உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, March 9, 2011

2011 எலக்சன் காமெடி- கவுண்டமணி VS செந்தில்

2011 எலக்சன் காமெடி- கவுண்டமணி VS செந்தில்


கவுண்டமணி : டேய் பனங்கொட்டை தலையா அப்படி என்னாடா கம்பியூட்ரை உத்து பார்த்துகிட்டு இருக்க?

செந்தில் : ஒரு சந்தேகம் அண்ணே அதுதான்.... நா ஆராச்சி பண்ணுறண்ணே

கவுண்டமணி :அதுதான பாத்தேன் உன்முஞ்சிக்கெல்லாம் பொண்ணுக எல்லாம் சாட் பண்ண வந்துட்டாங்கன்னு நினைச்சேன்.

டேய் கேப்மாரித்தலையா எதை வேண்ணாலும் கேளு ஆனா எலெக்ஷன் சமயத்தில் ரஜினிகாந்த் எங்க போய் ஒளிஞ்சுகிறார் என்று மட்டும் கேட்காதே.

செந்தில் :இல்லை அண்ணே எலெக்ஷன்னா என்ன அண்ணே

கவுண்டமணி :அப்படி வாடி. இந்த ஆல்-இன்-ஆல் அழகுராஜாவோட அறிவைப்பத்தி தெரிஞ்ச ஒரே ஆள் நீதான்டா.

செந்தில் : இல்லை அண்ணே நம்ம அறிவைபத்தி தெரிஞ்சவங்க உலக பூரா இருக்காங்கண்ணே இப்ப கூட புதிசா ஒரு குருப் நம்ம அறிவை பாராட்டி புதிசா பன் க்ளப் ஆரம்பிச்சு இருக்காங்கண்ணே

கவுண்டமணி :டேய் பரக்காவெட்டி பயலே அது பன் க்ளப் இல்லைடா அது பேரு (Fan )ரசிகர்கள் க்ளப்படா நாயே த்தூ....... உனக்கு எல்லாம் எதுக்கடா கம்பியுட்டர்

செந்தில் :சரிண்ணே என் சந்தேகத்திற்கு பதில் தெரிந்தா சொல்லுங்க

கவுண்டமணி :ஹஹ்ஹஹ்ஹ.... ஹஹ்ஹஹ்ஹ.......அதுவாடா மண்டையா ... அது எலெக்ஷன் இல்லைடா கலெக்ஷண்டா காசு பண்ற வேலைடா. தேர்தலுக்கு முன்னால இந்த அரசியல்வாதிங்க மக்களிடம் இருந்து கலக்ஷன் பண்ணுவாங்கடா அவங்ககிட்ட இருந்து நாம திரும்ப கலக்ஷ்ன் பண்ணுறதுதாண்டா அதைதான் அவங்க எலக்சனுங்கராங்க. நாம கலெக்சனுங்குறோம்டா

ஆமாம் இதெல்லாம் எதுக்குடா கேக்குறே

செந்தில் :இல்லேண்ணே எலக்சன்ல ஒட்டு போட்டா காசும் பிரியாணியும் தருவாங்கண்ணு சொன்னாங்கண்ணே

கவுண்டமணி :அய்யோ..எப்பா...இங்க பாருடா இந்தமாதிரி கருப்பு பண்ணிகலேல்லாம் ஒட்டு போட்டுதான் இந்த தமிழ் நாடு உருப்பாடாம போச்சுடா--

செந்தில் :அண்ணே இன்னொரு சந்தேகமண்ணே

கவுண்டமணி :டேய் நீ என்ன கேட்க போறேன்னு தெரியும்டா ஏன் விஜயகாந்த் அம்மா கூட கூட்டணி வைச்சுகிறார்ன்னுதானே கேட்கப்போறே..அம்மான்னா கடவுள்டா அதுதான் அவர்கடவுள் கூட கூட்டணி வைச்சிக்கிட்டார்.

செந்தில் :நான் கேட்க வந்தது அதில்லைண்ணே

கவுண்டமணி :என்னடா கேட்டு தொலைடா சனியனே

செந்தில் :போங்கண்ணே நீங்க எப்பவுமே இப்டித்தான் வய்யிவீங்க..(செந்தில் சோகமாக ஒரு எக்ஸ்பிரஷன் கொடுக்கிறார்

கவுண்டமணி :சரி சரி என் நேரம் இன்னைக்கி சரியில்லை கேட்டு தொலைடா

செந்தில் :கையில கறுப்பு புள்ளி ஏன்ணே வெக்கறாங்க.??

கவுண்டமணி :அப்படி கேளுடா. டேய்ய்ய்ய்ய்ய் எத்தனை பேரை முட்டாள் பண்ணோம்னு ஒரு கணக்கு வேண்டாமா அதுக்கு தாண்டா வைக்குறாங்க

செந்தில் :கடைசியாக ஒரு சந்தேகமண்ணே

கவுண்டமணி :அட வூடு மாறி பெருச்சாளி நாயே என்னடா சந்தேகம் உனக்கு?

செந்தில் :ஐந்து வருஷதுக்கு ஒரு தடவை ஆட்சி ஏன்ணே மாறுது.


கவுண்டமணி :டேய் நம்ம தமிழ் மக்களுக்கு அறிவே இல்லைடா. ஒரு கட்சியையே 10 அல்லது 20 வருஷம் ஆட்சி செய்யவுட்டா அவன் சொத்தை சுருட்டி சோர்ந்து போய் ஒருவேளை நாட்டுக்கு நல்லது பண்ணுவான்டா. ஆனா நம்ம தமிழ் மக்கள் என்ன பண்றாங்க ஐந்து வருஷதுக்கு ஆட்சியை மாத்தி மாத்தி விடறாங்க. அவங்க ஐந்து வருஷம் சம்பாதிச்ச காசை ஐந்து வருஷம் செலவு பண்ணிட்டு மறுபடியும் வந்துடறான் கொள்ளை அடிக்க.செந்தில் :அதுக்கு என்ன பண்றது அண்ணே.

கவுண்டமணி :அதுக்க்கா நான் மதுரை வீரனுக்கு கெடா வெட்டி கூழு ஊத்தப் போறேன்.

செந்தில் :கெடா வாங்கிட்டீங்களாண்ணே

கவுண்டமணி :டேய் நாட்டுக்காக சொந்த காசு போட்டு கெடா வாங்கறதுக்கு நான் என்ன உன்னை மாதிரி மொள்ளமாறியா


செந்தில் : அப்புறம் எப்படிண்ணே வாங்குவிங்க

கவுண்டமணி :நான் கெடான்னு சொன்னது உன்னைத் தான்டா சாருநிவேதா வாயா.

அண்ணே இனிமே உங்ககிட்ட சந்தேகமே கேட்கமாட்டேன் என்று செந்தில் அலறிக் கொண்டு ஒடுகிறார். அப்பாடா சனியன் ஒளிஞ்சிடுச்சுன்ணு அருகில் இருந்த லேப் டாப்பை எடுத்து Madurai Tamil Guy -யின் அவர்கள் ...உண்மைகள் ப்ளாக்கிற்கு வருகை தந்து இந்த பதிவை படித்து பின்னூட்டம் எழுதவேண்டுமென்று அவரின் ரசிகர்களுக்கு கடிதம் எழுத ஆரம்பிகிறார் கவுண்டமணி...

எனக்கு இமெயிலில் நண்பர் அனுப்பிய ஜோக்கை கொஞ்சம் அல்டா உல்டா பண்ணி ஒரு பதிவா போட்டிருகேன் சிரிப்பு வந்தா சிரிங்க... இல்லைன்னா ஒரு ஒரம்மா வேறு ப்ளாக்கிற்கு போய் அழுதுங்கோங்க ஒகேவா. நான் இப்ப ஸூட்டு விடுறேன்

6 comments :

 1. ஹா,ஹா,ஹா,ஹா,ஹா... கடைசியில் சொல்லி இருக்கிற வார்னிங் மெசேஜ் ல உங்கள் நேர்மையை பாராட்டுறோம்!

  ReplyDelete
 2. //கவுண்டமணி :டேய் நம்ம தமிழ் மக்களுக்கு அறிவே இல்லைடா. ஒரு கட்சியையே 10 அல்லது 20 வருஷம் ஆட்சி செய்யவுட்டா அவன் சொத்தை சுருட்டி சோர்ந்து போய் ஒருவேளை நாட்டுக்கு நல்லது பண்ணுவான்டா. ஆனா நம்ம தமிழ் மக்கள் என்ன பண்றாங்க ஐந்து வருஷதுக்கு ஆட்சியை மாத்தி மாத்தி விடறாங்க. அவங்க ஐந்து வருஷம் சம்பாதிச்ச காசை ஐந்து வருஷம் செலவு பண்ணிட்டு மறுபடியும் வந்துடறான் கொள்ளை அடிக்க.//

  superuuuu:))))

  ReplyDelete
 3. அப்படி போடு நண்பா ஹிஹி

  ReplyDelete
 4. ஒப்பாரும் மிக்காரும் அல்லாத
  உலக நவரச நாயகன்,

  மோதல்வரு: கார்த்திக்க்க்கக் ...

  நான்காவது அணி!
  எவரும் எதிர்பார்க்காத தேர்தல் முடிவுகள்!:
  எல்லா தொகுதிகளிலும் வென்று நவரசம் ஆட்சி அமைத்ததை காணச் சகிக்காமல்
  பச்சை புடவையும்,மஞ்சள் துண்டும் வனவாசம் போன பிறகு நவரச நாயகன்
  மேக்கப் போடாத நடிகன் உலக முதல்வரு கார்த்திக்க்க்க்...
  தினப்புருடா நிருபன்-(மன்னிக்கவும்- நிருபர்ர்ர்ர்) கவுண்டர் பெல்லுக்கு அளித்த முதல் செவ்வி
  மக்களை கொள்ளை கொண்ட இந்த ஆட்சி மக்களுக்கு மட்டும் அல்ல நாய் ,குருவி நலன் பெற பாடுபடும்!,
  நாய்கள் குட்டி போட ஒவ்வொரு கிராமத்திலும் பிரசவ ஆசுபத்திரி கட்டி (அதற்கு நடிகை .......பெயர் சூட்டி ) நாய்கள் பிரசவம் முடிந்து ஊட்டுக்கு திரும்பும் வரை நாய் சோப்பு முதல் நண்டு சூப்பு வரை அரசாங்கமே செலவு செய்யும்!
  குருவிகள் இனிமேல் பறந்து திரிந்து குச்சி
  பொறுக்கி கூடு கட்ட சிரமப்படவேண்டாம்!

  அரசாங்க செலவில் பிளாஸ்டிக் குச்சிகள் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து தருவதோடு, குருவிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும்!
  கடன் வழங்குவதில் முறைகேடு நடந்தால்....
  நடிகை நமீதாவுடன் சேர்ந்து பெண்டு நிமிர்த்தி விடுவேன்!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog