உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, December 11, 2011

தமிழ்மணத்தால் தடை செய்யப்பட்ட வலைபதிவாளாரா அல்லது??தமிழ்மணத்தால் தடை செய்யப்பட்ட வலைபதிவாளாரா அல்லது??
தமிழ்மணத்தில் என் வலைத்தளத்தை தடை செய்துள்ளார்களா அல்லது அவர்களது தளத்தில் ஏதும் டெக்னிக்கல் பிரச்சனையா   என்று தெரியவில்லை.  நான் பதிவுகளை அவர்களது தளத்தில் இணைத்தாலும் அது தமிழ்மணத்தில் வெளிவருவதில்லை. நான் இதுவரை 2 இமெயில் அனுப்பியும் பதில் இல்லை. அது அவர்களது வலைத்தளம் அதுவும் இலவசமாக நடத்துகிறார்கள். அதனால் இதற்கு மேல் அவர்களிடம் இருந்து எதையும் எதிர்பார்ப்பது மிக அதிகம் என நினைக்கிறேன். எனவே இதுவரை ஆதரவு தந்த அவர்களுக்கு எனது மனம்மார்ந்த நன்றியை இதன் மூலம் தெரிவித்து எனது வலைப்பயணத்தை வழக்கம் போல தொடர்கிறேன்.

நான் இதுவரை எந்தவித காப்பி பேஸ்ட் பதிவுகள்  போட்டதில்லை. அதனால் என் பதிவுகள் பிடித்திருப்பதாக தாங்கள் கருதினால் ஃபாலோவராக பின் தொடருங்கள் அல்லது கூகுளில் avargal என்று டைப் செய்தாலே avargal unmaigal என்று எனது தளமுகவரி முதலில் வந்துவிடும். அல்லது இண்டலியில் வந்து பார்க்கவும். எனக்கு எந்த தளத்திற்கு சென்றும் ஒட்டு போடவேண்டியதில்லை அது போல பதிவுகளுக்கு சம்பந்தம் இல்லாத பின்னுட்டங்களையும் மற்றும் முதல் வடை அடை போன்ற கருத்துக்களையும் நான் எதிர்பார்த்து நான் பதிவுகள் நடத்தவில்லை. அதுபோன்று வரும் பின்னூட்டங்களையும், பதிவுகள் செய்வதில்லை. மேலும் ஆன்லைனில் பணம் எளிதாக பணம் சம்பாதிக்க என்று வரும் பின்னுட்டங்களையும் எப்போதும் ஆதரிப்பதில்லை.
நான் இந்த வலைத்தளம் நடத்துவது எனது பொழுது போக்கிற்காகவும் நான் படித்த ரசித்த செய்திகளை எனது வழியில் எனக்கு தெரிந்த தமிழில் தருவதும்தான் எனது நோக்கம். அதனால் நல்ல விஷயங்களை அறிந்து படித்து ரசிக்க விரும்புவர்கள் மட்டுமே என் வலைத்தளத்தை தொடரவும்.

இதுவரை எனக்கு ஆதரவு தந்து ஊக்கம் தரும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். எனது பதிவில் ஏதும் குறைகள் இருந்தால் சுட்டிகாட்டவும்


டீன் ஏஜ் வயதில் குழந்தைகள் செய்யும் மனம் பதைக்க வைக்கும் செயல் (குழந்தைகள் உள்ள பெற்றோரின் கவனத்திற்கு) இதுவரை வெளிவாராத உண்மைகள் விரைவில் அவர்கள்...உண்மைகள் வலைத்தளத்தில் வெளிவரும். படிக்கதவறாதீர்கள்.-------------------------------------------
டிஸ்கி: வெளியிட்ட தேதி&காலம் 12/12/11 10.39 PM Eastern Time

எனது வலைத்தளம் தடை செய்யப்படவில்லை என்று தமிழ்மணம் அட்மினிடம் இருந்து பதில் வந்துள்ளது.

அவர்கள் அனுப்பிய ரிப்ளை மெயிலுக்கு எனது நன்றிகள்;

அவர்கள் அனுப்பிய பதிலும் அதற்கு நான் நன்றி சொல்லி விளக்கம் தந்த மெயிலும் உங்கள் பார்வைக்கு

 

admin thamizmanam admin@thamizmanam.com

9:14 PM (1 hour ago)

to me

Your blog is still being aggregated. There is no problem. Please click the link below to see. Also, you can click this link to send your new posts.

==

புரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி.

இரா. செல்வராசு

தமிழ்மணம் உதவிக்குழு

http://tamilmanam.net

http://blog.selvaraj.us

அதற்கு எனது பதில்:

அன்புள்ள செல்வராசு அவர்களுக்கு,

முதலில் அன்புகலந்த நன்றிகள் & எனது மெயில் பார்த்து பதில் அளித்த உங்கள் முயற்சிக்கும் நன்றிகள்.

கடந்த ஒரு வார காலமாக நான் போட்ட பதிவுகளை உங்கள் தளத்தில் பார்க்க முடியவில்லை அதே நேரத்தில் இன்றைய பதிவாளார்கள் லிஸ்டிலும் எனது பெயர் தோன்றவில்லை அது மட்டும் மல்லாமல் கடந்த ஒருவாரம் முழுவதும் உங்கள் தளத்தில் இருந்து எனக்கு ஒரு சிங்கிள் ஹிட் கூட வரவில்லை .ஏதாவது உங்கள் தளத்தில் டெக்னிக்கள் பிரச்சனை ஏற்பட்டுள்ளதா என்று நினைத்து தான் முதலில் நான் உங்கள் தளத்தின் அட்மின் ஐடிக்கும், அதன் பிறகு இரண்டு நாள் கழித்து உங்கள் தளத்தின் டெக்னிக்கல் பிரிவு ஐடிக்கும் மெயில் அனுப்பினேன். உங்களிடம் இருந்து எந்த வித பதிலும் வராததால் ஒரு வேளை எனது பிளாக்கிற்கு நீங்கள் தடை ஏதும் விதித்து விட்டீர்களோ என்று கருதி மனது சிறிது சஞ்சலபட்டது.

காரணம் நான் எப்போதும் காப்பி பேஸ்ட் பதிவுகள் போடுவதில்லை. தரக்குறைவாக எழுதுவதும் இல்லை எனது தளத்தை எனது நெருங்கிய நண்பர்களும் குடும்பத்தினரும் படிக்கின்றனர் எதிர்காலத்தில் என் குழந்தையும் படிக்க கூடும். அப்படி என் குழந்தை படிக்க நேர்ந்தால் தனது அப்பா நல்லபதிவுகளாக் போட்டுள்ளார் என்று நினைத்து பெருமை பட வேண்டும் என்பதால் தான் நான் மிக கவனமாக நல்ல செய்திகளாக போடுகின்றேன். எனது குழந்தைகள் எதை படிக்க கூடாது என்று நினைக்கிறேனோ அதை மற்றவர்களும் படிக்க கூடாது என்பதான்.

அதுமட்டுமல்லாமல் நான் எந்த குழுவிலும் சார்ந்து யாருக்கும் ஜால்ரா போடாமல் பதிவு போடுகிறேன்.

இது என்னைப்பற்றியும் எனது பதிவுகள் பற்றியும் உங்களுக்கும் உங்கள் தளத்தின் மற்றைய அட்மின் உறுப்பினர்களுக்கும் ஒரு சிறு விளக்கம்தான்.அது மட்டுமல்லாமல் எனது பதிவுகள் மூலம் நான் தவறாக ஏதாவது சொல்லியிருப்பதாக நினைத்தால் நீங்கள் என்னை எப்போதும் தொடர்பு கொள்ளலாம். தவறாக இருக்கும் பட்சத்த்தில் நான் என்னை திருத்தி கொள்வேன். தவறு செய்யக் கூடியவன்தான் மனிதன் .

உங்கள் புரிந்து உணர்வுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் .

வாழ்க வளமுடன்

அன்புடன்,

மதுரைத்தமிழன்.

----------------------------------------------------------

13 comments :

 1. தங்கள் பதிவில் தாங்கள் பதிவு செய்கிற பதிவுகள் எல்லாம்
  பயனுள்ள்ளதாகவே எப்போதும் இருக்கிறது
  மொக்கை சக்கை பதிவுகள் எப்போதும் இருந்ததில்லை
  நான் தங்கள் பதிவை பெருமிதத்துடன்தான் தொடர்கிறேன்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. @ரமணி சார்,

  உங்களை போன்ற பெரியவர்களின் புரிதலுக்கும், ஆதரவுக்கும் எனது நன்றிகள் என்றும்,

  ReplyDelete
 3. please continue posting articles

  ReplyDelete
 4. நான் எல்லாருடைய பதிவுகளும் படித்து ரசித்து தெரியாத விஷயங்களைத்தெரிந்துகொள்ளவே வரேன்.

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் நண்பா...!!!

  ReplyDelete
 6. உங்கள் தளம் தமிழ்மணத்தில் இணைந்து தான் உள்ளது. வாழ்த்துகள்

  ReplyDelete
 7. @லக்ஷ்மி அம்மா,
  @அருள் சார்
  @மனோ சார்
  உங்கள் அனைவரின் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி

  ReplyDelete
 8. @ நீச்சல் காரன் அவர்களுக்கு உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

  நான் கடந்த ஒரு வாராகாலமாக நான் இட்ட பதிவுகள் ஏதும் தமிழ்மணத்தில் வெளியாகவில்லை அதுமட்டுமல்லாமல் அந்த தலத்தில் இருந்து ஒரு ஹிட் கூட எனக்கு வரவில்லை அதானால்தான் நான் அவரகளுக்கு மெயில் அனுப்பியும் பதில் வாராததால்தான் இந்த பதிவுபோட்டு இதுவரை அவர்கள் தந்த ஆதரவிற்கு நன்றி சொல்லியும் அதே நேரத்தில் எனது பதிவுகளை வந்து படிப்பவர்கள் ஒரு வேளை அங்கு சென்று என் பதிவுகள் ஏதும் வரவில்லை என்று கருதிவிடக்கூடாது என்பதால்தான் இதை எழுதினேன்.

  நீங்கள் பின்னுட்டம் இடும் சிறிது நேரத்திற்கு முன்புதான் எனக்கு தமிழ்மணம் அட்மின் பிரிவிலிருந்து பதில் வந்தது. அதன் பிறகு உங்கள் பின்னுட்டம் வந்தது.உங்கள் பின்னுட்டத்திற்கு பின் தமிழ்மணம் சென்று பார்த்தேன் சண்டே இரவு நான் போட்ட பதிவு
  இப்போதுதான் அதாவது திங்கள் இரவு Avargal Unmaigal | 0 மறுமொழி | 2011-12-12 21:13:15 | ????????? வெளியிடப்பட்டுள்ளது

  ReplyDelete
 9. இந்தப்பதிவைக்கூட தமிழ்மணத்தில் பார்த்துவிட்டுத்தான் இங்கு வந்துள்ளேன் சார். தமிழ்மணம் உங்கள் பதிவுகளை காட்டுகிறதே?

  ReplyDelete
 10. @ரஹிம்காஸாலி
  உங்கள் வருகைக்கும் பின்னுட்டத்திற்கும் நன்றி. நான் நீச்சல்காரன் அவர்களுக்கு போட்ட பதிலை மீண்டும் நீங்கள் சென்று பார்க்கவும்.

  நான் தமிழ்மணத்தில் இணைந்ததில் இருந்து எனக்கு அந்த தளத்தின் மூலம் ஒரு பதிவிற்கு குறைந்தது 200லிருந்து 300 ஹிட் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் நானும் எனது நண்பர்களும் தினசரி தமிழ்மணத்தில் கடந்த ஒரு வாரகாலமாக நன்கு பரிசோதித்த பின்பும் அங்கு எனது பதிவுகள் தோன்றவில்லை. அவர்களுக்கு இமெயில் அனுப்பியும் பதில் வாராததால் தான் நான் இந்த பதிவை போட்டேன். நான் இந்த பதிவு இட்ட நாள் 12/11/11 அமெரிக்கா இரவு நேரம் பதிவுஇட்ட உடனே தமிழ்மணத்தில் இணைதேன் அது அமெரிக்க நேரம் 12/12/11 இரவு நேரம்தான் அது தமிழ்மணத்தில் தோன்றியது அதாவது தமிழ்மணத்தில் இருந்து எனக்கு பதில் மெயில் வந்த சிறிது நேரத்திற்கு முன்புதான் வெளியிடப்பட்டுள்ளது.

  இப்போது நான் கொடுத்த விளக்கம் உங்களுக்கு புரிந்து இருக்குமென நினைக்கிறேன். நன்றி

  ReplyDelete
 11. வணக்கம் சகோ எழுத்து என்பது எமது உரிமையல்லவா... தங்களின் சில பதிவுகளே படிக்க முடிந்தாலும் அதன் ஆழத்தை என்னால் உணர முடிகிறது.. தொடருங்கள்..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  இந்திய சினிமாக்காரரிடம் சிக்கித் தவிக்கும் ஈழத் தமிழர் உணர்வுகள்

  ReplyDelete
 12. சகோ சில வேளை தங்களது feed ஐ நிறுத்தியிருந்தீர்கள் என்றால் தமிழ் மணத்தால் திரட்ட முடியாமல் போயிருக்கலாம் என நினைக்கிறேன்...

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog