Friday, June 24, 2011


இணையத்தில் ஒரு நாகரிக பிச்சை எடுக்கும் எழுத்தாளரும், நல்ல செயல்களை செய்யும் பதிவாளர் கூட்டமும்


மாறிவரும் உலகில் மாறாதது என்பது ஏதுமில்லை. எங்கும் மாற்றம் எதிலும் மாற்றம் பிச்சை எடுப்பதிலும் ஒரு மாற்றம், அந்த மாற்றம் இணையத்திலும் ஒரு தமிழக எழுத்தாளாரால் ஆரம்பித்து நல்லபடியாக நடந்து வருகிறது.


நான் சிறுவயதில்  கோயில்களின் நகரமாகிய மதுரையில் வசிக்கும் போது அங்குள்ள சிறுசிறு கோயில்களில் விழா நடப்பதுண்டு. அந்த விழாக்களை நடத்துபவர்கள் அந்த கோயிலுக்கு எந்த சம்பந்தமில்லாத அந்த தெருவில் வசிக்கும் சில அயோக்கியர்களால் பணம் வசூல் செய்யப்பட்டு அதில் இருந்து வந்த பணத்தில் பாதியளவு அந்த கோயிலுக்காக செலவிட்டு மீதி பணத்தில் குடியும் கூத்தும்  கும்மாளமாக அதை  நடத்துபவர்கள் செலவழிப்பார்கள்,  அடுத்தவர் பணத்தில் ஆட்டம் போடுவதுதான் இந்த பிச்சைகாரர்களின் செயல்.



 அதுபோலதான் இந்த காம சாட்(Chat) புகழ் தமிழ் எழுத்தாளர் இணையத்தில் நன்கொடை  என்ற பெயரில் பிச்சை எடுப்பார்.அவர் ஒரு இணையதளமும் நடத்தி வருகிறார். அதை நடத்துவதற்கு அதிக செலவு ஆகிறது என்றும் அதற்காக பணம் தேவை என்று வசூலிப்பார் அந்த வகையில் நல்ல பண வசூல் ஆகிறது என்றாலும் எங்கே அதற்கு வருமானவரி கட்டவேண்டும் என்பதால் வசூல் முடிந்ததும் தமிழர்கள் மிக கஞ்சர்கள் வசூலே ஆகவில்லை என்றும் புலம்புவார். ஆனால் அவர் குடிப்பதற்கும் கூத்து அடிப்பதற்கும் பணம் எங்கு இருந்து வருகிறது என்பது தெரியவில்லை.
 

இவர் தான் ரொம்ப ஒப்பனாக எல்லாவற்றையும் கூறுபவர் என்று தன்னை அறிமுகப்படுத்தி எல்லாவற்றையும் அவரின் இணைய தளத்தில் போடுபவர். தனக்கு நன்கொடை கொடுத்தவர்களின் லிஸ்டையும் போட வேண்டியதுதானே?
 

இந்த காமுக எழுத்தாளரின் புதிய வேண்டுகோள் (பிச்சை)

டிசம்பர் 17 அன்று மாலையில் காமராஜர் அரங்கத்தில் இந்த எழுத்தாளரின் வாசகர் வட்டத்தின் முதல் விழா நடைபெறும் என்றும். அதற்காக இப்போதே அரங்கத்தை ரிஸர்வ் செய்து வைத்துக் கொள்ள வேண்டுமென்றும். மார்கழி இசை விழாவின் காரணமாக கடைசி நேரத்தில் ஹால் கேட்டால் கிடைக்காது என்றும். இன்னும் ஓரிரு வாரத்தில் ரிஸர்வ் செய்து விடவேண்டுமென்பதால். 35,000 ரூ. ஆகும் என்றும். நண்பர்கள் தங்களால் முடிந்த அளவு பணம் அனுப்பி வைத்தால் அரங்கத்தை ரிசர்வ் செய்து விடலாம். எவ்வளவு குறைந்த தொகையாக இருந்தாலும் பரவாயில்லை. தயக்கம் வேண்டாம் என்று பிச்சை எடுக்க தொடங்கியுள்ளார்.

 என் மனதில் எழும் கேள்விகள் இதுதான். ஏன் இவர் இந்த அளவு செலவு செய்து காமராஜர் அரங்கத்தில்தான் நடத்த வேண்டுமா?  அதற்கு பதிலாக ஏதாவது ஒரு பள்ளி கூட அரங்கில் சிறிதளவு வாடகை கொடுத்து அங்கு நடத்த கூடாதா? இன்னொரு கேள்வி அப்படி என்னதான் அவர் வாசகர் கூட்டத்தில் பேச போகிறார்கள்? எப்படி பெண்களை ஏமாற்றுவது என்பது பற்றியா அல்லது அவரது வாசகர் வட்டத்தில் உள்ள ஆண், பெண் வாசர்களை ( டேட்டிங்க்)ஒருவருக்கொருவர் அறிமுகப்படலமா?  அல்லது அவர்களது வாசகர் வட்டம் மூலம் நாட்டுக்கு ஏதும் நல்லது செய்ய போகிறாரா?

புரிந்தவர்கள் அல்லது அவரின் வாசகர் வட்டத்தில் இருப்பவர்கள் விளக்கம் தரலாம்.

 நல்ல செயல்களை செய்யும் பதிவாளர் கூட்டம். ஆமாம் பதிவாளர்கள் என்ற இந்த சிறிய எழுத்தாளர்கள் சமிபத்தில் நெல்லையில் கூட்டம் கூட்டி நல்லபடியாக நடத்தி காண்பித்ததுடன் அந்த கூட்டதில் சிறிதளவு பணம் திரட்டி ஒரு நல்ல செயலுக்காக ஒரு அமைப்புக்கு நன்கொடை கொடுத்துள்ளனர். இது ஒரு நல்ல ஆரம்பமே. எழுத்துலகில் இந்த பதிவாளர்கள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.இந்த சிறிய கூட்டத்தினரிடம் இருந்து தன்னை பெரிய எழுத்தாளர் என்று கூறி கொள்பவர் கற்று கொள்ள வேண்டியது ஏராளம்.

நெல்லையில் பதிவாளார் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் என் பதிவின் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். வாழ்க வளமுடன்.

3 comments:

  1. நெல்லையில் பதிவாளார் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் என் பதிவின் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். வாழ்க வளமுடன்

    ReplyDelete
  2. நெல்லை பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டதில் பெருமைப்படுகின்றேன். இருப்பினும் உங்கள் சில வரிகள் கலக்கம் அடைய செய்கின்றது! எப்படி பெண்களை ஏமாற்றுவது என்பது பற்றியா அல்லது அவரது வாசகர் வட்டத்தில் உள்ள ஆண், பெண் வாசர்களை ( டேட்டிங்க்)ஒருவருக்கொருவர் அறிமுகப்படலமா? அல்லது அவர்களது வாசகர் வட்டம் மூலம் நாட்டுக்கு ஏதும் நல்லது செய்ய போகிறாரா?/////எப்படியோ இலக்கிய பன்பாட்டு தளத்திலூள்ள நாமும் சிந்தனையில் செயலில் தூய்மை வேண்டும்.

    ReplyDelete
  3. சமுகத்திற்கு ஏதேனும் நல்லது செய்யவேண்டும் என்று ராமருக்கு அணில் போல பணம் திரட்டி தொண்டு செய்ய நினைக்கும் நெல்லை பதிவர் சந்திப்பு எங்கே!! அவருடைய வாசகர் வட்ட கூட்டம் நடத்தவே காசு கேட்கும் அந்த எழுத்தாளர் எங்கே..என்ன செய்ய இப்படியும் மக்களை ஏமாற்ற நினைக்கும் சிலர்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.