உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, September 19, 2011

சூதாட்டத்தில் இறங்கியுள்ள தமிழக அரசியல் தலைவர்கள்சூதாட்டத்தில் இறங்கியுள்ள தமிழக அரசியல் தலைவர்கள்

 

தமிழக கட்சிகளின் நிலைமை பரிசோதனையிலா அல்லது பரிதாபத்திலா என்ற சூதாட்டத்தில் இறங்கியுள்ளன.இதில் வெல்லப்போவது யார் என்பதுதான் இப்போது தமிழகத்தில் பரபரப்பாக பேசப்படும் ஒரு நிகழ்ச்சி.

தமிழகத்தில் பல ஆண்டுகளுக்குப் பின் முதன் முறையாக வரும் உள்ளாட்சி தேர்தலில் எல்லா அரசியல் கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன. இதனால் பல்முனைப் போட்டி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. தமிழக அரசியல் அரங்கில் ஏற்பட்டுள்ள இந்த அறிய காட்சி காரணமாக தமிழக கட்சிகளின் உண்மையான பலம் & பலவீனங்கள் என்ன என்பது தேர்தல் முடிந்ததும் தெரிந்து விடும்.

இதுவரை வழக்கமாக உள்ளாட்சி தேர்தலின் போது சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட கட்சி கூட்டணிகள் அப்படியே இருக்கும். ஆனால் இந்த முறை பெறும் தலைகீழ் மாற்றமாக மாறியுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.., கூட்டணியில் தி.மு.., - காங்கிரஸ், பா..., - விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெற்றிருந்தன. ஆனால் தேர்தலுக்கு அப்புறம் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலைகளால் வரும் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.., காங்கிரஸ், பா.., .தி.மு., ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. விடுதலைச் சிறுத்தைகள் இன்னமும் முடிவை அறிவிக்கவில்லை. அவர்களை தங்களுடன் இணையும்படி பா..., அழைப்பு விடுத்துள்ளது. ( ராமதாஸ் அவர்களூக்கு எப்போதும் தனியாக நிற்க பயம் ஒரு வேளை அவர்கட்சி தோற்றால் கூட்டணி கட்சியை அதற்கு காரணமாக கைகாட்டிவிடலாம்) அந்த அழைப்பை விடுதலைச் சிறுத்தைகள் ஏற்கவும் இல்லை, நிராகரிக்கவும் இல்லை.

.தி.மு.., கூட்டணியில் அ.தி.மு., தே.மு.தி.., - இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றிருந்தன. மேயர் பதவிக்கு, .தி.மு.., தன்னிச்சையாக தனது கட்சி வேட்பாளர்களை அறிவித்தன் பின் கூட்டணிக் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தலின்போது தி.மு..,வை வீழ்த்த வேண்டும் என்பதற்காக, கூட்டணிக் கட்சிகள் அமைதியாக இருந்தன. தற்போது, உள்ளாட்சி தேர்தலில் யாரும் யாரையும் நம்ப வேண்டிய சூழல் இல்லாததால், ஒவ்வொரு கட்சியும் தனித்தனியே மோதிபார்க்க முடிவெடுத்துள்ளன.

.தி.மு.., கூட்டணிக் கட்சிகளும் தனித்து போட்டியிட்டால், பன்முனைப் போட்டி ஏற்படும். இக்கட்சிகளுடன், காங்கிரஸ், பா.., போன்ற கட்சிகளும், தனித்து களம் இறங்குவதால், சட்டசபை, லோக்சபா தேர்தலை விட, உள்ளாட்சி தேர்தலில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிடும்போது, அக்கட்சிகளுக்கு மக்களிடையே உள்ள செல்வாக்கு உண்மை நிலவரம் தெரியவரும். எனவே, வெற்றிக்கு அனைத்துக் கட்சிகளும், கடுமையாக உழைக்கும் என்பதால், மக்களும் பலத்த எதிர்பார்ப்பில் உள்ளனர். கடந்த தேர்தல் கலைஞரின் குடும்ப ஆட்டத்திற்கு எதிராக இருந்தது ஆனால் இந்த உள்ளாட்சி தேர்தல் ஜெயலலிதாவின் ஆணவத்திற்கு எதிராக இருக்கும் என்று கருதப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே எந்த கட்சியும் எந்த தேர்தலையும் தனித்து சந்தித்ததே கிடையாது. ஏதாவது ஒரு கூட்டணியில் இடம் பெற்று ஒரு சில தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டன. இதனால், தமிழகத்தில் எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு செல்வாக்கு உள்ளது என்பது தெரியாமலேயே இருந்தது. இப்போது முதல் முறையாக எல்லா கட்சிகளும் தனித்து போட்டியிட உள்ளதால், கட்சிகளின் உண்மையான பலம் தெரியவரும். அடுத்த தேர்தல்களில் கூட்டணி பேரத்திற்கு இந்த பலம் உதவும்.

இந்த தேர்தலுக்கு பின்பு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியும் சாதியக்கட்சிகளும் சுனாமியில் அடிபட்ட கடற்கரை நகரங்களை போல காணாமல் போயிடும் என்று நம்பப்படுகிறது.
ஜெயலலிதா தான் அதிகாரத்தை பயன்படுத்தாமல் நேர்மையாக போட்டியிட்டால் (எந்த ஆளுங்கட்சியும் நேர்மையாக இருப்பதில்லை என்பது வரலாறு) நிச்சயம் பல இடங்களில் தோல்வியுற வாய்ப்புகள் உண்டு

 

நாம் ஒன்று நினைக்க கடவுள் ஒன்று நினைப்பார் என்று சொல்வது போல மீடியாக்கள் ஓன்று நினைக்க தமிழக மக்கள் வேறுவிதமாக நினைத்து ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்திவிடுவார்கள்.அதுவரை நாம் பொறுமையாக நடப்பதை பாமர மக்கள்போல வேடிக்கை பார்ப்போம்.


தமிழக மக்களுக்கு நான் விடும் வேண்டுகோள் இதுதான்: ஒட்டுரிமையை மிகவும் புனிதமான கடமையாக சித்தரிக்கும் உங்கள் அபிமான கட்சிகள், உங்களின் வாழ்வு உரிமையை எப்போதும் மதித்ததே கிடையாது. லஞ்சத்தை வெறுத்த மக்களை லஞ்சம் தவிர்க்க முடியாதது என்று காலப்போக்கில் ஏற்கச் செய்தது , குடி நீருக்கும், சிறு நீருக்கும் காசு கொடுத்தாக வேண்டும் என்றும் மக்களைப் பழக்கி , கல்வியும் மருத்துவமும் பணம் உள்ளவர்களுக்கு மட்டும் தான் என்பதை சாதாரணமாக்கி, இலவசங்களுக்கும் அரசியல் சீரழிவுக்கும் உங்களையும் தமிழக மக்களையும் பழக்கி இருக்கிறார்கள் இந்த அரசியில் கட்சி தலைவர்கள். அதனால் தமிழக மக்களே, நீங்கள் விரும்பும் நம்பும் கொள்கைக்கும் கோட்பாடுக்கும் சம்பந்மே இல்லாத யாராவது ஒருவர்( மக்கள் விரோத கிரிமினல் குற்றவாளியாக கூட இருக்கலாம்) வேட்பாளர் இருந்தால் அவருக்கு வாக்களிக்காமல் இருக்குமாறு பணிவன்புடன் கேட்கிறேன்.

3 comments :

  1. மெய்யாகவே, வசிக்கும் பகுதியில் நல்ல பேரைச் சம்பாதித்து வைத்திருக்கும் சாமான்யர்கள் வெற்றிபெற வாய்ப்பிருக்கின்றது. எப்படியாவது கூட்டணி அமைத்துக் குழப்பும் கட்சிகளைப் புறந்தள்ளவும் முடியும். இவ்வளவு வேட்பாளர்களை தமிழக முதல்வர் துணிச்சலுடன் அறிவித்துவிட்டபின் இடது கம்யூனிஸ்ட் கட்சி நாள் குறிக்கின்றது. வலது மவுனம் காக்கிறது. விஜயகாந்த் சட்டசபையில் தொடர்ந்து அம்மையாரை ஆதரித்தும் வீணானதே என்று விழிக்கின்றார். இப்படி கூட்டணிக்கு ஏங்குவதைவிட கட்சியைக் கலைத்துவிட்டு ஒன்றாகிவிடலாம். கூட்டணி அற்ற தேர்தலுக்கே என் ஓட்டு.

    ReplyDelete
  2. அரசியலா.......... கொஞ்சம் புரியாத விஷயம் :-(

    நல்லவன் யாரு கெட்டவன் யாருன்னு கண்டுபிடிச்சு ஓட்டு போடுறதுகுள்ள மனுஷன் செத்துடுவான்.

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog