உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, February 27, 2011

தாய்ப்பாலில் தயாரான ஐஸ்கிரீம்( ice-cream made of Breast milk on sale)

தாய்ப்பாலில் தயாரான ஐஸ்கிரீம் ஒரு கப் விலை ரூ1,000

ice-cream made of human milk on saleலண்டனில் உள்ள ரெஸ்டரெண்டில் ஐஸ்கிரீம் பார்லரில் தாய்ப்பாலில் தயாரான ஐஸ்கிரீம் விற்கப்பட்டது. ஐஸ்கிரீமில் புதுமையை புகுத்த லண்டனை சேர்ந்த ஐஸ்கிரீமிஸ்ட் என்ற பார்லர் உரிமையாளர் மாட் ஓ’கானர் யோசித்தார்.
சமீபத்தில் குழந்தைக்கு தாயான விக்டோரியா ஹீலி (35) என்ற பெண்ணிடம் இருந்து தாய்ப்பாலை பெற்று, வெனிலா, எலுமிச்சை பேஸ்ட் கலந்து ஐஸ்கிரீமாக தயாரித்தார். அதற்கு ‘பேபி காகா’ என்று பெயரிடப்பட்டது.

பேரண்டிங்க் வெப்தளமான MUMSNET- ல் வந்த விளம்பரத்தை பார்த்து தாய்ப்பால் அளித்த விக்டோரியா ஹீலி கூறுகையில், ‘‘தாய்ப்பாலை விட இயற்கையான ஒரு விஷயம் உலகில் இல்லை. அதில் சிறிதளவை பணத்துக்காக விற்பதில் என்ன தவறு இருக்கிறது’’ என்றார்.( Victoria works with women who have problems breast feeding their babies.) அவர் அளித்த 10 அவுன்ஸ் தாய்ப்பாலுக்கு யூரோ கரன்ஸியில் 15 ( ரூபாய் மதிப்பில் 1000) கிடைத்தது.இதையடுத்து, மேலும் 15 பெண்கள் இதற்கு முன்வந்தனர்இதுபற்றி ஓ’கானர் கூறுகையில், ‘‘ஐஸ்கிரீம் தயாரிப்பில் கடந்த 100 ஆண்டுகளாக யாரும் எந்த புதுமையும் செய்யவில்லை. தாய்ப்பாலில் ஐஸ்கிரீம் தயாரித்ததை கேட்டு சிலர் முகம் சுழிக்கலாம். ஆனால்,(actually it's pure, organic, free-range and totally natural.) அதன் மகத்துவம் பற்றி இளைய தலைமுறைக்கு புரிந்தால் போதும்’’ என்றார்.‘பேபி காகா’ ஐஸ்கிரீம் ஸி1,000க்கு விற்பனை செய்யப்பட்டது.To maintain the highest standards, health checks for each lactating woman were the same used by the UK's National Health Service to screen blood donors.


எனக்கு என்னவோ இது மிகவும் அருவருப்பாக தோன்றுகிறது. இது என் கருத்து. உங்களூக்கு இதை படித்தபின் ஏற்படும் கருத்துகளை இங்கே எழுதுங்களேன்

3 comments :

 1. Just felt uncomfortable..:( ஆனா ரத்தம் , stem cell donation எல்லாம் வர ஆரம்பித்ததால் , சேவைக்காக பயன்படுத்தலாம்..

  வியாபாரம் என்றால் , முகம் சுழிக்க வைக்குதுதான்..

  ReplyDelete
 2. //எனக்கு என்னவோ இது மிகவும் அருவருப்பாக தோன்றுகிறது. இது என் கருத்து.//

  எனக்கும்..:((

  ReplyDelete
 3. Disgusting.... I would like to echo with your words..

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog