உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, March 11, 2011

( U.A.E NRI ) அயல்நாடுகளில் வசிக்கிற அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய பதிவு


(N R I) மக்களே, இறப்புக்கும் திட்டமிடுங்கள்!  இது மனதிற்கு கஷ்டம் தருகின்ற விஷயம் என்றாலும் அயல்நாடுகளில் வசிக்கிற அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய ஒன்று.


மனிதர்களாகிய நாம் எல்லாவற்றிற்கும் திட்டமிடுகிறோம், ஆனால், வெளிநாட்டில் வசிக்கிற யாராவது, இறப்பைப்பற்றி எண்ணியாவது பார்த்திருப்போமா? பதில் இல்லை என்பதுதான்


சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில், துபாய் பத்திரிகையான கல்ஃப் நியூஸ் முகத்திலறைகிறமாதிரி சொன்னது செய்தி கட்டிங்கை என் நண்பர் அனுப்பிவைத்தார் அந்த. பத்திரிகையில் வந்திருந்த கட்டுரைகளை வாசித்த வெளிநாட்டு மக்களின் மனதில் மிகப்பெரும் அதிர்ச்சி உண்டாகியிருக்கும் என்பதில் ஐயமேஇல்லை.


அந்த தினசரியில் வந்த கட்டுரை சொன்னது என்னவென்றால் ( U.A.E) துபாய் போன்ற நாடுகளில் இறப்பின் விலை மதிப்பு .மிக மிக அதிகம், அதற்காக அயல்நாட்டினர் அனைவரும் முன்னேற்பாடு செய்துகொள்வது அவசியம் என்பதே.

அதாவது அயல்நாட்டுக் குடிமகன் ஒருவர் துபாயில் மரணமடைந்தால், உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும், எந்த அளவு பண செலவுகள் வரும், என்னென்ன வேலையெல்லாம் செய்யவேண்டும் என்று தெளிவாக குறிப்பிட்டு இருந்தார்கள் . அதை படிக்கும்போது மனதில் ஒரு இனம் புரியாத ஒரு இருக்கமான உணர்வு தோன்றியது என்பது மறுக்கமுடியாத உண்மை.


கடந்த ஆண்டு பணியிலிருக்கும்போது இறந்த,வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 800 என்றும் அதிலும் இதய சம்பந்தப்பட்ட நோய்களால் இறப்பவர்களில் அதிகம்பேர் இந்தியர்கள்தான் என்றும் கூறுகிறார்கள்.


வேலையில் இருக்கும் குடும்ப தலைவர் ஒருவர் இங்கே இறக்க நேரிட்டால், துபாயில் அவருக்கு இருக்கிற கடன்கள், வீட்டுவாடகை, ட்ராஃபிக் மற்றும் பார்க்கிங் ஃபைன் உட்பட எந்த பாக்கியுமில்லாமல் கொடுத்த பின்னர்தான் இறந்தவரின் உடலை எடுத்து போக அனுமத்திப்பார்கள் என்பது, கேட்கும் போது கஷ்டமாக இருந்தாலும், வேறு வழியில்லை என்பது மனதை சுடும் நிஜம்தான். அதுமட்டுமில்லாமல் வெளிநாட்டுப் பணியாளர் ஒருவர் இறந்தவுடன், உடனடியாக அவருடைய வங்கிக்கணக்கு மற்றும் கூட்டுக்கணக்குகள் (joint account)ஏதுமிருந்தால், அனைத்தும் முடக்கப்படும் மற்றும். இன்ஸ்யூரன்ஸ் செய்திருந்தாலும் அந்தப்பணம் கிடைக்கவும் தாமதமாகும்.


இழப்பின் துயரத்துக்கு மத்தியில் ,இறந்தவருக்கான அரசுச் சான்றிதழ்களுக்காகவும், மற்றும் உடலைப் பதப்படுத்துதல், விமானம் மூலமாகக் கொண்டுசெல்லும் செலவு என்று அதற்காக இன்னும் ஒரு பெருந்தொகையும் உழைப்பும் தேவைப்படும் அந்தக் குடும்பங்களுக்கு.


ஏர் இந்தியா, இந்தியர்களுக்காக, இலவசமாக உடலை ஊருக்குக்கொண்டுசேர்க்கும் பணியைச் செய்கிறதாம். மற்ற விமான நிறுவனங்கள் 50% சலுகைவிலையில் இந்தச் சேவையைச் செய்கிறார்களாம். ஆனால், உடல் எடைக்கு ஏற்றவாறு கட்டணம் கூடுமாம். அதிக உடல்எடையென்றால் இங்கேகூடக் கஷ்டம்தான் ( மக்கா அளவோடு சாப்பிட்டு உடம்பை ஸ்லிம்மாக வைத்து கொள்ளுங்கள்)

வாழுகிறவரை, மற்றவர் வாழ வசதிசெய்துகொடுத்த ஒருவன், இறப்புக்குப்பின் பயணிக்கையில், சரக்குகளோடு சரக்காகிப்போவது கொடுமையிலும் கொடுமை. அதிலும், மொத்த சரக்குக் கட்டணம் 1500 திர்ஹாம்களாம்!

எந்த வெளிநாட்டில் வாழுகிற ஒருவர், இதுவரை எதற்காக எவ்வளவு பணம் மற்று சொத்துக்களை சேர்த்துவைத்திருந்தாலும், இதை படித்த பிறகாது இக்கட்டான சூழ்நிலைகளில் உதவுவதற்கென்று முன்னேற்பாடாகப் பணம் சேர்த்துவைக்க வேண்டும் ஆனால், அது மற்றவர்களின் பெயரில் இருப்பது மிகவும் முக்கியம். இல்லையென்றால் பின்னர் கஷ்டப்பட்டு நடுத்தெருவில் நிற்பது அவரது குடும்பம்தான்.இதுதொடர்பான கருத்துக்களை கல்ஃப் ந்யூஸில் படிக்க  இங்கே க்ளிக் செய்து பாருங்க...

இறப்பு செலவு பட விளக்கத்திற்கு இங்கே க்ளிக் செய்யவும்.


நீங்கள் படிச்சவற்றை முடிந்தவரைக்கும் பிறர் அறிய எடுத்துச்சொல்லவேண்டியது மிக அவசியம். அதனால் இந்த பதிவு உபயோகமாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் உங்கள் நண்பர் மற்றும் உறவினர்களுக்கு எடுத்து சொல்லுங்கள் அல்லது இந்த பதிவிற்க்கான லிங்கை அனுப்பி வையுங்கள் . வாழும் வரை சந்தோஷமாக வாழ கற்றுக்கொண்டு பிறரையும் சந்தோஷமாக வாழவிடுங்கள். நன்றி

16 comments :

 1. சரக்குகளோடு சரக்காவது கொடுமை. எதற்காக இவ்வளவு கஷ்டம் படுவது.படிக்கவே சங்கடமாக உள்ளது.

  ReplyDelete
 2. இவ்வளவு விஷயம் இருக்கா...ம்ம்...உயிரோட இருக்கும்போது தான் நாலு காசு இல்லாட்டி மதிக்க மாட்டங்கனால்...செத்து போன பிறகும் இதே தானா...ம்ம்...பளிர்னு மனதை அறைஞ்ச பதிவு...நிஜமாய் உபயோகமான பதிவு...

  ReplyDelete
 3. மிகப் பிரயோஜனமான பதிவு
  அயல் நாடுகளில் பணிபுரிவோர்
  குறிிப்பாக துபாய் போன்ற நாட்டில் வசிப்போர்
  அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய பதிவு
  பயனுள்ள பதிவு கொடுத்தமைக்கு நன்றி

  ReplyDelete
 4. great!!!!!!!
  verymuch useful!!!!!!

  senthil,doha

  ReplyDelete
 5. இறந்தாபிறகு ஒண்ணுமே இல்லைன்னு பாத்தா இவ்வளவு இருக்கா. அப்போ கடைசியா ஆறடி நிலமும் சொந்தமில்லையா?
  :அஷ்வின் அரங்கம்:
  வழக்குத்தொடுப்பேன் - வடிவேல் குமுறல்.

  ReplyDelete
 6. வாசிக்க வாசிக்க, மனதை கனமாக்கிய பதிவு. வாழும் நாட்களுக்கு மட்டும், வாழ்ந்து முடிந்த நாளுக்கும் தயாராக இருக்க வேண்டும் போல.

  ReplyDelete
 7. குறட்டை புலி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
  //எதற்காக இவ்வளவு கஷ்டம் படுவது//
  முறையாக ப்ளான் பண்ணினால் இந்த கஷ்டத்தில் இருந்து விலக முடியும். வாழ்க்கையில் கஷ்டப்படாத மனிதர்களே இல்லை எனலாம். கஷ்டங்கள் வெவ்வேறு வடிவில் வருகின்றன. இதில் பணக்க்காரன் ஏழை என்ற வித்தியாசம் இல்லை நண்பரே

  ReplyDelete
 8. In Dubai, cost of taking the body to your home in In India may cost roughly 70,000 AED(Rs 9 Lakhs ) If it is accident. I may take around 3-4 days of formalities and money. Even if a tourist dies in Dubai, its expensive.

  ReplyDelete
 9. ஆனந்தி மேடம் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
  //நாலு காசு இல்லாட்டி மதிக்க மாட்டங்கனால்///

  நாலு காசு உள்ளவர்கள் நல்லவர்களாக இல்லையென்றாலும் யாரும் மதிக்கப் போவதில்லை அப்படியே மதித்தாலும் அது போலி மரியாதைதான்.

  ReplyDelete
 10. ரமணி சார் உங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 11. senthil thank you. pass this info to your all friends who live in UAE

  ReplyDelete
 12. சித்ரா மேடம் உங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

  //வாசிக்க வாசிக்க, மனதை கனமாக்கிய பதிவு.///
  இந்த பதிவு என்மனதை மிகவும் பாதித்த பதிவு . இதை பதிவாக போடலாமா வேண்டாமா என்ற இரண்டு நாள் குழப்பத்திற்கு பிறகு இதை போட்டேன். இதை எப்படி நம் ஆட்கள் எடுத்து கொள்வார்கள் என்று ஒரே குழப்பம். கடைசியாக இது மற்றவர்களூக்கு உபயோகமாக இருக்கும் என்றும் இதற்கு தயாராக இல்லாதவர்கள் இதை படித்த பின் மனது கஷ்டப்பட்டாலும் தயாராக வேண்டும் என்று நோக்கத்தில் பதிவிட்டேன்.

  ReplyDelete
 13. அஸ்வின் உங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
  //ஆறடி நிலமும் சொந்தமில்லையா//

  நாம் வரும்போது எதுவும் கொண்டு வரவில்லை அதனால் இந்த உலகில் எதுவும் நமக்கு சொந்தமில்லை நண்பா

  ReplyDelete
 14. மனதை பாதிக்கும் விஷயம்

  ReplyDelete
 15. மிகவும் பயனுள்ள ஒரு விஷயம். மற்ற நாடுகளின் நிலை குறித்தும் ஒரு பதிவு எழுதவும்.

  ReplyDelete
 16. மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே...,
  அனைவரும் யோசிக்க வேண்டிய விஷயம்.யோசிக்கவும் வைத்துவிட்டீர்கள்.உண்மைதான் சகோ// கடந்த வருடத்தில் வேலையில் இருக்கும் போதே இறக்கும் நபர்களை அதிகமாக கேள்விபடுகிறோம்.வேலையில் என்று மட்டுமில்லை.உடற்பயிற்ச்சி செய்யும் போதும்,க்ரிக்கெட் விளையாடும்போதெல்லாம் என்னவரோடு வேலை பார்ப்பவர்கள் சிலர் இறந்து போயிருக்கின்றார்கள்.அந்த அதிர்ச்சியிருந்தெல்லாம் என்னவருக்கு மீளவே நாளானது.அதிலிருந்தே சில நாட்கள் புலம்ப ஆரம்பித்து விடுவார்.
  நிஜமாகவே என்ன வாழ்க்கை இது என்று தானே நினைக்க தோன்றுகின்றது.
  நல்ல பகிர்வுக்கு நன்றி சகோ//

  அன்புடன்,
  அப்சரா.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog