Sunday, January 9, 2011

இந்தியா ஏழை நாடு அல்ல ..இந்திய மக்கள்தான் ஏழை..


எனக்கு வந்த இமெயிலில் உள்ள செய்தியை அடிப்படையாக வைத்து எழுதியதுதான் இது. எலக்ஷன் வரும் நேரத்தில் இதை தருவதால் மக்களுக்கு சிந்திக்க ஒரு வாய்ப்பு இருக்கும் என்பதால் இதை நான் தருகிறேன்.

.....

கறுப்புபணத்தை சுவிட்சர்லாந்து பேங்கில் வைத்திருப்பதை ஒரு ஒலிம்பிக் விளையாட்டாக வைத்தால் இந்தியாதான் எப்பொழுதுமே கோல்டு மெடல் வாங்கும்.....ரஷ்யா இரண்டாவது இடத்திலும் வரும், பாவம் அமெரிக்கர்கள் மற்றும் சீனர்கள் இந்த விளையாட்டில் கலந்து கொள்ளகூட தகுதிய்ல்லாதவர்கள். உலகத்திலேயே அதிக அளவில் பணத்தை சுவிஸ் பேங்கில் வைத்திருப்பவர்கள் இந்தியர்கள். அதிலும் தமிழர்கள்( கலைஞர் குடும்பம்) முதல் இடத்தில் இருந்தால் அதிசியப்படுவதில் அர்த்தம் ஏதுமில்லை.



சமிப காலத்தில் சர்வதேச நாடுகளின் மூலம் ஏற்பட்ட பிரஷரினால் சுவிஸ் கவெர்மெண்ட் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களின் பெயரை அறிவிக்க ஒத்துக்கொண்டது. ஆனால் அந்தந்த நாடுகள் ஃபார்மலாக கேட்டால்தான் அவர்களூக்கு அந்த தகவல்களை அளிக்க தயார் என்று அறிவித்தது. இன்னும் இந்திய நாடு பார்மலாக அதை பற்றிக் கேட்கவில்லை. எப்பொதும் கேட்கபோவதில்லை என்பதுதான் உண்மை.



நண்பர்களே நம் நாட்டில் பசி, வேலைவாய்ப்பின்மை , கல்வியறிவின்மை போன்ற பல சமுகப் பிரச்சைனைகள் இன்றும் உள்ளன. இதற்கு என்ன வழி என்று அரசைக் கேட்டால் நமக்கு வரும் பதில் நமது பொருளாதாரம் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளது சரியில்லை என்றுதான் பதில் வரும் ஆனால் சுவிஸ் நாட்டில் உள்ள மிகப் பெரிய வங்கியின் சேர்மன் சொன்னது இந்தியா ஏழை நாடு அல்ல ..இந்திய மக்கள்தான் ஏழை.. அவர் சொன்னது உண்மை ஏனென்றால் அங்கு நம் தலைவர்களும், தொழில் அதிபர்களும், I.A.S, I.P.S ஆபிஸர்களும் முதலீடு செய்த தொகை 280 லட்சம் கோடி. இந்த பணத்தை கொண்டு 30 ஆண்டுகளுக்கு இந்தியாவில் வரி இல்லாமல் பட்ஜெட் போடலாம். 60 கோடிமக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கலாம், எந்த கிராமதிலிருந்தும் டில்லிக்கு 4 லைன் ரோடு போடலாம். இலவச மின்சாரம் எல்லோருக்கும் எப்பொழுதும் கொடுக்கலாம் அல்லது ஒவ்வொரு இந்தியனும் மாதம் 2000/ரூ 60 வயது வரை வாங்கலாம்.. இந்த பணம் மட்டும் நம்மிடம் வந்தால் உலக வங்கிகளிடம் இருந்து எப்போதும் கடன் வாங்கவேண்டிய அவசியம்மில்லை. இந்த பணம் நாம் உலக வங்கிகளிடமும் உலக நாடுகளிலும் வாங்கி இருக்கின்ற கடங்களைவிட 13 மடங்கு அதிகம்.



80 000 மக்கள் ஒவ்வொரு ஆண்டும் பயணம் செல்கிறார்கள் சுவிஸ் நாட்டிற்கு அதில் 25 000 பேர் அடிக்கடி பயணம் செல்கிறார்கள். உண்மையில் இவர்கள் டுரிஸ்ட் பயணிகள் அல்ல .நமது ஆட்சியாளர்கள் முயற்சி செய்தால் அவர்களை ஈஸியாக டிராக் செய்யமுடியும் ஆனால் அவர்கள் அதை செய்யமாட்டார்கள் என்பது மற்றொரு உண்மை.

பண வெறி பிடித்த இந்த தலைவர்களால் இந்த பணம் சுவிஸ் பேங்கில் முடங்கியுள்ளது. அதனால் தான் விவசாயிகள் பசிக் கொடுமையால் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.நாட்டின் முன்னேற்றம் தடைப்பட்டுள்ளது. நீங்கள் நினைப்பது சரிதான் இது இந்தியப் பணம் அது இந்தியாவின் வளர்ச்சிக்கு தான் பயன் பட வேண்டும் என்பது சரிதான்.

அரசியல் வாதிகள் மட்டும் அல்ல, தொழில் அதிபர்களும், நேர்மையற்ற அதிகாரிகளும், கிரிகெட் விளையாட்டை நடத்துபவர்களும், இந்த சினிமாக்காரர்களும், இல்லீகல் செக்ஸ் டிரேடர்களும் , காடுகளை பாதுகாக்கும் அதிகாரிகளும்தான் இதில் இன்வால்வ் ஆகியுள்ளனர். இங்கே நான் குறிப்பிட்ட பணம் சுவிஸ் பேங்குகளில் குவித்துள்ளது மட்டும்தான் ஆனால் இன்னும் எத்தனை இண்டர்நேஷன் பேங்குகளில் எவ்வளவு குவித்து உள்ளனர் என்பதை ஒரு கணம் மனதில் நினைத்து பாருங்கள்



நம் இந்திய மக்கள் இன்னும் தலைவர்களை நம்பி அவர்கள் சொல்லுவதையேல்லாம் வேதவாக்காக நம்பிக் கொண்டிருபதுதான் இதற்கு எல்லாம் காரணம்.... இந்த நாட்டின் செல்வம் அரசியல்வாதிகளின் கைகளினால் பாதுகாப்பாக பயன்படுத்தவில்லை ஆனால் இந்த தலைவர்களின் செல்வங்கள் ரொம்ப பாதுகாப்பாக சுவிஸ் பேங்குகளில் பாதுகாப்பாக கையாளப்படுகிறது. இப்போது ஒரு ராஜாவின் ஊழல் வெளி வந்துள்ளது. இது போன்ற 200 கும் மேற்ப்பட்ட ராஜா செய்த ஊழல்கள் இன்னும் பல கட்சிகளினால் அமுக்கி வைக்கப் பட்டுள்ளது.

இந்த தலைமுறையில் சிறு மாற்றம் ஏற்ப்பட்டுள்ளது. இதுதான் சரியான நேரம் இளைஞர்கள் சினிமாகாரர்களின் பின்னே செல்வதை நிறுத்திவிட்டு தைரியமாக அரசியலில் இறங்கி ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் இது அவ்வளவு எளிதான காரியம் அல்ல ஆனால் ஒரு சிறு நெருப்புதான் ஊரையே அழித்துவிடும் என்பதை மனதில் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். அதற்கு இதுதான் சரியான சமயம்.

இங்கே நான் ஆங்கிலத்தில் படித்த ஒன்றை உங்களுக்கு அப்படியே தருகிறேன். படித்து விட்டு கொஞ்சம் சிந்தியுங்கள்.



Read the following excerpts from a letter written by Sudarshan Agarwal to our NHRC Chairman and former CJI , Mr.H.G.Balakrishnan :-

It is with deep pain and anguish - nay, with a deep sense of shock - that I read in the national dailies a news item about your son-in-law's assets growing over 120 times in a short span of four years - ironically during the period you served as chief Justice Of India. --- --- -- Corruption to my mind is a serious violation of human rights and surely the chairman of NHRC must not be perceived to be a violator of human rights. It is therefore necessary to clear your name.The above letter was written by Mr.Agarwal to the former CJI and the present NHRC chairman on 29-12-2010 - there is no response from the NHRC chairman and the Government is a silent spectator .This is our democracy and we are all living in a democratic country.



இந்த பதிவு படித்த உங்களில் சிறிதளவேனும் இந்த பதிவு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தால் நான் மிகவும் சந்தோசப்படுவேன். இந்த பதிவு பிடித்து இருந்தால் எலக்சன் வரும் முன்னால் எத்தனை பேர்களுக்கு உங்களால் அறிமுகப்படுத்த முடியுமோ அறிமுகப்படுத்துங்கள். நன்றி.


இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதை பற்றி பதில் எழுதலாம். மாற்று கருத்து இருந்தாலும் தெரிவிக்கலாம்


அன்புடன்

4 comments:

  1. நீங்க தமிழ்மணம் டாப்பர் 20 இல் இருக்குறதை உங்க போன பதிவில் தான் படிச்சு தெரிஞ்சுகிட்டேன்..வாழ்த்துக்கள்!! தொடர்ந்து முன்னேற வாழ்த்துக்கள்:)))

    ReplyDelete
  2. //இன்னும் இந்திய நாடு பார்மலாக அதை பற்றிக் கேட்கவில்லை. எப்பொதும் கேட்கபோவதில்லை என்பதுதான் உண்மை.//

    உண்மை தான் :(

    ReplyDelete
  3. its really hectic and the truth, it paves the way to our younger generation to become violent against the constitution and the politicians. am sure my people one day will become the "god of death" to those who are spoiling my mother nation growth and prosperity. am sure my the younger generation and the child's watching for that moment it ll be be named as "THE INDIAN REVOLUTION". JAIHIND..
    BY
    SIVAPRAKASH
    INDIAN

    ReplyDelete
  4. கரெட்டா சொன்னீங்க...இந்தியா ஏழை நாடு இல்லை, இந்திய மக்கள் தான் ஏழைகள்.

    குட் ஒன்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.