உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, December 18, 2011

ஈரோடு பதிவர் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிய "தமிழக பிரபல" பதிவாளருக்கு நேர்ந்த விபரீதம்???


ஈரோடு பதிவர் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிய "தமிழக பிரபல" பதிவாளருக்கு நேர்ந்த விபரீதம்???ஈரோடு பதிவர் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிய தமிழக பிரபல பதிவாளர் வீடு திரும்பியதும்  சோபாவில் அமர்ந்து அங்கு நடந்த சம்பவங்களை தன் மனைவிக்கு விவரித்து சந்தோஷத்துடன் கூறி கொண்டிருந்தார். அதை ஆஆஆஅ என வாயை பிளந்து மனைவியும் கேட்டு கொண்டிருந்தார்.அப்போதுதான் அந்த அற்புத நிகழ்சி நடந்தது. அவர்கள் முன் ஒரு தேவதை வந்து அவர்களை ஆசிர்வதித்து உங்கள் இருவருக்கும் நான் ஆளுக்கு ஒரு வரம் தருகிறேன். நீங்கள் விரும்பியது ஓன்றை நீங்கள் பெற்று கொள்ளலாம் என கூறினார்.முதலில் பதிவாளரின் மனைவிக்கு அந்த வாய்ப்பை கொடுத்தது அந்த தேவதை.  அந்த பிரபலபதிவாளரின் மனைவி தன் கணவர் பதிவின் மூலம் உலகப் புகழ் பெற்றதால் அவருடன் சேர்ந்து உலகம் முழுவதும் சுற்றி வர ஆசைப்பட்டு அதற்கான வரம் கேட்டார்.

அதற்கு அந்த தேவதையோ அவர்கள் உலகம் முழுவதும் சுற்றிவர ரிடர்ன் விமான டிக்கெட்டும் 5 ஸ்டார் ஹோட்டல்களில் தங்குவதற்கும் ஏற்பாடு செய்து கொடுத்தது.இப்போது அந்த பிரபல பதிவாளரிடம் உங்களுக்கு என்ன வரம் வேண்டுமென்று கேட்டது. பதிவாளர் கூட்டதிற்கு சென்று அங்குவந்த இளம் வயது பதிவாளர்களிடம் பேசி கொண்ட போது அவர்கள் மூலம் நவின கால இளம் பெண்களை அறிந்து கொண்ட அந்த பதிவாளருக்கு அந்த வீபரித ஆசை வந்து அந்த தேவதையிடம் கேட்டார் நான் எப்போதும் என்னைவிட 20 வயது குறைந்த இளம் பெண் கூட இருக்க வேண்டும் என்று வரம் கேட்டார். அந்த பதிவாளருக்கோ வயது 40 .அதை கேட்ட அந்த தேவதை உன் விருப்பம எதுவோ அதை நான் தருகிறேன் என்று சொல்லி அவருக்கு அந்தவரத்தை கொடுத்தது அப்போது அவர் 60 வயது முதியவர் ஆனார். அவர் மனைவி எப்போதும் அவர் கூட இருக்கலானார்.டிஸ்கி 1: இதுக்குதான் மக்காஸ் வரம் கேட்கும் போது மிக தெளிவாக யோசித்து வரம் கேட்க வேண்டும் அதே நேரத்தில் அதிக ஆசைபடக்கூடாது.டிஸ்கி 2: உங்களிடம் அந்த தேவதை வந்து வரம் கேட்டால் நீங்கள் என்ன கேட்பீர்கள்? முடிந்தால் பின்னுட்டமாக இடவும்டிஸ்கி 3: இனிமேல் அந்த பதிவாளரை எந்த பதிவர் கூட்டதிலும் பார்க்க முடியாது.  அந்த பதிவாளர் இப்போது புது வலைத்தளம் தொடங்கி வயதானவர் புரோபைலில் வந்து பதிவு எழுதப் போவதாக செய்தி வந்துள்ளது.அந்த பதிவாளர் யார் என்ற செய்தியை நான் இங்கு தெரிவிக்கபோவதில்லை ஆனால் அவர் யார் என்று உங்களுக்கு தெரியவேண்டுமென்றால் ஒரு சின்ன க்ளூ தருகிறேன். பெண் என்றால் ஒரு வண்டி ஜொள்ளுவிடுபவர். முடிந்தால் அவர் யார் என்று நீங்கள் பின்னூட்டமாக அவர் பெயரை சொல்லலாம்.


10 comments :

 1. //பெண் என்றால் ஒரு வண்டி ஜொள்ளுவிடுபவர்.//

  நீங்க தானே தாத்தா :-)

  ReplyDelete
 2. அண்ணன் சி.பி யை சொல்றீங்களா?????/

  ReplyDelete
 3. அந்த பதிவர் யாருன்னு சொல்லி தெரியவேண்டியது இல்லை ஹி ஹி...!!!

  ReplyDelete
 4. சத்தியமாக நான் இல்லை எனக்கு வயது 33

  ReplyDelete
 5. @ஆமினா நீங்க ஜொள்ளு மன்னிக்கவும் கொள்ளு பாட்டி என்றால் நான் கொள்ளூ மன்னிக்கவும் ஜொள்ளு தாத்தா தான். நான் எல்லாம் பெண்களை கண்டால் ஜொள்ளு விடுகிற டைப் இல்ல அதற்கு பதிலாக அவர்களிடம் சரணடைந்து விடுகிற டைப்தானங்க்கோ

  என்ன ஆமினா மேடம் என் கடை பக்கம ஆளை கொஞ்சநாளா காணோம்

  ReplyDelete
 6. @மகேந்திரன் சார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சி.பி சாரா ஜொள்ளா அப்படியா எனக்கு தெரியாதே அவர் பதிவுக்கு போவோர்கள் என்னை மாதிரி உள்ள சில பேரைத்தவிர மற்றவர்கள் தான் ஜொள்ளூ என்று நினைத்தேன். ஆனா நீங்க இப்ப ஒரு புது கதையை சொல்லிறிங்க அது உண்மைதானா???? இருங்க இருங்க அவர் நண்பர் மனோவிடம் கேட்டு விடுவோம்.(என்னைய்யா அவர் மேல் கோபம் அவரை இப்படி தாக்குகீறிர்கள்.)

  ReplyDelete
 7. @மனோ சார் நீங்களாவது யாருன்னு சொல்லிவிட்டு சிரிங்க . இப்பதான் ஒரு பதிவாளர் சி.பி சார்ன்னு சொல்லுறார் , மகேந்திரன் சார் சொல்வது சரியா? இல்லையா? இப்ப என் மண்டை உடையுது

  ReplyDelete
 8. @கணேஷ் மூர்த்தி சார் வாங்க வாங்க இப்ப வயசு 33 தானே ஆகுது 40 வயசு ஆகட்டும் அப்ப எப்படி ஜொள்ளு வடிக்கிறீங்கனு பார்ப்போம்.

  ReplyDelete
 9. S . J சூர்யா தான ...?

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog