Monday, December 20, 2010

மழைத்துளி என் மனதை துள்ளவைக்கும் உயிர்த்துளி

மழையை பற்றி எப்போதும் எங்கே எழுதபட்டாலும் பேசப்பட்டாலும் அது மிகவும் ரசிக்க கூடியதாகத்தான் இருக்கும்.ஏனெனில், மழை என்றதும் நம் நினைவுக்கு வருவது ஒன்று இரண்டல்ல.அநேகம்... மழையோடு வரும் மண்வாசனை, குளிர்த்தென்றல், இடி ,மின்னல், தூரல், சாரல்... இப்படி என்ன என்னவோ.மழை நம்மோடு பேசுவது போல கூட தோன்றும் குளிர்காற்று ஆடை வழியே உட்புகுந்து உடலோடு உயிரையும் சிலிர்க்கச் செய்யும்



எனக்கு பிடித்தது மழைத்துளியும் எனது கண்ணீர் துளியும். இரண்டும் என் மனப்பாரத்தை குறைக்கும். மழை பெய்யும் போது எனக்கு நனைவது பிடிக்கும் ஏனென்றால் நான் அழுவது யாருக்கும் தெரியாது.மழையில் நனைவது ஒரு பேரானந்தம்.



கொஞ்சம் அப்படியே உங்கள் கற்பனை ஒட விட்டு பாருங்கள். அது எவ்வளவு இனிமையானது என்று தெரியும்.மழை நின்று போய் சிறிது நேரம் ஆகி இருக்கலாம். இருட்டும் இல்லாத வெளிச்சமும் இல்லாத ரம்மியமான சூழல். ஏதோ ஒரு சோலை குயில்கள் இசை பாடிக் கொண்டிருக்கலாம். மலர்களின் மணம்....வண்டுகளின் ரீங்காரம் இப்படி எல்லாம் இருக்கலாம்.



மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்

உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்

உடல் பொருள் ஆவியெல்லாம் காதலில் சங்கமம் சங்கமம்



இப்படி பாடி அழுது ஆட எனக்கு கொள்ளையில்லா ஆனந்தம். யாரவது என் கூட ஆடவாரிங்களா?



மழையில் நனைய விருப்பம் இல்லாதவர்கள் ஜன்னல் அருகே உட்கார்ந்து மழையை கவனித்து பாருங்கள்.ஜன்னலோரங்களில் பட்டு சிதறும் நீர்த்துளிகள்முகத்தில் மோதி கண்ணீரோடு கலந்து இறங்கும். இந்த மழை எப்படி வானத்தையும் நம்மை சுற்றியுள்ள கலர்களையும் எவ்வளவு பிரகாசிக்க செய்கிறது.பச்சையுமாய் ஈரமுமாய் குளிர்ச்சியுமாய் தலை துவட்டாமள் மரங்கள்.. செடிகள்... கொடிகள் மரத்தில் உள்ள இலைகளை கவனித்து பாருங்கள் எப்படி பச்சை பசேலேன்று தோன்ருகின்றன அந்த இலைகளை பாருங்கள் மழைத்துளிகள் எப்படி அதை எப்படி ஆனந்தமாக ஆட வைக்கின்றன. இந்த மழையை பார்த்துக் கொண்டுருந்தால் மனதில் அநேக ஞாபகங்கள் வந்து அலை போல வந்து மோதும்.ஒரு துளி மழை ஒரு இலையை ஆட வைக்கிறது.மழை நேரத்தில் மழையில் நனைந்து ஆனந்த கூத்தாடுங்கள். அதன் பிறகு ஒரு வெற்றி பெற்ற வீராங்கனைப் போல உணர்விர்கள்.



மழை என் சிநேகிதன் அவன் அழுதால் நானும் அவன் கூட சேர்ந்து அழுவேன்.அவன் என்றும் மாறா என் சிநேகிதன்.நான் நேசிப்பவனும் நீ தான்.....என்னை நேசிப்பவனும் நீ மட்டும் தான்.



ஒரு துளியை மிகவும் துல்லியமாக பார்க்க கீழேயுள்ள விடியோ க்ளிப்பை பாருங்கள், இந்த துளிதான் என்னை இன்று மழைத்துளியை பற்றி எழுத வைத்தது.(Drop of water at 2,000 frames per second )



மழையில் நனைந்தால் நல்லது ஆனால் காதல் மழையில் நனைந்தால் வரும் துன்பங்களுக்கு நான் காரணமல்ல?

மழைத்துளிகள் மண்னை ஆசையோடு வந்து முத்தமிடுகின்றன. ஆனால் உனக்கு மட்டும் ஏன் இன்னும் இந்த தயக்கம் ?


அன்புடன்.

Madurai Tamil Guy

5 comments:

  1. எனக்கு ரொம்ப பிடிச்ச மழை பத்தி உங்க பதிவு...என்னை சார்ந்த யார்கிட்டே கேட்டு பார்த்தாலும் மழையவும்,என்னையும் கிண்டல் பண்ணி சொல்வாங்க..அந்த அளவுக்கு எனக்கு மழை பிடிக்கும்...மழையில் நனைய பிடிக்கும்..என் சிறுவயதில் மழையில் நிறைய தடவை நனைந்து கொண்டே என் தம்பியுடன் சைக்கிளில் மெதுவாய் போக பிடிக்கும்...ரொம்ப ரசனையை எழுதி இருக்கீங்க...

    ReplyDelete
  2. நானும் மழைல நனஞ்ச மாதிரி இருக்கு!!!

    சூப்பர் பதிவு :)

    ReplyDelete
  3. புகைப்படங்கள் அருமை... எனக்கு மழையில் நனைவதில் விருப்பமில்லை ஆனால் ஜன்னலோரம் அமர்ந்து ரசிப்பது பிடிக்கும்...

    ReplyDelete
  4. மழையில் நனையப் பிடிக்கும்.
    மழைத்துளியை ரசிக்கவும், ருசிக்கவும் பிடிக்கும். வானவில் தோற்றத்திற்கு மழை வேண்டுமே!!பசும்புல் தழைக்கவும் தாய்ப்பாலாய் மழைத்துளி!! அது உயிர்த் துளி அல்லவா??

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.