உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, October 30, 2011

உடுத்தும் உடைகள் பாலில் இருந்து தாயாரிப்பு.(பெண்ணின் சாதனை)


உடுத்தும் உடைகள் பாலில் இருந்து தாயாரிப்பு. (பெண்ணின் சாதனை)

பாலில் இருந்து என்னவெல்லாம் தயாரிக்கலாம் என்று என் மனைவியிடம் கேட்டேன். என் மனைவி என்னை ஒரு மாதிரி பார்த்துவிட்டு தயிர்,மோர்,வெண்ணை,நெய், பலவித ஸ்வீட்கள் தயாரிக்கலாம் சொன்னார்.

உடனே நான் இதை கேளு ஒரு ஜெர்மன் பெண் பாலில் இருந்து ஆடைகள் தயாரிக்கிறார் என்றேன். என் மனைவியோ என்னை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்து விட்டு நானும் பாலில் இருந்து ஆடை தயாரிப்பேன் இது என்ன அதிசயமா என்ன? எங்கள் குடும்பத்தில் அனைவரும் பாலாடையில் இருந்து நல்ல ஸ்வீட்டு செய்வோம் உங்களுக்கு எப்பவுமே வெளிநாட்டுகாரிகள் ஏதும் செய்தால் அதிசயமாக தெரியும் நாங்க செய்தா அது உங்கள் கண்களுக்கு தெரியாது என்று சண்டை போடத் தொடங்கினாள்.

இப்போ நான் அவளை பார்த்து இப்போ சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்தேன். அடி கழுதை நான் சொன்னது அந்த ஜெர்மன் பெண் தயாரித்த உடை(ஆடை)யைப் பற்றி சொன்னேன். நீ எப்பவுமே சாப்பிடுறத பற்றியே நினைத்து கொண்டிரு என்று கிண்டல் செய்தாவாரு அந்த ஜெர்மன் பெண் செய்த சாதனையை எடுத்து சொன்னேன்.

'ஆங்க் டோமஸ்கா' என்ற இளம் பேஷன் டிசைனர் 28 வயதே ஆனவர். ஜெர்மனியில் ஹானோவர் நகரில் வசிக்கும் இவர் பாலில் இருந்து நூல் தயாரித்து விதவிதமான ஆடைகளை தயாரித்துள்ளார். செயற்கை முறையில் தயாரித்த இந்த இழைகளுக்கு (Qmilch)  என்று பெயரிட்டுள்ளார். ராசாயனங்கள் ஏதும் கலக்காமல் முதன் முதலாக மனிதனால் தாயாரிக்கபட்ட செயற்கை இழை இது ஆகும். இதிலிருந்து எந்த வித ஸ்மல் ஏதும் வருவதில்லை. உடலுக்கும் எந்த வித தீங்கும் விளைவிப்பதில்லை. இதை மற்ற துணிகள் போல துவைக்கலாம்.

நுண்ணுயிரியல் முறையில் தயாரிக்கப்படும் இந்த செயற்கை இழையில் உள்ள அமினோ அமிலங்கள் நோய்கிருமி எதிர்ப்பு தன்மையுடையது. மேலும் ரத்த ஒட்டம் மற்றும் உடல் வெப்பத்தை சீராக வைக்கும் தன்மை உடையது. வயது முதிர்வை ஒரளவுக்கும் கட்டுபடுத்துகிறது.

ஆறு லிட்டர் பாலில் இருந்து ஒரு டிரெஸ் தயாரிக்க முடியும் என்றும் அதற்கு $200 லிருந்து $ 270 வரை செலவு ஆவதாக ஆங்க் டோமஸ்கா கூறுகிறார்.

டிஸ்கி 1: உண்ண உணவு இல்லாமல் மக்கள் மடியும் இந்த காலத்தில் இந்த மாதிரி பாலை பயன்படுத்தி உடைகள் தாயாரிப்பது தேவையா என்றால் அது தேவையில்லை என்றுதான் கூறுவேன். ஆனால் இந்த பெண் செய்த சாதனையை நான் மனம் திறந்து பாராட்டுகிறேன் & வாழ்த்துகிறேன்.

டிஸ்கி 2 : இந்த முறையில் உடை தாயாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களுக்கு நான் ஓன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நீங்கள் எத்தனை விதமான முறையில் பாலை பயன்படுத்தி ஸ்விட்கள். சீஸ் போன்ற ஆடம்பர உணவைகளை தயாரிக்கிறிர்கள் அதை முதலில் நிறுத்தி விட்டு அதன் பிறகு உங்கல் எதிர்ப்புகளை தெரிவியுங்கள்.

2 comments :

  1. செயற்கை ரசாயனம் இல்லாமல் என்று சொல்லவும்... இந்த உலகம் முழுவதும் ரசாயனத்தால் தான் உருவாகி உள்ளது

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog