உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, July 10, 2011

தமிழகத்தின் படித்த புதுமை பெண்கள் ஏமாறுவது இப்படித்தான்.


தமிழகத்தின் படித்த புதுமை பெண்கள் ஏமாறுவது இப்படித்தான்.



ஏமாறுவதற்கு என்று பிறந்தவர்கள் பெண்கள் அதில் அன்று முதல் இன்று வரை சிறிதளவு மாற்றம் என்பது இல்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. படிக்காதவர்களை விட படித்தவர்கள் ஏமாறுவதுதான் அதிகமாக இருக்கிறது . இதற்கு காரணம் படித்தவர்கள் எப்படி நன்றாக படிப்பது என்ற நெளிவு சுளிவுகளை மட்டும் அறிகிறார்கள் ஆனால் வாழ்க்கையின் நெளிவுகளை அறிய மறந்துவிடுகிறார்கள். இந்த படித்த பெண்கள் வாட்ட சாட்டமாக  இளமைக்கே உரிய மிடுக்குடன் காரில் அல்லது பைக்கில் வரும் ஆண்களை பார்த்ததும் இவர்கள் நல்ல பணியில் இருப்பதாக நம்பிவிடுகிறார்கள்.

இவர்களின் நட்பு ஆரம்பத்தில் மிக ஒழுக்கத்துடன் இருக்கும் லைப்ரெரி, கோயில்கள், ஒட்டல்களுக்கு மட்டுமே சென்றுவருவார்கள். இந்த மாதிரியான ஒழுக்க நடவடிக்கைகளால் நம்பிக்கை என்ற விதைகள் மறைமுகமாக பெண்களின் மனதில் துவப்படுகின்றன. அதன் மூலம் நல்லவன் என்ற செடி பெண்களின் மனதில் துளிர்விட்டு வாழ்க்கையே இவரோடுதான் என்ற முடிவுக்கு வருகிறார்கள் இந்த படித்த முட்டாள்களான பெண்கள்.



முதலில் நம்பிக்கையை ஏற்படுத்திய இந்த ஆண்களின் அடுத்த செயல் அவர்களுக்குள்ளான நெருக்கத்தை அதிகரிப்பதுதான். அதற்காக இந்த பெண்களை தியோட்டருக்கு கிளு கிளுப்பான ஆங்கில படங்களை பார்க்க கூட்டி செல்வது, பீச்சுக்கு கூட்டி செல்வது என்ற நடவடிக்கைகள் மூலம் ஆரம்பிக்கும். இந்த இடங்களில் அரங்கேறும் காதல் காட்சிகள் அந்த பெண்களுக்கு ஒரு விதமான கிளுகிளுப்பை தருவதோடு நமது வாழ்க்கையும் இப்படித்தான் சந்தோஷமாக இருக்கப் போகிறது என்று வண்ண மயமான கனவுகளில் மிதக்க ஆரம்பித்து ,அடுத்த கட்ட பயணத்துக்கு  இந்த நம்பிக்கை என்ற செடி தொடுதல்கள் மூலம்  வசந்த காலத்திற்குள் செல்ல  ஆரம்பிக்கிறது.

இந்த வசந்தகாலத்தில்  இருவரும் கை கோர்த்து செல்லுதல் என்ற செயலால் இந்த பெண்ணிற்க்குள் அந்த ஆணின் மீது ஒரு அதீத நம்பிக்கை ஏற்ப்பட்டு இவன் வாழ்க்கையின் கடைசி நாள் வரை நம்முடன் வருவான் என்று நம்பி முத்தங்களை பறிமாறிக் கொள்ளவார்கள்.

அடுத்த கட்டம் இந்த ஆண்கள் இந்த மாதிரியான இளிச்சவாயா பெண்களை பார்ட்டிகளுக்கு  அழைத்து செல்வதுதான் அங்கு சென்று பீர் உடலுக்கு நல்லதுதான் என்று  நம்பவைத்து  அவர்களை பீர் அருந்த செய்வது.( உடம்புக்கு பீர் நல்லது என மற்றவர்களுக்கு கூறும் இவர்கள் வீட்டிற்கு செல்லும் போது தன் அம்மாவின் உடல் நலமாக இருக்க பீர் வாங்கி செல்வார்களா?) அதன் பின் அங்கு நடக்கும் ஆட்டங்களில் ஆண் பெண் என்று பேதமில்லாமல் ஆடுவது அவர்களுக்குகிடையே கூச்சத்தை அறவே போக்கிவிடுகிறது.

அரைகுறை வெளிச்சத்தில் தோளில் கை போட்டும் இடையை தொட்டும்  அந்த பெண்ணுடன் ஆடுவதால் அந்த பெண்ணீற்கு மறைமுகமாக  உணர்ச்சியை தூண்டுகிறார்கள். அது மட்டுமல்லாமல் மதுவிலும் அந்த பெண் அறியாமல் போதை பொருட்களை கலந்து விடுவதால் தன்னிலை மறந்து இந்த இன்ப சீண்டல்கள் அவர்களை தரளாமான உறவுக்கு வழிவகுத்து சீக்கிரமே உறவும் அரங்கேறுகிறது.

அதன் பின் சில மாதங்களுக்கு இந்த உறவுகள் தொடர்ந்து பின் அந்த ஆணுக்கு அந்த பெண் கசக்க ஆரம்பிக்கிறாள். புது சுகம் தேடி அந்த ஆண் வேறு ஒரு பெண்ணின் மனதில் மீண்டும் நம்பிக்கை விதையை விதைக்க போகிறான், இந்த பெண்ணின் நிலைமையோ குளிர்காலத்தில் மரம் பட்டுபோவது போல் அவளது வாழ்க்கை பட்டு போக ஆரம்பித்து நிலைமை கவலைக்குரியதாக மாறி விடுகிறது.

அவர்கள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல பாதிப்புகளுக்கு உள்ளாகி சிந்திக்கும் ஆற்றல்,செயல் திறன் குறைந்தது இறுதியாக ஆரோக்கியத்தையும் இழக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு ஆண்களின் மீதான நம்பிக்கை குறைந்து திருமணம் செய்து கொள்ளவும் தயக்கம் காட்டுகிறார்கள். சில பெண்கள் இதன் காரணமாக பார்டிகளுக்கு சென்று போதை பழக்க வழக்கங்களுக்கு மிகவும் அடிமையாகி தன் வாழ்க்கையை மற்றும் பாழ் அடித்து கொள்ளவது மட்டுமல்லாமல் தமது குடும்பத்தின் ஒட்டு மொத்தமான கெளரவத்தையும் சிதைக்கிறார்கள்.



இந்த செய்தி சில இளம் வயது பெண்களின் சிந்தனையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி வாழ்க்கையை புரிந்து கொள்ள செய்யும் ஒரு சிறு முயற்சியே. இந்த பதிவுவை படிக்கும் பெண்களுக்கு இது உபயோகமான செய்தி என்று நீங்கள் கருதினால் உங்கள் பெண் குழந்தைகளுக்கும் நண்பர்களுக்கும் அறிமுகப் படுத்துங்கள். அதை போல பெண்களை மதிக்கும் ஆண்கள் இதைப்படித்தால் உங்களின் பெண் நண்பர்களுக்கும், சகோதரிகளுக்கும், பெண் குழந்தைகளுக்கும் அறிமுகப் படுத்தலாமே

7 comments :

 1. யதார்த்தத்தை அப்படியே எழுதியுள்ளீர்கள். எத்தனை பேர் படித்து பயன் பெறுவார்களோ பார்ப்போம்.

  ReplyDelete
 2. மிக சரியான கருத்தோடான பதிவு.

  "விழுவது தவறில்லை. விழுந்த பின் எழாமல் இருப்பதே தவறு " நியாபகம் வருது

  தன்னை தற்காத்துக்கொள்ளும்படி பெண் குழந்தைகள் வளர்க்கப்படணும்..

  ஒருவேளை என் மகள் " unwed mom " ஆனால் கூட முதலில் நான் திட்டினாலும் , அதை பக்குவமா ஏற்பேன், மிக துணிவு தருவேன்..

  வாழ்க்கையில் சோர்வடைய இது ஒன்றும் பெரிய விஷயமல்ல..

  இன்னும் சாதிக்க எவ்வளவோ உள்ளது உலகில்..

  பெண் என்ற ஒரே காரணத்துக்காக தலை குனிய அவசியமேயில்லை..

  இருப்பினும் பதிவில் சொல்லப்பட்ட கருத்துகளை போல் மிக கவனமாக இருக்க பழகிக்கணும் .. போலிகளை அடையாளம் கண்டுகொள்ளணும்..

  நல்ல பதிவு வாழ்த்துகள்..

  ReplyDelete
 3. டாக்டர் கந்தசாமி அவர்களே உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி. இந்த பதிவை சில இளம் பெண்களாவது படித்து இந்த மாதிரி வரும் ஆண்களை புரிந்து தூரத்தில் விலக்கி வைத்து நல்ல வாழ்க்கை வாழ்ந்தால் நான் மிகவும் சந்தோஷம் அடைவேன்

  ReplyDelete
 4. //விழுவது தவறில்லை. விழுந்த பின் எழாமல் இருப்பதே தவறு ///

  மிக சரியாகச் சொன்னிர்கள் சாந்தி மேடம்"

  ReplyDelete
 5. இந்த பெட்டிகளும் அப்படித்தான் நண்பரே, நல்ல பையன், வைத்துக் காப்பாற்றுவான், ஒழுக்கம் இருக்கும், படித்து பணியிலும் இருப்பான், திருமணம் செய்து கொள்ள விருப்பப் படுவான்- இந்த மாதிரி பையனை அவர்கள் நம்ப மாட்டார்கள். ஏமாற்றுப் பேர்வழிகளிடம் எளிதில் மோசம் போவார்கள். ஏனோ தெரியவில்லை.

  ReplyDelete
 6. இந்த காலத்தை அப்படியே படம் பிடித்துள்ளீர்கள்.

  ReplyDelete
 7. I don't know to type in Tamil. So i am typing in English.

  This is not only for girls. It is same for boys. I have seen lots of girls (mostly rich) doing such things. They date with some guys and after someday they will move to someother.

  And also, this is called culture development. We can't stop such things. In future almost all boys and girls will be like this.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog