Sunday, October 16, 2011


வரதட்சணை கொடுமைக்கு காரணம் ஆண்களா? பெண்களா?



இந்தியச் சமுதாய தீமைகளில் வரதட்சணை என்பது மிக முக்கிய தீமையாகும். வரதட்சணை என்ற கொடுமையை சுட்டிக்காட்டும் போது எப்பொழுதும் ஆண்கள் மட்டும் அந்த தீமையை செய்வதாகவும்  ,பெண்களுக்கு மட்டும் இழைக்கப்பட்ட, இழைக்கப்படுகின்ற கற்பனைக்கு எட்டாத கொடுமைகளாகவும் சித்தகரிக்கப்படுகின்றன.

வரதட்சணை என்று பேசப்படும் போது அதில் பெண்கள் பாதிக்கப்படுவதாகவும் மேலும் பெண்களுக்கு அதில் ஏதும் சம்பந்தமில்லை என்பது போலவும் அதே நேரத்தில் அதில் ஆண்களுக்கு மட்டும் அதில் சம்பந்தம் உண்டு என்பது போலவும் மேலும் அதனால் ஆண்களுக்கு பாதிப்பு ஏதும் இல்லை என்பது போலவும் சித்தகரித்து  ஆண்களுக்கு எதிராக மட்டும் எப்போதும் பேசப்படுகிறது.



இந்த மாதிரியான கருத்துக்களில் இருந்து  எனது கருத்து மாறுபடுகிறது. எந்த நேரத்தில் ஒரு குடும்பத்தில் பெண் குழந்தை வந்து பிறக்கிறதோ அந்த வீட்டில் உள்ள அந்த பெண்ணின் தாயார் சேமிக்க தொடங்குகிறாள். ஆனால் அதே நேரத்தில் அந்த வீட்டு ஆண்மகனோ போட்டிகள் நிறைந்த இந்த உலகில் தன் ரத்தத்தை வியர்வையாக்கி கடுமையாக உழைக்க ஆரம்பிக்கிறான். சில நேரங்களில் சில ஆண்கள்  தன் உடலில் ஏற்ப்பட்ட நோய்களுக்கு முழுமையான சிகிச்சை கூட எடுக்காமல் அதற்கான பணத்தை சேமித்தால் குழந்தைகளின் திருமண வாழ்விற்கு உதவுமே என்று சேமிக்க தொடங்குகிறான். சில ஆண்கள் வரதட்சணை என்ற பெண்ணின் எதிர்கால செலவை நினைத்து நினைத்தே மாரடைபால் உயிரைவிடும் ஆண்களும் உண்டு. மேலும் திறமை மற்றும் புத்தியில்லாத ஆண்கள் பெண்குழந்தை பிறந்தவுடன் அதன் எதிர்காலத்தை எண்ணி குடிக்க ஆரம்பித்து உயிரைவிடுபவர்களும் உண்டு. இந்த கேடுகெட்ட சமுதாயத்தால்  மறைமுகமாக  இப்படிபட்ட வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்படும் ஆண்கள் அதிகம். இது வரதட்சணை என்ற கொடுமையால் ஆண்களுக்கு இழைக்கப்படும் அநிதியாகும். இதை ஏன் இந்த சமுதாயம் எண்ணிப் பார்க்கவில்லை.

வரதட்சனை என்றாலே பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையாக மட்டுமே ஏன் பார்க்கப்படுகிறது?



இந்த வரதட்சணை கொடுமைகளில் பெண்கள் எந்த அளவிற்கு மறைமுகமாக ஆண்களின் பின்னால் ஒழிந்து கொண்டு அநீதி இழைக்கிறாரகள் என்பதை பலர் அறிந்தும் அறியாதவர் போலிருக்கிறார்கள். எந்த நேரத்தில் ஒரு குடும்பத்தில் ஆண் குழந்தை பிறக்கிறதோ அந்த நேரத்தில் இருந்தே சில பெண்கள் எதிர்காலத்தில் தன் மகனுக்கு மணம் முடித்தால் எப்படியெல்லாம் பணம் புடுங்கலாம் என்று சிந்திக்க தொடங்கி அதற்கான வழிமுறைகளையும் கண்டுபிடிக்க ஆரம்பிக்கிறார்கள்.

உழைப்பின் வலியை அறிந்த ஆண் அடுத்தவன் உழைப்பில் சம்பாதித்த பணம் தங்களுக்கு வேண்டாம் தன் மகனுக்கு நல்ல குணமுள்ள மருமகள் வந்தால் போது என்று மணமகள் தேடும் போது அவரது மனைவியால் நீங்களேல்லாம் பிழைக்க தெரியாத மனிதர், நம்ம குடும்ப கவரம் என்ன? தரம் என்ன என்று உங்ககுக்கு தெரியாது அதனால் நீங்க சும்மா வாயை முடிக்கிட்டு இருங்க என சொல்லி அவர்களின் வாயை முடிவிட்டு, தனது சுயகவுரவத்துக்காக வரதட்சணை கொடுமைகளை பண்ணும் பெண்கள் அதிகம்.



மேலும் சில பெண்கள் தன் தந்தை எப்படி கஷ்டப்பட்டாலும் பாரவாயில்லை தனக்கு அதிகம் படித்த வசதியுள்ளவந்தான் கணவணாக வர வேண்டும் அதன் பின் தான் ஆடம்பரமாக மற்ற பெண்கள் மத்தியில் வாழ வேண்டும் என்று தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு தன் தந்தையை இந்த வரதட்சணை என்ற  கொடிமையிலும் தள்ளும் பெண்களும் உண்டு. இந்த மாதிரியாக வரதட்சணை பிரச்சனைகளை மறைமுகமாக ஈடுபடும் பெண்களைப் பற்றி ஏன் யாரும் எதுவும் கூறுவதில்லை.



இப்படி நாம் ஒருவரை ஒருவர் கூறை கூறாமல் இந்த சமுதாயத்தில் இருந்து வரும் வரதட்சணை என்ற சீர்கேடை எப்படி நீக்குவது என்பதை பார்க்க வேண்டும்.  நான் இறுதியாக சொல்ல வருவது என்னவென்றால் இந்த கேட்டுக்கு காரணம் ஆண்களும் அல்ல பெண்களும் அல்ல இந்த சமுதாயமே காரணம்.



அதனால் நம் சமுதாயத்தில் மகனுக்குத் தருகின்ற முக்கியத்துவமும், சமூக மதிப்பும், மகளுக்கும் தர வேண்டும். இது போன்ற நல்ல சமுதாய பண்புகளை சிறுவயதிலேயே கல்வி கூடங்களில் விதைத்து ஆண் பெண் இருவரும் சமம் என்றும் உழைப்பின் பெருமையையும் வலிமையையும்  அவர்களுக்கு போதித்து வளர்த்தால் எதிர்காலங்களில் இந்த கொடுமை நீங்கும். பாரதம் பண்பாடு என்று பழம் பெருமை பேசாது மேலை நாடுகளில் இருந்தும் நாம் நல்லதை கற்று கொள்ள வேண்டும்.

மேலை நாடுகளில் இருந்து நமக்கு தேவையில்லாத விஷயங்களை பின்பற்றும் நாம் அவர்களின் திருமணங்களின் போது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கவனித்து அதில் உள்ள நல்ல முறைகளைப் பின்பற்ற வேண்டும். உதாரணமாக இங்குள்ள ஆண் பெண் தங்கள் திருமணத்திற்கான செலவை சிறிது செமித்து அதன் பிறகே அதற்க்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். சில சம்யங்களில் பெற்றோர்களும் அவர்களுக்கு ஏற்படும் செலவை பகிர்ந்து கொள்ளாவார்கள். தங்களால் முடியும் என்றால் மட்டும்தான் பெற்றோர்கள் ஈடுபடுகிறார்கள் அல்லது அவர்களும் ஒரு விருந்தினராக மட்டும் திருமணத்தில் கலந்து கொள்கிறார்கள். இதை நம் நாட்டு மக்களும் பின் பற்ற் வேண்டும்.



இனி, சூழலைப் புரிந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுதல் சமுதாய மக்களிடம் உள்ளது. தேவையான மாற்றங்களை ஏற்படுத்தி படிப்படியாக முயற்சி செய்து, வரதட்சணைவாங்குவதையும், கொடுப்பதையும் நிறுத்துவது நம் கையில்தான் உள்ளது. நாம்,நமது பெண்குழந்தைகளை முதலில் மதித்துப் போற்றினால்தான், அப்பெண் குழந்தைகள் வளரும்போது அவர்களுடைய மதிப்பை மற்றவர்கள் அறிவார்கள் என்பதையும் நாம் உணரவேண்டும். எந்த விதமான வேறுபாடும் காட்டாமல் ஆணுக்கு இணையாகப் பெண்ணையும் நடத்துங்கள் வரதட்சணைத் தருவதையோ பெறுவதையோ ஒருபோதும் ஆதரிக்காதீர்கள்



வலைத்தளத்தில் நண்பரின்  வரதட்சணை பற்றிய பதிவை படித்ததால்  என்னுள் ஏற்பட்ட  வரதட்சணை பற்றிய கருத்தே இந்த பதிவு. இது யாரையும் குறை சொல்லி எழுதப்பட்ட பதிவல்ல நம் சமுதாயத்தில் உள்ள குறைகளைப் பற்றி எழுதப்பட்ட பதிவாகும்.



உங்களுக்கு நேரம் கிடைத்தால் உங்கள் தரமான கருத்துக்ககளை இங்கே பதியலாம்.

5 comments:

  1. இதில் பெரிய அரசியல் இருக்கிறது, நீங்கள் பதிவிட்டவை அனைத்தும் உண்மைகளே... எது எப்படியோ இந்த சமூக அழுக்கு நீங்கினால் சரி தான்...

    ReplyDelete
  2. சமூகத்தை ஆட்டிப்படைக்கிற மிகப் பெரிய
    அவலத்தை மிகவும் மிகுந்த அக்கறையுடன்
    அருமையாக அலசி இருக்கிறீர்கள்
    தன் வாழ் நாளையே வரதட்சனை கொடுத்து
    பெண்ணிற்க்கு திருமணம் செய்துவைக்கவே
    செலவிடுகிற பல பெற்றோர்களை எனக்குத் தெரியும்
    அருமையான சிந்தனையைத் தூண்டும் பதிவினைத்
    தந்தமைக்கு நன்றி தொடர வாழ்த்துக்கள்
    த.ம 1

    ReplyDelete
  3. //வரதட்சணை கொடுமைக்கு காரணம் ஆண்களா? பெண்களா?//

    அந்த ஆண்களைப் பெற்ற பெண்கள்தான்:(

    ReplyDelete
  4. தமிழ் ஹை கூப்டாரே அவர் பதிவை பார்க்க சொல்லின்னு ரொம்ப நாளா வரணும் வரணும்னு தேடிட்டிருந்த தலைப்பு... இப்ப தான் வர முடிஞ்சது

    நல்ல கருத்துக்கள் வாழ்த்துக்கள்

    ஆண்களா பெண்களா என்ற கேள்வியே தேவையில்லை. வரதட்சணை கொடுமை என சொல்லும் போது பெண்களை தான் மறைமுகமாக குற்றம் சாட்டுகின்றனர். இங்கே ஆண்கள் தான் காரணம் என சொல்வதற்கு மகளை பெற்ற தகப்பனையோ மகனை பெற்ற தகப்பனையோ சொல்வதல்ல...மாறாக சில கேடுகெட்ட மாப்பிள்ளைகளை. ஏன்னா இவங்க தான் ரொம்ப மும்முறமா இருக்காங்க. காரணம் ஈசியா செட்டில் ஆய்டணும்.

    ஆக நீங்கள் சொல்வது போல் வரதட்சணைக்கு எதிராய் பேசுபவர்கள் எல்லாரும் ஆண்களை குறி வைத்து தான் பேசுகிறார்கள் என்ற எண்ணம் தவறானது. வரதட்சணைன்னு சொன்னாலே பெண்ணாகிய மாமியாரையும் நோகாம நொங்கு திங்க நினைக்கும் சில ஆண்களையும் தான். இருவரின் பங்கும் இதில் அதிகம். இதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு இனி எப்படி இதை ஒழிக்கலாம் என சிந்ததிப்பது நல்லது

    அருமையான கட்டுரைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மெயிலில் வந்ததையே மறுபடியும் மறுபடியும் கொடுக்காம இது போல் ஆக்கமான பல கட்டுரைகளையும் இடையில் கொடுக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்

    வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.