Monday, October 3, 2011


செய்தியை திரித்து தருவதில் தினமலர் முதலிடம்

ஓவ்வொரு செய்திதாள்களும் தனக்கு வேண்டிய ஆட்சியாளருக்கு ஆதரவாக  செய்திகளை தருவது உண்டு. ஆனால் தினமலர் ஒருபடி மேல்  சென்று தனது ஆதரவு ஆட்சியாளரை திருப்திபடுத்த செய்திகளை திரித்து வடிவேல் மாதிரி காமெடி பண்ணி வருகிறது.

உதரணமாக  நேற்றைய செய்தியை பார்ப்போம்.

///அக். 3: ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
மக்கள் தங்களது தேவைகளை தாங்களாகவே நிறைவேற்றிக் கொள்ளும் அமைப்பே உள்ளாட்சி அமைப்புகள். உள்ளாட்சித் தேர்தலில் எனது கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். எனக்கு வாய்ப்பு தந்தால் லஞ்சத்தை ஒழிப்பேன். வெற்றிபெற்று வரும் என் கட்சி வேட்பாளர்கள் யாரையும் லஞ்சம் வாங்க விடமாட்டேன். லஞ்சம் வாங்கினால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பேன். நான் கட்சி ஆரம்பித்த புதிதில் என்னை விலைக்கு வாங்கப் பார்த்தார்கள். லஞ்சம் வாங்கியிருந்தால், குறுகிய காலத்தில் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்திருக்கலாம். ஆனால், மக்களுக்காக குரல் கொடுக்க முடியாமல் போயிருக்கும். நான் போராட்ட குணம் உடையவன். போராடி, போராடித்தான் இதுவரை வெற்றி பெற்று வந்திருக்கிறேன். ஒரே ஒரு முறை என்னை ஆட்சியில் அமர்த்திப் பாருங்கள். எனக்கு சந்தர்ப்பம் தந்து பாருங்கள். ஆட்சியில் இல்லாமல் இருக்கும்போதே எனது சொந்தப் பணத்தில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை செய்து வருகிறேன்.
என் பிறந்த நாளன்று பிறக்கும் குழந்தைகளுக்கு ரூ.10 ஆயிரம் பரிசாகத் தந்து, அக்குழந்தை திருமண வயதை எட்டும்போது பெரிய தொகை கிடைக்கும் வகையில் செய்திருக்கிறேன். இலவசமாக கணினிக் கல்வியை ஏழை மாணவர்களுக்கு வழங்கி வருகிறேன். வேலை இல்லாமல் இருப்பதால்தான் தீவிரவாதம் உருவாகிறது. எனவே, வேலை இல்லாமல் இருக்கும் அனைவருக்கும் வேலைவாய்ப்பு தர வேண்டும். நான் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பேன். ரேஷன் பொருள்கள் வீடுதேடி வரும்படி செய்வேன் என்றார் விஜயகாந்த்.///

இவர் பேசியது உள்ளாட்சி தேர்தலுக்கான பேச்சு. ஒரே ஒரு முறை என்னை ஆட்சியில் அமர்த்திப் பாருங்கள். எனக்கு சந்தர்ப்பம் தந்து பாருங்கள் என்று இவர் பேசியது உள்ளாட்ட்சி தேர்தலில் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் என்ற அர்த்தத்தில்தான் என்பது அவர் பேச்சை கேட்ட அனைவருக்கும் புரியும்.

ஜெயலலிதாவுக்கு ஜால்ரா போடும் இந்த தினமலர் எப்படி செய்தியை திரித்து விஜயகாந்தை காமெடி பீஸாக்கியது என்பதை கிழே படித்து பாருங்கள் உங்களுக்கு புரியும். விஜயகாந்த் இப்போது ஒரு காமெடி பீஸ் என்பதை அனைவரும்  அறிவார்கள் அதை நானும் ஒத்து கொள்கீறேன். ஆனால் நான் இங்கு சொல்லவருவது இந்த காமெடி பீஸ் பேசியதை கூட அப்படியே சொல்லாமல் அதை திரித்து கூறும் இந்த தினமலரை நாம் என்னவென்று கூறலாம் என்பதை நீங்களே சொல்லுங்களேன்

தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த்

ராமநாதபுரம்: ""இன்று, 29 எம்.எல்..,க்களுடன் எதிர்க்கட்சித் தலைவர்; நாளை முதல்வராக ஒரே ஒரு முறை மட்டும் வாய்ப்பு தந்து பாருங்கள்,'' என, தே.மு.தி.., தலைவர் விஜயகாந்த் பேசினார்.

ராமநாதபுரம் அரண்மனை பகுதியில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.., வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் பிரச்னை, தீர்க்கப்படாத பிரச்னையாக உள்ளது. மத்திய அரசு சார்பில் சிலர், இலங்கைக்கு செல்வதாக போக்கு காட்டுகின்றனர். எங்கு செல்கின்றனர் என தெரியவில்லை. தமிழகத்தில் யாராவது ஊழல் செய்தால், மருத்துவமனையில் படுத்து கொள்கின்றனர். மத்திய அரசில் ஊழல் செய்தால், ஞாபக மறதி என கூறுகின்றனர். நாட்டை யார் காப்பாற்றுவது என தெரியவில்லை.

மக்கள் தங்கள் ஜீவாதாரத்தை தீர்த்து கொள்ள, தாங்களே நிர்வாகம் செய்வது தான் உள்ளாட்சி. இதில் அரசியலை பார்க்காதீர். காந்தி உடலை வருத்தி சுதந்திரம் வாங்கினார். ஆனால், தற்போது லஞ்சம், ஊழல் அதிகரித்துள்ளதால், மக்கள் நிம்மதியாக இருக்க முடியவில்லை. பெற்றோர் பிள்ளைகளை படிக்க வைக்க சிரமப்படுகின்றனர்.
சென்னையை சிங்கார சென்னையாக்குவேன் என மாறி மாறி கூறினர். ஆனால், இதுவரை யாரும் முயற்சி எடுக்கவில்லை. எனக்கு ஒரு முறை சந்தர்ப்பம் கொடுத்து பாருங்கள். நிரந்தரமாக இல்லை; ஐந்தாண்டுகளுக்கு மட்டும் கொடுத்து பாருங்கள். என் கட்சி நிர்வாகிகள் நல்லது மட்டுமே செய்வார்கள்.

ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால், நான் சும்மா விடமாட்டேன். கடந்த ஏழு ஆண்டுகள் போராடி தற்போது நம்பர் 1 கட்சியாக சட்டசபையில், 29 எம்.எல்..,க்களுடன் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளேன். நாளை முதல்வராக நீங்களே முடிவு செய்து, வாய்ப்பு தாருங்கள். இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

"24
மணி நேர சீரான மின்சாரம்' : "கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்... நன்றி மறவாத உள்ளம் உங்களிடமும் என்னிடமும் உள்ளது. ஓடி ஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாம் கொடுக்கணும்' நான் என் பாக்கெட்டில் இருக்கும் வரை மாவட்டம்தோறும் மக்களுக்கு கொடுத்து வருகிறேன். இதே ஆட்சி, என்னிடம் இருந்தால் இன்னும் அதிகமாக கொடுக்க முடியும். நான் ஆட்சியில் இருந்தால், 24 மணி நேரமும் சீரான மின்சாரம், 24 மணி நேரமும் பணியில் டாக்டர்கள், சுகாதாரமான குடிநீர், சுத்தம், வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் கிடைக்கும். இவை வாக்குறுதிகள் மட்டும் அல்ல. வாய்ப்பு கொடுத்து பாருங்கள்; செய்து காண்பிக்கிறேன் என, விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.

13 comments:

  1. இதக்கூட விளம்பரமா எடுத்துக்கும் தினமலர்.. என்ன செய்ய.?..

    ஆனா இப்ப பலர் எதிர்க்க ஆரம்பித்துள்ளனர்..

    ReplyDelete
  2. ஹா...ஹா...ஹா...

    ஒரு வரி மட்டும் தான் மாறியிருக்கும்னு பாத்தேன். பைத்தியக்காரன் பேசுற மாதிரி திரிச்சது உண்மையிலியேலே செம காமெடி

    ReplyDelete
  3. டெம்ப்ளேட் சூப்பர்

    செய்தி தாள் மாதிரியான அமைப்பு நல்லாயிருக்கு

    ReplyDelete
  4. உண்மையில் ஊடகம் என்பதே அரசுக்கு கை கட்டி சேவை செய்யும் அமைப்பே... ஒரு நாளிதழ் தொடங்க அனுமதி வாங்க என்ன வேண்டும் என்று கேட்டு பாருங்கள், அரசுக்கு எதிராக எழுத மாட்டேன் என்று உறுதி மொழி கேட்பார்கள்... என்னத்த சொல்ல...

    ReplyDelete
  5. இப்படியே மீடியாவின் கையில் சிக்கி நாமும் ஓட்டு போட்டு விடுவோம். இப்போதைக்கு எனக்குத் தெரிந்தவரை உள்ளாட்சிக்கு தே.மு.தி.கவிற்கு ஆதரவு தருகின்றன. நாடு ஒருவரிடம், மானிலம் ஒருவரிடம், உள்ளூர் அதிகாரம் ஒருவரிடம் என்று தந்துவிட்டு என்னவாகப் போகிறோம்.

    ReplyDelete
  6. @சாந்தி,
    @ஆமினா
    @சூர்யஜீவா
    @சாகம்பரி

    அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  7. @சாந்தி,
    //இதக்கூட விளம்பரமா எடுத்துக்கும் தினமலர்.. என்ன செய்ய.?..
    ஆனா இப்ப பலர் எதிர்க்க ஆரம்பித்துள்ளனர்//

    எதிர்க்க மட்டும் அல்ல வெறுக்கவும் ஆரம்பித்துள்ளனர்.

    ReplyDelete
  8. @ஆமினா
    //ஒரு வரி மட்டும் தான் மாறியிருக்கும்னு பாத்தேன். பைத்தியக்காரன் பேசுற மாதிரி திரிச்சது உண்மையிலியேலே செம காமெடி//
    தினமலர் இப்போது ஒரு காமெடி மலராக மாறிவருகின்றது. நடிகர் வடிவேல் பேசுவதற்கும் தினமலர் எழுதுவதற்கும் வித்தியாசம் ஏதும் இல்லை.மக்களை காமெடியாக்குவதாக நினைத்து தன்னை தரம் தாழ்த்தி கொள்கிறார்கள்

    ReplyDelete
  9. @சூர்யஜீவா
    நல்லதை சொல்வது & செய்வது என்பது இந்தகாலத்தில் மிக எளிதல்ல, அதற்கு மிக துணிச்சல் வேண்டும். ஆனால் ஒரு பாரம்பரிய பத்திரிக்கை தன்னை தரம் தாழ்த்தி அடிமையாக யாருக்கும் இருக்க வேண்டாம் எனப்து எனது கருத்து. நான் அந்த பத்திரிக்கையின் நீண்ட கால வாசகன்.இப்போது நான் அதனுடைய வாசகன் என்று சொல்லி கொள்வதே தரக் குறைவாக இருப்பதாக கருதுகிறேன்.

    ReplyDelete
  10. @சாகம்பரி

    //அதிகாரம் ஒருவரிடம் என்று தந்துவிட்டு என்னவாகப் போகிறோம்//
    என்னவாக போகிறோம் என்று கவலை வேண்டாம். நாம் நல்லதை விதைப்போம் & நல்லதை மட்டும் எதிர்பார்ப்போம். கவலை வேண்டாம் காலம் மாறும் அதில் காட்சிகளும் மாறும்.

    ReplyDelete
  11. @ஆமினா
    //டெம்ப்ளேட் சூப்பர்//
    நன்றி

    //செய்தி தாள் மாதிரியான அமைப்பு நல்லாயிருக்கு ///
    செய்திதால் மாதிரி அல்ல செய்திதாளேதான்..ஹீ.ஹீ நிருபர் வேலை காலியாக இருக்கிறது

    ReplyDelete
  12. தின மலரா? அதுக்கு இன்னொரு பெயர் உள்ளது.அது அருவருப்பான பெயர்,அதற்கு பொருத்தமான நாளிதழ்தான் அது.மற்றபடி அதன் குணாம்சம் அறிந்து விபரமறிந்தவர்கள் நிறைய பேர் அந்த நாளிதழ் வாசிப்பதை நிறுத்தி விட்டனர்.மாறாக தந்தியின் சர்குலேக்ஷன் 14 லட்சத்தை தாண்டி எகிறி வருகிறது.

    ReplyDelete
  13. நான் நீண்ட கால தினமலர் வாசகன். தற்போது கடந்த 6 மாதமாக தினத்தந்திக்கு மாறிவிட்டடேன், காரணம் நீங்கள் சொல்வதுதான். நானும் எம்.ஏ., இதழியல் படித்தவன். பத்திரிக்கை எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு தினமலர் மிகச்சரியான உதாரணம்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.