உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, April 17, 2011

திருமணம் சந்தோஷத்தை தருமா? நகைச்சுவை

திருமணம் சந்தோஷத்தை தருமா? நகைச்சுவை


வாழ்க்கையில கேர்ல்ஃப்ரெண்டு கிடைச்சா வாழ்க்கை ஜாலி!
அதே கேர்ல்ஃப்ரெண்டு காதலிஆனா பர்ஸ் காலி!!
அதே காதலி மனைவியா வந்தா... மவனே நீயே காலி!!!...........

(என்னங்க இதுகெல்லாம் பயந்துட்டா எப்படி மேல படியுங்க)

கண்ணா நீ
கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,
நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்...

(இதுக்கெல்லாம் வருத்தப்பாடாதீங்க நாய்கள் நன்றியுள்ள ஜென்மங்கள்தான்..ஹீ...ஹீ கிழேவிழுந்தாலும் நமக்கு மீசையில் மண் ஒட்டாதுங்க)ஒரு பொண்ணு போட்டோவுல தேவதைமாதிரி இருந்தாலும்
நெகடிவ்லபிசாசு மாதிரிதான் இருப்பா

( ஆமாம் கல்யாணத்துக்கு அப்புறம் நெகடிவே வேணாம் நேர்லா பார்த்தாலே பிசாசு மாதிரிதான் இருப்பாங்க)டாக்டர்..... எனக்கு அடிக்கடி பயங்கரமான கனவு வருது!
கலியாணம் பண்ணிக்கிட்டா சரியாயிடும்!( ப்ளாக் ஆரம்பிச்சு பதிவுபோட ஆரம்பிச்சாலும் சரியாயிடும்)
அப்புறம் அந்த... மாதிரிபயங்கரமான கனவெல்லாம் வராதா டாக்டர்
ஹ்ஹூம்.... அப்புறம் உங்களுக்கு தூக்கமே வராதே!(மனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா,கூந்தலா, என் கண்களா?? எதுங்க?
கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான் புடிச்சுருக்கு

(இந்த மாதிரி மனைவி கேள்வி கேட்கும் போது மட்டும் நம் கல்யாண வாழ்க்கையில் சிரித்து சந்தோஷமாக இருக்க முடியும் ஆனா கிடைச்ச சான்ஸ்ல ரொம்ப சிரிச்சீங்க மவனே நீ காலிதான்)

மனைவி :‍‍ ஏங்க உங்க‌ நண்பருக்கு பார்த்து இருக்க பொண்ணு நல்லா இல்லைனு சொல்ல கூடாத ...,?
கணவன் : நான் எதுக்கு சொல்லனும்? அவன் மட்டும் எனக்கு சொன்னானா
மனைவி : ..............?

கணவன் : ச்சீய்! இதெல்லாம் காப்பியாடி ? நாய்கூட இதை குடிக்காதுடி.
மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.
கணவன் : ஆங்???????

( அதனாலதான் நாம காப்பி போட கத்துகணும்)மனைவி: ஏன் இன்னிக்கு அலுவலகத்திலிருந்து சீக்கிரம் வந்துட்டீங்க?
கணவன்: இன்னிக்கு என் அலுவலகத்தில் ஒரு தவறு பண்ணிட்டேன். என் மேனேஜர் "நரகத்திற்கு போய்த்தொலை" என்றார். அதனால்தான்???

( தன் வினை தன்னை சுடும் அந்த மேனேஜரும் வீட்டுக்குதானே போய் ஆகனும்)


மனைவி: என்னங்க அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே அவரு என்னை பொண்ணு பார்க்க வந்தாரு, நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொல்லிட்டேன். அதை நினைச்சே அவரு இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாரு.
கணவன்: அவன் அதிர்ஷடகாரன் மட்டுமல்ல கொடுத்து வச்சவன் கூட... அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமா கொண்டாடிட்டிருக்கானேன்னு தான் ஆச்சர்யமா இருக்கு

( உலகத்துல சில அதிர்ஷ்டகாரர்கள் கூட இருக்கதான் செய்கிறார்கள்...ஹ்ஹும்ம்ம்ம்ம்)


கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?
பக்தன்: 2 ஜி மாதிரி எதோ 4 ஜி இருக்காமல அதை எங்கிட்ட கொடுங்க சாமி!!
கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.
பக்தன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கனும், எதையும் வாங்கிக்கேட்ககூடாது...
கடவுள்: 4 ஜி போதும்மா அல்லது மேலும் எத்தனை ஜி வேணும் என்று மட்டும் சொல்லு


புயல் மழையில் ஒருவன் பிட்ஸா வாங்க கடைக்கு செல்கிறான்
கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா...
வந்தவர்: பின்ன இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பிட்ஸா வாங்க அனுப்புவாங்க...!??

திருமணமாகி 5 வருடமான ஒரு நண்பர் மற்றொரு நண்பரிடம் ரொம்ப கவலையா சொன்னார்.
நண்பர்: 1 : "திருமணமான புதிதில் நான் வேலைவிட்டு வீட்டுக்கு வந்தா நாய் குரைக்கும், அப்போ மனைவி அன்பா வந்து முத்தம் தருவா"
நண்பர்: 2 : இப்ப எப்படி நடக்குது?
நண்பர்: 1 : "ம்ம்ம்ம்ம்.. 5 வருடம் ஆச்சு. எல்லாம் தலைகீழா நடக்குது.
இப்போ வேலைவிட்டு வீட்டுக்கு வந்தா நாய் அன்பா ஓடி வந்து முத்தம் கொடுக்குது. "
நண்பர்: 2 : அப்போ மனைவி?
நண்பர்: 1 : "குரைக்கிறா

( குறைக்கிற நாய் கடிக்காத வரை நல்லதுதான் சந்தோஷமா இருங்க மக்கா.


ஏண்டி, உன் புருஷனை செருப்பு வச்சு அடிக்கிறியாமே?
கட்டுன புருஷன எப்பிடிடீ கைநீட்டி அடிக்கிறது. அதான்......(ஆஹா.........எப்டியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா???????)

இரு நண்பர்கள்,
ஒருவர் : என் மனைவி தேவதை!
இன்னொருவர் : நீ அதிர்ஷ்டசாலி, என் மனைவி இன்னும் உயிரோட இருக்கா!!( அட பாவிமக்களா)


மனைவி: என்னங்க, இன்னைக்கு சண்டே. இன்னைக்காவது நான் சமைக்கிறேங்க‌. வாரம் ஆறு நாளும் நீங்கதானே சமைக்கிறீங்க.
கணவன்: உனக்கு ஏன்டாச் செல்லம் கஷ்டம். நாம கோயிலுக்கு போய்ட்டு அப்படியே சினிமாவுக்கு போய்ட்டு அப்படியே பீச்சுக்கு போய்ட்டு ஹோட்டல்ல சாப்பிட்ட‌ரலாம்.
மனைவி: நீங்க சொன்னா சரிங்க.

கணவன்: (கடவுளே!!!!இவ சமையல்லேர்ந்து தப்பிக்குறத்துக்கு எங்கெங்க போகவேண்டியிருக்கு!!.)

நல்ல ஐடியா இனிவரும் நாட்களில் நாம இதை கடைப்பிடித்து விட வேண்டியதுதான்)


மனைவி:என்னங்க நான் ஒன்னு சொன்னா அடிக்க மாட்டிங்களே....
கணவன்:சும்மா சொல்லு பரவால்ல..
மனைவி: நான் கர்ப்பமா இருக்கேங்க..
கணவன்:ஏண்டி சந்தோசமான விசயம் தானே...அதுக்கு போய் ஏன்..பயப்படுற?
மனைவி:இல்லங்க இப்படித்தான் காலேஜ் படிக்கிறப்ப அப்பா கிட்ட சொன்னதுக்கு அடி பிச்சி புட்டாரு( அப்படி போடு போடு)


கணவன்: நா‌ன் செ‌த்து‌ட்டா ‌நீ எ‌ன்ன‌ப் ப‌ண்ணுவ?
மனைவி: நீ‌ங்க செ‌த்த ‌பிறகு என‌க்கு எ‌ன்ன‌ங்க வா‌ழ்‌க்கை.. நானு‌ம் செ‌த்து‌ப் போ‌ய்டுவே‌ன்.
கணவன்: ச‌ரிதா‌ன்.. ஜோ‌சிய‌ர் சொ‌ன்னது ச‌ரியா‌த்தா‌ன் இரு‌க்கு.
மனைவி: எ‌‌ன்ன‌ங்க சொ‌ன்னாரு?
கணவன்: நீ செ‌த்தாலு‌ம் ச‌னி உ‌ன்ன ‌விடாது‌ன்னு(

மனைவி : " நான் செத்துட்டா,என் நினைவா ஏதாவது கட்டுவீங்களா டார்லிங் ?"
கணவன் : "கண்டிப்பா, உன் தங்கச்சியை கட்டுவேன் செல்லம் !"போருக்குப் புறப்படு முன் ஒரு முறை பிரார்த்தனை செய்,
கடலில் செல்லும் முன் இரு முறை பிரார்த்தனை செய்,
திருமணம் செய்யும் முன் ஓயாமல் பிரார்த்தனை செய்.

( பிரார்த்தனை செய்தாலும் மவனே நீதான் பலிகடா)எனக்கு வந்த இமெயில்களில் நான் படித்த ரசித்த ஜோக்குகளை சில இடங்களில் சிறிது மாற்றி இங்கே வழங்கியுள்ளேன்.

8 comments :

 1. நல்லா இருக்குங்க.

  ReplyDelete
 2. superbbbb..
  enjoyed all ur jokes

  ReplyDelete
 3. ஆஹா வடை எனக்கு தான்!!

  ReplyDelete
 4. Not all men are Fools, some remain Bachelors!!

  ReplyDelete
 5. \\ஒரு பொண்ணு போட்டோவுல தேவதைமாதிரி இருந்தாலும்
  நெகடிவ்லபிசாசு மாதிரிதான் இருப்பா
  ( ஆமாம் கல்யாணத்துக்கு அப்புறம் நெகடிவே வேணாம் நேர்லா பார்த்தாலே பிசாசு மாதிரிதான் இருப்பாங்க)
  \\ என்படிங்க இவ்வளவு கரெக்டா சொல்றீங்க? உண்மையைச் சொல்லுங்க இது சொந்த அனுபவம்தானே?

  ReplyDelete
 6. \\மனைவி : " நான் செத்துட்டா,என் நினைவா ஏதாவது கட்டுவீங்களா டார்லிங் ?"
  கணவன் : "கண்டிப்பா, உன் தங்கச்சியை கட்டுவேன் செல்லம் !"
  \\ அடப்பாவி, நீ பட்டும் திருந்தலையாடா? இவளைக் கல்யாணம் பண்ணித்தான் எல்லா "சுகத்தையும்" அனுபவிசுட்டியே, இவ தங்கச்சி வேறயா?

  ReplyDelete
 7. பதிவின் உள்ளவை ஜோக்குகள் போல நம்மைச் சிரிக்க வைத்தாலும் அத்தனையும் உண்மை. நாடு நடுவே போட்டுள்ள ஆங்கில ஜோக்குகள் good selection.
  என் பங்குக்கு ஒன்னு:
  "ஏங்க நம்மை கல்யாணம் பண்ணி வச்ச புரோகிதர், ரோடு ஆக்சிடெண்டுல செத்துட்டாராமுங்க?"
  "போகட்டும்டி, அந்தாளு எனக்குப் பண்ணிய பாவம் சும்மா விடுமா?"

  ReplyDelete
 8. பின்னுட்டம் இட்ட நண்பர்கள் அனைவர்க்கும் நன்றி.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog