Wednesday, November 30, 2011

இந்த கால "குட்டிகள்" ரொம்ப ஸ்மார்ட்


பேபி ஒட்டகமும் அம்மா ஒட்டகமும் அருகருகில் உட்கார்ந்து இருந்தன. அப்போது பேபி ஒட்டகம் அம்மாவிடம் கேட்டது அம்மா எனக்கு நீண்ட நாள்களாக சில கேள்விகள் என் மனதில் எழுகின்றன அதற்கு எனக்கு விளக்கம் சொல்கிறாயா என்று கேட்டது.

அதற்கு அம்மா ஒட்டகம் உன் சந்தேகத்தை சொல்லு நான் பதில் சொல்லுகிறேன் என்றது.



பேபி ஒட்டகம்: நாம் முதுகில் ஏனாம்மா பெரிய திண்டு போல இருக்கிறது?

அம்மா ஒட்டகம் : நாமெல்லாம் பாலைவன விலங்குகள் அதில்தான் நமக்கு தேவையான தண்ணிரை சேமித்து வைத்துகொள்வோம். அப்படி சேமித்து வைத்து நீரை பாலைவனத்தில் நமக்கு தேவையான நேரத்தில் உபயோகித்து கொள்ள அது மிகவும் உதவுகிறது.



பேபி ஒட்டகம் : ..அப்படியா? சரி இன்னொரு கேள்வி நமக்கு மட்டும் ஏன் மிகவும் நீளமாகவும் கால் பகுதி வட்டவடிவமாகவும் இருக்கிறது?

அம்மா ஒட்டகம் : அதுவா பாலைவனத்தில் மிக வேகமாக செல்ல அந்த நீண்ட கால்கள்தான் நமக்கு மிகவும் உதவுகிறது என்று மிக பெருமையாக சொன்னது.



பேபி ஒட்டகம் : ..அப்படியா அதுவும் சரிதான். எனக்கு இன்னும் ஒரு கேள்வி இருக்கிறது நமக்கு ஏன் கண் இமைகள் மிகவும் நீளமாக உள்ளது.



அம்மா ஒட்டகம் அதுவா பாலைவனத்தில் அடிக்கடி புழுதி புயல்வீசும் அதிலிருந்து நம் கண்களை இந்த நீண்ட இமைகள்தான் காக்கின்றன இது நமக்கு மட்டும் கிடைத்த வரப்பிரசாதம் என்றது மிக பெருமையாக.



அதை கேட்ட பேபி ஒட்டகம் நம் முதுகில் உள்ள திண்டு நாம் பாலைவனத்தில் போகும் போது நீரை சேமித்து உபயோகபடுத்தி கொள்ள உதவுகிறது, பாலைவனத்தில் நாம் நடக்கும் போது நமக்கு நமது நீண்ட கால்கள் உதவுகின்றன. அதுபோல பாலைவனத்தில் செல்லும் போது புழுதி புயலில் இருந்து நமது நீண்ட இமைகள் நம் கண்களை காக்கின்றன. இதெல்லாம் சரி ஆத்தா அப்ப நாம எதுக்கு இந்த மிருககாட்சி(ZOO) சாலையில் இருக்கின்றோம் என்றது பேபி ஒட்டகம்.



அதை கேட்ட அம்மா ஒட்டகம் எதுவும் சொல்ல முடியாமல் வாயைடைத்து சிலையாக நின்றது.



இந்த கதை மூலம் சொல்ல வரும் நீதி என்னவென்றால் நமக்கு திறமை , அறிவு , அனுபவம், முயற்சி இருந்தால் மட்டும் போதுதாது. நாம் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் தான் அது உபயோகப்படும்.


3 comments:

  1. யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சவுக்கியமே!

    ReplyDelete
  2. நாம் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் தான் அது உபயோகப்படும்.//

    கண்டிப்பாக.....!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.