Saturday, October 22, 2011


விமான விபத்தில் இருந்து தப்பித்த ரஜினி, அண்ணா ஹாசரே (நடந்தது என்ன?)

நேற்று ஒரு சிறு விமானத்தில் பைலட், ரஜினி, ஹாசாரே, மன்மோகன் சிங், மற்றும் ஒரு சிறுவனும் பயணம் செய்தனர்.அவர்கள் பயணம் சென்ற பொழுது விமான எஞ்சினில் பிரச்சனை ஏற்பட்டது.

அந்த விமானத்தில் மொத்தம் நாலு பாராசூட் மட்டும் இருந்ததால் உடனே அந்த சுயநலகார பைலட் ஒரு பாராசூட்டை எடுத்து மாட்டி கொண்டு இந்த விமானம் கிழே விழப்போகிறது என்று சொல்லியவாறே வெளியே குதித்தார்.

உடனே ரஜினி நான் சூப்பர் ஸ்டார். நான் ராணா படத்தில் நடித்து அதன்மூலம் அம்மாவிடம் இருந்து நான்தான் இந்த தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும் என்று சொல்லியவாறே இன்னொரு பாரா சூட்டை மாட்டி கொண்டு அவரும் விமானத்தில் இருந்து குதித்தார்.

உடனே 'மண்'மோகன் சிங்கும் நான் இந்த நாட்டின் பிரதமர் இந்த ஊழல் வாதிகளிடம் இருந்து நம் இந்தியமக்களை காப்பாற்ற வேண்டும் என்று இன்னொரு பாரா சூட்டை மாட்டி அவரும் குதித்தார்.

இப்போது அந்த சிறுவனும் அன்னா ஹாசாரே மட்டும் அந்த விமானத்தில் இருந்தனர். உடனே ஹாசாரே அந்த சிறுவனைப்பார்த்து சொன்னார். சிறுவனே நீ இந்த பாராசூட்டை எடுத்து தப்பித்து கொள். நீ சிறுவன் நீ இன்னும் நீண்ட காலம் வாழ வேண்டும். நீ தான் இந்தியாவின் எதிர்காலம். அதனால் நீ தப்பித்து கொள்..என்னை பற்றி கவலைப்படாதே என்று கூறினார்.

அதற்கு அந்த சிறுவன் அவரைப்பார்த்து. பரவாயில்லை உங்கள் நல்ல மனசுக்கு ஆண்டவன் இன்னொரு பாராசூட்டை உங்களுக்கு வைத்துள்ளான். அது எப்படி வந்தது என்று நினைக்கிறிர்களா? அதில் ஓன்றும் அதிசியமில்லை நம் பிரதமர் மன்மோகன்சிங் தான் தப்பிக்கும் அவசரத்தில் என் புக்பேக்கை பாராசூட் என நினைத்து மாட்டி கொண்டு குதித்துள்ளார் என்று சொல்லி சிரித்தான அந்த சிறுவன்.

3 comments:

  1. நிஜத்தில் இப்படி நடந்திருந்தால் அண்ணா ஹஜாரே மன்மோகன் சிங்கின் பாராசூட்டைப் பிடுங்கி, அவரைப் பிடித்துக் கீழே தள்ளியிருப்பார். :-)

    ReplyDelete
  2. உல்டா கதைகள் உங்களுக்கு அழகாக கை தருகிறது

    ReplyDelete
  3. என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள்
    உறவுகளுக்கும் உரித்தாகட்டுக்கும் மிக்க நன்றி பகிர்வுக்கு ......

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.