Sunday, July 24, 2011




வாழ்வில் ஆனந்தம் ஊஞ்சலாட?? ( நித்தியானந்தா வழி அல்ல)

சென்னை சென்றிருக்கும் என் மனைவியிடம் நான் போனில் பேசிக் கொண்ட போது பின்னால் ஏதோ இரைச்சல் சத்தம் கேட்டது என்னவென்று விசாரித்த போதுதான் தெரிந்தது பக்கத்துவீட்டில் உள்ள பெரியவர் தன் மனைவியிடம் சண்டை போட்டு கொண்டிருப்பது என்று. படித்த பெரியவர்களே இப்படி சண்டை போட்டு கொண்டால் அதை பார்க்கும் அவரின் மணமாகிய குழந்தைகள் மற்றும் பேரன் பேத்திகள் மனதில் எப்படி இந்த விஷயம் பதியும். ஒரு வேளை அப்படி சண்டை போடுவதுதான் சரி என்று மனதில் அழமாக பதிந்து விடுமோ என்று என் மனதில் ஒரு ஆதங்கம். வழிகாட்டியாக இருக்க வேண்டிய பெரியவர்களே இந்த வயதில் சண்டை போட்டால், எப்படி இந்த வளரும் சமுதாயம் அதை நல்ல படியாக எடுத்து கொள்ளூம்.

கடவுள் அமைத்து வைத்த மேடை ,இணைக்கும் கல்யாண மாலை இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று, என்று இந்த பூவுலகில் நமக்கு அமைவதுதான் வாழ்க்கை. அந்த வாழ்க்கை விதியால் அமைவது, அதை நம் மதியால் வெல்வது என்பது, நம்மால் மட்டும் செய்ய முடியும் ஒரு செயலாகும். அதை செயல்படுத்தி கடவுளின் துணையோடு வாழ்க்கையை எப்படி இனிமையாக்குவது என்பதை நாம் பார்ப்போம்.

நாம் பிறரை மாற்ற விழைவதை விட்டுவிட்டு நாம் மாறினால்தான் என்ன?துன்பம் போக்க இதை விட்டால் வேறு வழி ஏதும் உண்டா என்ன?

வாழ்நாள் முழுவது உடனிருக்கும் நம் துணைக்கு பிடிப்பதை நாம் செய்து , பிடிக்காததைச் செய்யாது விடலாம்தானே!

விட்டுக் கொடுத்து வாழ நம்முடைய துணைக்கு தெரியாவிட்டால், நாமே விட்டுக் கொடுத்துத்தான் பார்க்கலாமே நம் வாழ்வே மாறிடுமே!

நான் தான் பெரியவன் நல்ல அறிவாளி என இருவரும் நினைப்பதால் தானே தினம் வாக்குவாதம். அதனால் உண்மையில் யாரு அறிவாளியோ அவர்கள் மற்றவர்களை அறிவாளி ,பெரியவன் என்று சொல்லி ஏற்றுக் கொள்வதுதானே, அறிவாளிக்கு ஏற்ற செயல். அதை நாம் இன்றிலிருந்து செய்ய தொடங்கலாமே!

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் என அறிந்தும் – இந்த மானிடப் பிறவியைக் கசந்து போக வைக்க முயலாமல் வசந்தம் நோக்கி செல்ல முயற்சிக்கலாமே?

இதைப் பின்பற்றினால் வாழ்வில் இன்பந்தானே! அதுதான் நாம் எல்லோரும் எதிர்பார்பது. இதை நாம் எல்லோரும் தெரிந்து வைத்திருந்தும் பின்பாற்றாமல் இருக்கிறோமே அது ஏன்????????? சிறிது நேரம் இதைப்பற்றி சிந்தித்து விட்டு பின் வரும் பாடலை வாய்விட்டு பாடிப் பாருங்களேன். உங்கள் வாழ்க்கையில் ஒரு புது விதமான ஆனந்தம் உண்டாவதை உணர்விர்கள்.

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
உந்தன் ஞாபகம் பூமழை தூவும்

காற்றினில் சாரல் போல பாடுவேன்
காதலைப் பாடிப் பாடி வாழ்த்துவேன்
நீ வரும் பாதையில் பூக்களாய்ப் பூத்திருப்பேன்

ஆனந்தம் ஆனந்தம் பாடும்..

மனதில் நின்ற காதலியே
மனைவியாக வரும்போது
சோகம் கூட சுகமாகும்
வாழ்க்கை இன்ப வரமாகும்!

உன் வாழ்வில் செல்வங்கள் எல்லாம்
ஒன்றாகச் சேர்ந்திட வேண்டும்
பூவே உன் புன்னகை என்றும்
சந்தோஷம் தந்திட வேண்டும்

ஆசைக் காதல் கைகளில் சேர்ந்தால்
வாழ்வே சொர்க்கம் ஆகுமே!
ஆசைக் காதல் கைகளில் சேர்ந்தால்
வாழ்வே சொர்க்கம் ஆகுமே!

ஆனந்தம் ஆனந்தம் பாடும்...

இன்னும் நூறு ஜென்மங்கள்
சேர வேண்டும் சொந்தங்கள்
காதலோடு வேதங்கள்
ஐந்து என்று சொல்லுங்கள்

தென் பொதிகை சந்தனக் காற்று
உன் வாசல் வந்திட வேண்டும்
ஆகாய கங்கைகள் வந்து
உன் நெஞ்சில் பொங்கிட வேண்டும்

கண்கள் கண்ட கனவுகள் எல்லாம்
நிஜமாய் இன்று ஆனதே!
கண்கள் கண்ட கனவுகள் எல்லாம்
நிஜமாய் இன்று ஆனதே!

ஆனந்தம் ஆனந்தம் பாடும...

5 comments:

  1. நல்ல பதிவுதான், ஆனால் எதுக்கு நித்தியானந்தாவை வீணாக வம்புக்கு இழுத்திருக்கிறீர்கள்?

    ReplyDelete
  2. படங்களும் பதிவும்
    தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ள பாடலும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்
    எனது மூன்று முத்துக்களுக்கான பின்னூட்டத்திற்கு நன்றி
    நானும் தங்களச் சந்திக்க ஆவலாக உள்ளேன்

    ReplyDelete
  3. வாழ்நாள் முழுவது உடனிருக்கும் நம் துணைக்கு பிடிப்பதை நாம் செய்து , பிடிக்காததைச் செய்யாது விடலாம்தானே!//


    தோழி : ஏன்டி உன் கணவருக்கு பிடிச்சதை கொடுக்கவேண்டியதுதானே?..

    தோழி 2: ம். ஆனா அவருக்கு என் தங்கச்சியல்லா புடிச்சிருக்கு..


    ------------

    ஆக பிரச்னை இப்படி இருப்பதால்தானே ஆரம்பிக்குது..?

    விட்டுக்கொடுக்க முடிந்தவற்றை கண்டிப்பாக விட்டுக்கொடுக்கலாம்.. ஆனால் சுயமரியாதையை கொடுத்து அடிமையாக இருப்பதல்ல..யார் மீது தவறென்றாலும் அன்பாக சொல்லிப்பார்க்கலாம் . கேட்காவிட்டால் மட்டுமே அதிரடியில் இறங்கலாம்.. :)

    ReplyDelete
  4. அன்புக்கு மட்டுமே அடிமையாக இருக்கணும்..

    நல்ல பதிவு.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  5. பாட்டும் பதிவு படமும் அருமை!!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.