உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, December 31, 2010

அசத்த போவது யாரு மதுரைமுத்துவுக்கும் , மதுரைதமிழ்ஆளுக்கும்(MaduraiTamilGuy) போட்டி.

அசத்த போவது யாரு மதுரைமுத்துவுக்கும் , மதுரைதமிழ்ஆளுக்கும்(MaduraiTamilGuy) போட்டி.அட வேற ஓன்னும் இல்லைங்க.. அசத்த போவது யாருங்கற நிகழ்ச்சியை அப்ப அப்ப கம்பியூட்டரில் பார்க்கும் வழக்கம் உண்டுங்க.( அமெரிக்காவில் வசிப்பதால் அதிக வசதியில்லாததால் எங்களை போல ஏழைங்க கம்பியூட்டரில்தான் பார்ப்போமுங்க) அதை பார்த்த பாதிப்பில் எழுதிய பதிவுதானங்க இது. புது வருஷம் ஆரம்பிக்க இருப்பதால் என் ப்ளாக்கிற்கு வருபவர்களை சந்தோஷமாக சிரிக்க வைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். அது நிறைவேறினால் நாம் மதுரை முத்துவை வென்று விட்டதாக ஒரு சின்ன சந்தோஷம் அவ்வளவுதான். அவரும் இதற்க்காக கவலைப் பட மாட்டார். ஏனென்றால் இன்னொரு மதுரைக்காரன் தானே வெற்றி பெற்றுள்ளான் என்று சந்தோஷபடுவார்.இங்கே படிக்க வந்த அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகளை கூறி இதை தொடங்குகிறேன்.அவள் பார்வைக்கு

அர்த்தம் தெரிந்த

எனக்கு

பேசிய வார்த்தைக்கு

அர்த்தம் தெரியவில்லை!”

காரணம்

அவள் பேசியது...

ENGLISH அதனால் நான் முப்பதே நாளில் இங்கிலிஷ் படிப்பது எப்படி என்ற புத்தகதை வாங்கி இங்கிலிஷ் படித்து அதன் பிறகுதான் அவள் பேசியது எனக்கு புரிந்தது. அதன் பிறகு ஒரு நாள் அவளிடம் கேட்டேன் உன்னை போல அழகான பெண்களைப் பார்த்தால் நாய் எப்படி குறைக்கும் ? என்று கேட்டேன். அதற்கு அவளுக்கு பதில் தெரியாததால் எப்படி ?என்று கேட்டாள். நான் வாவ் வாவ்னுதான் குறைக்கும் என்று சொன்னதால் என்னை அதி புத்திசாலி என்று நினைத்து காதலிக்க தொடங்கினாள்.இப்படிதான் எங்கள் காதல் விளையாட்டு தொடங்கியது.

நானும் அவளை உயிருக்கு உயிராய் காதலித்து வந்தேன் . அவளும் என் மீது அன்பாகவே இருந்தாள். இருவரும் சேர்ந்து சுற்றாத இடம் இல்லை. போகாத தியேட்டர் இல்லை. சுமார் 5 ஆண்டுகள் இந்தத் தொடர்பு நீடித்தது. ஆனால் அவள் என்னை நிஜமாகவே காதலிக்கிறாளா என்பது கொஞ்சம் சந்தேகமாகவே இருந்தது. சரி என்று இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர அவளை நேரடியாகவே கேட்டுவிடுவது என்று முடிவு செய்தேன். ஆனாலும் முகத்துக்கு முகம் கேட்க தயங்கிய நான் தொலைபேசியில் கேட்டுவிடுவது என்று திட்டமிட்டேன். அதன்படி அவள் வீட்டுக்கு போன் செய்ய, அவளே எடுத்தாள்..

ஹலோ.. அபித குஜாம்பிகைதானே..?அத்ற்கு அவள் ஆமாம்.. அபிதான் பேசறேன்.. என்ன உன் குரல் நடுங்கறாப்பல தெரியுது..?

நான் ஹி..ஹி.. நான் உன்னை காதலிக்கிறேன்.

.அபி : தெரியும்..

நீ என்னைக் காதலிக்கிறாயா..?

அபி : அதில் என்ன சந்தேகம்..?

கடவுளுக்கு நன்றி..! அப்போ நாம திருமணம் செய்துக்கலாமா..?

அபி : நிச்சயமா..!

எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு சொல்லேன் ப்ளீஸ்..

அபி : முதல்ல உன் பேர் என்னன்னு சொல்லு.. நானும் அப்போலேருந்து கெஸ் பண்ணறேன்.. எவன்னே புரியல..! என்றாள்.

பாருங்க நான் எவ்வளவு பெரிய முட்டாள் போன்ல என் முகமா தெரியப்போகுது நான் என் பெயரை சொல்லிருக்க வேண்டியதுதானே....

ஒரு வழியா அவளின் பெற்றோர்களிடம் சம்மதம் வாங்கினோம்ங்க.. அப்ப அவளின் அப்பா சொன்னார் நான் கல்யாணத்தை ''ஜாம் ஜாம்னு'' நடத்திடுவோம்னு சொன்னார் எனக்கு அப்பவே சந்தேகப்பட்டேன். கடைசியில் நான் நினைத்த மாதிரியே மனுசன் சொதப்பிட்டார்

ஏன், என்னாச்சுனு கேட்கிறீங்களா? அவர்;கல்யாண சாப்பாடுல ப்ரெட் வச்சு எல்லாருக்கும் ஜாம் வச்சிட்டாருடா மச்சி

எதோ கல்யாணம் ஆச்சு ஒரு நாள் என்வொய்ப் கேட்டாள் நான் கொடுத்த மோதிரத்தை எங்கங்க என்றாள்

நானும் ரொம்ப பத்திரமா வச்சிருக்கேன் என்றேன் அதற்கும் அவள் விடாமல் என் மேல அவ்வளவு பாசமா?, அப்படி எங்க வச்சிருக்கிங்க என்றாள் அதற்கு நான் ஆமாண்டி, அடகு கடைல‌தான் பத்திரமா வைசிருக்கேன் என்றேன். அவ்வள்வுதான் அப்புறம் என்ன நடந்தது என்பதை சொல்லியா தெரியவேண்டும்

அன்றிலிருந்து கொலையும் செய்வாள் பத்தினின்னு கண்டு பிடிச்சேன் எப்படி கண்டுபிடிச்சேன் என்று உங்களுக்கு குழப்பமா ?

ஒன்னும்மில்லைங்க அப்போதிலிருந்துதான் என் மனைவி எனக்கு சமையல் பண்ண ஆரம்பிச்சாள்...


நான் வாங்கும் சம்பளம் வாழ்க்கை செலவுக்கு பற்றாததால் என் முதலாளியிடம் எனக்கு கல்யாணமாயிருச்சு.. கொஞ்சம் சம்பளத்தை சேர்த்துக் கொடுங்க என்று கேட்டேன். அதற்கு என் முதலாளி சொன்னார் கம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நான் நஷ்ட ஈடு தர இயலாது.. என்று சொல்லிவிட்டார்.என் பொண்டாட்டி செலவு செய்யிற வேகத்துக்கு என்னால அதிகம் சம்பாதிக்க முடியல.....அதனால என் வொய்ப் 6 மாத காலம் என் கூட பேச கூட செய்யல...நானும் வெறுத்து போய் குடும்ப நல கோர்ட்ல போய் விவாகரத்துக்கு அப்ளை பண்ணினேன். அதற்கு நிதிபதி கேட்டார்

ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க?

அதற்கு நான் சொன்னேன் 6 மாசமா அவ என்கிட்டே பேசுறதே இல்ல அதற்கு நீதிபதி: நல்லா யோசிச்சுப் பாருங்க! இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்ங்க..

சரி என்று சொல்லிவிட்டு கோர்ட்டுல இருந்து பஸ்ல வரும் போது நான் ஆண்கள் சீட்டிலும் என் வொய்ப் என் மீதுள்ள கோபத்தினால் பெண்கள் சீட்டில் உட்கார்ந்தாள். என் அருகே உள்ள சீட்டு காலியாக இருந்ததால் ஒரு அழகான பொண்ணு என் அருகில் வந்து உட்கார்ந்தாள். ஏற்கனவே வெறுப்பில் இருந்த எனக்கு வந்ததே கோபம் அதனால் அந்த பெண்ணை நல்ல கத்திவிட்டேன். எல்லோரும் வந்து என்னங்க உங்கள் பக்கத்தில் அழகான இளம்பெண் உட்கார்ந்ததுக்காக சந்தோஷப்படாமல் ஏன் வருத்தப்பட்டு கத்துறீங்க ? என்றார்கள்

நீங்களே சொல்லுங்க எப்படி சந்தோஷப்பட முடியும் ? வயசுப் பொண்ணு கூச்சமில்லாம நம்ம பக்கத்துல உட்கார்ந்தா என்ன அர்த்தம் ? நம்மை வயசானவனா நினைக்கிறாள்னு தானே அர்த்தமுங்கஅப்படியே கண்னை மூடி தூங்க டிரைப் பண்ணினேன் அப்போ இரண்டு பெண்கள் பேசுவது காதில் விழுந்தது சரி என்று ஒட்டுக்கேட்டேன்

ரெண்டு பெண்கள் பேசிட்டு இருந்தாங்க. ”என் கணவர் தினமும் ராத்திரி லேட்டா தான் வீட்டுக்கு வர்றார். என்ன பண்றதுன்னே தெரியலே” னு சொன்னா முதல் பெண். அதுக்க ரெண்டாவது பெண் “என் கணவர் கூட லேட்டாதான் வந்திட்டிருந்தார். இப்பல்லாம் ஆபீஸ் அஞ்சு மணிக்கு விட்டா, டாண்ணு அஞ்சரைக்கு வீட்டில் இருக்கிறார்” ன்னா முதல் பெண்ணுக்க

செம ஆச்சரியம் ”அப்படி என்னதான் பண்ணினே ?”-னு கேட்டா.”ஒரு நாள் வழக்கம் போல அவர் லேட்டா வந்தார். நான் தூக்கக் கலக்கத்துல வேணும்னே, யாரு .. .. முரளியா ?-னு கேட்டேன். அவளோ தான் என்னோட ட்ரீட்மெண்ட்” னு சொன்னாள் ரெண்டாவது பெண்.

முதல் பெண் ”புரியலையே இதுல அப்படி என்ன இருக்கு ?” -னு கேட்டதுக்கு ரெண்டாவது பெண் சொன்னாள் ” வேறொண்ணும் இல்லை. என் கணவரோட பெயர் முரளி கிடையாது .. .கார்த்திக்”அடங்க்கொக்காமக்க இப்படி எல்லாம் பண்ணுவங்களா இந்த பெண்கள்?

இதெல்லாம் நமக்கு எதுக்குனு சிவனேன்னு கண்ணை முடினா இரண்டு ஆட்கள் சத்தமாக பேச ஆரம்பிட்த்தார்கள்....

ஒரு மனைவியை வெச்சுண்டு காலம் தள்ளறதே கஷ்டமா இருக்கு.. . ஆனா நீங்க மூணு மனைவிங்களை வெச்சுக்கிட்டு ஈசியா காலம் தள்றீங்களே எப்படி ?

ஒரு மனைவி இருந்தா நம்மோட சண்டை போடுவா. மூணு மனைவி இருந்தா அவங்களுக்குள்ளேயே அடிச்சுப்பாங்க.. . நாம ஈசியா காலம் தள்ளலாம் என்றார்.அன்றிலிருந்து நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்க்கை நடத்திணோம்.

மனைவி சொன்னாள்"ஒரு நாள் வேலைக்காரி இல்லைன்னா கூட வீடே சரியில்ல பாருங்க." நான் சொல்ல முடியுமா "இது பரவாயில்லை. எனக்கு மனசே சரியில்லாம போயிடுது பாருன்னு."எங்களுக்கும் ஒரு செல்ல குட்டி பிறந்து பள்ளிக்கு செல்லத் தொடங்கியது. அது படிப்பதில் நம்மளை மாதிரி சூரப்புலிதான்

''இரண்டு நாள் ஸ்கூல் டூர் போறே.​ ஜாலியா இல்லாம ஏன் சோகமா இருக்கேன்னு?'' என்று கேட்டேன்

''டூர் போயிட்டு வந்த பிறகு பயண அனுபவக் கட்டுரை இருபது பக்கம் எழுது'ன்னு டார்ச்சர் பண்ணுவாரே டீச்சருங்கரான்.

ஒர் நாள் ஆசிரியர் எங்களை கூப்பிட்டு அனுப்பினார். நாங்களும் நம்ம பிள்ளைக்கு ஏதோ நல்ல அவார்ட்தான் கொடுக்க போறார்கள் என்ற கனவில் சென்றோம் ஆசிரியர் சொன்னார் உங்க பிள்ளை 'வீட்டுப் பாடம் ஏன் எழுதலைன்னு கேட்டதுக்கு எப்ப பார்த்தாலும் என்னை எதிர்த்துப் பேசறான் சார் என்றார்...​ நாங்களும் ஏண்டா அப்படி பண்ணுறே என்றதற்கு இல்லையப்பா சார்தான் சொன்னாரு,​​ எந்த ஒரு பிரச்னைன்னாலும் சோர்ந்து போயிடாம எதிர்த்துப் போராடணும்னு

அடங்கொக்காமக்க அப்பனுக்கு பிள்ளை தப்பாம பிறந்திருக்கு....என்றபடி சாரி சொல்லிவிட்டு வந்தோம்

ஒரு நாள் பக்கத்து வீட்டு நண்பரிடம் ரெண்டு நாளா என் பையனைக் காணோம் சொன்னேன் அதற்கு அவர் அப்படியெல்லாம் சந்தேகமா என்னைப் பார்க்காதீங்க சார். என் பொண்ணு வீட்டுலதான் இருக்காருங்கிறார்/என் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் ரொம்ப வசதியானவர்கள் அந்த வீட்டுகாரம்மா எப்போது பேசினாலும் கோல்ட சாம்பார் தான் வைப்பாங்கனு சொல்லுவாங்க. என் வொய்ப்பும் என்னங்க ஒரு நாளாவது நமலும் கோல்ட் சாம்பார் வைக்கனுமுங்க ஏதுக்கும் உங்க தங்க மோதிரத்தை கலட்டி வைங்க நான் போய் அவர்களிடம் போய் ரிசிப்பி வாங்கிட்டு வரேன்னு போனாங்க.

போய்ட்டு வந்தவங்க தலையில தலையில அடிச்சுகிட்டாங்க நானும் பதறி போய் என்னடி அதற்கு நிறைய தங்கம் வேண்டுமா என்று கேட்டேன் அதற்கு அவங்க சொன்னாங்க இல்லைங்க கோல்ட சாம்பர்ல கோல்ட போட மாட்டாங்களாம் 24 லு கேரட்தான் போடுவாங்கலால் என்றாளே பார்க்க்கலாம்..

எங்க வீட்டுல திருட்டு போகிடிச்சி அதனால நான் போலிஸ் ஸ்டேஷன் போய் ரிப்போர்ட் பண்ணினேன். அதற்கு போலிஸ்காரர் கேட்டார்

என்ன சார்.. உங்க வீட்டுல திருடினவன்கிட்டே ஆட்டோ கிராஃப் வாங்கணுமா..? அதற்கு நான் அவன் என் மனைவி கன்னத்துல பளார்ன்னு அறைஞ்சு நகையை பிடுங்கிட்டு போனதிலே இருந்து அவன் விசிறியா ஆயிட்டேன் சார்..என்றேன்.

உலகமகா துணிச்சல்காரன் அவந்தானுங்க....

நானும் எனது நண்பரின் குடும்பமும் பல இடங்களுக்கு புனித யாத்திரை செல்கிறார்கள். அப்படி செல்லும் போது ஜெருசலேமில் எதிர்பாராத விதமாக திடீரென எனது நண்பரின் மனைவி இறந்து விடுகிறார். அங்குள்ள போலிஸ்காரர் சொல்கிறார் “இங்கேயே புதைக்க வேண்டுமென்றால் 1000 ரூபாய் தான் ஆகும். உங்கள் ஊருக்கு அனுப்பி அங்கு நீங்கள் புதைக்க வேண்டுமென்றால் 20000 ரூபாய் ஆகும்”

அதற்கு எனது நண்பர் சொல்கிறார் “இங்கு புதைக்க வேண்டாம். 20000 ரூபாய் தருகிறேன். ஊருக்கு அனுப்பி விடுங்கள்”

எனக்கும் அந்த போலிஸ்காரருக்கும் ஆச்சரியம். “உங்களுக்கு உங்கள் மனைவி மீது அவ்வளவு பிரியமா” என்று கேட்டோம்.

அதற்கு அவன் சொன்னா பதில் “2000 வருடங்களுக்கு முன்னர் இங்கு ஒருவரை புதைத்தார்கள். அவர் திரும்ப வந்து விட்டார். நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்றுஇதுக்கு மேலே நான் உங்களை பிளேடு போட விரும்மவில்லை ஆனால் முடிக்கும் போது நம்ம நடிகர் விஜய்யை பற்றி ஒரு ஜோக் சொல்லாமல் போனால் நல்லா இருக்காது என்பதால் அவரைப் பற்றிய ஒரு ஜோக்
விஜய் காவல்காரன் படத்துல நடித்து முடித்த பின் ஒரு சொகுசு கப்பலில் பயணம் செய்தார். அப்போது கப்பல்ல வேலை பாக்குற ஒருத்தரை பார்த்து கேட்டார்....

''கப்பல்ல வேலை பாக்குறீங்களே...உங்களுக்கு நீச்சல் தெரியுமா?''

டென்சன் ஆன அவர் சொன்னார்...

''நீங்க கூடத்தான் படத்துல நடிக்குறீங்க, உங்களுக்கு நடிக்கத் தெரியுமான்னு நான் கேட்டேனா...போய் வேலையை பாருங்க சார்'' என்றார்.A dog thinks: My owners feed me, love me, provide me with a nice house, and take good care of me... They must be gods!

A wife thinks: My owners(husband) feed me, love me, provide me with a nice house and take good care of me...I must be a god!மதுரைமுத்துவை போல சொல்லாமல் வித்தியாசமாக தந்துள்ளேன், நீங்க சொல்லுங்க என் முயற்ச்சி எப்படின்னு?
 

7 comments :

 1. //அப்போதிலிருந்துதான் என் மனைவி எனக்கு சமையல் பண்ண ஆரம்பிச்சாள்... //

  உண்மையிலேயே பெரிய தண்டனை தான்....

  அதுவும் ஜாம் மேட்டர் சூப்பர்......

  உங்களுக்கும் என் இனியபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. ஓகே..மதுரை முத்து தோத்துட்டார்...மதுரை தமிழ் ஆளு ஜெயிச்சுட்டார்..நேத்து நைட் நாங்க போன நியூ இயர் கொண்டாட்ட நிகழ்ச்சியில் "கலக்க போவது டீம் "வந்து அசத்திட்டாங்க...anyway ...Happy new year:)))

  ReplyDelete
 3. ரொம்ப நல்லாருக்கு. (எல்லாம் உங்க சொந்த ஜோக்குகள்தானே?)

  ReplyDelete
 4. உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.

  http://kuttisuvarkkam.blogspot.com/2011/01/2010.html

  ReplyDelete
 5. பல இடங்களில் விளைந்த காய்கறிகளை வாங்கிவந்து நன்றாக சமைத்தது கொடுத்தது போல, பல இடங்களில் படித்த ஜோக்குகளை கலந்து சுவையாக வழங்கியது மட்டும் நாந்தான். நெக்ஸ்ட் டைம் இப்படி ப்ளீக்காக வந்து எல்லாம் உங்கள் சொந்த சரக்கா என்று கேட்டு மானத்தை வாங்காதீர்கள் ஹசைனம்மா.

  ReplyDelete
 6. ஆமினா இணைய பதிவு தொடருக்கு மதிப்பு அளித்து என்னை அழைத்தற்கு நன்றி.நான் இதற்கு புதியவன். அதனால் அடுத்த முறை முயற்சி செய்கிறேன். எழுத இயலாததற்கு காரணங்கள்.
  1 நான் வசிப்பது அமெரிக்காவில் இங்கு யாரும் இந்தியாவை போல இலவச டைரி கொடுப்பது இல்லை.
  2. ஞாபகசக்தி குறைவு. ( உதாரணம் ஒரு நாள் கணக்கு பாடத்தில் உதவி கேட்டு வந்த என் பெண்ணை இது கூட ஞாபகம் இல்லையா என்று சத்தம் போட்டுவிட்டு உதவி செய்தேன். பொண்னு கேட்டது 11 + 12 = ? அதற்கு பதில் சொல்லுவதற்க்காக கால்குலேட்டரை தேடிய நேரத்தில் சத்தம் போட்டேன். அந்த அளவிற்குதான் நம்முடைய ஞாபக சக்தி
  3. ஹைக்கு அதிர்வு இணைய பதிவாளர் இதற்கு முன்பு ஒரு தொடர்பதிவுக்கு அழைக்க போவதாக கூறினார் அதற்கும் நான் மறுத்து விட்டேன். இப்போது உங்கள் அழைப்பை ஏற்று கொண்டாள் என்னை வறுத்து எடுத்து விடுவார்(நான் கொஞ்சம் பயந்த டைப்பு. அதிலும் பெண் பதிவாளர்களை கண்டால் பயம் ஜாஸ்தி)
  4. நானோ புதிய ஆண் பதிவாளர். அதனால் என்னை ப்லோ செய்பவர்கள் எண்ணிக்கை குறைவு(பெண் பதிவாளர்கள் என்றால் ஈக்கள் மொய்யப்து போல ப்லோவர்கள் மொய்துவிடுவார்கள்). அதனால் உங்கள் அழைப்பை ஏற்க முடியவில்லை அப்படி ஏற்றால் நான் பத்து பேரையாவது அழைக்க வேண்டும்.எனக்கு ப்லோ செய்வதோ பத்து பேர் அதில் நீங்களும் நீங்கள் ஏற்கனவே தொடருக்கு அழைத்தவர்கள் மட்டுமே இருக்கிறார்கள்( இப்படி என்னை தொடருக்கு அழைத்து என்னப் புலம்பஸ் செய்து வீட்டிர்களே அட ஆண்டவாஆஆஆஆ

  ReplyDelete
 7. ஆனந்தி மதுரை முத்து தோத்துட்டாருனு மதுரையிலே இருந்து சொல்லுறிங்க ரொம்ம தைரியம்தான்.... ஜாக்கிரதை மதுரை முத்து ஆள் வைத்து அடிக்க போகிறார்

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog