Thursday, September 29, 2011

இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள்The secret of happy  married life

ஒரு நாள் என் நண்பன்  இல்லறத்தின் வெற்றியின் ரகசியம் என்ன என்று உனக்கு தெரியுமா என்று கேட்டான்.(செமையா மாட்டிகிட்டான் இன்னைக்கு ஒருத்தன் நம்மகிட்ட)

அதற்கு நான்  நம் துணையை மதித்து பொறுப்புகளை பகிர்ந்து கொள்வதால் வாழ்க்கையில் எந்த பிரச்சனைகளும் வராமல் சந்தோஷாமாக வாழ முடியும் என்று சொன்னேன்.

அதற்கு அவன் இன்னும் விளக்கமாக சொல்ல முடியுமா என்று கேட்டான்.(...நாமதான் இவன் கிட்ட மாட்டிகிட்டோமா?? ஙே...)

அதற்கு நான், என் குடும்பத்தில் சிறிய பிரச்சனைகளுக்கான முடிவை என் மனைவியும், மிகப் பெரிய பிரச்சனைகளுக்கான முடிவை நானும் எடுப்போம். ஒவ்வொருத்தரின் முடிவில் மற்றவர்கள் தலையிடமாட்டோம் என்று சொன்னேன்.

அவனுக்கு இன்னும் புரிபடவில்லை எனவே அவன் மீண்டும் ஏதாவது உதாரணத்துடன் இதை விளக்க முடியுமா என்று கேட்டான்( இவன்லாம் நம்ம நண்பன் சரியான மாங்காய் மடையண்டா).

அதற்கு நான், கார் வாங்குவது, வீட்டுக்கு தேவையான அப்ளையன்ஸ் வாங்குவது, மாதம் எவ்வளவு செலவிடுவது & சேமிப்பது, எங்கு கோடைவிடுமுறைக்கு டூர் போவது, நகை, சேலைவாங்குவது, வேலைக்கு ஆட்கள் வைப்பது, etc..... போன்ற சின்ன விஷயங்களில் என் மனைவி முடிவெடுப்பார்.  அதில் நான் சிறிது கூட தலையிடுவதில்லை. (ஐய்யோ நாம ஏதோ வாய் தவறி ஒளரிட்டோமே.....)

அப்ப உன்னுடைய பங்குதான் என்ன? என்று நண்பன் கேட்டான்.(அப்பா நம் மானம் தப்பிச்சிடுச்சு பயலுக்கு ஒன்னும் விளங்கல )

அதற்கு நான் நான் பெரிய விஷயங்களை மட்டும் தான் கையாளுவேன். உதாரணமாக அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுக்கலாமா? ஜெயலலிதா விஜயகாந்தை அவமானப்படுத்தியது சரியா? சிதம்பரம் ராஜினாமா செய்யலாமா கூடாதா? கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடலாமா கூடாதா? தமிழக முதல்வர்கள் இறந்தால் பீச்சில் சமாதி கட்டலாமா கூடாதா? தமிழக சட்டசபைக்கு புதிய கட்டடம் ஒன்றை ராணி மேரி கல்லூரியை இடித்து விட்டு அங்கே கட்டலாமா போன்ற பெரிய விஷயங்களில் நான் தான் முடிவு எடுப்பேன்.

உனக்கு ஒன்று தெரியுமா?

என் மனைவி எப்போதும் எதற்கும் நான் எடுக்கும் முடிவுகளில் சிறிது கூட தலையிட மாட்டார்கள்.......!!!!!!!!!!!

இது தான் எங்கள் இல்லற வாழ்க்கை எப்போதும் இனிக்க நாங்கள் கடைபிடிக்கும் ரகசியம்.

மற்றவரை மதித்து இது போல் பொறுப்புகளை பகிர்ந்தால் என்றும் இன்பமே.

என்ன நீங்க இதை கடைபிடிக்க போறிங்களா? வாவ் நல்லது நல்லது.



மற்றவர்கள் ஏதாவது ரகசியங்களை கடை பிடிக்கிறார்களா என துப்பறிய செல்லும் போது ,பக்கத்து வீட்டில் நடந்த விஷயங்களை ஒட்டு கேட்ட போது காதில் விழுந்த விஷயங்கள்;(ரகசியங்கள்)

தேவையில்லாத செலவுகளைக் குறைக்கலாம்னு ஒரேயொரு செலவிலே கை வெச்சேன். என் பெண்டாட்டி சாமியாடிட்டாள்டா''
"" எதுல கை வைச்ச? ''
""கேபிள் டிவி கனெக்ஷனைக் கட் பண்ணிடலாம்னு சொன்னேன். அவ்வளவுதான்''



(வீட்டில் கணவன் - மனைவி)
""எதுக்கு என்னை ஆபிசில இருந்து வீட்டுக்கு அவசரமா வரச் சொன்னே? ''
""நேத்து பெய்ஞ்ச மழையில வீட்டுச் சுவரில் கிராக் விட்டுருச்சு. அதை உடனே சரி பண்ணணும் ''
""அதுக்கென்ன அவசரம்?''
""ஒரு வீட்ல ரெண்டு கிராக் இருக்கக் கூடாதாம்''



கணவன்: உன்னைக் கட்டினதை விட ஒரு பைத்தியக்காரியைக் கட்டியிருக்கலாம்
மனைவி: அதனால என்ன? இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை. ஒரு பைத்தியத்தை அழைச்சிட்டு வந்து நானே கட்டி வைக்கிறேன்


1 comments:

  1. கணவன் எந்த முடிவையும் எடுக்காமல் இருந்தாலும் இல்லறம் சுகமே...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.