Sunday, October 9, 2011



வைகோ தன் மனைவிக்கு கற்று கொடுத்த பாடம்( இதை நீங்களும் உங்கள் குடும்பத்தாருக்கு கற்று கொடுக்கலாம்)
மாவீரன் வைகோ ஒருநாள் இலங்கைக்கு  படகில் சென்று தன் மனைவியுடன் திரும்பி கொண்டிருந்தார். அப்போது புயல் வீசத் தொடங்கியது. அவரோ வீரன் அவரது மனைவியோ பயம் மிகுந்த வெகுளியானவர். அந்த படகோ மிக சிறியது ஆனால் காற்றோ பலமாக வீசத் தொடங்கியது. படகோ எந்த நேரத்திலும் முழ்கிவிடும் போல பெரும் ஆட்டம் போடத் தொடங்கியது.
வைகோவோ எந்த வித சலனம் இல்லாமலும் மிக அமைதியாக நடப்பதை பார்த்து கொண்டிருந்தார். ஆனால் அவரது மனைவியோ அவரை பார்த்து உங்களுக்கு பயம் ஏதும் இல்லையா? இதுதான் நமது வாழ்வின் கடைசி தருணம். நிச்சயம் நாம் கரையை சென்று அடையமாட்டோம். ஏதாவது அதிசயம் நடந்தாழோலிய நாம் உயிர் பிழைக்க மாட்டோம். என்னங்க நான் பாட்ல பைத்தியம் போல புலம்பிக்கிட்டு இருக்கேன். நீங்க குத்து கல்லாட்டம் இருக்கீங்க? உங்களுக்கு பயம் ஏதும் இல்லையா? நீங்க என்ன பைத்தியாமா என்று மூச்சுவிடாமல் பயந்தவாறு அவரை பேச்சால் துழைத்து எடுத்து கொண்டிருந்தாள்.
அவர் மனைவியை பார்த்து சிரித்து விட்டு தன் உறையில் இருந்த வாளை உருவினார் . அதை பார்த்த அவரது துணைவியார் ஒரு புரியாத புதிராக அவரைப் பார்த்தாள்.
அந்த கூர்மையான வாளை உருவி அவளது கழுத்துக்கு அருகில் மயிர் இழை தூரத்தில் வைத்தார்.
அதன் பின் அவளை பார்த்து இப்போது உனக்கு பயம் இல்லையா என்று கேட்டார்.
அதற்கு சிரித்தவாறே அவள் எதற்கு நான் பயப்படனும்? வாள் இருப்பதோ உங்கள் கையில். நீங்களோ என்னை அளவுக்கு அதிகமாக நேசிக்கிறீர்கள் என்பது எனக்கு தெரியும் அதனால் எனக்கு பயம் சிறிது கூட இல்லை என்று சொன்னாரகள்.
அவர் வாளை உறையில் போட்டவாறே உனது கேள்விக்கு இது தான் எனது பதில்,  எனக்கு தெரியும் கடவுள் (தமிழ்மக்கள்) என்னை நேசிக்கிறார் என்று அதே நேரத்தில் இந்த புயலோ அவரது கட்டுப்பாட்டில் உள்ளது.
அதுனால எது நடக்குமோ அது நல்லதுக்குதான். நாம் உயிர் பிழைத்தால் நல்லது. அதே நேரத்தில் நாம் பிழைக்காவிட்டால் அதுவும் நல்லதுதான், ஏனென்றால் எல்லாம் இறைவனின்(தமிழ்மக்கள்) கையில் அவன் எப்போதும் தவறு செய்வதில்லை.

வாழ்க்கையில் நமக்கு நம்பிக்கை அவசியம். இந்த மாதிரியான அதீத நம்பிக்கை நமது வாழ்க்கையை முழுவதும் மாற்றி இன்பமயமாக்கிவிடும்.
எப்போதும் நல்லதையே நினைத்து நல்லபடியாக வாழ இந்த பதிவின் மூலம் இதை படித்த அனைவரையும் வாழ்த்துகிறேன்.
இது நான் எழுதிய சொந்த கதை அல்ல நான் ஆங்கிலத்தில் படித்த கதையை வழக்கம் போல சிறிது மாற்றி எனது வழியில் கொடுத்து உள்ளேன். நல்ல கருத்துக்கள் நாலு பேரை குறிப்பாக நமது தமிழ் மக்களுக்கு சென்று அடைய வேண்டுமென்ற நோக்கத்தில்தான் இந்த பதிவை வெளிட்டு உள்ளேன். முடிந்தால் படித்து உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு எடுத்து சொல்லுங்கள்.

நன்றி!!!!!!வாழ்க வளமுடன்

இந்த கதையில் கதாநாயகனாக வந்து நடித்த வைகோ மற்றும் அவரது துணைவியாருக்கு எனது நன்றிகள்.


4 comments:

  1. நல்ல பதிவு என்பதால் ஓட்டுப் போட்டுள்ளேன்
    த.ம 1

    ReplyDelete
  2. நல்ல நீதிக்கதை தான் சொல்லி இருக்கீங்க.

    ReplyDelete
  3. உங்களில் கதைகளில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் அருமை.
    எங்கேயிருந்துதான் புடிக்கிறீங்களோ :)
    குறும்பு மிளிரும் லொள்ளுகள் சூப்பர்தான் போங்க‌

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.