Tuesday, September 6, 2011

வெளியே திரியும் பைத்தியகார பதிவாளர்கள் (ஜாக்கிரதை)

யாரு பைத்தியக்காரன்?

ஒரு பதிவாளர்(டிரைவர்) காரில் கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு டெலிவரி செய்வதற்காக வந்து அங்கு டெலிவரி செய்ய வேண்டியவைகளை  செய்துவிட்டு காரை எடுக்கும் போது அவர் கார் டயர் பஞ்சராகி இருப்பதை பார்த்து அதை கழட்டி புதிய டயர் மாற்றினார். அவ்வாறு அவர் மாற்றும் போது அந்த டயருக்கான போல்ட் நான்கும் கை தவறி பாதாள சாக்டையில் விழுந்துவிட்டது.

அந்த பதிவாளர்  செய்வது அறியாது திகைத்து, பேய் அறைந்தது போல மலைத்து நின்றார். அப்போது அங்கு வந்த ஒரு நோயாளி அவரை நோக்கி உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டார்.



பைத்தியக்கார நோயாளிக்கு பதிலிக்காமல் இருந்த பதிவாளர் மீண்டும் அந்த நோயாளி என்னவென்று கேட்க இவனிடம் நாம் மாட்டிக் கொண்டோம் இவனிடம் ஏதும் சொல்லாமல் இருந்தால் இவன்  இடக்கு மடக்காக ஏதும் செய்துவிடுவான் என்று நினைத்தவாறே நடந்ததை அவனிடம் சொன்னார்.



அதை கேட்ட அந்த பைத்தியகார நோயாளி அந்த பதிவாளரை பார்த்து கட கட வென சிரித்தாவாறே இது ஒரு சாதாரண பிரச்சனை. இதுக்கு ஒரு தீர்வு காண முடியாமல் இப்படி பேய் அறைந்தது போல முழித்து கொண்டிருக்கிறீர்கள். அதனால்தான் இன்னும் நீங்கள் பதிவாளராக  இருந்து கொண்டிருக்கீறிர்கள் என்று சிரித்தான் . பதிவாளர் அந்த நோயாளியை அதிசயமாக பார்த்தான்.



மேலும் அந்த நோயாளி சொன்னான் கவலைபடாதீங்க மிச்சம் இருக்கும் மூன்று டயர்களில் இருந்து , ஒரு போல்ட்டை மட்டும் ஓவ்வொரு டயரில் இருந்து கலட்டினால் உங்களுக்கு முன்று போல்ட் கிடைக்கும் அதை கொண்டு இந்த டயரை சரி செய்து விட்டு அருகில் திறந்து இருக்கும் ஒரு வொர்க் ஷாப் போய் மீதமுள்ள போல்ட்டை வாங்கிபோட்டு சரி செய்யலாம் . இது மிக எளிதானதுதானே இல்லையா என்று அவரைப்பார்த்து கேட்டான்.



அவனது சாதாரண பதிலை கேட்ட பதிவாளர் அசந்து போய் அவனிடம் கேட்டார். நீ ரொம்ப ஸ்மார்ட்டாவும் புத்திசாலியாகவும் இருக்க ஆனா ஏன் நீ இங்க பைத்தியகார ஹாஸ்பிடலில் இருக்கிறே என்று கேட்டார். அதற்கு அவன் சொன்னான். நான் இங்கு இருப்பதற்கு காரணம் சில சமயங்களில் ரொம்ப கிரேஸியாக இருப்பதினால்தான் அதனால் நான் வடிகட்டின முட்டாள் ஓன்றும் அல்ல



உலகத்தில் பல பேர், இந்த பதிவாளர் போல மற்றவர்களை முட்டாள் என்று கருதி கொண்டிருக்கிறார்கள்.



அதனால் நான் சொல்லுகிறேன் உலகத்தில் பல பேர் பார்பதற்கு கிரேஸிபோல இருப்பார்கள். அதனால் அவர்களை ஒன்னும் தெரியாதவராக கருதிவிட வேண்டாம். அவரிடம் நமது பிரச்சனைக்கான எளிதான தீர்வு கிடைக்கும். தோற்றம், படிப்பு இவைகளை  மட்டும் வைத்து யாரையும் எடை போட வேண்டாம். நமக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும் என்று மட்டும் நினைக்க வேண்டாம்.




எனது தமிழக பயணம் :

பார்க்க வேண்டும் என்று நான் நினைத்த சில நபர்களை பார்க்க முடியாமல் போனதால் ஏற்பட்ட தவிப்பை தவிர்த்து ,எனது தமிழக கோடை பயணம் மிகவும் இனிமையாக முடிந்தது. முடிந்தால் பயண அனுபவங்களை எழுத முயற்சிக்கிறேன். நன்றி.

4 comments:

  1. ந்லல விளக்கம் நல்ல பதிவு
    பயணத் தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete
  2. அவரு உண்மையிலேயே பைத்தியக்காரர்தானா?

    ReplyDelete
  3. அப்பா எனக்கு சொன்ன கதை இது..... நீங்க பதிவாளர்ன்னு உங்க ஸ்டைலுக்கு மாத்தியிருக்கீங்க போல

    நல்லபடியா பயணம் முடின்சு வந்தது கண்டு மகிழ்ச்சி

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.