Friday, June 17, 2011

உங்களுக்கு தெரியாத 'அந்த விஷயங்கள்"
நீங்கள் ஒருத்தரை ஒரு நிமிடம் முத்தமிட்டால் அதனால் நீங்கள் இருவரும் 2.6 கலோரியை எரிக்கிறீர்கள்.
மும்பையில் நீங்கள் ஒரு நாள் சுவாசிக்க கூடிய காற்று, 2 1/2 பாக்கெட் சிகரெட் உபயோகிப்பதற்கு சமமானது
இந்தியாவில் மனிதனுக்கு வேண்டிய டாய்லெட்டை விட செல்போன்கள் அதிகம்.
உங்களால் முக்கை மூடிக்கொண்டு 'ஹம்" செய்ய முடியாது.
நீங்கள் கொட்டாவி விடும்போது நாக்கை தொட்டால் அது கொட்டாவியை உடனே நிறுத்திவிடும்.
பெண்கள் ஒரு நாளைக்கு 7000 வார்த்தைகள் பேசுகின்றனர் ஆண்கள் 2000 வார்த்தைகள் தான் பேசுகின்றனர்.

இந்தியாவில் மில்லியன் மக்களுக்கு 11 ஜட்ஜ் மட்டுமே உள்ளனர். இப்போது வழக்கில் உள்ள எல்லா கேஸுக்களை முடிக்க 466 ஆண்டுகள் பிடிக்கும்.

மேலேயுள்ளவை உண்மையான செய்திகள் இதன் பிறகு வருபவது எனக்கு இமெயிலில் வந்தது அதை சிறிது மாற்றி என் வழியில் நீங்கள் படித்து ரசிக்க தந்துள்ளேன்.

ஏன் இந்தியா பிரச்சனையிலே இருக்குன்னு உங்களுக்கு தெரிஞ்சு இருக்க வாய்ப்பு இல்லைனா மேலே படியுங்க.

மக்கள் தொகை: 110 கோடி  அதில் 9 கோடி ஓய்வு பெற்றவர்கள்

30
கோடி மாநில அரசு பணியாளர்கள்  17 கோடி மத்திய அரசு பணியாளர்கள் (இருவருமே வேலை செய்யறதில்லை)

1
கோடி IT ஆளுங்க (அவங்க என்னிக்கு இந்தியாக்கு உழைசாங்க, பாதி நேரம் நெட்லதான் டைம் செலவிடுறாங்க)

25
கோடி பள்ளில படிப்பவர்கள்( அதில் பாதி பேர் மட்டும் படிக்க சென்றவர்கள் மீதமுள்ளவர்கள் கடனே என்று செல்லுபவர்கள்)

1
கோடி 5வயசுக்கும் கீழானவர்கள்

15
கோடி வேலை தேடுவோர் ( டிக்கடையில் அரட்டை அடித்துதான்)

1.2
கோடி நோயாளியாக  ஆஸ்பிடலில் இருப்போர் (சூப்பர் ஸ்டாரையும் சேர்த்துதான்)

ஒரு புள்ளிவிபரத்தின் படி 79,99,998பேர் ஜெயிலில் இருகாங்க ( ராசா, கனிமொழியும்தான்)


மிச்சம் இருப்பது  இதை படிக்கும் நீயும்  இதை எழுதிய நானும்தான்

நீ எப்போ பார்த்தாலும்  பதிவுகள்  படிக்கிறதுல /மெயில் அனுப்பறதுல/ பின்னுட்டம் போடுறதுல  பிஸி

அய்யோ அப்ப நான் மட்டும்  எப்படி ஒருத்தானா  ஜெயலலிதா கூட  சேர்ந்து இந்தியாவை காப்பாத்துவேன்????????


என்ன மக்காஸ் உங்களுக்கு இந்த விஷயம் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை தானே? ஹீ.....ஹீ.. நீங்க வேற எந்த விஷயத்தையும் எதிர் பார்த்து இங்கே வந்து இருந்திங்கனா அதற்கு நான் பொறுப்பு அல்ல

5 comments:

  1. என்னது ஜெயலலிதா கூட சேர்ந்து இந்தியாவ காப்பாத்த போறீங்களா?? அவங்க காப்பாத்துகின்ற இந்தியா எங்க இருக்கு?

    குட்டி குட்டி விஷயங்கள் அருமை.

    ReplyDelete
  2. அய்யோ அப்ப நான் மட்டும் எப்படி ஒருத்தானா ஜெயலலிதா கூட சேர்ந்து இந்தியாவை காப்பாத்துவேன்????????//இதே கவலை தானுங்க எனக்கும்

    ReplyDelete
  3. அருமையான பதிவு தான். பட் உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு ............. donk donk

    ReplyDelete
  4. பட் உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு

    ReplyDelete
  5. பட் உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.