உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, December 13, 2011

சூப்பர் பவர்" ஆட்சியில் சூப்பர் பவராக போகும் தமிழ்நாடு


"சூப்பர் பவர்" ஆட்சியில் சூப்பர் பவராக  போகும் தமிழ்நாடு

இந்தியாவை 2015-ல் பிரகாசிக்க வைக்க ஜெயலலிதா அமைச்சரவை முடிவு. 2015-ல் தமிழகத்தில் கனவாகிய மின்சாரம் நனவாகப் போகுது


ஜெயலலிதா அமைச்சரவையில்  மின்சார துறை அமைச்சரான நத்தம் ஆர். விஸ்வநாதன்   Federation of Indian Chambers of Commerce and Industry ஏற்பாடு செய்த மீட்டிங்கில்  2015-ல் தமிழகத்தில் மின்சாரம் உபரியாக இருக்கும் சொன்னார். அதன் முதல் அறிகுறியாக ஒரு மணி நேர அளவு பவர்கட் செய்யப்படும் சென்னையில் வரும் ஜனவரி மாதம் முதல் பவர் கட் என்பது இருக்காது என்றும் அறிவித்துள்ளார். இப்போது  3000 MW மின்சார பற்றாக்குறையால் இருக்கும் நாம், நமது புதிய திட்டத்தினால் 1,600 MV மின்சாரம் மே 2012க்குள் கிடைக்கும் & 1400 MW மின்சாரம்  2012 ஆண்டு இறுதிக்குள் கிடைத்துவிடும். அதன் பிறகு நமக்கு கிடைக்கும் மின்சாரம் உபரியாக இருக்கும் அதனால் நாம் இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களுக்கு நம் மாநிலம் மிக முன்மாதிரியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.ஐயா இந்த புது அமைச்சர் எப்படி கற்பனை பண்ணி சொல்லியிருக்காரு பாருங்க! நல்ல கற்பனைவளம் உள்ளவருங்க. இவரால் பாதிக்கப்பட்ட முதல் ஆளு ஆற்காடு வீராசாமிதானுங்க. இதை கேட்ட கலைஞர் ஆற்காடு வீராசாமியை அறிவாலயத்துக்கு கூப்பிட்டு அவருக்கு விட்டார் பாருங்க டோஸ் அதை எந்த பத்திரிக்கையிலும் எழுதமுடியாதுங்க....அவர் சொன்னது உண்மையாகிவிட்டால் இரவும் பகலாகிவிடும் ,தமிழகத்தின் எந்த மூலையிலும் இருட்டு என்பதே யாருக்கும் தெரியாது. இருட்டை அறிய வேண்டுமென்றால் பெட் ரூமிற்குள் சென்றால் மட்டும் அறியமுடியும். மின்சார பில்லை தொட்டால் ஷாக் அடிக்காது. எப்போது மின்சாரம் உபரியாக உள்ளதோ அப்போதே அதற்கான கட்டணமும் குறைந்துவிடும்.அண்ணாசாலை எல்லாம் ஏர்கண்டிஷன் செய்யப்பட்டிருக்கும். கட்சிகள் தாங்கள் நடத்தும் பொது கூட்டங்களுக்கு மின்சாரம் திருடும் பழக்கமும் மாறிவிடும்தமிழகத்திற்கு நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது என்று குடுகுடுப்பைகாரன் எழுப்பிய சத்ததில் என் மின்சாரகனவு கலைந்து போனது . கோபத்தில் யாரா அந்த குடுகுடுப்பைகாரன் என்று சத்தம் போட்டதில் ஐயா நான் தான் ராமதாஸ் என்று பதில்வந்தது.

உங்களுக்கு மின்சாரம் கட் ஆவதற்குள் இதை படித்து முடித்து விடுங்கள் நான் என் சம்சாரம் வந்து லேப்டாப் கனெக்ஷனை கட் பண்ணுவதற்குள் நான் இதை முடித்து விடுகிறேன்`
`

நான் படித்த நல்ல செய்தியை உங்களுக்கு பகிரத்தான் இந்த பதிவு. சில செய்திகள் செய்திகளாகவே போய்விடும் நிஜமாக ஆவதில்லை

Surplus power in Tamil Nadu by 2015

CHENNAI: Tamil Nadu would be a power surplus state by 2015 by optimising production and speeding up new projects, Electricity Minister Natham R Viswanathan said .
Inaugurating a seminar organised by the Federation of Indian Chambers of Commerce and Industry here, he said the additional one hour power cut being imposed in the state barring Chennai would be lifted by January next. He said the state presently faced a power deficit of 3,000 MW. By commissioning new projects, the State would add up 1,600 MW by May 2012 and 1,400 MW by the end of the year. By 2015, the state would be power surplus and a model for other states in the country in power generation.
Bids Soon for 50 MW Solar Project
Tamil Nadu Energy Development Agency would soon float tenders to set up a `500 crore, 50 MW solar power project.
“It is the first 50 MW solar project in the state,” Sudeep Jain, Chairman and Managing Director of TEDA said. The project is likely to be executed in public-private partnership mode.
As regards off-shore windpower projects, Jain said land has been allotted and the first assessment has just begun near Dhanushkodi in Ramnad

1 comment :

  1. சில செய்திகள் செய்திகளாகவே போய்விடும் நிஜமாக ஆவதில்லை//

    அடடடடா வடை போச்சே மக்கா...!!!

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog