உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, December 23, 2011

THE WHOLE TRUTH உண்மையை மறைக்க பிரபல பதிவாளர் கொடுத்த லஞ்சம் (Dark Secret)


THE WHOLE TRUTH உண்மையை மறைக்க பிரபல பதிவாளர் கொடுத்த லஞ்சம் (Dark Secret)

ஒரு பள்ளியில் ஒரு மாணவன் தன் கூட உள்ள சக தோழனிடம் பேசிக் கொண்ட போது சொன்னான் ஒவ்வொரு பெரியவர்களும் குறைந்தது ஒரு தவறையாவது செய்து அந்த ரகசியத்தை  வெளியே சொல்லாமல் மூடி வைத்து இருப்பார்கள். அதனால் எந்த பெரியவர்களிடம் போய் நீங்கள் மூடி வைத்துள்ள ரகசியத்தை பற்றிய முழுவிபரம் எனக்கு தெரியும் என்று சொல்லி அவர்களை பிளாக் மெயில் செய்யலாம் என்று கூறினான். அதை கேட்ட அந்த பையனும் அதை எப்படியாவது பயன்படுத்தி பார்க்கலாம் என்று முடிவு செய்தான்.

அன்று மாலை அவனை பிக்கப் செய்ய வந்த அவனுடைய பக்கத்து விட்டு மாமாவிடம் நீங்கள் மூடி வைத்து இருக்கும் ரகசியத்தை பற்றிய முழுவிபரம் எனக்கு தெரியும் என்று சொன்னான். அதை கேட்ட அவரோ டேய்  நான் காப்பி பேஸ்ட் பண்ணி பதிவு எழுதும் விபரத்தை யாரிடமும் சொல்லாதே என் மானம் போய்விடும் இந்தா 500 ரூபாய் வைச்சுக்கோ அப்படியே வீட்டுக்கு போகும் போது நல்ல ஹோட்டலில் போய் ஐஸ் க்ரீம் வாங்கி சாப்பிட்டு விட்டு விட்டுக்கு போகலாம் என்று அந்த பிரபல பதிவர் சொன்னார்.

அவனும் சந்தோஷமாக சரியென்று தலை ஆட்டினான்.

வீட்டிற்கு வந்த அவன் அம்மா ஆபிஸில் இருந்து வந்தவுடன் அம்மாநீங்கள் மூடி வைத்து இருக்கும் ரகசியத்தை பற்றிய முழுவிபரம் எனக்கு தெரியும் என்று சொன்னான். அதை கேட்ட அவனுடைய அம்மா டேய் யாரிடமும் அதை பற்றி சொல்லிவிடாதே இந்த ரூ 500 வைச்சுக்கோ நாம் இன்று இரவு டின்னருக்கு உனக்கு பிட்ஸா வாங்கி தருகிறேன் என்று சொன்னார் .

அவனும் மிக சந்தோஷமாக சரியென்று தலை ஆட்டினான்.

அடுத்த நாள் ஊருக்கு சென்று இருந்த அவன் அப்பா  வந்தவுடன் அப்பா நீங்கள் மூடி வைத்து இருக்கும் ரகசியத்தை பற்றிய முழுவிபரம் எனக்கு தெரியும் என்று சொன்னான். அதை கேட்ட அவனுடைய அப்பா டேய் யாரிடமும் அதை பற்றி சொல்லிவிடாதே இந்த ரூ 500 வைச்சுக்கோ நான் இன்னைக்கே உனக்கு IPhone வாங்கி தருகின்றேன் என்று வாக்குறுதி அளித்தார்.

அதை கேட்ட அவனுக்கு மிக சந்தோஷம். அன்று ஞாயிற்று கிழமையானதால் அவனின் அம்மா மார்கெட்டுக்கு சென்று காய்கறி வாங்கிவர சென்றாள் அவனுடைய அப்பாவோ அவனுக்கு ஐபோன் வாங்க சென்றிருந்தார். அந்த நேரத்தில் அவன் அம்மாவின் ஆபிஸில் உள்ள ஒரு மேனேஜர் வீட்டிற்கு வந்தார்.

அப்போது அந்த சிறுவன் அவரிடம் போய் அங்கிள் நீங்கள் மூடி வைத்து இருக்கும் ரகசியத்தை பற்றிய முழுவிபரம் எனக்கு தெரியும் என்று சொன்னான். அதை கேட்ட அந்த ஆபிஸ் மேனஜரோ அப்படியா நான் உன் உண்மையான அப்பா என்ற முழுவிபரம் தெரிஞ்சுமா இன்னும் என்னை கட்டி பிடிச்சு முத்தம் தாராம என் வெட்கப்பட்டு நிற்கிறாய் என்று  இரு கரம் விரித்து அவனை தன்னிடம் அழைத்தார்.

Friends18.com Orkut Scraps

3 comments :

 1. arivu jeevi enru yaarum illai.thangal lancham nakaichchuvai
  enpathu iyarkai yaaka ullathu.thavaru maraiththal enpathu puraanangalil deva rakasiyam.manam kavarntha pathivu.
  melum melum kadal alaiyaaka pathiya puththaandu pongal vaalththukkal.devarakasiyame velivarukirathu puratchi baktharkalaal. manitha rakasiyam..

  ReplyDelete
 2. சிரித்தாலும் ஆழமாகச் சிந்தித்துப் பயப்பட வைக்கிறது பதிவு !

  ReplyDelete
 3. The bloggers should give what is good for the society.You should avoid such things in blog.You are spoiling the morality among the people.Try to give something good to others,otherwise don't poison the society.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog