உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, March 16, 2011

தேமுதிக, அதிமுக கூட்டணியில் நிலைக்குமா, நீடிக்குமா என்பது இன்னும் ஒரு கேள்விக்குறியே!!!

தேமுதிக, அதிமுக கூட்டணியில் நிலைக்குமா, நீடிக்குமா என்பது இன்னும் ஒரு கேள்விக்குறியே!!!விஜயகாந்த்துக்கு அதிமுக கூட்டணியில் சேர்ந்ததில் முழு திருப்தியும், மகிழ்ச்சியும் இல்லையாம். கூட இருந்தவர்கள் தொடர்ந்து தொணத்தி தொணத்தி வந்ததால்தான் கூட்டணிக்கே அவர் சம்மதித்தாராம். வேட்பாளர் நேர்காணலின்போதும் கூட இதைத்தான் அவர் சொன்னாராம். எல்லோரும் சொன்னீங்கன்னு சேர்ந்துட்டேன். இருந்தாலும், என்னால் 41 பேருக்கு மட்டும்தான் வாய்ப்பளிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதை நான் விரும்பவில்லை என்று கூறினாராம் விஜயகாந்த்.


இதை வைத்து புதிய செய்தி பரவி வருகிறது. அது, தான் விரும்பியபடி, சாதகமான தொகுதிகளை அதிமுக தரத் தயங்கினால், அடுத்த விநாடியே கூட்டணியிலிருந்து விலகி விடுவது என்ற முடிவில் விஜயகாந்த் இருக்கிறார் என்பதுதான்.

எந்தவித எதிர்ப்பும் காட்டாத வை.கோவிற்கு நேர்ந்த நிலமை அவரை வேறவிதமாக சிந்திக்க செய்கிறது என்றும். அவருக்கே இந்த நிலைமை என்றால் அம்மாவை பாடுபடுத்தி ஏக்கமாக நீண்ட நாட்கள் உட்கார வைத்த நமக்கு தேர்தல் பின் நடக்கும் காட்சிகள் அவருக்கு சினிமாவில் வரும் காட்சிகள் போல மனக்கண்ணில் ஒடிக் கொண்டிருபதாகவும் செய்திகள் கசிகின்றன

இப்படி உண்மையிலேயே விஜயகாந்த் நினைக்கிறாரா அல்லது எதிர்த் தரப்பிலிருந்து கிளப்பி விடப்படும் வதந்தியா என்பது தெரியவில்லை.

அரசியலாச்சே, என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்!நாம் வேடிக்கை பார்க்கும் நேரம் இது.

----

7 comments :

 1. அகம்பாவத்தின் முதல் படி பிறரை மதிக்காதது அதன் இறுதி படி தோல்வி.

  ReplyDelete
 2. கூட்டணி என்றால் என்ன என்று சொல்லுங்கப்பா. யாரு எந்தக் கூட்டணியில் (இப்போது) இருக்கிறார்கள் என்று ஒன்னுமே பிரியமாடேங்குதுப்பா.

  ReplyDelete
 3. ////அகம்பாவத்தின் முதல் படி பிறரை மதிக்காதது அதன் இறுதி படி தோல்வி//
  முகமூடி ரொம்ப சரியாக சொன்னிங்க

  ReplyDelete
 4. ஆர்.கே.சதீஷ்குமார் உங்கள் வருகைக்கும் கமெண்ட்ஸ்க்கும் நன்றி

  ReplyDelete
 5. @முத்து
  ///கூட்டணி என்றால் என்ன என்று சொல்லுங்கப்பா. யாரு //
  குருப்பாக சேர்ந்து கொள்ளை அடிக்க சேரும் குழுவிற்கு கூட்டணி என்று பெயர்

  ReplyDelete
 6. ///எந்தக் கூட்டணியில் (இப்போது) இருக்கிறார்கள் என்று ஒன்னுமே பிரியமாடேங்குதுப்பா.//
  முத்து சார் நமக்கு புரிந்து என்ன ஆகப் போகுது சார். உங்க தொகுதியில் நிற்கும் நல்லவருக்கு உங்கள் ஒட்டை போடுங்கள்

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog