உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, June 10, 2011

பசுவின் மடியின் மூலம் கிடைக்கும் தாய்பால் : விஞ்ஞானிகளின் புதிய கண்டு பிடிப்பு

பசுவின் மடியின் மூலம் கிடைக்கும் தாய்பால் : விஞ்ஞானிகளின் புதிய கண்டு பிடிப்பு   ( Scientists launch rival claims over cows that produce mothers' milk )
உலகிலேயே முதல் முறையாக மனித மரபணுக்களை இணைத்து, குளோனிங் மூலம் புதிய பசு ஒன்றை அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த வேளாண் தொழில்நுட்ப தேசிய நிறுவனம் சைனிஷ் விஞ்ஞானி (Professor Ning Li, the scientist who led the research and director of the State Key Laboratories for AgroBiotechnology at the China Agricultural University) உதவியுடன்  உருவாக்கியுள்ளது. இப்பசுவின் பால், தாய்ப்பாலைப் போன்றே இருக்கும் என்பது தான் இதன் சிறப்பம்சம்.

இப்பசுவின் மரபணுக்களில், இரண்டு மனித மரபணுக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை, தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கு பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு சக்தியை அளிக்கக் கூடியவை. இந்த மரபணுக்கள், பசுவின் மரபணுக்களுடன் சேர்க்கப்பட்டதால் இப்பசு, மனிதர்களின் தாய்ப்பாலைப் போல, விட்டமின்கள் கொண்ட, பாலைத் தரும்

கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி, பிறந்த இந்தப் பசுவுக்கு ரோசிட்டா .எஸ்..(Rosita ISA) எனப் பெயரிடப்பட்டுள்ளது.இதுபோன்ற 300க்கும் அதிகமான பசுக்கள் இதுமாதிரி பிறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "உலகில் முதன் முறையாக மனித மரபணுக்கள் சேர்க்கப்பட்டு குளோனிங் மூலம் ரோசிட்டா .எஸ்..(Rosita ISA) உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பால், தாய்ப்பாலில் உள்ள விட்டமின்களைக் கொண்டிருக்கும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் பசு உருவாக்கத்திற்கான முயற்சியை இந்நிறுவனமும், சான்மார்ட்டின் பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொண்டன.

இது வியாபர ரிதியாக வருவதற்கு மூன்று ஆண்டுகள் பிடிக்கும் என்றும் மற்றம் மனிதர்கள் கப்பில்  அருந்தும் ரெகுலர் மில்க்காக வர 10 ஆண்டுகள் ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது..


இதற்கு பல மக்களிடம் இருந்து ஆதரவு வரும் அதே நேரத்தில் இதற்கு கடும் எதிர்ப்பும் வந்துள்ளது. இதற்கு எதிராக போராடும் ஒரு பெண்ணை சூழ்ந்து இருக்கும் போலிஸாரின் படம் தான் கிழே உள்ளதுஇதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் பலர் அதில் சில பேர்களின் கருத்தை அவர்களின் வார்த்தைகளிலேயே தருகின்றேன்.

msbetz : These "scientists" should be jailed immediately for CRIMES AGAINST HUMANITY! Please keep these "scientists" in China!

Alexia Swift Brown  : Seriously you scientist going way too far. People talking about curing world hunger (this doesn't cure wold hunger cause the cows were already producing milk in the first place. Putting human genes into cows whats next? If a woman don't want to breast feed then tell her not to have kids. Breast feed is apart of being a mother so if women don't want to be mothers why have kids? Leave it to those who really want it.


நீங்கள்  உங்கள் கருத்துக்களையும் இங்கே பின்னூட்டமாக தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன். தயவு செய்து முதல் வடை, தோசை, மழை போன்ற கருத்துக்களை போடுவதை தவிர்க்கவும். அதற்கு பதிலாக நீங்கள் போடாமல் இருப்பதே நலம். நன்றி

1 comment :

  1. ஐயோ இந்த கொடுமய என்ன சொல்வது விட்டா இவங்க மனுச உசுர பொறக்க வச்சு சாதனைனு சொல்லுவாங்க இதே பசு நம்மள புல்லு,புண்ணாக்குனு திங்கவச்சா விட்டுருவமா என்ன அநியாயம்

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog