Friday, March 18, 2011

மிரண்டு போன ஜெயலலிதாவும் அவரை மிரள வைத்த சக்திகளும்

முந்தைய தினம் காட்டாற்று வெள்ளம் போல பாய்ந்த ஜெயலலிதா திடீரென பணிந்து போக முக்கியக் காரணம் விஜய்காந்த் தான் என்பது அனைவரும் அறிந்த செய்தி.

நாம் விரும்பும் தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்துவிட்டால் தேதிமுக , இடதுசாரிகளும், புதிய தமிழகமும், பார்வர்ட் பிளாக்கும் என்ன செய்துவிடப் போகிறார்கள்.. ஒருவர் பின் ஒருவராக நம்மிடம் வந்து ”அம்மா அந்தத் தொகுதியை விட்டுக் கொடுங்கள்.. இந்தத் தொகுதியை விட்டுக் கொடுங்கள்” என்று கெஞ்சுவார்கள். அப்படி கெஞ்சும் போது சிலவற்றை விட்டுத் தந்தால் நாம் தந்ததை வாங்கிக் கொண்டு வாயை மூடிக் கொண்டு போய் விடுவார்கள் என்று தான் ஜெயலலிதாவும் அவரது பத்திரிக்கை துறை நண்பரும் நினைத்திருந்தானர்.

விஜய்காந்த் என்னொரு சக்தி அந்த இடத்தில் இருந்திருக்காவிட்டால் ஜெயலலிதா நினைத்து தான் நடந்திருக்கும். ஆனால், ஜெயலலிதாவால் முதுகில் குத்தப்பட்டவுடன் அனைத்து கூட்டணி கட்சிகளும் ( இடதுசாரிகளும், அவர்களுடன் பார்வர்ட் பிளாக், புதிய தமிழகம், மூவேந்தர் முன்னணிக் கழகம் ) விஜய்காந்தின் அலுவலகத்தில் கூடி மூன்றாவது அணி அமைப்போம்’ என்று மிரட்டுவார்கள் என்று ஜெயலலிதா கனவிலும் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

விஜய்காந்த் மூலம் எதிர்காலத்தில் ஜெயலலிதா சந்திக்கப் போகும் அதிரடியான சவால்களுக்கு இந்த சம்பவம் ஒரு ஆரம்பம் தான். இனி எந்தக் கட்சியையும் ஜெயலலிதாவால் உதாசீனப்படுத்த முடியாது என்பதற்கு பெரும் உதாரணம் வைகோவுக்கும் சேர்த்து அதிமுக சமாதானக் கொடியை ஆட்டியது ஆகும். சமாதானப் போக வேண்டுமானால் தான் கோரும் தொகுதிகளை தனக்குத் தருவதோடு, மதிமுகவையும் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என நிபந்தனை போட்டு அதிமுக தலைவர்களிடம் பேச்சுவார்தை நடத்தினார் விஜயகாந்த்.

இதனால் மிரட்டல் விடுத்த கட்சிகளுக்கு கேட்கும் தொகுதிகளைக் கொடுப்பதோடு, மதிமுகவுக்கும் கூட்டணியில் இடம் தருவதாக அறிவித்துள்ளார் ஜெயலலிதா .இப்படிபட்ட நிலைக்கு தள்ளப்பட்ட ஜெயலலிதா இதனால் தன் பெயர் கெட்டுபோவதால் இதற்கெல்லாம் காரணம் தன் உடன் பிறவா சகோதரியின் குடும்பமே என்று புது கதையை அவிழ்த்து விட்டு இருக்கிறார்.

இப்போது கட்சிகளுடன் மீண்டும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை ஜெயலலிதா தொடங்கியுள்ளதன் மூலம் பெரும் குழப்பத்தில் உள்ளவர்கள் அதிமுக வேட்பாளர் பட்டியலில் உள்ளவர்கள்தான். கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது ப்ளஸ் சசிகலா குடும்பத்தினர்க்கான கோட்டா போக அதிமுக கட்சிகளில் உழைத்தவர்களில் எத்தனை பேருக்கு உண்மையிலேயே சீட் கிடைக்குமோ.. எத்தனை பேரின் பெயர்கள் பட்டியலில் இருந்து காணாமல் போகுமோ.. எத்தனை பேர் தொகுதி மாற வேண்டியிருக்குமோ என்பது தெரியவில்லை.

யானைக்கும் அடி சருக்கும் என்பது ஜெயலலிதா விஷயத்தில் உண்மையாகி உள்ளது
அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. யோகா.எஸ்March 19, 2011 at 1:14 PM

    இருந்தாலும் உங்களுக்கு குசும்பு கொஞ்சம் ஜாஸ்தி தான்!(யானைக்கும் அடி சறுக்கும்?!)

    ReplyDelete
  2. அரசியலில் புனைவு கூடாது நண்பரே..!

    ReplyDelete
  3. யானைக்கும் அடி சறுக்கும் தலைவரே!
    தங்களது வாழ்த்துக்கும் வரவேற்ப்புக்கும் நன்றி !

    உண்மை விரும்பி.
    மும்பை.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.