உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, November 3, 2011

பெண்களிடம் "சாட்"(Chat) பண்ணி வாங்கி கட்டி கொண்ட பதிவாளர் ( யார் அவர் ?)


பெண்களிடம் "சாட்"(Chat) பண்ணி வாங்கி கட்டி கொண்ட பதிவாளர் ( யார் அவர் ?)

சிரிக்க தெரிந்தவர்களுக்கு அனுமதி இலவசம்அவர் வேறு யாருமல்ல நக்கலுக்கு பெயர் போன Madurai Tamil Guy- தானுங்க. பாவி மனுசன் பெண்கள் கிட்ட இப்படியா பேசுவான். பாருங்க அவன் பேசிய லட்சணத்தை.....

நான் பசியாக இருப்பதை பார்த்த கடவுள் எனக்காக பிட்ஸா உருவாக்கி கொடுத்தார்.
நான் தாகமாக  இருப்பதை பார்த்த கடவுள் எனக்காக பெப்ஸி உருவாக்கி கொடுத்தார்.
நான் இருளில்  இருப்பதை பார்த்த கடவுள் எனக்காக லைட்டை உருவாக்கி கொடுத்தார்.
நான் பிரச்சனைகள் இல்லாமல்  இருப்பதை பார்த்த கடவுள் எனக்காக உன்னை(பெண்ணை) உருவாக்கி கொடுத்தார்.

பெண்ணுரிமை பேசும் தமிழ் பதிவாளர்களே அப்படி என்னை முறைச்சு பாக்காதீங்க.  பெண்களை பற்றி நான் ஒன்றும் சொல்லல இது ஒரு வெள்ளைக்காரன் அவனது வெள்ளைக்கார மனைவியை பார்த்து சொன்னது. நம்ம தமிழ் பொண்ணுங்க தங்கமான பொண்ணுகதான்.... அப்பா ஒரு வழியா தப்பிச்சாச்சு...ஒரு நாள் நல்லா மழை பெய்யும் போது நான் மழையை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன் என் பக்கத்து வீட்டில் உள்ள பெண்ணும் அவள் பால்கனி வழியாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்த போது சொன்னாள். மழையில் நனைந்த எல்லா பொருட்களும் அழகாக தெரிகின்றன. பாருங்களேன் அந்த மரத்தை அந்த செடியை அந்த பூவை  எவ்வளவு அழகாக தெரிகின்றன. மழையை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அது எல்லாவற்றையும் அழகாக மாற்றுகிறது என்று சொல்லிக் கொண்டிருந்தாள். உடனே நான் அவளை பார்த்து  அப்ப  நீயும் கொஞ்ச நேரம் மழையில் நனைந்து வாயேன் என்று சொன்னேன். நான் சொன்னதில் என்ன தப்ப என்று தெரியவில்லை அதில் இருந்து அவள் என்னிடம் பேசுவதில்லை.எங்க எதிர்த்த வீட்டில் உள்ள பெண் வருஷதிற்கு ஒரு முறை பிள்ளை பெற்று கொண்டிருந்தாள் போனமாதம் அவளை பார்த்த போது அவள் மீண்டும் பிள்ளை உண்டாகி இருந்தாள். அவளை பார்த்த நான் உங்க ரெகுலர் டிரெஸ்சே  மெட்டர்னிட்டி (maternity )டிரெஸ்தானா என்று கேட்டேன் .நான் கேட்டதில் என்ன தப்புங்க....என்னை பாத்தா இப்ப பேசகூட மாட்டேங்கறாங்கஒரு நாள் நான் யாகூ சாட் ருமில் இருந்த போது எனக்கு தெரிந்த பெண் உங்க வாய்ஸ கேட்கனும் என்று ஆசையாக இருக்குது ஒரு ஆங்கில பாடலை எனக்காக பாடி காண்பியுங்கள் என்று சொன்னாள். நானும் எனது தொண்டையை சரி செய்து கீழ்கண்ட பாடலை பாடினேன். அன்றில் இருந்து இதுவரை அவளை சாட்டில் பாக்கவே முடியலை. நான் பாடிய பாட்டில் ஏதும் தவறுகள் உள்ளதா பார்த்து சொல்லுங்களேன்

Twinkle Twinkle little star
You should know what you are
And once you know what you are
Mental hospital is not so far.ஒரு பெண் கல்யாணத்தை பற்றி ஒரு நல்ல கோட் (Quote) ஓன்னு சொல்லேன் என்று என்னிடம் கேட்டாள். அதற்கு நான் சொன்ன கோட் இதுதான் கேட்டதும் அபிஸ்டு அபிஸ்டு ச்சீய்ய்ய் என்று சொல்லிவிட்டு போய்விட்டாள்

கல்யாணம் என்கிறது பொதுக் கழிப்பிடம் போல, உள்ளே இருக்கிறவன் எப்படா வெளியே போகலாம் என்றுஇருப்பான், வெளியே இருக்கிறவன் எப்படா உள்ளே போகலாம்னு இருப்பான்.


கடந்த வார இறுதியில் என் மனைவியிடம் சொன்னேன் நான் என் நண்பணை வீட்டுக்கு டின்னர் சாப்பிட கூப்பிட்டு இருக்கிறேன் என்றேன். உடனே அவள் உங்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது. வீட்டை பாத்தீங்கள கிடையா கிடக்குது அழுக்கு துணிகள் அங்க அங்க கிடக்குது இந்த வாரம் ஷாப்பிங்க்கூட பண்ணல கிச்சன்ல எச்சில் பாத்திரம் 2 நாளா அப்படியே கிடக்குது. வீட்டை க்ளின் பண்ணி இரு வாரத்தீற்கு மேலேயாகுது அது மட்டுமல்ல எனக்கு சமையல் செய்ய மூடே இல்ல என்று பட பட என பொரிந்தாள். நான் உடனே அது எல்லாம் எனக்கு தெரியும் என்றேன். அப்ப ஏன் உங்க நண்பரை வீட்டிற்கு டின்னருக்கு கூப்பிட்டிங்க என்றாள். அதற்கு நான் அந்த முட்டாளுக்கு கல்யாணம் பண்ணனுமுணு ஆசை வந்துட்டது அதனாலதான் அவனை கூப்பிட்டேன் என்றேன். நான் சொன்னதுல்ல என்ன தப்புங்க?

அதிலிருந்து என் மனைவி கூட எங்கிட்ட பேசமாட்டேங்கிறாங்க

சரிடா அவள் மூடு மாத்த அவளை ஒரு நல்ல இந்தியன் ரெஸ்டராண்டாக பாத்து கூட்டி போனேனுங்க போகிற வழியில் உள்ள ஃபார்மில்(Farm) இருந்த பன்னிகளை பார்த்து நிச்சயம் அது உங்க சொந்தகாரங்களாகத்தான் இருக்கும் என்று சொன்னாங்க. நானும் தலைய ஆட்டியவாறே ஆமாம் அது என் நெருங்கிய சொந்தகாரங்க மாதிரிதான் தெரியுது ஆ இப்ப தெரிஞ்சது அந்த பன்னிங்க என் In Laws மாதிரி இருக்குதுன்னு சொன்னேன். அப்ப அவ கோவிச்சு கிட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போனவதானுங்க இன்னும் வரல..

கூகிளாண்டவரிடம் மனைவியை அடக்குவது எப்படின்னு கேட்டா, நாங்களும் தேடிக்கொண்டிருக்கிறோம்னு பதில் வருது

நீங்களாவது கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்களேன் நான் பெண்களிடம் பேசும் போது என்ன தப்பு பண்ணுரேன்னு.. எனக்கு எப்படி பேசரதுன்னு தெரியலைங்க....உங்களுக்கு  தெரியுமா?ஆஆஆஆ நீங்களும் நம்ம மாதிரி ஆளுதான்னா

4 comments :

 1. ஹா ஹா ஹா ஹா செம கலக்கல் காமெடி கும்மி....!!!

  ReplyDelete
 2. //ஆஆஆஆ நீங்களும் நம்ம மாதிரி ஆளுதான்னா//

  ஆமாங்கோ

  ReplyDelete
 3. அடா அடா..என்னா தத்துவம்! என்னா தத்துவம்!..இப்படி எல்லாம் உக்கார்ந்து யோசிச்சு, பொண்ணுங்க கிட்ட நீங்க கேட்ட கேள்விகளுக்காகவே உங்களுக்கு பெரிய பட்டம் தரலாமுங்க..இதை புரியாத அவங்க எல்லாம் உங்க கிட்ட பேசாம இருந்திருக்காங்க..ரொம்ப மோசம்.

  ReplyDelete
 4. பேசாம பய பக்தியா இருங்க அதே போதும்!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog