உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, December 12, 2010

உலகின் அதிக ஆழமுள்ள நீச்சல் குளம் ( The deepest swimming pool on Earth)

உங்களூக்கு கடலுக்குள் போகாமல் scuba டைவிங்க் பண்ணனுமா. அப்ப நீங்க நிமோ 33 க்கு ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதுதான் உலகத்திலேயே அதிக ஆழமுள்ள ஸ்விமிங் பூல் ஆகும். இது ப்ரெஸல் ( BRUSSELS ) என்ற நாட்டில் உள்ளது. இது டைவிங் பழகுவதற்கு ஏற்ற இடம் & கடலினுள் போய் டைவிங்க் செய்வதைவிட இங்கு பழகி அப்புறம் கடலுக்குள் போவது மிகவும் பாதுகாப்பானது. இது 105 அடி ( 33 மீட்டர்) ஆழமுள்ளதுடன் 2.5 மில்லியன் குளோரின் ஃப்ரீ வார்ம் வாட்டர் உபயோகப்படுத்தபடுகிறது. இது ஒரு டுரிஸ்ட் அட்ராக்ஷ்ன் உள்ள இடம் ஆகும். நீச்சல் தெரியாதவர்களும் இங்குள்ள இன்ஸ்ரெக்டர் மூலம் இங்கு நீச்சல் அடிக்க கற்று கொள்ள முடியும். மேலும் விபரங்களுக்கு Nemo 33 என்ற தளத்திற்கு அணுகி பார்கவும்இந்த டைவிங் பூல் John Beernaerts என்பவரால் 13 வருடங்களுக்கு முன்பு ப்ளான் போட்டு ஆரம்பிக்கப் பட்டது. ஒரு நாள் இவர் பாரில் உட்கார்ந்து பொழுது போகாமல் அங்குள்ள நாப்கின்னில் சும்மா ஏதோ படம் வரைந்தார். வரைந்த பின் அவரே ஆச்சிரியப்பட்டார். அதில் இருந்து தோன்றிய ப்ளாந்தான் இந்த மிக ஆழமான நீச்சல் குளம். இந்த நீச்சல் குளம் நிறைய டனல்கள், அதிக ரும்களால் கட்டப்படுள்ளது.இது Maze போன்று வடிவமைக்கப்பட்டது. அதனால் நாம் கவனமில்லாமல் போனால் எப்படி வெளி வருவது என்று தவிக்க வேண்டிருக்கும். இந்த பூல் வாட்டர் 33 degrees Celsius (91 Degrees F) ல் மெய்ன்டன் பண்ணப்படுகிறது.

2004 ல் இருந்து இது வரை 100,000 டைவர்ஸ் இந்த நிமோவுக்கு வந்து இருக்கின்றனர்.கடலில் உள்ளது போல ஷார்க், ஜெல்லி பிஷ், ஸ்டிங்கி பிஷ், ஆக்டோபஸ் போன்ற்வைகள் கிடையாது. இதுவரைக்கும் இதில் யாரும் இறந்தது இல்லை. இது உலகத்தில் உள்ள ஒரு யுனிக் டுரிஸ்ட் அட்ராக்ஷ்ன் ஏரியா ஆகும். டைவிங்கில் ஆர்வம் உள்ளவர்கள் வாழ்வில் ஒரு முறை வந்து செல்லவேண்டிய இடம் ஆகும்

என்ன மக்களே இதை பார்க்க கிளம்பிட்டிங்களா? நீச்சல் தெரியுமல? இல்லை என்றால் என்னிடம் வந்து கற்று கொள்ளூங்கள் இது இங்கு வந்து படிப்பவர்களூக்கு மட்டும் இலவசமாக நான் கத்து தருவேன். உங்களூக்கு ஒரு செய்தி நான் கடப்பாரை நீச்சலில் உலக சாம்பியன். நிறைய அவார்டுகள் வாங்கியுள்ளேன்.

உண்மையிலேயே வசதியுள்ளவர்கள் நிமோவுக்கு வந்து போகலாம். வசதி இல்லாதவர்கள் சிறிது பொறுத்து இருக்கவும். நம்ம தலைவர் ரஜினி அவர்களூக்கு மெயில் அனுப்பி உள்ளேன் இந்த பதிவை அவர் வந்து பார்த்த பின் அவரின் அடுத்த படத்தின் சண்டை காட்சி இந்த நிமோவில் தான். அதுவரை நீங்கள் பொறுத்து இருக்கவும்.

இல்லையென்றால் இன்னொரு திட்டமும் என்னிடம் உள்ளது. நீங்கள் மாதம் ஒரு சிறிய தொகையை ( ரொம்ப அதிகமில்லை 1000 ரூ அனுப்பி வையுங்கள் அடுத்த வருடம் இறுதியில் உங்களை அனுப்பி வைக்கிறேன்....) நான் நம்ம அரசியல் வாதி மாதிரிதான் சொன்ன வாக்கை நிறைவேற்றுவேன் .
ஹலோ ...ஹலோ..உங்களைத்தாங்க..என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க மனசுலப்பட்ட கருத்தைதான் சொல்லிட்டு போங்களேன்

3 comments :

 1. //இது இங்கு வந்து படிப்பவர்களூக்கு மட்டும் இலவசமாக நான் கத்து தருவேன்.//

  நம்பி கத்துக்கலாமா???


  நல்ல தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 2. ஐயோ ஆமினா நீங்க ரொம்ப இன்னோசண்டா இருப்பிங்க போல இருக்கே? கடப்பாறை நீச்சல்னா என்னனு தெரியாதா? பாவி மக்கா என்னை நம்பி வரிங்களா? இப்படி ஒரு அப்பாவி ப்ளாக் படிக்க வரங்களா?

  ReplyDelete
 3. அதை தாங்க உங்கள நம்பி கத்துக்குலாமான்னு கொஸ்டீன் மார்க் போட்டேன்

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog