Friday, June 3, 2011


 
தமிழக சாணக்கியர் கலைஞரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல யோக்கியன் எவனும் உண்டோ இந்த தமிழகத்தில்?

பட்டிதொட்டிகளில் உள்ள டீக்கடையாகட்டும் அல்லது பட்டணத்தில் உள்ள காபி ஹவுஸ் ஆகட்டும், பட்டிதொட்டிகளில் உள்ள ஆலமரத்தடியாகட்டும் அல்லது பட்டணத்தில் உள்ள நெட் சென்டராகட்டும், பத்திரிக்கைகள் அல்லது பதிவர்கள் போடும் பதிவாகட்டும் எங்கும் எதிலும் ஒரே லஞ்ச ஊழல் பற்றிய பேச்சுதான்.ஏன்... ஏன்... என்று சிந்தித்து பாருங்கள்

இவ்வளவு நாள் இல்லாத லஞ்ச ஊழலா அல்லது இதற்கு முன்னாள் இருந்த அரசியல் வாதிகள் செய்யாததா?இப்போதுமட்டும் ஏன் இந்த பேச்சு? இவர்களால் இந்த அளவுக்கு செய்ய முடிந்ததை நம்மால் ஏன் செய்ய முடியாமல் போய்விட்டது என்ற ஆதங்கம் அல்லது பொறாமைதான் இதற்கு காரணமாக இருக்க முடியும்.

தமிழக மக்களையும் மற்றும் இதைப் படிப்பவர்களையும் கேட்கின்றேன் உங்களில் எத்தனை பேர் லஞ்ச ஊழலில் ஈடுபடாமல் இருந்திருக்கிறீர்கள்.லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் அதுபோல ஊழல் செய்வதும் அதற்காக உறுதுணை போவதும் இந்திய சட்டப்படி குற்றம். அதை எத்தனை தடவை நீங்கள் மீறி இருக்கின்றீர்கள் என உங்கள் மனதுக்குள்ளே ஒரு கணக்கு போட்டு பாருங்கள்.


பொதுமக்களாகிய நீங்கள், டிராபிக்கில் நீங்கள் செய்யும் தவறுகளில் இருந்து தப்பிக்க உங்கள் பாக்கெட்டுகளில் இருந்து போலீஸூக்கு எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்? நீங்கள் கட்டும் புதிய வீட்டை சிக்கீரம் கட்டி முடிக்க எந்தெந்த அலுவலங்களில் உள்ள அலுவலர்களுக்கு எவ்வளவு லஞ்சம் தந்தீர்கள?.உங்கள் வீட்டுக்கான வரியை குறைக்க வீட்டு வரி அலுவலர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்? நீங்கள் விரும்பிய ஊரில் வேலையை மாற்ற நீங்கள் கொடுத்தது எவ்வளவு? ரயிலில் உங்களுக்கு சீட்டு கிடைக்கவும், பெர்த் கிடைக்கவும் டிக்கெட் பரிசோதகருக்கு மக்கள் கொடுக்கும் பணம் தான் எவ்வளவு? வீணாப் போன தமிழ் சினிமா பார்க்க ப்ளாக்கில் டிக்கெட் வாங்க நீங்கள் கொடுத்ததுதான் எவ்வளவு? இதை எல்லாம் செய்வதும் வாங்குவதும் யார்? பொதுமக்களாகிய நீங்கள்தானே? இதை செய்ய சொன்னது அரசியல் வாதிகளா? தலைவர்களா ? அல்லது மத வாதிகளா? யார்? யார்?.....

நீங்கள் செய்த லஞ்ச ஊழலுக்கும் அரசியல்வாதிகள் செய்த ஊழக்கும் உள்ள வித்தியாசம் சில " சைபர்கள் " தானே?

இந்த லஞ்ச ஊழல்களுக்கு அடிப்படையான காரணகர்த்தாவாகிய பொதுமக்கள் , எப்போதும் மற்றவர்களையே கைகாட்டியும் குற்றம் சொல்லியும் பழக்கப்பட்ட நம் தமிழ்மக்கள் இந்த செயல்களுக்கு எல்லாம் ஏதோ வேற்று உலகத்தில் இருந்து வந்தவர்கள் செய்வது போலவும் இவர்களுக்கு இதெல்லாம் சம்பந்தமில்லை என்பது போல பேசிவருகிறார்கள். தலைவர்களையும் அரசியல் வாதிகளையும், போலிஸாரையும், அரசு அலுவலர்களையும் குறை சொல்லும் இவர்கள் முதலில் தன் கையில் உள்ள அழுக்கை பார்க்க மறந்தது ஏனோ?

சும்மா பேசி திரிவதை விட முதலில் இவர்கள் லஞ்ச ஓழிப்பை இவர்கள் வீட்டிலிருந்து ஆரம்பிக்கட்டும்..அதன் பின்னால் நாட்டை திருத்த யோசிக்கட்டும்.

இதற்கு வீட்டில் உள்ள குடும்ப தலைவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை போதித்து கடைபிடித்து வந்தால் நமது வருங்கால இளைய சமுதாயம் நல் வழியில் சென்று இந்தியவை உலகில் ஒரு முன் மாதிரி நாடாக மாற்றி அமைத்து காட்டும்.

இறுதியாக நான் ஓன்று சொல்ல விரும்புகிறேன். நான் ஊழலையும் ஊழல்வாதிகளையும் ஆதரிக்கவில்லை. அதே நேரத்தில் நம் ஒவ்வொரு தமிழ் குடும்பமும் ஊழல் ஒழிப்பதை தத்தம் வீட்டில் இருந்து ஆரம்பிக்க வேண்டுகிறேன்.
டிஸ்கி : தலைப்புக்கும் பதிவிற்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்து மண்டையை உடைக்க வேண்டாம். எனது கருத்துகள் எல்லோருக்கும் சென்று அடைய வேண்டும் என்பதால்தான் இந்த தலைப்பு. கலைஞர் அல்லது அவரது குடும்பத்தினர் பெயர் இல்லாத எந்த பதிவும் இப்போது அதிக ஹிட்ஸ் அடைவதில்லை என்பது ஊர் அறிந்த உண்மை. அதற்காக வலைபதிவர்கள் சார்பாக கலைஞருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்ளகிறேன். ஹீ...ஹீ....வாழ்க கலைஞர்..
இந்த பகிர்வு உங்களை கவர்ந்திருந்தாலும் இல்லையென்றாலும் நீங்க வந்ததுக்கு அடையாளமா கருத்துக்களை சொல்லிவிட்டு போகலாமே...


அதுவரை சிறிது இடைவெளி விட்டு மீண்டும் சிந்திப்போம்...

6 comments:

  1. என்ன உங்க சாணக்கியத்தனம்

    நச்சு கேட்டு இருக்கீங்க? யாரு எல்லாம் லஞ்சம் குடுக்கலைன்னு

    ரொம்ப கரெக்ட் 10 ரூவா தேங்காய் வாங்க பையனுக்கு 1 ரூவா மிட்டாய் வாங்க குடுக்க வேண்டி இருக்கு

    அந்த 1 ரூவா தான் லட்சம் கோடி வரை போயி நிக்குது.

    லஞ்சம் அதை குடுக்கலைன்ன எதுவும் சரியான நேரத்துல கிடைக்காது இந்தியால

    ReplyDelete
  2. கலைஞர் அல்லது அவரது குடும்பத்தினர் பெயர் இல்லாத எந்த பதிவும் இப்போது அதிக ஹிட்ஸ் அடைவதில்லை என்பது ஊர் அறிந்த உண்மை.//

    க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

    //லஞ்ச ஓழிப்பை இவர்கள் வீட்டிலிருந்து ஆரம்பிக்கட்டும்//

    சரிதான்.

    இருப்பினும் நம் வரிப்பணத்தையும் கொடுத்து அஅட்சியில் உட்கார வைக்கும்போது நாட்டின் எல்லா மக்கள் நலன் கருதியும் கேள்விகள் கேட்கப்படணும்..

    ReplyDelete
  3. ’அடுத்தவரை குறை கூறுவதை நிறுத்துங்கள். அடுத்தவரை நோக்கி நீளுவது ஒரு விரல் என்றால் மற்ற நான்கு விரல்கள் உங்களை நோக்கி உள்ளன’ என்பதை நெத்தியடியாக உணர்த்திய எழுத்துகள்.

    கலைஞர் படம் டாப் டக்கர் !!

    ReplyDelete
  4. இது போன்ற வழிகளை பின்பற்றாத பின் தங்கிப்போன நான் சொல்வது , லஞ்சத்தைவிட வீணான கைவிடப்பட்ட, உருப்படாத அரசு திட்டங்கள் என்னை அதிகம் பாதிக்கின்றன. வருமான வரி கட்டும்போது என் உழைப்பு பயன்படபோகும் விதத்தை நினைத்து வருந்திக் கொண்டேதான் கட்டுகிறேன்

    ReplyDelete
  5. இறுதியாக நான் ஓன்று சொல்ல விரும்புகிறேன். நான் ஊழலையும் ஊழல்வாதிகளையும் ஆதரிக்கவில்லை. அதே நேரத்தில் நம் ஒவ்வொரு தமிழ் குடும்பமும் ஊழல் ஒழிப்பதை தத்தம் வீட்டில் இருந்து ஆரம்பிக்க வேண்டுகிறேன்.

    வலிமையான கருத்துள்ள பதிவு நண்பரே

    ReplyDelete
  6. மக்கள் அஞ்சும் பத்தும் லஞ்சம் கொடுப்பதால், மஞ்சள் துண்டு 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்தது சரி என்றாகி விடுமா? அப்போ வெளிநாட்டில் உள்ள 70 லட்சம் கோடி ரூபாய் அங்கேயே இருந்துவிட்டுப் போகட்டுமா? உங்களுக்கே இது பிக்காலித் தனமாகப் படவில்லையா? மக்கள் லஞ்சம் கொடுக்கிறார்கள் என்றால், அதை அரசு சட்டப் படி நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும் என்பீர்களா, இல்லை அதையே ஆதாரமாக வைத்து ஆட்சிக்கு வந்தவன் கொள்ளையடிப்பதற்க்கும் நியாயம் கற்ப்பிப்பீர்களா? வாய்ப்பு கிடைத்தால் தவறு செய்யத்தான் முனைவார்கள், அதைத் தடுக்கத்தானே சட்டமும் அரசும் இருக்கிறது? லஞ்சத்தை ஒழிக்க அரசு என்னத்தை செய்தது? தனி மனிதனைப் பார்த்து திருந்த வேண்டுமென்றால், லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் தவறு என்று மக்களுக்கு புரிய வைக்காத தவறும் இந்த அரசினுடையதே. நாட்டை ஆள்பவர்கள் திருடர்கள், அவர்களது திருட்டுத் தொழிலுக்கு வக்காலத்து வாங்கி எழுதியதற்க்காக நீர் வெட்கப் படவேண்டுமைய்யா.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.