Sunday, September 18, 2011


பிரபல பதிவாளார்  வீட்டில்  போலிஸ் விசாரணை பதிவாளர் கைதா ?நடந்தது என்ன?





அமெரிக்காவில் இருந்து  தமிழில்  அரசியல், நகைச்சுவை , தன்னம்பிக்கை  போன்ற பதிவுகளை எழுதி *பிரபலம்* ஆகி வரும் தமிழ் பதிவாளர் வீட்டிற்கு ஞாயிற்று கிழமை காலை பதினொரு மணியளவில் போலீஸார் வந்து கதவை தட்டி வீட்டினுள் புகுந்து விசாரணை செய்தனர்.



அவர் செய்த தவறுதான் என்ன? பதிவில் அவதூறு எழுதினாரா அல்லது அரசியல் பதிவுகளை எழுதுவதினால் வந்த மிரட்டலா அல்லது தமிழகம் வந்த போது நில அபகரிப்பு செய்த குற்றமா அல்லது சாட்டில் சாருவை போல எந்த பெண்ணிடம் வம்பு செய்தாரா அவர் செய்ததுதான் என்ன? போலிஸ் ஏன் அவர் வீட்டிற்கு வந்தது? அவர் கைது செய்யப்பட்டாரா/



அந்த பிரபல பதிவாளார்  அவர்கள்...உண்மைகள் என்ற தலைப்பில் ஏதோ தமிழில் கிறுக்கி வரும் மதுரை தமிழ் ஆளு என்ற நான் தாங்க வேறு யாரும் அல்ல. நடந்தது என்னவென்றால் வழக்கமாக நான் இந்தியாவிற்கு போன் செய்ய வேண்டுமென்றால் எனது உதவியாளார் (மனைவி) தான் நம்பர் டயல் செய்து தருவார்கள் ஆனால் இன்று அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கருதி நான் இந்தியாவிற்கு போன் நம்பரை டயல் செய்தேன். அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு போன் டயல் செய்ய வேண்டுமென்றால் முதலில் 011 91 என்று டயல் செய்ய வேண்டும் நான் அதற்கு பதிலாக தவறுதலாக 911 என்று டயல் செய்து மீதி நம்பர்களை டயல் செய்யதேன். லையனோ போகவில்லை அதனால் நான் மீண்டும் முயற்சி செய்ய தொடங்கிய போது அந்த போனிற்கு போன் வந்தது. உங்கள் போனில் இருந்து எமர்ஜன்சிக்கு கூப்பிட்டீர்களே என்ன ப்ராப்பளம் என்று கேட்டார்கள் அப்போதுதான் நான் செய்த தவறு புரிந்தது. சாரி என்று சொல்லிவிட்டு நடந்ததை சொன்னேன். அப்படியா என்று சிரித்து விட்டு போனை வைத்து விட்டார்கள். அவர்கள் போனை வைத்த அடுத்த ஐந்து நிமிடங்களில் வாசல் மணி அடிக்கும் ஓசை திறந்தால் இரண்டு போலிஸ் கார்களில் இருந்து போலிஸ் ஆபிசர் வந்து  விசாரித்து வீட்டிற்கு உள்ளேயும் வந்து பார்த்து விட்டு போனார்கள்.



இது அவர்களின் கடமை. நாம் தவறுதலாக போன் அடித்தாலும் வீட்டிற்கு வந்து விசாரனை செய்வது அவர்களின் கடமை. ஆனால் சில சமயங்களில் நாம் ஏதோ அவசர காரணத்திற்க்காக உண்மையில் போன் அடித்தால் நம் தமிழ் சினிமாவில் வருவது போல லேட்டாக வருவதுமுண்டு



ஆமாங்க இதுதானுங்க உண்மையில் நடந்தது. என்ன என்னை அடிக்க கல்லை தேடுறிங்களா இதற்கு எல்லாம் ஒரு பதிவா என்று...ஹீ ...ஹீ.



ஆமாம் சில பேர் கேள்விகள் கேட்பது என் காதில் விழுகிறது. நீ எல்லாம் பிரபல பதிவாளரா என்று கேட்பது. எனக்கு பிரபலம் என்ற வார்த்தைக்கு இப்போது அர்த்தம் புரியவில்லை. ஆனால் நேற்று எழுத வந்த பதிவாளார்கள் எல்லாம் தங்களை பிரபலம் என்று சொல்லி எழுதுவதால் அதுதான் பதிவாளர்கள் தர்மம் என்று மட்டும் புரிந்தது. அதனால்தான் நான் என்னை பிரபல பதிவாளர் என்று சொல்லிக் கொண்டேன். ஹீ..ஹீ......ஹீ......என்ன நான் சொன்னது சரியா இல்லையா எனப்தை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.



இது எனது 200 வது பதிவு . தொடர்ந்து எனக்கு ஆதரவும் ஊக்கமும் தந்து என்னை ஆதரிப்பவர்களுக்கு எனது நன்றிகள்

3 comments:

  1. 200 வது சாதனைப் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. 200 பதிவுபோடுவதென்றால சாதாரண காரியமா?
    வாழ்த்துக்கள்
    உங்கள் எல்லா பதிவுகளிலும் ஒரு செய்தி இருக்கும்
    இந்தப் பதிவும் அதற்கு விதிவிலக்கல்ல
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 1

    ReplyDelete
  3. அன்பின் மதுரை தமிழ்காரன்

    நகைச்சுவையின் உச்சம் - நன்று - ஆமா இப்ப மதுரை வந்துட்டுப் போனீங்களா ? ஏன் தொடர்பு கொண்டிருக்கலாமே - ஒரு சூப்பர் சந்திப்பு வச்சிருக்கலாமே ! ம்ம்ம்ம்

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.