உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, March 31, 2011

விஜயகாந்தை கொலை செய்ய சதித்திட்டம். சதி திட்டம் அம்பலம்

விஜயகாந்தை கொலை செய்ய சதித்திட்டம். சதி திட்டம் அம்பலம்



நடிகர் கறுப்பு எம்ஜியாரல் பாதிக்கபடாத நபர்கள் & கட்சிகளே இல்லை எனலாம். இந்த தேர்தல் அவரின் கட்சிக்கு இறுதி தேர்தல் இதில் வாழ்வா சாவா என்பது தெரிந்துவிடும். அது போல அவரால் பாதிக்க படாத நபர்களே இல்லை எனலாம். உதாரணத்திற்க்கு கலைஞர், அய்யா ராமதாஸ், வைகோ மற்றும் ஜெயலலிதா அவர்கள். இவரால் பாதிக்கப்பட்ட கட்சிகள் அநேகம் அதிலும் அதிகம் பாதிக்கப்பட்ட கட்சி றிவுகெட்ட திருட்டு முட்டாள் ழகம் தான். அதனால்தான் அவரால் பாதிக்கப்ட்ட றிவுகெட்ட திருட்டு முட்டாள் ழகத் தலைமை என்ன விலை கொடுத்தாவது அவரை தன் கட்சியில் சேர்த்துவிட வேண்டும் என்ற முயற்சி செய்து கடைசியில் அவரைதன் கட்சிக்குள் வளைத்து போட்டது. இந்த தேர்தல் அந்த தலைமைக்கும் கடைசி தேர்தல் அதனால் இந்த தேர்தலிலும் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று அந்த தலைமை முடிவு செய்துள்ளது. எப்போதுமே பழிவாங்கும் குணம் கொண்ட இந்த தலைமை விஜயகாந்தை பழிவாங்க சதிதிட்டம் போட்டது அதன் முதல்படி அவரை தன் கட்சிக்குள் இழுத்து போட்டது. அதன் பின் தேர்தலுக்கு முதல் நாள் அவரைத் தீர்த்து கட்டவும் முடிவு செய்துள்ளது. இதன் விளைவாக ஆளும் கட்சிக்கு பழியும அதனால் கிடைக்கும் அனுதாப ஓட்டால் தம் கட்சி வென்று விட வாய்ப்பும் எதிர்காலத்தில் இவரால் கட்சிக்கு பாதிப்பு ஏதும் ஏற்படக் கூடாது என்று முடிவு செய்துள்ளது. எல்லோரும் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க முற்படுவார்கள் ஆனால் இந்த தலைமை மூன்று மாங்காய் அடிக்க முயற்சி செய்கின்றது. இந்த ரகசியத்தை அவர்கள் உண்மைகள் என்ற ப்ளாக்கின் புலனாய்வு குழு கண்டுபிடித்துள்ளது.( எப்படி நம்ம பில்டப்....) ஹீ....ஹீ......ஹீ........



நம்புவதே வழி என்ற மறைதனை நாம் இன்று நம்பி விட்டோம்' என்ற பாரதியாரின் கவிதை வரியை வாசகர்களுக்கு நினைவுபடுத்துகிறேன். அரசியலில் எதுவும் சாத்தியம்; எவருக்கும் வழியும் கிடையாது, மறையும் கிடையாது என்று நம்ப வைத்துள்ளது தற்போதைய அரசியல் போக்கு. எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும், எப்படியும் மே 13ம் தேதிக்குப் பின், மக்களை முட்டாளாக்கத்தான் போகின்றனர். அதைத் தாங்கும் அளவுக்கு மக்களுக்கு ஒரு மனோதைரியத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தின் விளைவே இச்செய்தி. ஒருவேளை உண்மையிலேயே இப்படி ஒரு சம்பவம்  நடந்துவிட்டால், "Madurai Tamil Guy' பொறுப்பல்ல."அரசியல்வாதிகளைப் போல் நீங்களும் எங்களை முட்டாளாக்கலாமா' என்று கோபப்படும் வாசகர்களுக்கு, ஏப்ரல் முதல் நாள் வாழ்த்துக்கள்...!




இது ஒரு முழு கற்பனையே....கற்பனையைத் தவிர உண்மை ஏதுமில்லை. நான் தினமலரில் படித்த முட்டாள் தின (Apirl Fool) செய்தியின் விளைவே இந்த கற்பனை அவர்களின் கற்பனையை படிக்க இங்கே அ.தி.மு.க., கூட்டணியில் மீண்டும் வைகோ: போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவுடன் சந்திப்பு க்ளிக் செய்யவும் ((http://www.dinamalar.com/News_Detail.asp?Id=216455 )


Wednesday, March 30, 2011

50 ஆயிரம் தேவையில்லை 50 ரூபாய் மட்டும் போதும் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு

50 ஆயிரம் தேவையில்லை 50 ரூபாய் மட்டும் போதும் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு



சிறுநீரில் கல்லா? ஆப்ரேஷன் செய்ய பணம் இல்லையா? கவலைப்பாடாதீர்கள் மிகச் சிறந்த பக்க விளைவுகள் இல்லாத மிக எளிய வீட்டு வைத்தியம் பற்றிய பதிவுதான் இது.


இன்றைய உணவுப்பழக்க வழக்கத்தினால் சிறுநீரக்கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது. முக்கியமாக அரபு நாட்டில் வேலை பார்க்கும் அநேக பேர் சிறுநீர் கல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உண்டாகும் வலியானது மிகவும் பயங்கரமானதாக இருக்கும் இந்த வலியை அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.
அந்தளவுக்கு வலி பின்னி பெடலெடுத்து விடும்.

இயந்திரமயமாகிப் போன வாழ்க்கை முறையில் தவறான உணவுப்பழக்கமும், பிறவியிலேயே மரபணுக்களில் காணப்படும் சில குறைபாடுகளாலும், உடலுக்கு சத்து தேவை என்று தாமாகவே விட்டமின் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதாலும், மதுபானங்கள் , இறைச்சி , முட்டைக்கோசு, தக்காளி, காலிஃப்ளவர், வெள்ளரி, சப்போட்டா, போன்ற காய்கறி பழங்களை அதிகளவு உண்பதாலும் தாகத்தின் போதும் கடுமையான உடற்பயிற்சிக்கு பின்பும் நீர் அருந்தாமையாலும், சிறுநீரகப் பையில் அடிக்கடி தொற்று ஏற்படுவதாலும் சிறுநீரிலும், இரத்தத்திலும், சுண்ணாம்புச்சத்து அதிகமிருக்க கூடிய நிலையிலும், சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு ஏற்பட்டவுடன் சிறுநீரை அடக்கி வைப்பதாலும் கற்கள் தோன்றுகின்றன.


நாம் சாப்பிடும் உணவிலுள்ள கற்களே சிறுநீரகத்தில் தங்கி விடுகிறது என்று பலர் தவறாக கருதிக் கொண்டுள்ளனர். ஆனால் உண்மை என்னவென்றால் நாம் சாப்பிடும் உணவு மூலம் உட்கொள்ளுகிற கற்கள் இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், ஆகியபகுதிகளை கடந்து மலத்துடன் சேர்ந்து வெளியேறுகிறது. ஆனால் சிறுநீரகத்தில் கற்கள் எப்படி தோன்றுகிறது என்றால் நமது உடலிலுள்ள இரத்தத்தை ஒவ்வொரு நிமிஷமும் சுத்தம் செய்து வடிகட்டி உடலுக்கு வேண்டாத பொருட்களை கழிவாக, சிறுநீராக பிரிக்கும் போது சிறுநீரில் கரைந்திருக்கும் தாதுப் பொருட்கள் சிறிதுசிறிதாக படிந்து படிகங்களாக வளர்ந்து பின் கற்களாக உருமாறுகின்றன

 
இந்த சிறுநீர் கல்லைப் பற்றி எனது நண்பரிடம் விவாதித்த போது அவரது நண்பர் மேற்கொண்ட எளிய வீட்டு வைத்தியத்தை என்னிடம் சொன்னார். அது மிகவும் ஆச்சிரியமாகவும் மிகவும் எளிமையானதாகவும் இருந்தது. அதை பற்றி நான் நெட்டில் ஆராய்ந்த போது பலரும் இந்த முறையை பின்பற்றி குணமடைந்த விபரம் கிடைத்தது. அதை படித்ததிலிருந்து சிறுநீரகக்கல் பிரச்சினையை எப்படி மிக குறந்த செலவில் தீர்வு காணலாம் என்பதை நாலு பேருக்கு தெரிவிக்கலாம் என்பது மட்டுமல்லாமல் அந்த அற்புத எளிய வீட்டு வைத்தியத்தை தமிழில் தருவதே இந்த பதிவின் நோக்கம். நான் மருத்துவன் அல்ல நான் படித்த & கேட்ட அனுபவத்தை மட்டும் இங்கு தருகிறேன்.




100 கிராம் ஃபிரஞ்சு பீன்ஸ் ( கிட்னி பீன்ஸ் அல்லது ராஜ்மா) எல்லா கடைகளிலும் கிடைக்கிறது அதை வாங்கி அதில் உள்ள விதையை எடுத்து 5 லிட்டர் தண்ணீரில் குறைந்தது 5 மணி நேரம் கொதிக்க வைத்து அதை மஸ்லின் துணியால் நன்றாக வடிகட்டி அதை நன்றாக ஆற வைத்து அதை மீண்டும் கலக்காமல் இன்னொருமுறை மஸ்லின் துணியால் வடிக்கட்டி அந்த நீரை ஒரு நாள் முழுவதும் இரண்டு மணிக்கொருமுறை குடித்துவந்தால் சிறுநீரில் உள்ள கல் வெளிவந்து விடும். ஆனால் வலியை தாங்க கூடிய சக்தி உங்களுக்கு இருக்க வேண்டும்.இந்த முறையில் தாயாரித்த நீரை 24 மணி நேரத்திற்குள் உபயோகித்துவிடவேண்டும்.இல்லையேன்றால் அதுதன்பவரை இழந்துவிடும்.. இது பணம் இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு எளிய வைத்தியம்.



சிறுநீரில் உள்ள கல்லுக்கான அறிகுறிகள்: (Symptoms for Kidney Stones)

சிறுநீரகம், சிறுநீரகத்திலிருந்து நீர் இறங்கி வரும் குழாய்கள், சிறுநீர்ப்பை இந்த மூன்று இடங்களில் எங்கு வேண்டுமானாலும் கற்கள் உருவாகலாம். சிறுநீரகத்தின் அடிபாகத்தில் கல் இருந்தால் பொதுவாக வலி தோன்றாது. சிறுநீர் இறங்கும் குழாய் நுழைவாயிலில் கல் வந்து நிற்கும் போது மிக கடும் வலியையும் ஆழமான முதுகு வலியையும் ஏற்படுத்தும், கல் நகரத்துவங்கும்போது கல் வடிவத்தை பொறுத்தும் நகரும் வேகத்தை பொறுத்தும் வலி அதிகரிக்கும். சிறுநீர் இறங்கும் குழாயின் மேல் பாகத்தில்கல் சிக்கிக் கொண்டு மீண்டும் நகர்ந்து கல் கீழிறங்கி வர முடியாத நிலையில் இருக்கும்போது வலி முதுகிலிருந்து முன்பக்கமும் சேர்ந்து வரும் அப்போது வயிற்றுப்புண்ணோ, (அல்சரோ) என்று தவறுதலாக நோயை அனுமானிக்க நேரிடும்.




வலதுபுற சிறுநீர் இறங்கு குழாயின் நடுபாகத்தில் கல் மாட்டிக் கொண்டு கீழிறங்கி வரமுடியாத, நிலையில் வயிறுவலி, பிறப்புறுப்பின் மேட்டுப்பாகம் வரை பரவும். இப்போது குடல் வால் அழற்சியாக இருக்குமோ என நோயை தவறாக கருத நேரிடும். இத்தகைய சந்தேகங்களுக்கு X-Ray, Scan பரிசோதனைகள் மூலம் விடை காண முடியும். சிறுநீர் இறங்கும் குழாயின் கீழ்பாகத்தில் கல் சிக்கிக் கொண்டால் அப்போது வலி தொடையிடுக்கு, விதைப்பகுதி, பெண்களுக்கு பிறப்புறுப்பில் கூட வலி ஏற்படும்.



சிறுநீர் இறங்கும் குழாயில் கல் சிக்கிக் கொள்ளும் நேரங்களில் கடுமையான கிருமித் தொற்று ஏற்படும். இதனால் நீர்கடுப்பு நீர் சொட்டு சொட்டாக போதல் எரிச்சல் போன்றவை ஏற்படும். கல் சிறுநீர் பையில் வந்து விழுந்து விட்டால் கல் இங்குமங்கும் உருண்டு வட்ட வடிவமாக அல்லது முட்டை உருவில் மாறும். இங்கிருந்து சிறுநீர் புறவழியாக கல் அதிகாலை வெளியேறும் போது வலிக்கும் இந்நிலையில் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்

நாம் போகும் சிறுநீரின் கலரில் ( பிங்க், ரெட், பிரவுன்)மாற்றம் ஏற்படும். 

Disclaimer:
The information contained in this web blog is for educational purposes only and is not intended or implied to be a substitute for professional medical advice. Readers should not use this information for self-diagnosis or self-treatment, but should always consult a medical professional regarding any medical problems and before undertaking any major dietary changes.


அன்புடன்
மதுரைத்தமிழன்



Friday, March 18, 2011

மிரண்டு போன ஜெயலலிதாவும் அவரை மிரள வைத்த சக்திகளும்

மிரண்டு போன ஜெயலலிதாவும் அவரை மிரள வைத்த சக்திகளும்

முந்தைய தினம் காட்டாற்று வெள்ளம் போல பாய்ந்த ஜெயலலிதா திடீரென பணிந்து போக முக்கியக் காரணம் விஜய்காந்த் தான் என்பது அனைவரும் அறிந்த செய்தி.

நாம் விரும்பும் தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்துவிட்டால் தேதிமுக , இடதுசாரிகளும், புதிய தமிழகமும், பார்வர்ட் பிளாக்கும் என்ன செய்துவிடப் போகிறார்கள்.. ஒருவர் பின் ஒருவராக நம்மிடம் வந்து ”அம்மா அந்தத் தொகுதியை விட்டுக் கொடுங்கள்.. இந்தத் தொகுதியை விட்டுக் கொடுங்கள்” என்று கெஞ்சுவார்கள். அப்படி கெஞ்சும் போது சிலவற்றை விட்டுத் தந்தால் நாம் தந்ததை வாங்கிக் கொண்டு வாயை மூடிக் கொண்டு போய் விடுவார்கள் என்று தான் ஜெயலலிதாவும் அவரது பத்திரிக்கை துறை நண்பரும் நினைத்திருந்தானர்.

விஜய்காந்த் என்னொரு சக்தி அந்த இடத்தில் இருந்திருக்காவிட்டால் ஜெயலலிதா நினைத்து தான் நடந்திருக்கும். ஆனால், ஜெயலலிதாவால் முதுகில் குத்தப்பட்டவுடன் அனைத்து கூட்டணி கட்சிகளும் ( இடதுசாரிகளும், அவர்களுடன் பார்வர்ட் பிளாக், புதிய தமிழகம், மூவேந்தர் முன்னணிக் கழகம் ) விஜய்காந்தின் அலுவலகத்தில் கூடி மூன்றாவது அணி அமைப்போம்’ என்று மிரட்டுவார்கள் என்று ஜெயலலிதா கனவிலும் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

விஜய்காந்த் மூலம் எதிர்காலத்தில் ஜெயலலிதா சந்திக்கப் போகும் அதிரடியான சவால்களுக்கு இந்த சம்பவம் ஒரு ஆரம்பம் தான். இனி எந்தக் கட்சியையும் ஜெயலலிதாவால் உதாசீனப்படுத்த முடியாது என்பதற்கு பெரும் உதாரணம் வைகோவுக்கும் சேர்த்து அதிமுக சமாதானக் கொடியை ஆட்டியது ஆகும். சமாதானப் போக வேண்டுமானால் தான் கோரும் தொகுதிகளை தனக்குத் தருவதோடு, மதிமுகவையும் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என நிபந்தனை போட்டு அதிமுக தலைவர்களிடம் பேச்சுவார்தை நடத்தினார் விஜயகாந்த்.

இதனால் மிரட்டல் விடுத்த கட்சிகளுக்கு கேட்கும் தொகுதிகளைக் கொடுப்பதோடு, மதிமுகவுக்கும் கூட்டணியில் இடம் தருவதாக அறிவித்துள்ளார் ஜெயலலிதா .இப்படிபட்ட நிலைக்கு தள்ளப்பட்ட ஜெயலலிதா இதனால் தன் பெயர் கெட்டுபோவதால் இதற்கெல்லாம் காரணம் தன் உடன் பிறவா சகோதரியின் குடும்பமே என்று புது கதையை அவிழ்த்து விட்டு இருக்கிறார்.

இப்போது கட்சிகளுடன் மீண்டும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை ஜெயலலிதா தொடங்கியுள்ளதன் மூலம் பெரும் குழப்பத்தில் உள்ளவர்கள் அதிமுக வேட்பாளர் பட்டியலில் உள்ளவர்கள்தான். கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது ப்ளஸ் சசிகலா குடும்பத்தினர்க்கான கோட்டா போக அதிமுக கட்சிகளில் உழைத்தவர்களில் எத்தனை பேருக்கு உண்மையிலேயே சீட் கிடைக்குமோ.. எத்தனை பேரின் பெயர்கள் பட்டியலில் இருந்து காணாமல் போகுமோ.. எத்தனை பேர் தொகுதி மாற வேண்டியிருக்குமோ என்பது தெரியவில்லை.

யானைக்கும் அடி சருக்கும் என்பது ஜெயலலிதா விஷயத்தில் உண்மையாகி உள்ளது
அன்புடன்
மதுரைத்தமிழன்

Thursday, March 17, 2011

1 ரூபாயில் உங்கள் கிட்னியை சுத்தம் செய்ய?


1 ரூபாயில் உங்கள் கிட்னியை சுத்தம் செய்ய?


நமது இரத்தத்தில் உள்ள உப்பையும், விஷத்தன்மையையும் பில்டர் செய்து சுத்தம் செய்யும் வேலையை நமது கிட்னி செய்து வருகின்றது. அப்படிபட்ட மகத்தான வேலையை நமது கிட்னி இராப்பகலாக செய்து வருகின்றது. அப்படிபட்ட கிட்னியை அவ்வப்போது நாம் தனிப்பட்ட கவனம் செலுத்தி கவனித்து வந்தால் அதன் ஆற்றல் நீண்ட நாள் இருப்பதுடன் ஸ்லோவாக இல்லாமல் வெகு தரத்துடன் இயங்கும். இதற்கு நாம் செய்யவேண்டியது மிகவும் எளிது அதற்கு தேவை 1 ரூபாய் மட்டுமே.


இந்த ஒரு ரூபாய் கொண்டு நான் கொத்தமல்லிதழை என்னும் இலையை வாங்கி அதை சிறிதாக நறுக்கி சுத்தமான நீரில் 10 நிமிடம் கொதிக்கவிட்டு அதன் பிறகு அதை வடிகட்டி ஆற வைத்து தினமும் ஒரு க்ளாஸ் குடித்து வந்தால் நமது கிட்னி மிகவும் சுத்தமாக்கபட்டு நன்றாக வேலை செய்யும். சால்ட் & விஷக் கழிவுகள் யூரின் மூலம் வெளி வருவதை நீங்கள் கவனிக்கலாம் அதோடு மட்டுமல்லாமல் உங்கள் உடம்பில் ஒரு வித புது மாற்றத்தை உணரலாம்.

இது ஒரு இயற்கையான கிட்னியை சுத்தம் செய்யும் முறையாகும்.

கொத்தமல்லி தழையை ஆங்கிலத்தில் Coriander (Coriandrum sativum) என்றும், ஹிந்தியில் இதை Dhania என்றும் அமெரிக்காவில் இதை Cilatro என்றும். இதையையே வெஸ்டர்ன் உலகத்தில் Chinese parsley or Mexican parsley என்றும் அழைப்பார்கள்.

Disclaimer:

The information contained in this web blog is for educational purposes only and is not intended or implied to be a substitute for professional medical advice. Readers should not use this information for self-diagnosis or self-treatment, but should always consult a medical professional regarding any medical problems and before undertaking any major dietary changes.



விரைவில் கொத்தமல்லியால் நமக்கு கிடைக்கும் மருத்துவ பலன்களை தருகிறேன். உங்கள் வருகைக்கு எனது நன்றிகள்! 


அன்புடன்
மதுரைத்தமிழன்

விஜயகாந்தை அடியோடு காலி செய்ய ஜெ. போட்ட மாஸ்டர் பிளான்! வெற்றியா ? தோல்வியா?

விஜயகாந்தை அடியோடு காலி செய்ய ஜெ. போட்ட மாஸ்டர் பிளான்! வெற்றியா ? தோல்வியா?

அதிமுக, ஜெயலலிதாவுக்கும் இதுவரை இருந்து வந்த ஒரே எதிரி திமுக, கருணாநிதியும் மட்டுமே. இவர்கள் நிர ந்தர எதிரி என்பதால் பெரிய விஷயம் இல்லை. ஆனால் சமீப காலமாக அதிமுகவின் அஸ்திவாரதையே ஆட்டிவிட்ட நேற்று பெய்த மழையில் இன்று முளைத்து வந்த மிகப் பெரிய முக்கிய எதிரி விஜயகாந்த் & தேமுதிக.

தேமுதிக உதயமாகி, அது தேர்தல்களில் போட்டியிட ஆரம்பித்தது முதல் அந்தக் கட்சியால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது என்பது அதிமுக மட்டுமே. திமுகவின் வாக்குகளையும் கொஞ்சம் கடித்தாலும் கடுமையாக பாதிக்கப்பட்டது என்னவோ அதிமுகதான் அதிமுகவின் வாக்கு வங்கிக்குள் புகுந்து உண்டு இல்லை என்று பண்ணி விட்டார் விஜயகாந்த்

முக்கிய எதிரியான திமுகவை வலிமையோடு எதிர்க்க வேண்டும் என்றால், புதிதாக வந்த எதிரியான தேமுதிகவை பலவீனப்படுத்தி, விழ வைக்க வேண்டும் என்பதும். அதைத்தான் தற்போது ஜெயலலிதா சிறப்பாக செய்து முடித்திருப்பதாக அரசியல் அறிந்தவர்கள் கருதுகிறார்கள்

தேமுதிகவை பலவீனப்படுத்தி விட்டால் திமுகவை சமாளிப்பது மிக மிக எளிது. இதற்கு ஸ்பெக்ட்ரம், விலைவாசி உயர்வுப் பிரச்சனை உள்ளிட்ட பல பிரச்சினைகள் உதவியாக இருப்பதால் அதை மட்டும் வைத்துக் கொண்டு திமுகவை வீழ்த்த வியூகம் அமைத்து எதிர்ப்பது.அதனால் மிக சமர்த்தியமாக பிளான் பண்ணி விஜயகாந்தை உள்ளே இழுத்து விட்டார் அதே நேரத்தில் தேமுதிக இப்போது அதிமுக கூட்டணியில் இருந்தாலும் அல்லது வெளியேறி யாருடனாவது சேர்ந்து கூட்டணி அமைத்தாலும் , விஜயகாந்துக்கு மக்களிடம் முன்பு இருந்து செல்வாக்கு, ஆதரவு மீண்டும் இருக்காது என்பதும் ஜெயலலிதா மற்றும் அவரது பத்திரிக்கை நண்பரின் கருத்தாகும்

இதையெல்லாம் கருத்தில் கொண்டு மற்ற கட்சியினர்களையும் தாமதிக்க வைத்து காங்கிரஸுடன் சேர்ந்து முன்றாம் கூட்டணி அமைத்துவிடாமல் காலம் தாழ்த்தி தவிக்கவிட்டு எல்லோருக்கும் ஒரு ஆப் வைத்து விட்டு ஆணவம் அழிவுக்கு கேடு என்பதைப் பற்றி கவலைப்பாடாமல் பிரச்சாரத்திற்கு கிளம்பிவிட்டார்.

இந்த தேர்தலில் காலியாகப் போவது ஜெயலலிதாவா இல்லை விஜயகாந்தா என்பதுற்றி மக்களின் மாஸ்டர் ப்ளான் வெகு விரைவில்...

Note : கலைஞருக்கு உள்ள ஒரே பிரச்சனை ஸ்பெக்ட்ரம் மட்டும்தான் ஆனால் அவர் அதை இலவசம் என்ற திட்டத்தால் மறைத்து மீண்டும் வென்று வீடுவாரோ என்பது எனது எண்ணமாக இருக்கிறது.

இதைப் பற்றி உங்கள் கருத்துக்களை இங்கே சொல்லிவிட்டு போங்களேன்......

எவன்டி உன்ன பெத்தான், அவன் கைல கிடைச்சா செத்தான்

எவன்டி உன்ன பெத்தான், அவன் கைல கிடைச்சா செத்தான்


எவன்டி உன்ன பெத்தான், அவன் கைல கிடைச்சா செத்தான்…” இந்த பாடல் வரிகளை கேட்டவுடன் இது என்ன அம்மா ஜெயலலிதாவிற்கு எதிராக திமுகவின் கட்சி பாட்டு என்று நினைத்து பயந்து விட்டீர்களா? பயப்பட வேண்டாம் இது தான் இன்றைய தமிழ்நாட்டு சினிமா

ப்ளாக் இலவசம் என்றதால் தமிழ் எழுத தெரிந்த லூஸுக்கள் எல்லாம் கண்டதை சாக்கடை மாதிரி எழுதி வருவதை போல ,கையில் பணம் வைத்திருக்கும் பரதேசிகள் எல்லாம் இப்போது பாட்டு எழுத கிளம்பிவிட்டது.

தெலுங்கில் வெளிவந்த வேதம் படம் தற்போது தமிழில் வானம் என்ற பெயரில் உருவாகியுள்ளது. இப்படத்தை துரை தயாநிதியின் க்ளவுட் நைட் மூவிஸ் வெளியிடுகிறது. இப்படத்தில் டி.ராஜேந்திரர் மகன் சிம்பு என்ற சிலம்பரசன் நடிக்கிறார்.

இதில் அப்பாவிற்கு பிள்ளை தப்பாமல் அப்பாவை போல இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை இவரே எழுதி, பாடியுள்ளார். அதுவும் ‘எவன்டி உன்ன பெத்தான், அவன் கைல கிடைச்சா செத்தான்…என்று”

ஆனால், “சிம்பு கைல கிடைச்சா செத்தான்” என விளக்கமாறுடன் தமிழ்நாட்டு மகளிர் அமைப்புகள் புறப்பட்டுவிட்டதாக தகவல்.காரணம், பாடல் வரிகள் பெண்கள் மனதை காயப்படுத்துவது மட்டுமல்லாமல் பாடல் வரிகள் தரமற்றதாக உள்ளன இது இளைய சமுதாயத்தினரின் மனதில் மாசு ஏற்படுத்தும்.

அந்த பாடலில், “உன் மானம் காக்கிற மேல் ஆடை நான்தான்” என்ற வரிகள் ஆபாசமானவை. பொதுவாகவே சிம்பு படங்களில் பெண்ணினத்துக்கு எதிரான வன்மங்கள் தூக்கலாக உள்ளன.சிம்பு படத்துக்காக ஒட்டப்பட்டிருந்த முத்தக் காட்சி சுவரொட்டிகளே இதற்குச் சான்று என சிம்புவின் பாடலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள மகளிர் அமைப்புகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வருகின்றன

அந்த கொடுமையை நீங்களும் கேட்டுபார்த்து உங்கள் கருத்தை சொல்லுங்களேன்.


 

Wednesday, March 16, 2011

தேமுதிக, அதிமுக கூட்டணியில் நிலைக்குமா, நீடிக்குமா என்பது இன்னும் ஒரு கேள்விக்குறியே!!!

தேமுதிக, அதிமுக கூட்டணியில் நிலைக்குமா, நீடிக்குமா என்பது இன்னும் ஒரு கேள்விக்குறியே!!!



விஜயகாந்த்துக்கு அதிமுக கூட்டணியில் சேர்ந்ததில் முழு திருப்தியும், மகிழ்ச்சியும் இல்லையாம். கூட இருந்தவர்கள் தொடர்ந்து தொணத்தி தொணத்தி வந்ததால்தான் கூட்டணிக்கே அவர் சம்மதித்தாராம். வேட்பாளர் நேர்காணலின்போதும் கூட இதைத்தான் அவர் சொன்னாராம். எல்லோரும் சொன்னீங்கன்னு சேர்ந்துட்டேன். இருந்தாலும், என்னால் 41 பேருக்கு மட்டும்தான் வாய்ப்பளிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதை நான் விரும்பவில்லை என்று கூறினாராம் விஜயகாந்த்.


இதை வைத்து புதிய செய்தி பரவி வருகிறது. அது, தான் விரும்பியபடி, சாதகமான தொகுதிகளை அதிமுக தரத் தயங்கினால், அடுத்த விநாடியே கூட்டணியிலிருந்து விலகி விடுவது என்ற முடிவில் விஜயகாந்த் இருக்கிறார் என்பதுதான்.

எந்தவித எதிர்ப்பும் காட்டாத வை.கோவிற்கு நேர்ந்த நிலமை அவரை வேறவிதமாக சிந்திக்க செய்கிறது என்றும். அவருக்கே இந்த நிலைமை என்றால் அம்மாவை பாடுபடுத்தி ஏக்கமாக நீண்ட நாட்கள் உட்கார வைத்த நமக்கு தேர்தல் பின் நடக்கும் காட்சிகள் அவருக்கு சினிமாவில் வரும் காட்சிகள் போல மனக்கண்ணில் ஒடிக் கொண்டிருபதாகவும் செய்திகள் கசிகின்றன

இப்படி உண்மையிலேயே விஜயகாந்த் நினைக்கிறாரா அல்லது எதிர்த் தரப்பிலிருந்து கிளப்பி விடப்படும் வதந்தியா என்பது தெரியவில்லை.

அரசியலாச்சே, என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்!



நாம் வேடிக்கை பார்க்கும் நேரம் இது.

----

பெண்மையை ஏன் மதிக்க வேண்டும் என்று இப்போதாவது கற்றுக்கொள்வோமா?


பெண்மையை ஏன் மதிக்க வேண்டும் என்று இப்போதாவது கற்றுக்கொள்வோமா?



உங்களுக்கு தெரியுமா ? 45 Del (Unit) அளவுக்கு மட்டும்தான் வலியை தாங்க கூடிய சக்தி மனித உடலுக்கு உண்டு ஆனால் ஒரு பெண் பிரசவ சமயத்தில் உணரக்கூடிய வலியின் அளவு 57 Del ( UNIT ) ஆகும். அது 20 எலும்புகள் ஒன்று சேர உடைவதால் ஏற்படும் வலிக்கு சமம் ஆகும்.

ஆண்களுக்கு உடல் பலம் மட்டுமே இருக்கலாம் தவிர இது போன்ற சமயங்களில் பெண்களுக்கு உள்ள மன வலிமை ஆண்களுக்கு இல்லையென்று ஒத்துக் கொள்ளதான் வேண்டும்

அதனால் பெண்மையே போற்றி நம்மை வளர்த்த தாயை என்றும் வணங்குவோம்.

கடவுள் எல்லா நேரங்களிலும் நம்முடன் இருக்க முடியாத காரணத்தால் அம்மாவை படைத்து நம்மிடம் அனுப்பியுள்ளான்.

அம்மாவின் அன்புக்கு இந்த உலகில் ஈடு இணையெதும் இல்லை.

உலகத்திலேயே மிகவும் அழகானவள் நம் அம்மாவாகத்தான் இருக்க முடியும். இதை யாராலும் மறுக்க முடியுமா? நண்பர்களே!

Love Your Mom..


நீங்கள் எப்போதாவது இதைப் பற்றி சிந்தித்து பார்த்து இருப்பிர்களா?

Note : ஏன் ஜெ.ஜெ வை தமிழக மக்கள் அம்மா என்று அழைக்கிறார்கள். அம்மாவிற்கு உள்ள தகுதிகள் ஏதும் இவரிடம் உண்டா? முடிந்தவர்கள் விளக்கம் தரவும். அவர் ஒரு பெண் என்ற மரியாதையை நான் என்றென்றும் தருவேன் ஆனால் அம்மா????????



அன்புடன்
மதுரைத்தமிழன்

Tuesday, March 15, 2011

புன்னகை பூக்கும் வயிறு. உங்கள் மனதை பாதிக்கும் பதிவு

புன்னகை பூக்கும் எங்கள் வயிறு. உங்கள் மனதை பாதிக்கும் பதிவு


பணம் இருக்கும் திமிரில் அளவுக்கு அதிகமாக உணவை ஆர்டர் செய்து எச்சிலாக்கி மிச்ச மீதியை எரிச்சல் அடைந்து தூக்கி எரியும் மனிதர்கள் ஒரு புறம் அதை மச்சம் என நினைத்து புன்னகை பூக்கும் சில நபர்களின் வயிறு மறுபுறம்.


உணவை கொட்டும் முன்னே சற்றும் சுற்றி பாருங்கள் .உங்களுக்கு ஏராளம் என்று நீங்கள் தூக்கி ஏறிவதை நாங்கள் தாராளம் என்று ஏற்றுக் கொள்வோம்.

நீங்கள் கிடைக்கின்ற உணவிற்கு நன்றி சொல்வீர்களோ இல்லையோ ஆனால் நாங்கள் எங்களுக்கு கிடைக்கின்ற உணவுக்கு மனம் குளிர்ந்து நன்றி சொல்வோம் இறைவனுக்கு என்றென்றும். கிழே உள்ள விடியோ க்ளிப்பை பாருங்கள்.










ஏன், உணவை உணவாக மதிக்காத நமக்கும் நம் குழந்தைகளுக்கும் இது விளங்குவதில்லை ?


பாரதி சொன்னது போல்  "தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" எவ்வளவு உண்மை

உணவு தானம் செய்ய வேண்டாம், வீணாக்காமல் இருக்கலாமே ?


எனது மனதை இந்த விடியோ க்ளிப் பாதித்தது. உங்கள் இதயங்களையும் பாதித்ததுதானே? பதில் எழுதுங்கள்
 
அன்புடன்
மதுரைத்தமிழன்

Monday, March 14, 2011

இவரை நம்பியா தமிழகத்தை கொடுக்க போகிறிர்களா?

இவரை நம்பியா தமிழகத்தை கொடுக்க போகிறிர்களா?




கடந்த ஐந்து வருடங்களாக அ.தி.மு.க கொள்கை பரப்பு செயலாளராக செயல்பட்டு வந்த வை.கோவுக்கு கடைசி நேரத்தில் கிடைத்த பரிசை எல்லோரும் பார்த்திருப்பிர்கள். இதை பார்க்கும் போது ஜெயலலிதா அவர்கள் இன்னும் தன் கேரக்டரை இன்னும் மாற்றி கொள்ளவில்லை என்பதுதான் தெரிகிறது. தன்னை நம்புவோரை கடைசி நேரம் வரை காக்க வைத்து கழுத்து அறுக்கும் பழக்கம் மாறவில்லை. இவரை நம்பி ஆட்சியை கொடுத்தால் பழைய செயல்கள் தொடரும் என்பதில் எந்த அளவும் மாற்றம் இல்லை.



இவர் ஆட்சி வந்தால் என்ன நடக்கும்?



விஜய காந்தை பதவி ஏறும் முன்னால் காலில் விழுந்து வணங்க வைப்பதும், கலைஞர் குடும்பத்தை பழிவாங்கும் வைபவமும், சசிகலா துணை முதல்வாராகவும், சசிகலா குடும்பத்தின் அதிகார ஆட்டம் ஆட்சியிலும் சினிமாத் துறையிலும். நடக்கும். ஜெயலலிதா செல்லும் வழியெல்லாம் குறைந்தது 3 அல்லது 4 மணி நேரம் டிராபிக் நிறுத்தப்படும் அந்த டிராபிக்கில் பிரசவத்திற்க்காக செல்லும் பெண்கள் ரோட்டிலிலே பிள்ளை பெறும் காட்சி நடை பெறும். இதைப்பார்த்து பொங்கி எழுவதற்கும் யாரும் இருக்கமாட்டார்கள். அப்படி பொங்கி எழும் கறுப்பு எம்ஜியார் ஜெயலலிதாவின் காலில்தான் கிடப்பார் அந்த நேரத்தில் இது படம் அல்ல நிஜம் என்பது அப்போதுதான் புரியும் நம் கறுப்பு எம்ஜியாருக்கு..



அம்மாவின் ஆட்சி காய்ந்தமாடு கம்பம் கொல்லையில் புகுந்தமாதிரிதான் இருக்கும் என்பது என் எண்ணம். அதற்காக நான் தி.மு.காவிற்கு ஒட்டு போடுங்கள் என்று சொல்லவில்லை.



ஒட்டு போடுவதற்கு முன்பு நன்றாக சிந்தியுங்கள் அதன் பின் வாக்களியுங்கள். உங்கள் எதிகால வாழ்க்கை உங்கள் கையில்தான். நீங்கள் போடுவது ஒட்டுஅல்ல ...அது விதை. நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதுதான் பன் மடங்காக விளையும். தமிழக மக்கள் எதை அறுவடை செய்யப் போகிறார்கள் என்பதை வேடிக்க்கை மட்டும் பார்க்க முடிந்த கையாலாகாத வெளி நாட்டில் வசிக்கும் தமிழன்.



ஆனால் இந்த முறை நமது தமிழக சகோதர சகோதரிகள் புத்திசாலியாக செயல்பட்டு இந்தியாவிற்கு ஒரு நல்ல முன்மாதிரியாக செயலில் காட்டவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.



ஏதோ என் மனதிற்குள் தோன்றியதை நான் எழுதிவிட்டேன். நான் நினைத்த்து சரியா தவறா என்பதை நீங்கள்தான் எனக்கு சுட்டிகாட்டவேண்டும்.

Friday, March 11, 2011

( U.A.E NRI ) அயல்நாடுகளில் வசிக்கிற அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய பதிவு


(N R I) மக்களே, இறப்புக்கும் திட்டமிடுங்கள்!  இது மனதிற்கு கஷ்டம் தருகின்ற விஷயம் என்றாலும் அயல்நாடுகளில் வசிக்கிற அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய ஒன்று.


மனிதர்களாகிய நாம் எல்லாவற்றிற்கும் திட்டமிடுகிறோம், ஆனால், வெளிநாட்டில் வசிக்கிற யாராவது, இறப்பைப்பற்றி எண்ணியாவது பார்த்திருப்போமா? பதில் இல்லை என்பதுதான்


சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில், துபாய் பத்திரிகையான கல்ஃப் நியூஸ் முகத்திலறைகிறமாதிரி சொன்னது செய்தி கட்டிங்கை என் நண்பர் அனுப்பிவைத்தார் அந்த. பத்திரிகையில் வந்திருந்த கட்டுரைகளை வாசித்த வெளிநாட்டு மக்களின் மனதில் மிகப்பெரும் அதிர்ச்சி உண்டாகியிருக்கும் என்பதில் ஐயமேஇல்லை.


அந்த தினசரியில் வந்த கட்டுரை சொன்னது என்னவென்றால் ( U.A.E) துபாய் போன்ற நாடுகளில் இறப்பின் விலை மதிப்பு .மிக மிக அதிகம், அதற்காக அயல்நாட்டினர் அனைவரும் முன்னேற்பாடு செய்துகொள்வது அவசியம் என்பதே.

அதாவது அயல்நாட்டுக் குடிமகன் ஒருவர் துபாயில் மரணமடைந்தால், உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும், எந்த அளவு பண செலவுகள் வரும், என்னென்ன வேலையெல்லாம் செய்யவேண்டும் என்று தெளிவாக குறிப்பிட்டு இருந்தார்கள் . அதை படிக்கும்போது மனதில் ஒரு இனம் புரியாத ஒரு இருக்கமான உணர்வு தோன்றியது என்பது மறுக்கமுடியாத உண்மை.


கடந்த ஆண்டு பணியிலிருக்கும்போது இறந்த,வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 800 என்றும் அதிலும் இதய சம்பந்தப்பட்ட நோய்களால் இறப்பவர்களில் அதிகம்பேர் இந்தியர்கள்தான் என்றும் கூறுகிறார்கள்.


வேலையில் இருக்கும் குடும்ப தலைவர் ஒருவர் இங்கே இறக்க நேரிட்டால், துபாயில் அவருக்கு இருக்கிற கடன்கள், வீட்டுவாடகை, ட்ராஃபிக் மற்றும் பார்க்கிங் ஃபைன் உட்பட எந்த பாக்கியுமில்லாமல் கொடுத்த பின்னர்தான் இறந்தவரின் உடலை எடுத்து போக அனுமத்திப்பார்கள் என்பது, கேட்கும் போது கஷ்டமாக இருந்தாலும், வேறு வழியில்லை என்பது மனதை சுடும் நிஜம்தான். அதுமட்டுமில்லாமல் வெளிநாட்டுப் பணியாளர் ஒருவர் இறந்தவுடன், உடனடியாக அவருடைய வங்கிக்கணக்கு மற்றும் கூட்டுக்கணக்குகள் (joint account)ஏதுமிருந்தால், அனைத்தும் முடக்கப்படும் மற்றும். இன்ஸ்யூரன்ஸ் செய்திருந்தாலும் அந்தப்பணம் கிடைக்கவும் தாமதமாகும்.


இழப்பின் துயரத்துக்கு மத்தியில் ,இறந்தவருக்கான அரசுச் சான்றிதழ்களுக்காகவும், மற்றும் உடலைப் பதப்படுத்துதல், விமானம் மூலமாகக் கொண்டுசெல்லும் செலவு என்று அதற்காக இன்னும் ஒரு பெருந்தொகையும் உழைப்பும் தேவைப்படும் அந்தக் குடும்பங்களுக்கு.


ஏர் இந்தியா, இந்தியர்களுக்காக, இலவசமாக உடலை ஊருக்குக்கொண்டுசேர்க்கும் பணியைச் செய்கிறதாம். மற்ற விமான நிறுவனங்கள் 50% சலுகைவிலையில் இந்தச் சேவையைச் செய்கிறார்களாம். ஆனால், உடல் எடைக்கு ஏற்றவாறு கட்டணம் கூடுமாம். அதிக உடல்எடையென்றால் இங்கேகூடக் கஷ்டம்தான் ( மக்கா அளவோடு சாப்பிட்டு உடம்பை ஸ்லிம்மாக வைத்து கொள்ளுங்கள்)

வாழுகிறவரை, மற்றவர் வாழ வசதிசெய்துகொடுத்த ஒருவன், இறப்புக்குப்பின் பயணிக்கையில், சரக்குகளோடு சரக்காகிப்போவது கொடுமையிலும் கொடுமை. அதிலும், மொத்த சரக்குக் கட்டணம் 1500 திர்ஹாம்களாம்!

எந்த வெளிநாட்டில் வாழுகிற ஒருவர், இதுவரை எதற்காக எவ்வளவு பணம் மற்று சொத்துக்களை சேர்த்துவைத்திருந்தாலும், இதை படித்த பிறகாது இக்கட்டான சூழ்நிலைகளில் உதவுவதற்கென்று முன்னேற்பாடாகப் பணம் சேர்த்துவைக்க வேண்டும் ஆனால், அது மற்றவர்களின் பெயரில் இருப்பது மிகவும் முக்கியம். இல்லையென்றால் பின்னர் கஷ்டப்பட்டு நடுத்தெருவில் நிற்பது அவரது குடும்பம்தான்.



இதுதொடர்பான கருத்துக்களை கல்ஃப் ந்யூஸில் படிக்க  இங்கே க்ளிக் செய்து பாருங்க...

இறப்பு செலவு பட விளக்கத்திற்கு இங்கே க்ளிக் செய்யவும்.


நீங்கள் படிச்சவற்றை முடிந்தவரைக்கும் பிறர் அறிய எடுத்துச்சொல்லவேண்டியது மிக அவசியம். அதனால் இந்த பதிவு உபயோகமாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் உங்கள் நண்பர் மற்றும் உறவினர்களுக்கு எடுத்து சொல்லுங்கள் அல்லது இந்த பதிவிற்க்கான லிங்கை அனுப்பி வையுங்கள் . வாழும் வரை சந்தோஷமாக வாழ கற்றுக்கொண்டு பிறரையும் சந்தோஷமாக வாழவிடுங்கள். நன்றி

Thursday, March 10, 2011

'உங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல!''



'உங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல!''


ஏப்ரல் 13... தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. தேர்தல் என்றதுமே, திருமங்கலம் பக்கம் நம் நினைவுகள் திரும்புவதைத் தவிர்க்க முடியவில்லை. வழக்கம்போல் இந்த முறையும், அள்ளி வழங்கும் வைபோகங்களும் அராஜக அத்துமீறல்களும் தமிழகத் தேர்தலில் கரை புரண்டு ஓடும் வாய்ப்பு இருக்கிறது. ஐந்து வருட ஆட்சியை மனதுக்குள் அசைபோட்டு, நியாயத் தராசை நெஞ்சுக்குள் ஆடவிட்டுக்கொண்டு இருக்கும் வாக்காளன், இந்தத் தேர்தலில் ஆற்ற வேண்டிய கடமை என்ன?



தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றநரேஷ் குப்தா பக்குவம் சொல்கிறார்...



''ஒவ்வொரு வாக்காளரின் முதல் கடமை, வாக்காளர் பட்டியலில் தங்க ளின் பெயர் இருக்கிறதா என்பதைஉறுதி செய்வதுதான். வாக்களிக்கும் ஆர்வமும் அக்கறையும் மட்டும் இருந்தால் போதாது. முறைப்படி வாக்காளர் அடையாள அட்டை பெற்று, நமக்கான வாக்கு உரிமையை நாம் பெற்றிருக்க வேண்டும். நமது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா, இல்லையா என்பதை நாம் இணையதளம் மூலமே தெரிந்துகொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால், இப்போதும் தாமதமாகி விடவில்லை. உடனடியாக வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேருங்கள்.


வாக்காளர் பட்டியலில் தொடர் திருத்தம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டு இருக்கும் நிலையில், அதிகாரிகள் அந்தவேலை யில் தீவிரமாவதற்குள், வாக்காளர் பட்டியலில் நமது பெயரைச் சேர்ப்பது அவசியம். காரணம், நம் ஒவ்வொருவரின் வாக்கும் அந்த அளவுக்கு வலிமை வாய்ந்தது. 'வாக்களிப்பது புனிதமான கடமை’ என்கிறார் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். 1920-லேயே 'யங் இந்தியா’ புத்தகத்தில் வாக்களிக்கும் அவசியம் குறித்து மகாத்மா காந்தி வலியுறுத்தி இருக்கிறார். ஐந்து வருட அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியை நமது விரல் நுனிக்குக் கொடுத்திருக்கிறது ஜனநாயகம். 'என்னை யார் ஆள வேண்டும் என்பதை நானே தீர்மானிப்பேன்’ என்கிற உறுதிமொழியை ஒவ்வொரு வாக்காளரும் தங்களது தீர்க்கமான தீர்மானம் ஆக்கிக்கொள்ள வேண்டும்.



சமீப காலமாக மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பதிவாகும் வாக்குகள் குறைவாகி வருகின்றன. 'க்யூவில் நிற்க வேண்டுமே’ என்கிற சலிப்பிலும், 'இன்றைய விடுமுறையை வேறு வேலைக்காகப் பயன்படுத்தலாமே’ என்கிற அக்கறையற்ற ஆசையிலுமே பலர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வது இல்லை. சினிமா தியேட்டரில் கூட்டம் இருக்கிறதுஎன்பதற்காக நாம் எப்போதாவது திரும்பி வந்து இருக்கிறோமா? தடுப்பு ஊசி போடும் இடத்தில் கூட்டம் இருக்கிறது என்பதற்காக நாம் வந்துவிடுகிறோமா? ஐந்து வருடங்களைத் தீர்மானிக்கும் வேலைக்காக ஐந்து மணி நேரம்கூடக் காத்துக்கிடக்கலாம். பொறுமை இல்லாமல் புறக்கணிப்பு காட்டுபவர்களுக்கு இந்தப் புரிதல் அவசியம்.



இன்னும் சிலரோ, 'போட்டியிடுபவர்களில் ஒருவரும் சரி இல்லை’ என்கிற ஆதங்கத்தில் தேர்தலைப் புறக்கணிக்கிறார்கள். இன்றைய நிலையில், ஒரு சட்டமன்ற தொகுதியில் 15 பேருக்கும் குறையாத வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ஒருவர் சரி இல்லை என்றாலும், இன்னொருவர் சரியா னவராக இருப்பார் என நம்பலாம். அப்படி யாருமே நம் மனதுக்கு ஒவ்வாதவர்களாக இருந்தாலும், நமது புறக்கணிப்பைப் பதிவு செய்யும் விதமாக 49 ஓ படிவத்தைப் பூர்த்தி செய்யலாம்!



'நம் ஒருவருடைய வாக்கால், எல்லாம் மாறிவிடுமா?’ என்கிற தயக்கமும் பல ருக்கு இருக்கிறது. நாம் நினைப்பதையே ஒவ்வொரு அரசியல்வாதியும் நினைத்தால், நம் வீடு தேடி வருவார்களா? இன்றைய நிலையில், பல தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் மிகச் சொற்பமான எண்ணிக்கையில் அமைகிறது. 'நம் வாக் குதான், நாட்டின் போக்கு’ என்பதை இத் தகைய நிகழ்வுகள் நமக்கு அப்பட்டம் ஆக்குகின்றன. அப்படி இருந்தும் வாக்களிக்கும் ஆர்வம் பெரிய அளவில் பெரு காதது ஏனோ?!



தேர்தல் களத்தைச் சுற்றி வந்தவனாகச் சொல்கிறேன்... இன்றைய அரசியலில் அரசியல்வாதிகள் அதிகாரத்துக்காக எதையும் செய்கிற அளவுக்குத் துணிந்து விட்டார்கள். அதற்காகத் தேர்தல் விதி களை மீறி பணத்தை இறைக்கிறார்கள். வாக்காளர்கள் இதற்கு ஒருபோதும் மயங்கக் கூடாது. பணத்துக்கும், பிரி யாணிப் பொட்டலத்துக்கும், மது பானத்துக்கும் வாக்குகளை அடகுவைக்கும் நிலை இனியும் தொட ரக் கூடாது. 'எனது வாக்கு விற்பனைக்கு அல்ல’ என்பதை ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் பொட்டில் அடித்தாற்போல் புரியவைக்க வேண்டும்.



முன்பெல்லாம் அரசியல்வாதிகள் ஓட்டு கேட்டு வரும்போது, 'எங்கள் பகுதிக்கு மருத்துவமனை வேண்டும், பள்ளிக்கூடம் வேண்டும், குடிநீர்க் குழாய் வேண்டும்’ என்று கோரிக்கை வைத்த வாக்காளர்கள் இப்போது, 'பணம் வேண்டும்’ எனப் பகிரங்கமாகவே கேட்கிறார்கள். பல இடங்களில், 'அந்தக் கட்சி வேட்பாளர் அதிகப் பணம் கொடுத்து இருக்கிறார். நீங்கள் குறைவாகக் கொடுக்கிறீர்களே?’ என வற்புறுத்திப் பணம் கேட்கும் நிலையும் நீடிக்கிறது. வாக்காளர்களின் மனப்போக்கு ஏன் இந்த அளவுக்குப் புரையோடிப் போனது என்று எனக்கு அதிர்ச்சியாகவும் அச்சமாகவும் இருக்கிறது!



இந்த நேரத்தில், ஒவ்வொரு வாக்காளரும் உணர வேண்டிய உண்மை... 'இப்படி எல்லாம் விரட்டி விரட்டிப் பறிக்கப்படும் நம் ஒவ்வொருவரின் வாக்கும் எவ்வளவு வலிமை வாய்ந்ததாக இருக்கும்’ என்பதைத்தான்!



ஒரு வாக்கை விற்பது, ஐந்து வருடங்களை விற்பதற்குச் சமமான வேதனை. அந்த ஐந்து வருட ஆட்சியில் தவறு ஏதும் நிகழ்ந்தால், வாக்கைச் சரியாகப் பயன்படுத்தாத நாமும்தான் அதற்குப் பொறுப்பு. வேட்புமனு தாக்கல் செய்யும்போதே ஒவ்வொரு வேட்பாளரின் கல்வித் தகுதி, சொத்து விவரம், வழக்கு நிலுவை விவரம் என அனைத்தையும் அஃபிடவிட்டில் சொல்கிறார்கள். அதுபற்றி எல்லாம் வாக்காளர்கள் அறிந்து, தெளிந்து நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.



இன்றைய நிலையில் பெரும்பாலான வாக்காளர்கள் கட்சியையும், தலைவரையுமே மனதில் வைத்து வாக்கு செலுத்துகிறார்கள். 'வேட்பாளர்களில் யார் தகுதியானவர்?’ என்பதை ஆராய்ந்து, அதன்படி வாக்களிப்பதுதான் அரசியல் நலத்துக்கு வழிவகுக்கும். தரமான ஆட்களைத் தேர்வு செய்யும் பக்குவமும் அக்கறையும் நமக்கு உண்டாகும் நாளில், நிச்சயமாக இந்த தேசமே புத்துணர்ச்சிகொள்ளும்!



அக்கப்போரும், அமளி துமளிகளும் நிரம்பிவிட்ட அரசியலில் தர்மத்தை நிலைநாட்டும் கடமை ஒவ்வொரு வாக்காளருக்கும் இருக்கிறது. 'இவ்வளவு அழுக்கை அகற்ற ஒரு துளி போதும்’ என சலவை விளம்பரங்களில் வருமே... அதேபோல் நம் விரலில் வைக்கப்படும் ஒரு துளி மையால், சமூக அழுக்கை நிச்சயம் சலவை செய்துவிட முடியும், அதை நாம் நியாயமாகப் பயன்படுத்தும் பட்சத்தில்!''







நன்றி விகடன்

Wednesday, March 9, 2011

பயனுள்ள தகவல்கள். நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிவியுங்களேன்..

பயனுள்ள தகவல்கள். நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிவியுங்களேன்..




என் பதிவுகளை படித்து வரும் என் நண்பர் அவருக்கு வந்த மெயிலை எனக்கு அனுப்பியள்ளார் இதில் பல பயனுள்ள தகவல்கள் உள்ளன. அதை உங்ககளிடம் நான் பகிர்ந்து அளிக்கிறேன்.





நாம் படித்து பயனடைவது மட்டும் அல்லாமல் நம்மால் முடிந்த அளவு இச்செய்தியினை மற்றவர்களோடும் பகிர்ந்து கொண்டால் மற்றவர்களும் பயன்பெற ஏதுவாயி இருக்குமென நம்புகின்றேன்.



1) தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.




2) குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது என்ற இணையத்தில் தேடினால் ஆயிரமாயிரம் இரத்ததானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும் அல்லது http://avargal-unmaigal.blogspot.com/2011/02/blog-post_05.html பார்க்கவும்.





3) பொறியியல் கல்வி படித்த மாணவர்கள் தங்களின் கல்வி விபரம் குறித்து http://www.campuscouncil.com/ என்ற தளத்தில் பதிந்து வைப்போமானால் குறிப்பிட்ட நாற்பது நிறுவனங்கள் நடத்தும் நேர்முகத் தேர்வில் எளிதாக கலந்து கொள்ள முடியும்.





4) மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கல்வி, இலவச விடுதி குறித்து தகவலைப் பெற‌ 9842062501 & 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.







5) தீ விபத்துக்களினாலோ அல்லது பிறக்கும் போதே வாய், காது , மூக்கு போன்ற உறுப்புக்களின் வளர்ச்சி குறைந்த நிலையில் இருந்தாலோ இலவசமாக ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள முடியும். வரும் மார்ச் மாதம் 23 ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 4ம் தேதி வரை ஜெர்மானிய மருத்துவர்கள் PASAM Hospital , Kodaikanal மருத்துவமனைக்கு வரவிருக்கின்றார்கள். மேலும் தகவல்களைப் பெற 045420 240668,245732 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.



6) வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சற்பெட்டியில் இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும். அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப் பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் கொள்ளும்.



7) அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக 10டிகிரி உயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தை விட அதிகமான வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். நமது இமயமலையில் உள்ள பனிப் பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டனவாம். ஆகையினால் நாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராட வேண்டிய தருணத்திலிருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியே!



அதனால் நம்மால் முடிந்த வரை



**மரங்களை நட்டு அதனைப் பேணிக் காக்கலாம்

**நீரினையும், இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம் உள்பட) தேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்

**ப்ளாஸ்டிகை பயன்படுத்தாமலும் அவற்றின் கழிவுகளை எரித்து நாசம் செய்யாமலும் இருக்க முயற்சிக்கலாம்.


8) இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராண வாயு அளிக்கும் மரங்களை நட்டு அவற்றிற்கும் மரியாதை செய்வோமே!!


9) கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப் படும் சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616 மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும். http://ruraleye.org/


10) பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது. மேலும் விபரங்கள் பெற 9916737471






11) இரத்தப் புற்று நோய்:

"Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்று நோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது.


மேலும் விபரங்களுக்கு

வகை : புற்றுநோய்
முகவரி:
East Canal Bank Road, Gandhi Nagar,
Adyar Chennai - 600020
Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில்
தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044-24911526, 044-22350241

12) விசேஷ வைபவங்களில் மீதம் ஆகும் உணவை கீழே போட வேண்டாம். தயவு செய்து தயங்காமல் 1098 இலக்கத்தில் அழைக்கவும் (இந்தியா மட்டும்). இந்த எண் சிரமத்தில் சிக்கித்தவிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு தரும் எண் என்று அனைவரும் அறிந்ததே. பசியால் வாடும் குழந்தைகளுக்கு அவர்கள் பகிர்ந்தளிப்பார்கள்.


இது போல உங்களுக்கு மேலும் தெரிந்த பயனுள்ள தகவல்களை பின்னுட்டமாக இடுமாறு அழைக்கிறேன்

படிக்க தவறியவர்கள் படிக்க எனது முந்தையை 10 பதிவுகள்

Download templates

www.gnanalaya-tamil.com

லேபிள்கள்

நகைச்சுவை ( 398 ) அரசியல் ( 258 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) வெட்கக்கேடு ( 53 ) கலைஞர் ( 52 ) மனைவி ( 51 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 45 ) தேர்தல் ( 41 ) நையாண்டி ( 41 ) கணவன் ( 38 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) போட்டோடூன் ( 30 ) வாழ்க்கை ( 29 ) அனுபவம் ( 26 ) சமுகம் ( 25 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) கேள்விகள் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குடும்பம் ( 18 ) குழந்தை ( 18 ) தமிழகம் ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) சினிமா ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) சமையல் குறிப்பு ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) உன்னால் முடியும்.... ( 9 ) காதலி ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) ஆண் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) நக்கல்கள் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அரசியல் களம் ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) மாணவர்கள் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க? ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுகதை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தமிழ் சமுகம் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) ஓ.....அமெரிக்கா ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி.போட்டோடூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) #மோடி #politics ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Google ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) July 9th ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) New year Eve's spacial ( 1 ) One million ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) political satire ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) social ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக பிரச்சனை ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா? ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சேலை ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா! ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) நையாண்டி கார்டூன் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )

Gadgets By Spice Up Your Blog