உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, February 18, 2011

இந்திய பெரியவருக்கு உதவிய அமெரிக்க தேவதை( Angel)

இந்திய பெரியவருக்கு உதவிய அமெரிக்க தேவதைகள்:
தன் வயதான பெற்றோர்களை அமெரிக்காவுக்கு அழைத்திருந்தாள் மாலா. தன் அப்பாவிற்கோ முட்டு வலி அதிகம் உள்ளதால் பெற்றோர் இருவருக்கும் க்ரெவுண்ட் ஃப்ளோரிலேயே படுக்கையை அரேஞ்ச் செய்திருந்தாள் மாலா. வந்த இரண்டாவது நாளில் டின்னர் சாப்பிடும் போது மாலாவின் அப்பா சொன்னார். மாலா உனக்கு ரொம்ப நல்ல மனதும்மா. அதுனாலதான் என்னவோ இந்த வீட்டில் தேவதைகள் இருக்கிறதும்மா என்றார். மாலாவுக்கோ ஓன்றும் புரியவில்லை. அப்பா நீங்கள் சொல்வது ஒன்னும் புரியவில்லையப்பா கொஞ்சம் விளக்கமாகத்தான் சொல்லுங்களேன் என்றாள்அதற்கு அவள் அப்பா சொன்னார் அம்மா மாலா நான் உன் வீட்டிற்கு வந்த பின் இரவு நேரத்தில் பாத்ரும் போகும் போதெல்லாம் நான் பாத்ரும் கதவை திறக்கும் போதெல்லாம் லைட் ஆன் பண்ணியிருக்குதம்மா...நான் கதவை முடினால் லைட் தன்னால ஆஃப் ஆகிவிடுகிறதும்மா. எனக்கும் சந்தேகம் நான் கதவை அடைத்து விட்டு கிழேயுள்ள இடுக்குவழியாக கூட பார்த்து விட்டேன் லைட் ஆஃப் ஆகி இருக்குதம்மா நான் எப்பவெல்லாம் கதவை திறக்கிறனோ அப்போதெல்லாம் லைட் எரிகிறதும்மா. இது எல்லாம் தேவதைகள் வேலையாகத்தான் இருக்கும் என்றார்.அதற்கு அந்த மாலா தலையில் அடித்தவாறே அப்பா இப்ப புரிகிறது ஏன் நம்ம ஃப்ரிட்ஜ் மூத்திர நாத்தம் அடிக்கிறது என்று........சிரிப்பு வந்தால் சிரியுங்கள்......வரவில்லையானால் ஓகே. அதற்க்காக கல்லை எல்லாம் எடுக்க வேண்டாம்.

5 comments :

 1. கல் எடுத்து கையில வெச்சிருக்கேன்.. ஆள தான் காணோமேன்னு தேடிகிட்டிருக்கேன்..

  நீங்களும் படம் போட ஆரம்பிச்சாச்சா?.. ஏன் அலேக்ஸா ரேட்டிங் கா?. இல்ல ஓட்டுக்கா.?.. பிரபலமாக இந்த சீப் வழி நல்ல கருத்துகள் இல்லாத அறிவிலிகளுக்கே...

  இன்னொருமுறை படம் வந்தால் நான் வரமாட்டேன் . நீங்கள் என் நண்பர் என்றென்றும் என்றாலும் .

  நிற்க..


  சோக்கு ரசித்தோம்ல.. பாவம் தாத்தா..:)

  ReplyDelete
 2. அட...சாந்திக்கா பேச்சுக்கு மதிப்பு இருக்கே...அந்த பொம்பளை படத்தை தூக்கிட்டு யாரோ ஒரு பெருசு படம்..ஓகே..ஓகே..:))))

  ReplyDelete
 3. அசிங்கமான, வயதானவர்களைப் புண்படுத்தும், மட்டமான நகைச்சுவை.

  ReplyDelete
 4. ///அசிங்கமான, வயதானவர்களைப் புண்படுத்தும், மட்டமான நகைச்சுவை.///

  ஐயா டாக்டர்.கந்தசாமி பெரியவர் அவர்களே. ஒரு வேண்டுகோள்! நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டுமே பார்க்க வேண்டும். நீங்கள் P.hd படித்ததினால் அதை ரிசர்ஸ் செய்து பார்க்க கூடாது. பூவை ஒரு கவிஞன் பார்ப்பதற்கும் ஒரு சைண்டிஸ்ட் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது, அது போலத்தான் இந்த நகைச்சுவையும்.

  ஒரு வேளை உங்களுக்கு வயது அதிகமாகிவிட்டதால் இது உங்கள் மனதை புண்படுத்தி இருக்கலாம். அதற்காக மன்னிக்க வேண்டுகிறேன். நன்றி, வணக்கம்....வாழ்க வளமுடன்

  ReplyDelete
 5. சாந்தி மேடம் நன்றி...நான் ஒட்டுக்கு பதிவு போடவில்லை. எனது பொழுது போக்குதான் பதிவு போடுகிறேன்.அதனால்தான் என் எந்தபதிவிலும் நான் யாரிடமும் ஒட்டு போடுங்கள் என்று கெஞ்சியது இல்லை.. ஆனால் நேரம் கிடைத்தால் மட்டும் கமெண்ட் எழுதுங்கள் என்று கேட்டு இருக்கிறேன். அது என்னை சரி செய்துகொள்ள மட்டுமே.... சில சமயங்களில் அது பல நபர்களை சென்று அடையவேண்டும் என்றுதான் வித்தியாசமாக தலைப்பு இடுகிறேன்& சில படங்களும் போடுகிறேண். ஆனால் உள்ளே இருக்கும் விஷயங்கள் நல்லவையாகத்தான் இருக்கும் என்று உறுதி கூறுகிறேன். உங்களை போல உள்ள நல்லவர்கள் சூட்டிக் காட்டினால் & அது தவறாக என் மனதுக்குபட்டால் நான் திருத்தி கொள்கிறேன்

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog