உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, December 1, 2011

ஜெயலலிதாவுக்கு எதிராக ஸ்வாமிஜீ ஸ்ரீ ஸ்ரீ சாரு நிவேதா செயல்படுகிறாரா?


ஜெயலலிதாவுக்கு எதிராக ஸ்வாமிஜீ  ஸ்ரீ ஸ்ரீ சாரு நிவேதா செயல்படுகிறாரா?ஜெயலலிதா உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் விலைகளை உயர்த்தியதும் எல்லோரும் அவர் தமிழர் வாழ்வை ஏதோ நாசமாக்க முயல்வது போல கருத ஆரம்பித்தனர். அதன் பிறகு அவருக்கு எதிராகவும் எழுத ஆரம்பித்தனர். பல பதிவர்கள் அதை பற்றி பதிவும் போட்டனர். நானும் விலைவாசி உயர்வை பற்றி கிண்டல் செய்து பதிவு போட்டேன்.ஆனால் நம்ம தமிழ் இலக்கிய எழுத்தாளர் சாருவுக்கு நம் தமிழர்கள் வாழ்வு இப்படியே அழிந்து போய்விடக் கூடாது என்று சபதம் எடுத்துள்ளார்  போல அதனால் வருகிற டிசம்பர் 18 ஆம் தேதிக்கு அப்புறம் தமிழர்கள் வாழ்வு வளம் பெற ஒரு பூஜையை நடத்துள்ளார், அதில் கலந்து கொண்டு அவர் தரும் எந்திரத்தை பெற்று கொண்டால்  உங்கள் வாழ்வு வளம் பெறும், வாழ்வில் மாற்றங்கள் ஏற்படும். கவனிக்க விஜயகாந்திடம் கையால் குட்டு பெற்று பல தமிழ் மக்கள் இப்போது மகராஜாவாக வாழ்ந்து வருகிறார்கள். அது போல சாருவிடம் எந்திரம் பெருபவர்கள் வாழ்வில் வளம் பெறுவார்கள்.அவரின் பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு அவர் சில நிபந்தனைகளை  போட்டுள்ளார் :அதை கிழே காணலாம் 1. இந்தப் பூஜையில் நீங்களும் வந்து கலந்து கொள்ளலாம். நாஸ்திகர்களுக்கும் அனுமதி உண்டு.( (நாஸ்திகர் என்றால் நாஸ்தி பண்ணுபவரோ?)

2. ஒரே நிபந்தனை, குளித்து விட்டு வர வேண்டும்;(தமிழ்நாட்டுகாரர்கள் குளிக்கமாட்டார்கள் என்ற அதிசயசெய்தி  எனக்கு இவர் சொல்லும் போதுதான் தெரிகிறது வாவ்)

3. குடித்து விட்டு வரக் கூடாது.(என்ன குடித்துவிட்டு வரக்கூடாது என்பதை தெளிவாக சொல்லுங்க தலைவா உங்களை பார்க்க வழக்கமாக வரும் நமது புள்ளை நல்லா சரக்கை அடித்துவிட்டு வீட்டு வாசலில் வந்து அலம்பல் பண்ணபோதுங்க)4. வரும் போது கற்பூரம், ஊதுவத்தி, சாம்பிராணி, தசாங்கம், தீப எண்ணெய் என்று ஏதாவது வாங்கி வாருங்கள் (பாத்தீங்களா நீங்க இப்ப தெளிவா சொல்லியிருக்கிங்க இல்லைன்ன வழக்கம் போல உங்களை பார்க்க வருபவர்கள் பாரின் சரக்கை கையில் பிடித்து வந்துவிடுவார்கள்)ஐயா, இதற்கென்று நான் கடை கடையாக ஏறி இறங்க வேண்டியிருக்கிறது!

5. எதற்கு இந்தப் பூஜை என்றால், எந்திரம் ஒன்றை வரைந்து அதை பூஜை மற்றும் தவத்தின் மூலம் உருவேற்றப் போகிறேன். இதை நீங்கள் வைத்துக் கொண்டால் உங்கள் வாழ்வு வளம் பெறும். அதிசயிக்கத்தக்க மாற்றங்கள் நிகழ்வதை நீங்கள் கண்டு உணரலாம்.

(வழக்கமாக நீங்கள் பணம் நன் கொடையாக எதிர்பார்பீர்கள் ஆனால் இதற்கு பணம் பற்றி ஓன்றும் வாய் திறக்கவில்லையே ஏன்? ஏதாவது உள்குத்து உள்ளதா?)தலைவா சாரு உங்களுக்குதான் தெரியுமே அமெரிக்கர்களின் வாழ்வு எப்படி இருக்கிறது என்று. நானும் அமெரிக்காவில் இருப்பதால் என் வாழ்வும் மிக மோசமகா உள்ளது. அதனால் நானும் உங்கள் பூஜையில் கலந்து கொள்ள விரும்புகிறேன் முடிந்தால் உங்கள் செலவில் எனக்கு ஒரு டிக்கெட் எடுத்து அனுப்பி வைக்கவும். நான் உங்கள் பூஜையில் கலந்து கொண்டு என் வாழ்வு வளம் பெற்ற பின் எனது டிக்கெட்டுக்கான செலவை வட்டியோடு திரும்ப தருகிறேன்.இது ஒரு காமெடி பதிவுதான். அதனால் இதை படிப்பவர்கள் சீரியசாக எடுத்து கொள்ள வேண்டாம்.

2 comments :

 1. அருமையான வித்தியாசமான
  மனம் கவர்ந்த பதிவு
  ஒவ்வொரு கமெண்டும் பிரமாதம்
  மிகவும் ரசித்தேன்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. சாரு எப்போது சாமியார் ஆனார்...??

  ----அவ்வ்வ்வ்வ்வ்----

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog