உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, June 23, 2011

ரஜினியின் ராணா படம் நிறுத்தி வைக்கப்பட்டது ( திடீர் அறிவிப்பு)


ரஜினியின் ராணா படம் நிறுத்தி வைக்கப்பட்டது ( திடீர் அறிவிப்பு)ரஜினியின் உடல் நலம் கருதி அவரால் பழயை படி ஆக்சன் ஹீரோவாக நடிக்க முடியாது என்று கருதியதாலும், சிகிச்சைக்கு அப்புறம் ஜெயலலிதா அவர்களுடன் கலந்து   உரையாடியதால் புதிய படத்தில் நடிக்க ரஜினி ஒப்பந்தம் செய்து கொண்டதாக செய்திகள் வந்துள்ளது.கலைஞர் அவர்கள்  திரைப்படங்களுக்கு வசனம்  மட்டும் எழுதி அதிக அளவு பணம் சம்பாதித்ததை அறிந்த ஜெயலலிதா, அவரின் வழியை பின்  பற்றி பணம் திரட்ட, ஒரு  புதிய படத்திற்கு திரை வசனம் எழுதி ,அந்த படத்தையும் தானே எடுப்பதாக அறிவித்து, பட தொடக்க விழாவையும் நடத்தியுள்ளார்.அந்த புதிய படத்தில் தமது புதிய நண்பர் ரஜினிகாந்த்,கமல்,விஜயகாந்த் மற்றும் பலரை  நடிக்க ஏற்பாடு செய்துள்ளார். அதனால் தான் ராணா படம் தற்போது தற்காலிகமாக  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.புதிய திரைப்படத்திற்கு 'தாத்தா சொல்லைத் தட்டாதே"... என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் முழுவதும் ரஜினிகாந்து வீல் சேரில் உட்கார்ந்து வருவதாக திட்டமிடப்பட்டுள்ளது . இதில் விஜயகாந்து போலிஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார்.இதில் 2ஜி புகழ்  ராசா கேரக்டரை  வடிவேல் ஏற்று நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.  இந்த படத்தில் விஜய காந்த் வடிவேலை போட்டு தாக்கும் காட்சி அதிக செலவு செய்து எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதில் வரும் மற்ற வேடங்களில் நடிப்பவர்கள் :
அழகிரியாக - மன்சூர் அலிகானும்.
ஸ்டாலினாக - விவேக்குமும்
தயாநிதியாக - கமலஹாசனும்
இளங்கோவனாக - பிரகாஷ்ராஜூம்
கனிமொழியாக - சிநேகாவும் நடிக்க ஏற்பாடாகியுள்ளனர்

இந்த படத்தில் வைரமுத்துவின் பொன்னான வரிகளில் பாடல்கள் எழுதப்பட்டுள்ளது. பாடலில் வரும் சில வரிகள்

ஒரு கூடை நட்பு,
ஒரு கூடை சிநேகம்
ஒன்றாகச் சேர்ந்த அணிதானே எங்க அசத்தல் கூட்டணி
என்ற பாடலும்

தில்லிக்கு ராஜான்னாலும்
தாத்தா சொல்லைத் தட்டாதே!
திஹார் சிறையே நிறைந்துபோனாலும்
தாத்தா சொல்லைத் தட்டாதே! என்ற சூப்பர் கிட்டாகும் பாடல் எழுதப்பட்டுள்ளது.

இந்த  புத்தம் புதிய திரைப்படம். உங்கள் வெள்ளித் திரையில் விரைவில் உங்களைத் தொல்லை செய்ய வருகிறது...இதற்கான டிரெய்லர்கள் மிக விரைவில் உங்கள் உலகத் தொல்லைக் காட்சிகளில் காணத் தவறாதீர்கள்.

கண்டுதொலையுங்கள்! இல்லை... தொலைந்தீர்கள்!நமது  மதுரை தமிழ்காரனுக்கு ( Madurai Tamil Guy )முதலில் இந்த செய்தி  வந்தது மட்டுமல்லாமல் அந்த படவிழாவிற்கு அழைக்கப்பட்ட ஒரே பதிவாளரும் ஆவார். அந்த விழாவில் நடந்த நிகழ்சிகள்  அவரால் படம்  எடுக்கப்பட்டதுதான் இந்த பதிவில் வந்த படங்கள். ஹீ..ஹீ.ஹீ.......

6 comments :

 1. ஹீ..ஹீ.ஹீ.......

  ReplyDelete
 2. கதாபாத்திரங்களின் தேர்வு அருமை.நிச்சயமாக தேசிய விருது உறுதி.

  ReplyDelete
 3. அதனாலென்ன, கிராபிக்ஸ் வச்சு ராணாவை முடிச்சிட்டா போச்சு. [எந்திரனில் இவருடைய காட்சிகள் 80% கிராபிக்ஸ் மூலமே எடுக்கப் பட்டதாம். இன்னொன்னு, தற்போது இவருக்கு சிறு நீராக மாற்று அறுவை சிகிச்சை செய்யப் பட்டுள்ளதாகவும் இவரது மூத்த மகள் சிறுநீரக தானம் செய்துள்ளதாகவும் தகவல்கள் கசிகின்றன. இதை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. இவருக்கு பல முறை டயாலிசிஸ் செய்யப் பட்டது, சிங்கப்பூருக்கு போகும் போது களைப்பான குரலில் பேசியது, கூடவே இவரது மகள்களும் சென்றது என்று கூட்டி கழித்துப் பார்த்தால் இது உண்மையாக இருக்கும் என்றே தோன்றுகிறது. இதனால், உடல் நலன் கருதி ஒருவேளை படத்தை நிஜமாகவே நிறுத்தலாம், யார் கண்டது?]

  ReplyDelete
 4. பட்டய கிலப்புங்க தலைவறே!

  ReplyDelete
 5. ஹலோ பாஸ் ....எங்க ரஜினிய கிண்டல் பண்ணாம பதிவு போட பழகுங்க..
  நன் தப்பான வார்த்தை use பன்னல............

  by
  மல...............

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog