உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, November 29, 2011

ஹிந்திகாரனுக்கு இலவசமாக நடித்த ரஜினி தமிழக மக்களுக்காக நடிப்பாரா?


ஹிந்திகாரனுக்கு இலவசமாக நடித்த ரஜினி தமிழக மக்களுக்காக நடிப்பாரா?கேரளத்தில் தமிழர் நலனுக்கு எதிராகவும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகவும் பரப்பப்படும் பொய்யுரைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் தமிழக அரசின்,  தமிழக பொதுப் பணித் துறை  ஒரு ஆவணப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது. இதில் முல்லைப் பெரியாறு அணையப் பற்றிய அனைத்து உண்மைகளும் வெளியிடப்பட்டுள்ளன.இந்த படத்தை தமிழிலும் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் எடுத்து அதில் ரஜினியை வர செய்து அவரை விட்டு குரல் கொடுக்க சொல்லி படம் எடுத்து கேரளக்கார்கள் ஆடும் ஆட்டத்திற்கு எதிராக வெளியிட்டு அதை உலகெங்கம் ஒலி பரப்பி உண்மையை வெளிவரச் செய்ய வேண்டும்.இதை நான் ரஜினி அவர்களுக்கு ஒரு வேண்டுகோளாக எனது தளத்தின் மூலம் வேண்டு கோள்விடுவிக்கிறேன். இதற்கு காரணம் அவர் மிக புகழ் பெற்றவர் மற்றும் கட்சி சார்பு இல்லாதவர் என்பதால் இது எல்லோருக்கும் சென்று அடையும் என்ற எனது நப்பாசைதான்.இதை படிக்கும் ரஜினி ரசிகர்கள் எப்படியாவது இந்த செய்தியை ரஜினியிடம் கொண்டு சேர்க்குமாறும் மற்றுமுள்ள தமிழர்கள் இதை உங்கள் லோக்கல் தலைவர்களிடம் சொல்லி இதை ரஜினியிடம் எடுத்து சொல்லி சம்மதிக்குமாறு வேண்டுகோள் விடுவிக்கிறேன்.எனது வலைத்தளத்தின் மூலம்  தமிழக பொதுப் பணித் துறைக்கு எனது மனமார்ந்த பாரட்டுகளை தெரிவிக்கிறேன். இதை படிக்கும் மக்களே நீங்களும் அவர்களை பாராட்டுங்களேன்.படித்த தமிழர்களே இந்தப் பிரச்னையைப் முழுவதும் புரிந்துகொள்ளாத நிலையில், படிக்காத பாமரருக்கும் மிக எளிதாக  புரியும் வகையில்  தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம் தயாரித்து வெளியிட்டுள்ள  அரை மணிநேரம் ஓடக்கூடிய ஆவணப்படம் உண்மையை புட்டு புட்டு இங்கே வைக்கிறது

முல்லைப் பெரியாறு அணை குறித்து தமிழக பொதுப் பணித் துறை எடுத்துள்ள ஆவணப் படம் காண இங்கே செல்லவும்.

The Mullai Periyar DAM Problem from Veera Elavarasu on Vimeo.
The Mullai Periyar DAM Problem Hidden Truths & Solutions
கேரளத்தில் தமிழர் நலனுக்கு எதிராகவும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகவும் பரப்பப்படும் பொய் உரைகளுக்கு தமிழக அரசு என்ன செய்யப்போகிறது? தமிழக மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்? தமிழக அறிஞர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? தமிழ் திரை உலகம் என்ன செய்யப் போகிறது என்பதுதான் இப்போது எல்லோர் மனதிலும் எழும் கேள்விநமது மாநிலத்தில் வசிக்கும் கேரளா மக்களையும் நம்முடன்  சேர்த்து  நாம் போராட வேண்டும் அதே நேரத்தில் கேரளா மக்களுக்கு எந்த வித கெடுதல் ஏற்படுத்தாமல் அவர்களை உண்மையை  உணரச் செய்து நாம் வெற்றி  பெற வேண்டும்.இதை நம் தமிழர்களால் செய்து முடிக்க முடியுமா?

The Mullai Periyar DAM Problem ( http://player.vimeo.com/video/18283950?autoplay=1* )

ஆக்கம் & இயக்கம் : பொறியாளர் S. ஜெயராமன்
8 comments :

 1. பக்கத்து மாநிலத்துக்காரன் தமிழ்நாட்டுக்கு எதிராக வஞ்சனை செய்வது ஒருபுறம் இருக்கட்டும், தமிழக்காரன் என்ன செய்தான் என்பதை ஒரு கணம் யோசிக்க வேண்டாமா? தமிழகத்திலுள்ள ஆற்று மணலை மற்ற மாநிலங்களுக்கு [குறிப்பாக கேரளத்துக்கு] கடத்தி விற்றானே அவன் என்ன வேற்று மாநிலத்தவனா? அவனை எதிர்த்து நாம் என்றாவது போர்க்கொடி தூக்கியிருப்போமா? ஒரு அடி மணல் உருவாக 600 ஆண்டுகள் ஆகும், ஆனால் வரையறுக்கப்பட்ட ஆழத்தையும் தாண்டி 13 அடி கீழே வரை போய் மணலை விற்றார்களே, அவர்களை எதிர்த்து குரல் கொடுத்தோமா? இவனுங்க தமிழினத் தாங்கிகளா? கேரளம் முழுவதும் பசுமையாயிருக்கும் போது ஏன் தமிழகம் முழவதும் பாலை போல காட்சியளிக்கிறது? நம் மாநிலத்தை பசுமையாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் நமக்கு வரவில்லை? விவசாய நிலங்கள் கட்டுபாடின்றி பிலாட்டுகலாகப் பிரிக்கப் பட்டு விற்கப் படுகின்றன, அந்நிய நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு தாரை வார்க்கப் படுகின்றன, இதை எதிர்த்து நாம் என்ன செய்தோம்? வரலாறு காணாத வெள்ளம் என்னும் அளவுக்கு தமிழகம் முழுவதும் மழை பெய்தாலும், அடுத்த சில மாதங்களிலேயே தண்ணீர்ப் பஞ்சம் என்றுஆகி விடுகிறதே? பெய்த மழையின் நீர் எல்லாம் என்னதான் ஆகிறது? அதை காத்து வருடம் முழுவதும் பயன்படுத்தாமல், வீணாக சாக்கடையிலும், கடலிலும் கலந்து வீனடிக்கிரோமோ, இது யார் தவறு? இப்படி ஊதாரித்தனமாக இருந்துவிட்டு, பக்கத்து மாநிலக் காரனிடம், தண்ணிக்கு கைஎந்துவதொடு மட்டுமல்லாமல், ஒரு நடிகனைப் பிடித்து எனக்கு அதைப் பண்ணு இதைப் பண்ணு என்று கெஞ்சுவது வெட்கக் கேடானது.

  ReplyDelete
 2. சும்மா காமடி பண்ணாதீங்க...

  ReplyDelete
 3. நான் இதை ஷேர் பண்ணி உள்ளேன்...

  ReplyDelete
 4. இலவசமா நடித்த ரஜினிக்கும் சாரூக் பி எம் டபிள்யூ கார் கொடுத்துர்க்காரே ;-)

  ReplyDelete
 5. @ஜெயதேவ்

  நீண்ட நாட்களுக்கு பிறகு வருகை தந்திருக்கும் உங்களுக்கு எனது நன்றிகள். நீங்கள் கருத்தில் சொன்ன அனைத்தும் மிக சிந்திக்க கூடியவைகள் தான். நான் தமிழகத்திற்கு வந்து நான் போரடத்தயார் ஆனால் நான் வந்து போராடினால் அது எந்த அளவுக்கு மக்களை சென்று அடையும். அதனால்தான் நான் ஒரு நடிகரைத் தேர்ந்து எடுத்தேன். ஒரு நடிகர் ஒரு செய்தியை எடுத்து சொல்லும் போது அது எல்லா தரப்பு மக்களை சென்று அடையும் அதிலும் ரஜினி ஒரு செய்தி சொன்னால் நார்த்துக்கும் அந்த செய்தி சென்று அடையும். அந்த எதிர்பார்பில்தான் இந்த பதிவு. தமிழக பொது அரசு பொதுபணித்துறை சொன்ன செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் அந்த உண்மையை நாடு அறிய எடுத்து சொல்வதில் எந்த நடிகரும் அல்லது தலைவரும் வெட்கப்பட வேண்டியத்தில்லை

  ReplyDelete
 6. @ சூர்யஜீவா

  நான் சொன்னதில் என்ன காமெடி? எனக்கு தெரிந்த விதத்தில் முல்லை பெரியார் பிரச்சனையை தீர்க்க பதிவு போட்டூள்ளேன். நான் அறிவு ஜீவி அல்ல மிக சாதாரணமானவன் தான் அது உங்களுக்கு காமெடியாக போனதில் எனக்கு வருத்தம்தான். மீண்டும் நேரம் கிடைத்தால் காமெடி இல்லாமல் பதிவு போட முயற்சிக்கிறேன். உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.

  பல கருத்துகள் வரும் போதுதான் என்னுடைய அறிவு எந்த அளவிற்கு இருக்கிறது என்பது புரிகிறது.

  ReplyDelete
 7. @ மனோ

  உங்களுக்கு மிகவும் நன்றி

  ReplyDelete
 8. @ஆமினா

  ரஜினி காரை வாங்க மறுத்துள்ளதாக செய்தி படித்தேன். ஒரு வேளை நான் படித்த செய்தி தவறுதலாக இருந்தால் மன்னிக்கவும்

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog