உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, December 10, 2011

ராமதாஸ் அவர்களின் வீட்டில் நடந்த காமெடிராமதாஸ் அவர்களின் வீட்டில் நடந்த காமெடிஅன்புமணி: அப்பா என்னப்பா ஆச்சு ? உங்களை பற்றி கேள்விபட்டடேன் அப்பா? நீங்க நல்லா இருக்கீங்களா? உங்களை நினைச்சு எனக்கு கவலையா இருக்குப்பா?

ராமதாஸ் : டேய் அழுகாதடா நான் நல்லாதான் இருக்கேன். யாரோ என்னைப் பற்றி உன்னிடம் தவறா சொல்லியிருக்காங்கப்பா?

அன்புமணி :அப்பா யாரும் உன்னைபற்றி சொல்லைப்பா....நீங்க பேசுனாதா பேப்பரில் உங்களை பற்றி ஒரு செய்தி வந்திருக்குதப்பா அதை பற்றி படித்ததும் எனக்கு கவலையாகிவிட்டதப்பா...

ராமதாஸ் :டேய் அப்படி என்னடா செய்தி படிச்சே?

அன்புமணி :அப்பா பேப்பரில் நீங்க சொன்னதாக கிழ்கண்டவாறு செய்திவந்திருக்குதப்பா

 "சென்னை, டிச.10: திராவிடக் கட்சிகளின் அரசியலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான புதிய திட்டத்தை அடுத்த வாரம் அறிவிக்கப் போவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.  சென்னையில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:  திராவிடக் கட்சிகளால் தமிழகம் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. திமுக, அதிமுகவுக்கு எதிரான மாற்று அரசியல் இயக்கத்தை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இதனைக் கருத்தில் கொண்டு புதிய அரசியல், புதிய நம்பிக்கை என்ற தலைப்பில் அடுத்த வாரம் மாற்றுத் திட்டம் வெளியிட உள்ளேன்.'இதை படித்துவிட்டு முடித்தவுடன் ஆன்லைனில் என் டாக்டர் நண்பர் கீழ்கண்ட செய்தியை அனுப்பி இருந்தார் "The National Institute of Mental Health and Neuro Sciences (NIMHANS) in Bangalore estimates that two crore Indians need help for serious mental disorders, while a further five crore suffer from mental illnesses not considered very serious. These figures do not include neurological age-related progressive disorders such as Alzheimer's and Parkinson's.Nimhans also estimates that at least 35 lakh Indians need hospitalisation on account of mental illnesses.

இந்த இரண்டு செய்தியை படித்ததும் உங்கள் மனநிலையை எண்ணிதான் கவலைப்பட்டேன் அப்பா. அது தப்பா அப்பா

ராமதாஸ் :ஹா ஹா ஹா என்ற சிரித்தாவறே டேய் மகனே இதை படித்ததும் சந்தோஷப்படுவதை விட்டு என்னை நினைத்து ஏன் கவலைப்படுகிறாய்? நான் ஒன்றும் நீ நினைத்தவாறு  மனநிலை பிறழ்ந்து இப்படி பேசவில்லை. உனக்கு வந்த அந்த இமெயில் எனக்கும் வந்தது. அந்த செய்தியை படித்ததும் எனக்கு சந்தோஷம் வந்தது. . பாத்தியா எவ்வளவு இந்தியனுக்கு மனநோய் உண்டாகி உள்ளது. அவர்கள் அனைவருக்க்கும் நாம் மருத்துவம் பார்த்து அவர்களது மூளையை நாம் சலவை செய்து நாம்தான் உண்மையான திராவிட கட்சி என்று கூறிவரவேண்டும். அவர்கள் மனதில் அது மிக அழமாக அது பதிந்துவிடும். அதன் பிறகு அவர்களின் ஒட்டு எல்லாம் நமக்குதான். இதுதான் நான் கண்டுபிடித்த திராவிடகட்சிகளுக்கு மாற்றாக நான் கண்டுபிடித்த திட்டம்.அதன் மூலம் அடுத்த தமிழக முதல்வர் நான் தான்

அன்புமணி : அப்பாஆஆஆஆ !!!!!அப்ப நான் முதல்வர் கிடையாதா???????அப்ப நீ ஒரு சரியான லூஸுன்னு எல்லோருக்கும் இப்பவே அறிவித்து விடுகிறேன்

அப்போது  தொலை தூரத்தில் இருந்து ஒரு பாட்டு சத்தம் கேட்கிறது " கண்ணா!!!!!! நீயும் நானுமா? கண்ணா நீயும் நானுமா? காலம் மாறினால் கெளரவம் மாறுமா?இது நகைச்சுவைக்காக எழுதப்பட்டது. ரசித்து மகிழவும். ஆனால் சீரியஸாக எடுத்து கொள்ளவேண்டாம். யாரையும் புண்படுத்த எழுதப்பட்டது அல்ல.

2 comments :

  1. அருமையான காமெடி
    சிரித்து ரசித்தோம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சான்சே இல்ல.. குடும்ப அரசியலில் எவனும் ஒருத்தனை ஒருத்தன் முதுகில் குத்தவே மாட்டார்கள்..

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog