உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, November 1, 2011

காமெடி பீஸான பா.சிதம்பரம்

காமெடி பீஸான சிதம்பரம்சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது

ஹஹஹாஹாஹா ஹஹஹாஹாஹா ஹஹஹாஹாஹா
லாடடீயா லாடடீயா லாடடீயா லாடடீயா ஹஹஹஹஹஹாஎன்னப்பா Madurai Tamil Guy சிரிப்பு சத்தம் பலமாக கேட்குதே அப்படி என்ன விஷயமப்பா?

இல்லைங்ய்யா நம்ம சிதம்பரம் ஐயா சொன்ன செய்தியை படித்தது சிரிப்பு வந்துச்சுய்யா.

அப்படி சிரிப்பு வர என்னப்பா சொல்லிட்டாரு?

எல்லையை பாதுகாக்க்கும் திறமை நம் இந்திய படைகளுக்கு உள்ளது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஐயா!

அது நல்ல செய்திதானே Madurai Tamil Guy!

ஐயா எல்லையை பாதுகாக்கும் திறமை நம் இந்தியபடைகளுக்கு உண்டு என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் நாட்டை வேட்டையாடும் இந்த அரசியல் வாதிகளிடம் இருந்து பாதுகாக்கும் திறமை மட்டும் நம்மிடம் இல்லை என்ற விஷயம் நமக்கு தெரிந்த விஷயம் கூட இந்த உள்துறை அமைச்சர் பா.சிதம்பரத்துக்கு த்ரியவில்லையே என்று நினைத்துதான் சிரித்து கொண்டு இருந்தேன் ஐயா

Madurai Tamil Guy வர வர உங்கள் நக்கலுக்கு எல்லையில்லாமல் போச்சுப்பா பார்த்துப்பா

Madurai Tamil Guy உங்கிட்ட ஒரு கேள்வி கேக்கனும் இந்த தமிழ்க....

ஐயா நீங்க என்ன கேட்க வரீங்கன்னு எனக்கு தெரியும். தமிழ்க மீனவர்கள் இந்த இலங்கை படைகளால் தாக்கப்ப்டுகிறார்கள். அவர்களை ஏன் இந்த இந்திய ராணுவம் பாதுகாக்கவில்லை என்றுதானே கேட்க வருகீறிர்கள். அதற்கும் என்னிடம் பதில் இருக்கிரது ஐயா. நம் தமிழகம் இந்தியாவில்தான் இருக்கிறது ஆனால் தமிழக மக்கள் இந்தியர்கள் அல்ல என்ற உண்மையை நீங்கல் மறந்துவிட்டீர்கள் ஐயா

நீங்கள் சொல்லவது நூற்றுக்கு நூறு உண்மையப்பா. Madurai Tamil Guy எனக்கு இன்னொரு கேள்ள்வி உள்ளது. நம் இராணுவத்துக்கு சீனாவிடம் இருந்து பாதுகாக்கும் பலம் உண்மையில் உள்ளதா?

ஐயா அதை எந்து அடுத்த பதிவில் நமது பலம் என்ன சீனாவின் பலம் என்ன என்பதை தறுகிறேன். அதை படித்து நீங்களே முடிவு செய்யுங்கள். இந்த பதிவிலே நான் சொல்லிட்டால் நான் எப்படி அடுத்த பதிவு போடுவது.

ஒகே Madurai Tamil Guy உங்ககிட்ட பேசிகிட்டு இருந்த நல்ல பலவிசஷயங்கள் கிடைக்குது. உங்கள் வலைத்தளம் உண்மையிலே பல்சுவை ப்ளாக்காக இருக்கிறது. வாழ்த்துகள்

நன்றி ஐயா... நேரம் இருப்பவர்கள் கிழே உள்ள பாட்டை படித்து ரசிக்கவும். பழைய பாடல் ஆனாலும் இந்த காலத்திற்கும் பொருத்தாமாக உள்ளது.சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது

ஹஹஹாஹாஹா ஹஹஹாஹாஹா ஹஹஹாஹாஹா

லாடடீயா லாடடீயா லாடடீயா லாடடீயா
லாடடீயா லாடடீயா லாடடீயா லாடடீயா ஹஹஹஹஹஹா

மேடை யேறிப் பேசும் போது ஆறு போலப் பேச்சு
மேடை யேறிப் பேசும் போது ஆறு போலப் பேச்சு
கிழே இறங்கிப் போகும் போது சொன்னதெல்லாம் போச்சு
கிழே இறங்கிப் போகும் போது சொன்னதெல்லாம் போச்சு
காசை எடுத்து நீட்டி கழுத பாடும் பாட்டு
ஆசை வார்த்த காட்டு உனக்குங்கூட ஓட்டு ஹஹஹா

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது

ஹஹஹாஹாஹா ஹஹஹாஹாஹா ஹஹஹாஹாஹா
லாடடீயா லாடடீயா லாடடீயா லாடடீயா
லாடடீயா லாடடீயா லாடடீயா லாடடீயா ஹஹஹஹஹஹா

உள்ள பணத்தைப் பூட்டி வச்சு வள்ளல் வேஷம் போடு
உள்ள பணத்தைப் பூட்டி வச்சு வள்ளல் வேஷம் போடு
ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு
ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு
நல்ல கணக்க மாத்து கள்ளக் கணக்க ஏத்து
நல்ல நேரம் பாத்து நண்பரை ஏமாத்து

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது

Song: சிரிப்பு வருது சிரிப்பு வருது - sirippu varuthu
Movie: Aandavan kattalai -
திரைப்படம்: ஆண்டவன் கட்டளை
Singers: J.P. chandrababu,
பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு
Lyrics: Poet Kannadasan
இயற்றியவர்: கண்ணதாசன்
Music: M.S. Viswanathan
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

3 comments :

 1. சூப்பர் பாட்டு சூப்பர் விளக்கம்
  அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. தமிழக மீனவர்கள் இலங்கை படையிடம்
  இலங்கை மீனவர்கள் இந்திய படையிடம்
  பாகிஸ்தான் மீனவர்கள் இந்திய படையிடம்
  குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் படையிடம்...
  சின்னதா முடிக்க கூடிய விஷயத்தை ரப்பர் மாதிரி இழுக்க நம்ம ஆட்சியாளர்களை விட்டா யாரும் இல்லீங்கோ

  ReplyDelete
 3. சரியான நெத்தியடி பதிவு

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog