உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, July 27, 2011

அமெரிக்க பெண்ணை தமிழ் இளைஞன் சந்தோஷப்படுத்துவது எப்படி?

 
அமெரிக்க பெண்ணை தமிழ் இளைஞன் சந்தோஷப்படுத்துவது எப்படி?


அமெரிக்காவில் வாழும் தமிழ் இளைஞனைப் பற்றிய கேள்வி பதில்கள்

கேள்வி : அமெரிக்க வாழ்வில் தமிழ் இளைஞனின் மிக சந்தோஷமான நேரங்கள் என்ன?

பதில் : அமெரிக்க பெண்ணுக்கு அஸைண்ட்மெண்ட் பண்ணி தரும் நேரங்கள்(  இப்படிதான் மக்கா தமிழ் பையன் அமெரிக்க பெண்ணை சந்தோஷப் படுத்துவான் )கேள்வி : அமெரிக்காவில் உள்ள தமிழ் இளைஞன் எப்படி ஜாலியாக பொழுதை கழிப்பான்?

பதில் : இது என்ன கேள்விப்பா... டெக்னிக்கல் புக்கை படிப்பதுதான் அவனது பொழுது போக்குகேள்வி : அமெரிக்காவில் உள்ள தமிழ் இளைஞன் பாருக்கு போனால் என்ன செய்வான்?

பதில் : கையில் ஒரு கோக்கை வைத்து கொண்டு ஒரு ஒரமாக நின்று அங்கு வரும் பெண்களை வச்ச கண் வாங்காமல் பார்த்து கொண்டிருப்பான்.( இதை யாராவது வீட்டிற்கு சொல்லி விடுவார்களோ என்ற பயத்துடன் தான்)

கேள்வி : அமெரிக்க இளைஞர்கள் ஏன் தமிழ் இளைஞர்களோடு நட்பு உறவு கொள்ள விரும்புவார்கள்?

பதில் : அவர்கள் செய்ய வேண்டிய ஹோம் வொர்க்கை இவர்கள் செய்து கொடுப்பதால்.

கேள்வி : அவர்கள் அதிக அளவு காரம் விரும்புவதன் ரகசியம்?

பதில் : மலச்சிக்கலை தவிர்க்க

கேள்வி :  அவனின் அகாராதியில் FUN என்பது என்ன?

பதில் : SUN Glass பொருத்திய காருக்குள் அமர்ந்து அங்குள்ள பெண்களை பார்ப்பது


கேள்வி : நாம் வேலைக்கு நடுவே சிறிது ரெஸ்ட் எடுத்து அரட்டை அடிக்க செல்வது போல அவர்களூம் செய்வார்களா?

பதில் : ஆமாம் அவர்கள் அரட்டை அடிப்பதை இங்கே ' டெக்கினிக்கல் கான்ஃப்ரென்ஸ் என்று கூறுவார்கள் (நமிதா பற்றி எல்லாம் பேசமாட்டார்கள்)கேள்வி : அவர்களின் முகத்தில் எப்போது புன்னகையை காணலாம்?

பதில் : சம்பள பணத்திற்கான கசோலையை பார்க்கும் போது மட்டும் காணலாம்கேள்வி : ஒரு பெண்கூட டேட்டிங்க் போகும் போது அவர்கள் பேசிக் கொள்வது என்ன?

பதில் : அந்த வாரம் மேனேஜர் அவனுக்கு கொடுத்த அஸைன்மெண்ட்டும் அதில் உள்ள சிக்கலான பிரச்சனையை எப்படி தீர்த்து வைத்தான் என்பதை கோக் அருந்தியாவாரு ரொமண்டிக்காக சொல்லி கொண்டிருப்பான். ( இந்த இழவுக்குதான் அமெரிக்க பெண்கள் தமிழ் பையன் கூட டேட்டிங்க் செய்வது கிடையாது)கேள்வி : அவனுக்கு எப்படி தண்டனை தரலாம்?

பதில் : ஒரு பெண்ணை அவனிடம் அனுப்பி ஒரு அரைமணி நேரம்  ஃபராஜெக்ட்& அஸைன்மெண்ட் பற்றி பேசாமல் வேறு ஏதாவது மட்டும் பேச செய்வதுதான் அவனுக்கு தரும் மிகப் பெரிய தண்டணை.கேள்வி : அவன் இன்னொரு தமிழனை குழப்புவது எப்படி?

பதில் :  ஆங்கிலத்தை அமெரிக்கன் உச்சரிப்பில்  மற்றொரு தமிழனிடம் பேசுவதுதன் மூலம்தான்.கேள்வி : அமெரிக்காவில் உள்ள தமிழன் ஸ்மார்ட் என்று அறிவது எப்படி?

பதில் : இரண்டு சிறிய பாட்டில் பீரை குடிக்க செய்து அவன் தள்ளாடமல், உளராமல் ஒர் இரவு முழுதும் இருந்தால் அவன் ஸ்மார்ட்தானுங்க////


கேள்வி : அமெரிக்க தமிழ் இளைஞனின் வாழ்க்கை தத்துவம் என்ன?

பதில் ; படிப்பது...சாப்பிடுவது...தூங்குவது....கேள்வி : அவன்  இன்னொரு தமிழ் இளைஞனிடம் எப்படி பெருமை பீத்தி கொள்வான்?

பதில் : மக்கா அந்த அமெரிக்க பெண் என்னை பார்த்து ஸ்மைல் பண்ணிணா பாரு. செம...டாகேள்வி : தமிழ் இளைஞன் ஆணுறை வாங்குவது எதற்க்காக?

   பதில் : வேற எதுக்கு அவனுடைய collector's items -ல் சேர்த்து      வைப்பதற்குதான்  மக்கா/
படிக்காதவர்கள் படிக்க :

அமெரிக்கா வாழ் தமிழர்களின் பெண் பார்க்கும் படலம்.

4 comments :

 1. ///அமெரிக்க பெண்ணை தமிழ் இளைஞன் சந்தோஷப்படுத்துவது எப்படி//
  ஏதோ அடல்ட் ஒன்லி மேட்டருன்னு நினைச்சு உங்களை திட்ட வந்தா இப்படி நக்கலாக எழுதி இருக்கிறீர்கள், சிரிக்க வைத்தது உங்கள் பதிவு

  ReplyDelete
 2. ///ஒரு ஒரமாக நின்று அங்கு வரும் பெண்களை வச்ச கண் வாங்காமல் பார்த்து கொண்டிருப்பான்///
  அமெரிக்க தமிழன் மட்டுமல்ல இங்கேயுள்ள தமிழனும் இப்படிதான் ,பொது இடங்களில் அவர்களின் பார்வை சரியில்லை, உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன். ஒவ்வொரு பதிவும் மாறுபட்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் படிக்கவும் சுவையாகவும் இருக்கிறது.வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. நகைச்சுவையோடு சில உண்மைகளையும் சொல்லியுள்ளீர்கள் பாஸ் ;-)

  ReplyDelete
 4. இன்னும் ஒன்று.. டெக்னிகல் விஷயம் தவிர வேறு ஏதாவது பேசலாம், தமிழ் நாட்டு அரசியல் மற்றும் சினிமா தவிர என்று கண்டிஷன் போட்டால்... ஊமையாகி விடுவான்!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog