உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, July 20, 2011

யாராவது ஏற்றுக் கொண்டால்?


யாராவது ஏற்றுக் கொண்டால்?மாட்டுக்கு போடும் மூக்கணாங்கயிறு போல

நீ எனக்கு போடும் தாலிக் கயிற்றை ஏற்று

இரவில் உன் படுக்கையில் ஒரு சிறந்த தாசியாகவும்

பகலில் உன் பெற்றோர்களுக்கு சேவை செய்யும் சமுக சேவகியாகவும்

இதற்கு இடைப்பட்ட நேரத்தில் உன் குழந்தைகளை கவனிக்கும் தாதியாகவும்

பின் தூங்கி முன் எழுந்து உன்னை கண் கண்ட தெய்வமாக பாவிக்கவும்

தயாராக இருக்கும்  என்னை யாரேனும் ஏற்றுக் கொண்டால்

அடிமையாக வாழ சம்மதிக்கும் நன்றியுள்ள ஒரு விதவை

(சுற்றியுள்ளவர்களின் காமப்பார்வையில் இருந்து தப்பிக்க இதைவிட்டால் வேறுவழி ஏதுமில்லை)

11 comments :

 1. சமுதாயத்தின் பார்வையில் பாவப்பட்ட ஜென்மமாக பாவிக்கப்படும் விதவையின் மனதை எடுத்துரைக்கும் வரிகள் ஒவ்வொன்றும் வலியை ஏற்படுத்துகிறது

  ReplyDelete
 2. கோரிக்கையற்றுக் கிடக்கும்
  வேரில் பழுத்த பலாக்களின்
  கோரிக்கையாக நீங்கள் படைத்துள்ள பதிவு
  அருமை
  ஒரு சுய நலமிக்க ஆணுக்கு இவையெல்லாம் தானே
  தேவைப்படுகிறது
  தரமான பதிவு தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. ஆமினா மேடம் & ரமணி சார் உங்கள் இருவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

  ReplyDelete
 4. அடிமையாக வாழ சம்மதிக்கும் நன்றியுள்ள ஒரு விதவை

  (சுற்றியுள்ளவர்களின் காமப்பார்வையில் இருந்து தப்பிக்க இதைவிட்டால் வேறுவழி ஏதுமில்லை)//

  சாட்டையடி..

  காமப்பார்வை பார்க்க முடிந்தவனுக்கு வாழ்வளிக்க முடியுமா என்ன?..

  ReplyDelete
 5. நிதர்சனத்தை சொல்லியுள்ளீர்கள் .. இருப்பினும் விதவை , முதிர்கன்னி என்ற காரணத்தினால் ஒரு பெண் தரம் குறைந்து போவதேயில்லை..

  அவள் மாபெரும் சக்தி .. அவள் சக்தியை அவளுக்கு உணர்த்த முன்வரணும் ஒவ்வொருவரும்..

  ReplyDelete
 6. சாந்தி மேடம் கருத்துக்கு நன்றி. நான் என்ன நிணைக்கிறேன் என்றால் இந்த சமுதாயத்தில் மற்றவர்களைப் போல சகல சந்தோஷங்களோடும் வாழ வேண்டியவர்கள் என்ற எண்ணம் விதவைப் பெண்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும் அதே நேரத்தில் தான் தியாகம் செய்ததாக அல்லாமல் முழுமனத்துடன் விதவைப் பெண்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு ஆண்கள் மத்தியில் வளர வேண்டும்

  ReplyDelete
 7. வரிகள் ஒவ்வொன்றும் சாட்டையடிகள். மனதை தொட்டு வலியை ஏற்படுத்துகிறது.

  ReplyDelete
 8. நல்ல பதிவு. விதவைகள் வந்தால் ஒதுங்குவது - விதவைகளை வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு அழைக்க மறுப்பது இந்த மாதிரியான மூடத்தனம், இழிச் செயல்கள் நமது சமுதாயத்தில் உள்ள கேடு ஆகும். எதற்கும் மேலை நாட்டை ஒப்பிட்டு பாட்க்கும் நாம் ஏன் இந்த விஷயத்தில் மட்டும் அவர்களை ஒப்பிட்டு பார்ப்பதில்லை.
  இன்றைய இளைஞர்கள் நினைத்தால் இதற்கு ஒரு முடிவு கிடைக்கும் .

  ReplyDelete
 9. உஷா ராணி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 10. அனு உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இளைஞர்களிடம் தேவை புரட்சியல்ல ஒரு புரிந்துணர்வு தான் தேவை அதுமட்டும் வந்துவிட்டால் நாம் இதைப்பற்றி கவலைப்படவேண்டியது இல்லை.

  ReplyDelete
 11. எனது பதிவை படித்த பின் நீங்கள் இடும் இந்த மாதிரியான நல்ல கருத்துக்களை எப்போதும் வரவேற்கிறேன். இந்த மாதிரியான பின்னுட்டங்கள் தான் எனக்கு சந்தோசத்தை தருகின்றன. முதல் வடை ,தோசை என்பது போன்ற பின்னூட்டங்கள் எனக்கு தேவையில்லை. அப்படி வரும் பின்னுட்டங்களை நான் ஃப்ளிஷ் செய்வது இல்லை. இதை ஏன் நான் இங்கு சொல்கிறேன் என்றால் சில பேர்கள் அது போல மீண்டும் மீண்டும் அனுப்புகிறாரகள் அப்படி செய்ய வேண்டாம் என்பதற்காகத்தான் இந்த விளக்கம். நன்றி

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog