும் பிரபலமானவர்கள் என்று நீங்கள் கருதினால் அவர்களின் பெயரையும் இமெயில் அட்ரஸையும் எனக்கு பின்னூட்டமாக போடவும். நன்றி

உங்கள் கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி? (அனுபவ ரகசியம்..பெண்களுக்காக

உங்கள் கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி? (அனுபவ ரகசியம்..பெண்களுக்காக)




இது அட்வைஸ் அல்ல. அனுபவத்தில் அறிந்த ரகசியம்.( உடனே கேட்காதீரகள்...மக்கா இது உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவமா என்று. அதை நான் சொல்ல மாட்டேன் அது என் குடும்ப ரகசியம். ஏதோ வேளா வேலைக்கு சோறுகிடைக்கிறது. அதில் பிரச்சனை ஏற்பட விரும்பவில்லை....புரிஞ்சிகங்க மக்கா நான் என்ன சொல்ல வருகிறேன் என்று) சரி வாங்க விஷயத்துக்கு போவோம்.



இது ஒரு அமெரிக்க பெண்ணின் அனுபவம் ஆனால் இதை எல்லா நாட்டு பெண்களும் பயன்படுத்தலாம்.



ஒரு அமெரிக்க தம்பதியினர் தங்களது 50வது திருமண ஆண்டு விழாவை பீச்சில் வைத்து தங்கள் நண்பர்களுடன் கொண்டாடினர்.அந்த தம்பதியினரை பார்த்து எல்லோரும் அதிசயப்பட்டனர்( கல்யாணம் ஆகி 5 வருடம் ஒன்னா இருந்தால் மிக அதிசியம் அவர்களூக்கு) ரொம்ப பொருத்தமான தம்பதியினர் என்று அவர்கள் பேசிக்கொண்டனர். அந்த விழாவைபற்றி கேட்ட லோக்கல் மீடியா ரிப்போர்ட்டர் அந்த தம்பதிகளை பார்த்து அவர்களின் வெற்றியின் ரகசியம் என்ன என்று கேட்டார். அதற்கு அந்த பெண் வெகு அடக்க ஒடுக்கமாக எல்லாம் என் கணவரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என்று வெட்கப்பட்டவாறே அங்கிருந்து நழுவினார்.





அந்த ரிப்போர்டருக்கோ மிகுந்த ஆர்வம் எப்படியாவது அவர்களின் ரகசியத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்று அந்த பெண்ணின் கணவரிடம் கேட்டார்



அதற்கு அந்த பெண்ணின் கணவர் சொன்னார். நாங்கள் கல்யாணம் ஆன புதிதில் ஹனிமூன் சென்ற போது என் மனைவி என்னிடம் நடந்த கொண்ட விதத்தில் இருந்து நான் முடிவு செய்துகொண்டேன் வேறு எந்த பெண்ணையும் ஏறு எடுத்து பார்ப்பதில்லை என்று . அதுதான் எங்கள் திருமண வாழ்வின் வெற்றிக்கு காரணம் என்றார்.



அந்த ரிப்போர்ட்டருக்கோ மிகுந்த ஆர்வம் அப்படி என்னதான் அந்த பெண் ஹினிமூனில் செய்தாள். ஆவலை அடக்கமுடியாமல் அவரிடம் கெஞ்சி கேட்டார்.



அதற்கு அந்த கணவர் கண்களை முடிக்கொண்டு நீண்ட யோசனைக்கு பிறகு அமைதியாக சொன்னார். நாங்கள் ஹினிமுனுக்கு அரிசோன மாநிலத்தில் உள்ள க்ராண்ட் கேன்யன்( Grand Canyon, in Arizona )க்கு சென்றோம். அப்போது கேண்யனுக்கு கிழே செல்ல குதிரையை பயன் படுத்தினோம். அந்த சமயத்தில் என் மனைவி சென்ற குதிரை கல் தடுக்கி கிழே விழுந்தது. கிழே விழுந்த என் மனைவி குதிரையை பார்த்து சொன்னாள். "இது முதல் தடவை" என்று.....சிறிது தூரம் சென்ற குதிரை மீண்டும் கல் தடுக்கி கிழே விழுந்தது. அப்போது என் மனைவி சொன்னாள் ' இது இரண்டாம் தடவை என்று" மீண்டும் அதன் மேல் சவாரி சென்ற என் மனைவி மேலும் அரைமைல் தொலைவு சென்ற போது மீண்டும் அந்த குதிரை கிழே விழுந்தது. இந்த தடவை அவள் ஓன்றும் சொல்லவில்லை. அவள் தரையில் இருந்து எழுந்ததும் அவள் கைப்பையை திறந்து அதில் இருந்த துப்பாக்கியை எடுத்து அந்த குதிரையை சுட்டு கொன்றுவிட்டாள்.



அதை பார்த்த நான் அவளை நோக்கி ஏய்ய்ய்ய்ய்ய்ய் உனக்கு என்ன பைத்தியமா புடிச்சிறுக்கு? ஆர் யூ க்ரேஸி? என்று சத்தம் போட்டேன்.



அதற்கு அவள் என்னை நோக்கி இது முதல் தடவை என்று சொன்னாள்



அந்த நிமிடத்தில் இருந்து 'We have lived happily ever after'



என்ன இந்த ரகசியம் யூஸ் புல்லா இருந்துச்சா பதில் எழுதுங்கள்.. ஆனா என் மனைவியிடம் மட்டும் இந்த ரகசியத்தை சொல்லிவிடாதிர்கள். அப்படி நீங்கள் சொன்னால் மீண்டும் என்னை பார்க்க முடியாது என்றென்றும். ஏனென்றால் நான் சொர்க்கத்தில் இருப்பேன். நீங்கள் நரகத்தில் இருப்பிர்கள் அவ்வளவுதான்  நான் சொல்லிப்புட்டேன்\




Friday, February 18, 2011

மனைவியிடம் கோபப்படும் ஆண்கள் பார்க்க வேண்டிய பதிவு

மனைவியிடம் கோபப்படும் ஆண்கள் பார்க்க வேண்டிய பதிவு




நல்லா பாருங்கப்பா நல்லா பாருங்க....அதன் பிறகு எப்படி நடக்க வேண்டும் என்பது உங்கள் சாமர்த்தியம்








The most important thing in a relationship between a man and a woman is that one of them must be good at taking orders


விரைவில் எனது அடுத்த பதிவு உங்கள் கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி? (அனுபவ ரகசியம்..பெண்களுக்காக)படிக்க தவறாதிர்கள்

இந்திய பெரியவருக்கு உதவிய அமெரிக்க தேவதை( Angel)

இந்திய பெரியவருக்கு உதவிய அமெரிக்க தேவதைகள்:




தன் வயதான பெற்றோர்களை அமெரிக்காவுக்கு அழைத்திருந்தாள் மாலா. தன் அப்பாவிற்கோ முட்டு வலி அதிகம் உள்ளதால் பெற்றோர் இருவருக்கும் க்ரெவுண்ட் ஃப்ளோரிலேயே படுக்கையை அரேஞ்ச் செய்திருந்தாள் மாலா. வந்த இரண்டாவது நாளில் டின்னர் சாப்பிடும் போது மாலாவின் அப்பா சொன்னார். மாலா உனக்கு ரொம்ப நல்ல மனதும்மா. அதுனாலதான் என்னவோ இந்த வீட்டில் தேவதைகள் இருக்கிறதும்மா என்றார். மாலாவுக்கோ ஓன்றும் புரியவில்லை. அப்பா நீங்கள் சொல்வது ஒன்னும் புரியவில்லையப்பா கொஞ்சம் விளக்கமாகத்தான் சொல்லுங்களேன் என்றாள்



அதற்கு அவள் அப்பா சொன்னார் அம்மா மாலா நான் உன் வீட்டிற்கு வந்த பின் இரவு நேரத்தில் பாத்ரும் போகும் போதெல்லாம் நான் பாத்ரும் கதவை திறக்கும் போதெல்லாம் லைட் ஆன் பண்ணியிருக்குதம்மா...நான் கதவை முடினால் லைட் தன்னால ஆஃப் ஆகிவிடுகிறதும்மா. எனக்கும் சந்தேகம் நான் கதவை அடைத்து விட்டு கிழேயுள்ள இடுக்குவழியாக கூட பார்த்து விட்டேன் லைட் ஆஃப் ஆகி இருக்குதம்மா நான் எப்பவெல்லாம் கதவை திறக்கிறனோ அப்போதெல்லாம் லைட் எரிகிறதும்மா. இது எல்லாம் தேவதைகள் வேலையாகத்தான் இருக்கும் என்றார்.



அதற்கு அந்த மாலா தலையில் அடித்தவாறே அப்பா இப்ப புரிகிறது ஏன் நம்ம ஃப்ரிட்ஜ் மூத்திர நாத்தம் அடிக்கிறது என்று........



சிரிப்பு வந்தால் சிரியுங்கள்......வரவில்லையானால் ஓகே. அதற்க்காக கல்லை எல்லாம் எடுக்க வேண்டாம்.

Monday, February 14, 2011

இதுதான் காதல் என்பதா......???

காதலர் தினம் என்பது காதலித்து திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக பலஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கும், திருமணம் செய்து அதன் பின் காதலித்து கொண்டிருப்பவர்களுக்கு மட்டும்தான். இது கள்ளக் காதலர்களும் கல்லூரி காதலர்களும் கொண்டாடுவதற்கு அல்ல...இவர்களின் காதலில் கிஃப்ட்தான் எக்சேஞ் பண்ணிக் கொள்வார்கள். ஆனால் உண்மையான காதலர்கள் இதயங்களை எக்சேஞ் பண்ணிக் கொள்வார்கள்..



காதல் கெட்டவனையும் ஒரு நொடியில் நல்லவனாக மாற்றிவிடும். பாலைவனத்தையும் சோலைவனம் ஆக்கிவிடும். காதல் இல்லாத வாழ்க்கை இது எல்லாவற்றையும் தலை கீழாக மாற்றிவிடும்.

வெவ்வேறு மதங்களை சார்ந்த நானும் எனது மனைவியும் திருமணம் செய்து மதங்களை மாற்றாமல் மனங்களை மட்டும் மாற்றி பல்லாண்டுகளாக சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என் குழந்தையும் நாங்களும் எம்மதமும் சம்மதம் என்று நட்புடன் அனைவருடன் அன்புடன் பழகி வாழ்ந்து வருகிறோம்.


இங்கே வருகை தந்த பெண்களுக்கும் ,ஆண்களுக்கும் தனித்தனியாக காதல் கதைகளை தந்துள்ளேன், இதை படித்தால் உண்மையான காதல் என்றால் என்னவென்று  புரிந்து கொள்ளலாம்.

பெண்களுக்கு :

காதலித்து கொண்டிருந்த இரண்டு ஃபட்டர்ஃப்ளை( Butterfly ) தோட்டத்தில் ஹைடு அன் சீக்( Hide & Seek) விளையாடிக் கொண்டிருந்தன.

அப்போது ஆண் ஃபட்டர்ஃப்ளை சொன்னது நாம் இருவருக்குள்ளும் ஒரு பந்தயம் என்றது.

பெண் ஃபட்டர்ஃப்ளையும் அதை ஒத்துக்கொண்டு பந்தயம் என்ன வென்று கேட்டது

ஆண் ஃபட்டர்ஃப்ளை சொன்னது. மறுநாள் காலையில் யாரு சிக்கிரம் வந்து இந்த பூவிற்குள் வந்து அமர்கிறார்களோ அவர்கள்தான் ரொம்ப அதிகமாக மற்றவர்களை காதலிக்கிறார்கள் என்று கருதப்படுவார்கள்,

பெண் ஃபட்டர்ஃப்ளையும் ஒகே என்று சொல்லி பறந்து சென்றது.



அடுத்தநாள் அதிகாலையில் ஆண்ஃப்ட்டர்ஃப்ளை குளிரையும் பொருட்படுத்தாமல் பூ திறப்பதற்காக பெண் ஃப்ட்டர்ஃப்ளை வந்து உட்காரும் முன் தாம் உட்கார்ந்து தன் அதிகப்படியான காதலை காண்பித்து விடவேண்டுமென்று காத்து இருந்தது`



கடைசியில், பொழுதும் விடிந்தது பூவும் மலர்ந்தது. ஆண் விரைந்து உட்காரச் சென்றது. ஆனால் அது கண்ட காட்சி பெண் பட்டர்ஃப்ளை இறந்து கிடந்த காட்சிதான்.


அது இரவு முழுவதும் குளிரில் உட்கார்ந்து இருந்து..காலையில் காதலனை பார்த்ததும் அதனுடன் பறந்து சென்று தான் எந்தளவுக்கு காதலனை நேசிக்கிறோம் என்று சொல்ல காத்திருந்தது.







காதலர்களே வருத்தபடாதீர்கள். நம் காதல் பெண்களின் காதலுக்கு எந்த அளவும் குறைந்தது கிடையாது. பின் வரும் காதல் கதையை படியுங்கள் பின் அதன்படி நடங்கள்.....


ஆண்களுக்கு :


ஒரு பிஸியான காலை நேரத்தில் 8 மணியளவில் 80 வயதான ஒரு பெரியவர் மருத்துவமனைக்கு வந்தார். கையில் உள்ள கட்டுகளை அவிழ்த்து தையலை பிரிப்பதற்காக வந்த அவர் 9 மணியளவில் இன்னொரு அப்பாயிண்ட்மெண்ட் இருப்பதாகவும் சீக்கிரம் செல்ல வேண்டும் என்று கேட்டு கொண்டார்.டாக்டருக்கு பார்க்க வேண்டிய பேஷண்ட்கள் அதிகம் இருந்தாலும் பெரியவர் மேல் இரக்கம் கொண்டு அவர் காயங்களை பரிசோதனை செய்து அதற்கு வேண்டிய மாற்று ஏற்பாடுகளை செய்துகொண்டவாறே அவரிடம் பேச்சு கொடுத்தார்.

கடிகாரத்தை மாறி மாறி பார்த்து கொண்டிருந்த பெரியவரை பார்த்து டாக்டர் கேட்டார் பெரியவரே உங்களுக்கு வேறு ஏதும் டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட இருக்கிறதா என்று . அதற்கு அந்த பெரியவர் இல்லை டாக்டர் ஆனால் நான் நர்ஸிங் ஹோமுக்கு போயி என் மனைவி கூட ப்ரேக்பாஸ்ட் சாப்பிட வேண்டும் என்றார்.

டாக்டர் அவர் மனைவிக்கு என்ன ஆயிற்று என்று விசாரித்தார் அந்த பெரியவர் சொன்னார் என் மனைவிக்கு ( Alzheimer’s disease) ஞாபக மறதி வியாதிக்கு அந்த நர்ஸிங் ஹோமிலிருந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்றார். உடனே டாக்டர் கேட்டார் நீங்கள் கரெக்ட் டைமுக்கு போகவில்லை என்றால் உங்கள் மனைவி அப்செட் ஆகிவிடுவாரா என்று?

பெரியவர் சொன்னார் இல்லை டாக்டர் என் மனைவிக்கு நான் யாரு என்று கூட கடந்த ஐந்தாண்டுகளாக தெரியாது. அந்த அளவிற்கு ஞாபக மறதி என்றார்.

டாக்டருக்கு ரொம்ப ஆச்சிரியம் கலந்த வியப்புடன் அவரை பார்த்து உங்கள் மனைவிக்கோ நீங்கள் யாரு என்று தெரியாத போதும் தினசரி அவர்களுடன் சேர்ந்து சாப்பிட விரும்புகிறீரகளா என்று கேட்டார்.

அதற்கு அந்த பெரியவர் சிரித்தவாறே டாக்டரை தட்டிக் கொடுத்து கொண்டே சொன்னார். டாக்டர் அவளுக்கு வேண்டுமென்றால் நான் யாரு என்று தெரியாது ஆனால் எனக்கு அவள் யாரு என்று தெரியுமே...அவள்தான் என் காதல் மனைவி என்று.

அதை கேட்ட டாக்டரின் கண்ணில் இருந்து கண்ணீர் துளிகள் வழிந்தோடின.

That is the kind of love I want in my life.”

True love is neither physical, nor romantic.

True love is an acceptance of all that is, has been, will be, and will not be.

என்ன நாமும் இந்த ஜோடிகள் மாதிரி வாழ்ந்து காட்டுவோமா.. பதில் எழுதுங்களேன் நீங்கள்  என்ன நினைகிறீர்கள் என்று???

--------

அமெரிக்காவில் ஸ்கூலில் குழந்தைகள் காதலர் தின கார்டுகளை பறிமாறி கொள்வார்கள். இது கிண்டர்கார்டனில் இருந்து தொடங்கிவிடும். டீசசர் வகுப்பில் உள்ள மாணவர்களின் பெயர்கள் அனைத்தையும் கொடுத்து அனுப்புவார். ஒவ்வொரு வருடமும் நான் என் மகளுக்கு நானே டிசைன் பண்ணி கொடுத்து அனுப்புவேன்.

இந்த வருடம் நான் தயாரித்த கார்டுகள் உங்கள் பார்வைக்கு, இதில் கூடப் படிக்கும் பெண்களுக்கு, பையங்களுக்கு, டீச்சர்களுக்கு என தனித்தனியாக தாயாரித்தேன்.( என் பெண் குழந்தை 3rd Grade படிக்கிறாள். )

Thursday, February 10, 2011

என் கேள்விகளுக்கு பதில் சொல்ல இங்கு திறமைவாய்ந்த பதிவாளர்கள் யாரும் உண்டோ?

என் கேள்விகளுக்கு பதில் சொல்ல இங்கு திறமைவாய்ந்த பதிவாளர்கள் யாரும் உண்டோ?






காட்டில் வாழும் டார்சான்னுக்கு(Tarzan) ஏன் தாடி இல்லை?( என்ன ப்ராண்ட் பிளேடு யூஸ் பண்ணுரான்)





நமது ரிமோட் கண்ட்ரோலில் பேட்டரி தீர்ந்துவிட்டது என்று தெரிந்தும் நாம் ஏன் பவர் பட்டனை ரொம்ப அழுத்தி அழுத்தி பார்க்கிறோம்?(



இன்று டெம்ரேச்சர் 0 (Zero) டிகிரி குளிராக இருக்கிறது என்றும், நாளை இது போல இரண்டு மடங்கு அதிகம் என்றால் எவ்வளவு குளிர் இருக்கும்?(நம்பரில் சொல்லவும்)



ஏன் நாம் மிக உயரமான பில்டிங்கு காசு கொடுத்து போயி அங்கே உள்ள பைனாகுலரில் காசு போட்டு அங்கே இருந்து கிழ் உள்ள க்ரவுண்டை பார்க்கிறோம்?( அதுதான் நாம கிழே இருந்தே சுற்றி பார்க்கலாமே)



லிப்டில்(elevator) உள்ள பட்டனை ஒரு தடவைக்கு மேலே திரும்ப திரும்ப அழுத்தினால் அது சிக்கிரம் வந்துவிடுமா என்ன?(லிப்டிற்க்காக வெயிட் பண்ணும் போது கவனித்து பார்த்தால் பல பேர் ஒரு தடவைக்கு இரு தடவை அழுத்துவார்கள்)
 
 

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog