Friday, October 28, 2011


டில்லி விஜயத்தின் போது சோனியா கலைஞரிடம் சொன்னது என்ன?



கலைஞர் :அம்மா சோனியாம்மா கொஞ்சம் கருணைகாட்டம்மா? எப்படியாவது கனியை வெளியே அனுப்ப உதவும்மா? ப்ளீஸ்.

சோனியா : ஐயா கலைஞரே. நீங்க பெரிய சாணக்கியவாதின்னு எல்லோரும் சொல்லுறாங்களே அது உண்மையா? எனக்கு என்னவோ நீங்க கிணத்து தவளை போலத்தான் தோணுது. உங்க ஆட்டம் எல்லாம் தமிழ் நாட்டுலதான் செல்லுபடியாகும். அதுவும் உங்க முதுமைகாலத்தில் நீங்க போடுற ஆட்டம் விலை போகாத ஆட்டம். நாங்க வட நாட்டுகாரங்க  இந்தியகடல்ல உள்ள சுறா மாதிரி அதை புரிஞ்சுகுங்க ஐயா.

அப்புறம் என்னமோ கேட்டிங்களே கனியை வெளியே அனுப்பனும்மா? உங்க வேண்டுகோள்படி 20 யை வெளியே விட்டா 60 தை உள்ள போடவேண்டியிருக்கும் எது சவுரியம் என்று யோசித்து சொல்லுங்க.



கலைஞர் : என்னம்மா என்னை இந்த வயசான காலத்துல என்னை இப்படி பாட படுத்துற. நான் ஏதாவது தவறு செய்தால் என்னை மன்னிசுக்கம்ம? ப்ளிஸ் ஏதாவது உதவி செய்து 20 யும் 60தையும் வெளியே இருக்கும்படி செய்யும்மா? நீ என்ன சொன்னாலும் கேட்குறேன்.



சோனியா : சிறிது யோசனைக்கு அப்புறம் யாருக்கோ ஒரு போன் போடுகிறார். சிறிது நேரம் பேசிவிட்டு கடைசியில் நான் ஒரு நல்ல ஐடியா வைச்சுருக்கேன். அதுக்கு ஒகேன்னா நான் இருவரையும் வெளியே இருக்க ஏற்பாடு பண்ணுறேன் என்றார்.

கலைஞர் : உடனே நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்குறேன். சொல்லுங்கம்மா என்றார்.

சோனியா :  அதெல்லாம பெரிய காரியம் இல்லை. இந்த உள்ளாட்சி தேர்தல்ல எங்க கட்சி நாலாவது இடத்திற்கு வந்திருச்சு. இனிமே என்ன பண்ணாலும் அதை கரையேத்த முடியாது. அதனால நீங்க உங்க கட்சியை எங்க கட்சியோடு இணைத்துவிடுங்கள். நாங்கள் உடனே இரண்டாம் இடத்துக்கு வந்துவிடுவோம். எதிர்காலத்தில் முடிந்தால தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்து நானே முதல்வராக வந்து விடுவேன். ஏன்னா வரும் தேர்தலில் எங்க கட்சி சென்ரலில் கண்டிப்பாக வர மூடியாது என எனக்கு நல்லா தெரியும். அதனால நான் உங்களுக்கு இந்த ஆபர் தருகிறேன். சம்மதம்னா சொல்லுங்க. நான் இப்பவே போன் போட்டு உங்க கனியை வெளியே அனுப்புறேன் என்றார்

கலைஞர் : ஙே......என்று முழித்து திராவிட முன்னேற்ற கழகத்தை இப்போ திராவிட முக்காடு கழகமா ஆக்கிட்ங்கேளே சோனியாஜீ என்று கண் கலங்கி நிற்கிறார்



இது ஒரு கற்பனை யாரையும் காயபடுத்துவதற்காக எழுதப்பட்டது அல்ல.

2 comments:

  1. இப்பவே திராவிட முக்காடு கழகமா தான் இருக்கு!

    ReplyDelete
  2. சும்மா பூந்து விளையாடு வாத்தியாரே

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.