Wednesday, March 30, 2011

50 ஆயிரம் தேவையில்லை 50 ரூபாய் மட்டும் போதும் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு



சிறுநீரில் கல்லா? ஆப்ரேஷன் செய்ய பணம் இல்லையா? கவலைப்பாடாதீர்கள் மிகச் சிறந்த பக்க விளைவுகள் இல்லாத மிக எளிய வீட்டு வைத்தியம் பற்றிய பதிவுதான் இது.


இன்றைய உணவுப்பழக்க வழக்கத்தினால் சிறுநீரக்கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது. முக்கியமாக அரபு நாட்டில் வேலை பார்க்கும் அநேக பேர் சிறுநீர் கல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உண்டாகும் வலியானது மிகவும் பயங்கரமானதாக இருக்கும் இந்த வலியை அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.
அந்தளவுக்கு வலி பின்னி பெடலெடுத்து விடும்.

இயந்திரமயமாகிப் போன வாழ்க்கை முறையில் தவறான உணவுப்பழக்கமும், பிறவியிலேயே மரபணுக்களில் காணப்படும் சில குறைபாடுகளாலும், உடலுக்கு சத்து தேவை என்று தாமாகவே விட்டமின் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதாலும், மதுபானங்கள் , இறைச்சி , முட்டைக்கோசு, தக்காளி, காலிஃப்ளவர், வெள்ளரி, சப்போட்டா, போன்ற காய்கறி பழங்களை அதிகளவு உண்பதாலும் தாகத்தின் போதும் கடுமையான உடற்பயிற்சிக்கு பின்பும் நீர் அருந்தாமையாலும், சிறுநீரகப் பையில் அடிக்கடி தொற்று ஏற்படுவதாலும் சிறுநீரிலும், இரத்தத்திலும், சுண்ணாம்புச்சத்து அதிகமிருக்க கூடிய நிலையிலும், சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு ஏற்பட்டவுடன் சிறுநீரை அடக்கி வைப்பதாலும் கற்கள் தோன்றுகின்றன.


நாம் சாப்பிடும் உணவிலுள்ள கற்களே சிறுநீரகத்தில் தங்கி விடுகிறது என்று பலர் தவறாக கருதிக் கொண்டுள்ளனர். ஆனால் உண்மை என்னவென்றால் நாம் சாப்பிடும் உணவு மூலம் உட்கொள்ளுகிற கற்கள் இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், ஆகியபகுதிகளை கடந்து மலத்துடன் சேர்ந்து வெளியேறுகிறது. ஆனால் சிறுநீரகத்தில் கற்கள் எப்படி தோன்றுகிறது என்றால் நமது உடலிலுள்ள இரத்தத்தை ஒவ்வொரு நிமிஷமும் சுத்தம் செய்து வடிகட்டி உடலுக்கு வேண்டாத பொருட்களை கழிவாக, சிறுநீராக பிரிக்கும் போது சிறுநீரில் கரைந்திருக்கும் தாதுப் பொருட்கள் சிறிதுசிறிதாக படிந்து படிகங்களாக வளர்ந்து பின் கற்களாக உருமாறுகின்றன

 
இந்த சிறுநீர் கல்லைப் பற்றி எனது நண்பரிடம் விவாதித்த போது அவரது நண்பர் மேற்கொண்ட எளிய வீட்டு வைத்தியத்தை என்னிடம் சொன்னார். அது மிகவும் ஆச்சிரியமாகவும் மிகவும் எளிமையானதாகவும் இருந்தது. அதை பற்றி நான் நெட்டில் ஆராய்ந்த போது பலரும் இந்த முறையை பின்பற்றி குணமடைந்த விபரம் கிடைத்தது. அதை படித்ததிலிருந்து சிறுநீரகக்கல் பிரச்சினையை எப்படி மிக குறந்த செலவில் தீர்வு காணலாம் என்பதை நாலு பேருக்கு தெரிவிக்கலாம் என்பது மட்டுமல்லாமல் அந்த அற்புத எளிய வீட்டு வைத்தியத்தை தமிழில் தருவதே இந்த பதிவின் நோக்கம். நான் மருத்துவன் அல்ல நான் படித்த & கேட்ட அனுபவத்தை மட்டும் இங்கு தருகிறேன்.




100 கிராம் ஃபிரஞ்சு பீன்ஸ் ( கிட்னி பீன்ஸ் அல்லது ராஜ்மா) எல்லா கடைகளிலும் கிடைக்கிறது அதை வாங்கி அதில் உள்ள விதையை எடுத்து 5 லிட்டர் தண்ணீரில் குறைந்தது 5 மணி நேரம் கொதிக்க வைத்து அதை மஸ்லின் துணியால் நன்றாக வடிகட்டி அதை நன்றாக ஆற வைத்து அதை மீண்டும் கலக்காமல் இன்னொருமுறை மஸ்லின் துணியால் வடிக்கட்டி அந்த நீரை ஒரு நாள் முழுவதும் இரண்டு மணிக்கொருமுறை குடித்துவந்தால் சிறுநீரில் உள்ள கல் வெளிவந்து விடும். ஆனால் வலியை தாங்க கூடிய சக்தி உங்களுக்கு இருக்க வேண்டும்.இந்த முறையில் தாயாரித்த நீரை 24 மணி நேரத்திற்குள் உபயோகித்துவிடவேண்டும்.இல்லையேன்றால் அதுதன்பவரை இழந்துவிடும்.. இது பணம் இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு எளிய வைத்தியம்.



சிறுநீரில் உள்ள கல்லுக்கான அறிகுறிகள்: (Symptoms for Kidney Stones)

சிறுநீரகம், சிறுநீரகத்திலிருந்து நீர் இறங்கி வரும் குழாய்கள், சிறுநீர்ப்பை இந்த மூன்று இடங்களில் எங்கு வேண்டுமானாலும் கற்கள் உருவாகலாம். சிறுநீரகத்தின் அடிபாகத்தில் கல் இருந்தால் பொதுவாக வலி தோன்றாது. சிறுநீர் இறங்கும் குழாய் நுழைவாயிலில் கல் வந்து நிற்கும் போது மிக கடும் வலியையும் ஆழமான முதுகு வலியையும் ஏற்படுத்தும், கல் நகரத்துவங்கும்போது கல் வடிவத்தை பொறுத்தும் நகரும் வேகத்தை பொறுத்தும் வலி அதிகரிக்கும். சிறுநீர் இறங்கும் குழாயின் மேல் பாகத்தில்கல் சிக்கிக் கொண்டு மீண்டும் நகர்ந்து கல் கீழிறங்கி வர முடியாத நிலையில் இருக்கும்போது வலி முதுகிலிருந்து முன்பக்கமும் சேர்ந்து வரும் அப்போது வயிற்றுப்புண்ணோ, (அல்சரோ) என்று தவறுதலாக நோயை அனுமானிக்க நேரிடும்.




வலதுபுற சிறுநீர் இறங்கு குழாயின் நடுபாகத்தில் கல் மாட்டிக் கொண்டு கீழிறங்கி வரமுடியாத, நிலையில் வயிறுவலி, பிறப்புறுப்பின் மேட்டுப்பாகம் வரை பரவும். இப்போது குடல் வால் அழற்சியாக இருக்குமோ என நோயை தவறாக கருத நேரிடும். இத்தகைய சந்தேகங்களுக்கு X-Ray, Scan பரிசோதனைகள் மூலம் விடை காண முடியும். சிறுநீர் இறங்கும் குழாயின் கீழ்பாகத்தில் கல் சிக்கிக் கொண்டால் அப்போது வலி தொடையிடுக்கு, விதைப்பகுதி, பெண்களுக்கு பிறப்புறுப்பில் கூட வலி ஏற்படும்.



சிறுநீர் இறங்கும் குழாயில் கல் சிக்கிக் கொள்ளும் நேரங்களில் கடுமையான கிருமித் தொற்று ஏற்படும். இதனால் நீர்கடுப்பு நீர் சொட்டு சொட்டாக போதல் எரிச்சல் போன்றவை ஏற்படும். கல் சிறுநீர் பையில் வந்து விழுந்து விட்டால் கல் இங்குமங்கும் உருண்டு வட்ட வடிவமாக அல்லது முட்டை உருவில் மாறும். இங்கிருந்து சிறுநீர் புறவழியாக கல் அதிகாலை வெளியேறும் போது வலிக்கும் இந்நிலையில் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்

நாம் போகும் சிறுநீரின் கலரில் ( பிங்க், ரெட், பிரவுன்)மாற்றம் ஏற்படும். 

Disclaimer:
The information contained in this web blog is for educational purposes only and is not intended or implied to be a substitute for professional medical advice. Readers should not use this information for self-diagnosis or self-treatment, but should always consult a medical professional regarding any medical problems and before undertaking any major dietary changes.


அன்புடன்
மதுரைத்தமிழன்



6 comments:

  1. எனக்கும் இதுகுறித்த மெயில் வந்தது. இவ்வளவு எளிய சிகிச்சையான்னு ஆச்சர்யம் இருந்தது. ஆனா, நீங்க நேரடியா பயன்பெற்ற ஒருத்தரின் அனுபவத்தோடு எழுதும்போது நிச்சயம் சரியான தீர்வாத்தான் இருக்கும்கிறது உறுதியாகுது. ஆனா, ஒரு சந்தேகம், எனக்கு வந்ந்த மெயிலில், “ஃப்ரெஞ்ச் பீன்ஸ்”, அதாவது பொறியல் செய்வோமே அந்த பச்சை பீன்ஸ் காய்கறி என்றிருந்தது, நீங்க ராஜ்மா பயறுன்னு சொல்லிருக்கீங்க. கொஞ்சம் உறுதி செய்யமுடியுமா?

    உங்க (புது) டிஸ்கி - அவசியமானது.

    ReplyDelete
  2. ஹுசைனம்மா ஃபிரஞ் பீன்ஸ் கிடைக்காத பட்சத்தில் ராஜ்மாவை அதற்கு பதிலாக உபயோகிக்கலாம். இந்த மருத்துவம் உங்களைப் போல வசதியானவர்களுக்கு அல்ல பணம் இல்லாமல் சிறுநீரகக்கல்லால் அவதிப்படுபவர்களுக்கு மட்டுமே

    ReplyDelete
  3. Kidney beans, also known as dried French beans or Rajmah, are regarded as a very effective home remedy for kidney problems, including kidney stones

    ReplyDelete
  4. மிக்க நன்றி

    ReplyDelete
  5. மிக்க நன்றி

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.